என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    எல்லாத்துக்கும் ஜியோபோன் தான் காரணம் - கூகுள்
    X

    எல்லாத்துக்கும் ஜியோபோன் தான் காரணம் - கூகுள்

    செயற்கை நுண்ணரிவு தொழில்நுட்பம் சார்ந்து இயங்கும் கூகுள் வாய்ஸ் அசிஸ்டண்ட் மென்பொருளின் 'இந்த' நிலைக்கு ஜியோபோன் தான் காரணம் என கூகுள் தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    ரிலையன்ஸ் ஜியோபோன்களில் கடந்த ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் கூகுளின் வாய்ஸ் அசிஸ்டண்ட் மென்பொருள் வழங்கப்பட்டது. அன்று முதல் வாய்ஸ் அசிஸ்டண்ட் பயன்பாடு ஆறு-மடங்கு வரை அதிகரித்து இருப்பதாக கூகுள் அறிவித்துள்ளது.

    ஃபீச்சர்போன்களில் அதிக வசதிகளை வழங்கும் நோக்கில் டிசம்பர் 5-ம் தேதி வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவையை கூகுள் ஜியோபோன்களுக்கு வழங்கியது. அந்த வகையில் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதியை பெற்ற முதல் ஃபீச்சர்போன் என்ற பெருமையை ஜியோபோன் பெற்றது. 

    '2017 டிசம்பரில் ஜியோபோன்களுக்கு வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டது முதல் இந்தியாவில் கூகுள் வாய்ஸ் அசிஸ்டண்ட் பயன்பாடு ஆறு மடங்கு வரை அதிகரித்து இருக்கிறது.' என நெக்ஸ்ட் பில்லியன் யூசர்ஸ் குழுவின் துணை தலைவர் சீசர் சென்குப்தா கூகுள் வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

    'கூகுள் அசிஸ்டண்ட் மூலம் வாடிக்கையாளர்கள் மிக வேகமாக அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களை பயன்படுத்த வழக்கப்படுத்தி கொள்கின்றனர். எழுத படிக்க தெரியாதவர்கள் மட்டுமின்றி, வேகமாக டைப்பிங் செய்வது பெரும்பாலானோருக்கு கடினமான காரியம் என்பதும் இந்த வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணமாக இருந்துள்ளது.' என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

    இணையத்தில் கிடைக்கும் தரவுகளில் 50% ஆங்கிலம் என கணக்கிடப்பட்டுள்ளது. ஹிந்தி நான்காவது மொழியாக இருந்தாலும், சர்வதேச அளவில் இம்மொழி முதல் 30 பட்டியலிலும் இடம்பிடிக்கவில்லை. இந்தியா போன்ற நாடுகளில் இணையம் பயன்படுத்துவோர் ஆங்கிலத்தை விட தங்களது தாய் மொழியிலேயே பயன்படுத்த விரும்புகின்றனர்.
    Next Story
    ×