என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் 2017 நான்காவது காலாண்டில் சாம்சங் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி ஆப்பிள் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது.
    சான்ஃபிரான்சிஸ்கோ:

    சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் 2017-ம் ஆண்டின் நான்காவது காலாண்டு விற்பனை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. சர்வதேச டேட்டா கார்பரேஷன் சார்பில் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி உலகம் முழுக்க 40.35 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    இது முந்தைய ஆண்டை விட 6.3% குறைந்திருக்கிறது. எனினும் 2017-ம் ஆண்டின் மூன்றாவது காலாண்டை விட 8.1% வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது. கடந்த ஆண்டு முழுக்க சுமார் 140 கோடு ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 1% குறைவு ஆகும்.

    சீனா மற்றும் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் வசிக்கும் வாடிக்கையாளர்கள் புதிய மற்றும் விலை உயர்ந்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை வாங்க ஆர்வம் செலுத்தவில்லை என சர்வதேச டேட்டா கார்பரேஷன் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் டாப் 5 இடங்களை பிடித்த நிறுவனங்கள் பட்டியலில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது.



    7.73 கோடி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து ஆப்பிள் நிறுவனம் முதலிடம் பிடித்திருக்கிறது. சாம்சங் நிறுவனம் 7.41 கோடி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து இரண்டாவது இடத்தில் உள்ளது. ஹூவாய் நிறுவனம் மூன்றாவது இடத்தை தக்க வைத்து கொண்டிருக்கிறது. ஹூவாய் நிறுவனம் கடந்த காலாண்டு நிவரப்படி 4.1 கோடி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளது. 

    சியோமி நிறுவனம் ஒப்போவை பின்னுக்கு தள்ளி நான்காவது இடத்தையும், ஒப்போ நிறுவனம் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. முந்தைய ஆண்டை விட இருமடங்கு அதிக பங்குகளை பெற்று சியோமி நிறுவனம் 2.81 கோடி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளது. இந்தியா மற்றும் ரஷ்யா போன்ற சந்தைகளில் சியோமியின் தொடர் வளர்ச்சி இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
    இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், இறக்குமதி செய்யப்படும் ஸ்மார்ட்போன் மற்றும் உதிரிபாகங்களுக்கான சுங்க வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் 2018-19 ஆம் ஆண்டிற்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி இன்று (பிப்.-1) தாக்கல் செய்தார். பொது பட்ஜெட்டில் இறக்குமதி செய்யப்படும் ஸ்மார்ட்போன், உதிரிபாகங்கள் மற்றும் தொலைகாட்சி பெட்டிகளுக்கான சுங்க வரியை அதிகரிப்பதற்கான அறிவிப்பு இடம்பெற்றிருக்கிறது. 

    அதன்படி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மொபைல் போன் மற்றும் உதிரிபாகங்களுக்கான சுங்க வரி 15% இல் இருந்து 20% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தொலைகாட்சி பெட்டிகளுக்கான சுங்க வரி 15% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

    2014-ம் ஆண்டில் இறக்குமதி மொபைல் போன்களுக்கான சுங்க வரி 6% ஆக இருந்தது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 10% ஆகவும், டிசம்பரில் 15% ஆகவும் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தற்போதைய பட்ஜெட்டில் 5% கூடுதலாக உயர்த்தப்பட்டிருப்பது இந்தியாவில் தயாரிப்பு ஆலைகளை துவங்காத ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

    ஐபோன் எஸ்.இ. தவிர மற்ற ஐபோன் மாடல்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதால் இந்தியாவில் ஐபோன் மாடல்களின் விலை மேலும் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. முன்னதாக சுங்க வரி 10% இல் இருந்து 15% ஆக உயர்த்திய போதே ஐபோன் மாடல்களின் விலை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 



    இறக்குமதி செய்யப்படும் மொபைல் போன்களுக்கான சுங்க வரி உயர்த்தியதன் மூலம் உள்நாட்டில் தொழிற்சாலைகளை மொபைல் நிறுவனங்கள் தொடங்கும். இதனால், இந்தியாவில் வேலை வாய்ப்புகள் உருவாக்க முடியும். மேலும் இந்திய பொருட்களின் விலை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை விட குறைவாக இருக்கும். இந்திய பொருட்கள் விலை குறையும் போது விற்பனை வெகுவாக அதிகரிக்கும். 

    இதனால் உதிரிபாகங்களை தயாரிக்கும் நிறுவனங்களும் இந்தியாவில் தங்களது தயாரிப்பு ஆலைகளை துவங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. உலகின் இரண்டாவது பெரிய ஸ்மார்ட்போன் சந்தையாக இந்தியா இருப்பதால் நிறுவனங்களுக்கு மேலும் நெருக்கடி சூழல் ஏற்பட்டுள்ளது. 

    சர்கியூட் போர்டு, கேமரா மாட்யூல்கள் மற்றும் கனெக்டர் போன்ற சாதனங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் போது 15% சுங்க வரி செலுத்த வேண்டும் என்பதால், உதிரிபாகங்களை இறக்குமதி செய்து ஸ்மார்ட்போன் உருவாக்கும் நிறுவனங்களும் வெகுவாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இரண்டு நோக்கியா ஸ்மார்ட்போன்களின் விலையை குறைப்பதாக அறிவித்திருக்கிறது.
    புதுடெல்லி:

    ஹெச்.எம்.டி. குளோபல் இந்தியாவில் நோக்கியா 5 மற்றும் நோக்கியா 8 ஸ்மார்ட்போன்களின் விலையை குறைத்திருக்கிறது. சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் புதிய நோக்கியா மொபைல்கள் அறிமுகம் செய்ய இருப்பதை தொடர்ந்து இரண்டு ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்பட்டு இருக்கிறது. 

    நோக்கியா 5 (2 ஜிபி) மாடலின் விலை ரூ.1000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.12,499க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் ரூ.36,999க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நோக்கியா 8 ஸ்மார்ட்போன் தற்சமயம் ரூ.8000 விலை குறைக்கப்பட்டு ரூ.28,999க்கு விற்பனை செய்யப்படுகிறது.



    நோக்கியா 5 சிறப்பம்சங்கள்:

    - 5.2 இன்ச் 1280x720 பிக்சல் எச்டி டிஸ்ப்ளே
    - ஸ்னாப்டிராகன் 430 பிராசஸர்
    - அட்ரினோ 505 GPU
    - 3 ஜிபி ரேம்
    - 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட், ஓரியோ அப்டேட்
    - 13 எம்பி பிரைமரி கேமரா, டூயல் டோன் எல்இடி பிளாஷ்
    - 8 எம்பி செல்ஃபி கேமரா
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், ஜிபிஎஸ்
    - 3000 எம்ஏஎச் பேட்டரி



    நோக்கியா 8 சிறப்பம்சங்கள்:

    - 5.3 இன்ச் 2560x1440 பிக்சல் குவாட் HD LCD டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 835 பிராசஸர்
    - அட்ரினோ 540 GPU
    - 4 ஜிபி ரேம் 
    - 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் 
    - ஹைப்ரிட் டூயல் சிம்
    - 13 எம்பி + 13 எம்பி பிரைமரி கேமரா
    - 13 எம்பி செல்ஃபி கேமரா 
    - கைரேகை ஸ்கேனர்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3090 எம்ஏஎச் பேட்டரி, குவால்காம் குவிக் சார்ஜ் 3.0

    2018-ம் ஆண்டின் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் ஹெச்.எம்.டி. குளோபல் சில நோக்கியா ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. 
    ஆண்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்) ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய ரிலையன்ஸ் ஜியோ மற்றும் மீடியாடெக் நிறுவனங்கள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    ஆண்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்) ரக ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய ரிலையன்ஸ் ஜியோ மற்றும் மீடியாடெக் நிறுவனங்கள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. புதிய ஸ்மார்ட்போன் ஜியோபோனுடன் விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற ரிலையன்ஸ் நிறுவன ஆண்டு பொதுக்கூட்டத்தில் ஜியோபோன் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. புதிய ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

    இரு நிறுவனங்களிடையேயான ஒப்பந்தத்தை மீடியாடெக் நிறுவன விழாவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதே விழாவில் ஆண்ட்ராய்டு கோ தளத்தில் மீடியாடெக் MT6739, MT6580 சிப்செட்களை பயன்படுத்தும் என்றும் தெரிவித்தது. முன்னதாக கூகுள் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை மீடியாடெக் உறுதி செய்திருந்தது.



    மீடியாடெக் சிப்செட் கொண்ட ஆண்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்) ஸ்மார்ட்போன்கள் இந்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே காலக்கட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோ ஆண்ட்ராய்டு கோ போனும் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

    மீடீயாடெக் விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட MT6739 சிப்செட் டூயல் கேமரா, ஃபேஸ் அன்லாக், டூயல் 4ஜி வோல்ட்இ உள்ளிட்ட வசதிகளை சப்போர்ட் செய்யும் என தெரிவித்துள்ளது. மேலும் புதிய சிப்செட் குறைந்தபட்சம் 512 எம்பி அல்லது 1 ஜிபி ரேம் கொண்ட சாதனங்களில் சிறப்பாக இயங்கும் என கூறப்படுகிறது.

    ரிலையன்ஸ் ஜியோ ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போனில் அத்தியாவசிய அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிலையன்ஸ் ஜியோ மட்டுமின்றி மைக்ரோமேக்ஸ் நிறுவனமும் பாரத் கோ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதாக அறிவித்தது. இதேபோன்று ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனமும் நோக்கியா 1 பெயரில் தனது ஆண்ட்ராய்டு கோ சாதனத்தை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 



    நோக்கியா 1 ஆண்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் பார்சிலோனாவில் நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா 2018-இல் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு ஓரியோ கூட்டணி அறிவிப்பு மட்டுமின்றி மீடியாடெக் நிறுவனத்தின் சென்சியோ MT6381- அந்நிறுவனத்தின் முதல் பயோசென்சார் மாட்யூல் அறிமுகம் செய்யப்பட்டது. 

    இந்த பயோசென்சார் மாட்யூல் இந்திய மருத்துவ தேவைக்கு ஏற்ற தகவல்களை வழங்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் தாய்வானில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த மாட்யூல் இதய துடிப்பு சார்ந்த விவரங்கள், ரத்த அழுத்தம் சார்ந்த விவரங்கள், ரத்தத்தில் உள்ள காற்றின் அளவு உள்ளிட்ட பல்வேறு தகவல்களை 60 நொடிகளில் வழங்கும் திறன் கொண்டது.
    ஆப்பிள் ஐபோனின் பேட்டரியை வித்தியாசமாக சோதனை செய்த வாலிபருக்கு நேர்ந்த சோகம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
    பீஜிங்:

    ஸ்மார்ட்போன் வாங்கும் முன், எந்த மாடல் வாங்கலாம், எவ்வளவு செலவு செய்யலாம் என்பதை யோசிக்கலாம். ஆனால் வாங்கும் போதே அதை யாரும் சோதனை செய்ய மாட்டார்கள். ஆனா சீனா போன்ற நாடுகளில் வசிக்கும் சில 'லெஜண்டு'களுக்கு இது பொருந்தாது போலிருக்கு.

    ஆசைபட்டு வாங்கும் ஸ்மார்ட்போனினை குறைந்த பட்சம் ஏழு நாட்களுக்காவது, மிக பத்திரமாக பார்த்து கொள்ளக் கூடிய ஆசை நம்மில் பலருக்கும் இருக்கும். ஆனால் வாங்கும் போதே ஸ்மார்ட்போனில் பிரச்சனை இருக்கிறதா என்பதை கண்டறிய முயற்சித்து ஏழரையை கூட்டிய சீன வாலிபர் வலைத்தளங்களில் வைரலாகியுள்ளார்.

    முழுக்க முழுக்க லித்தியம் அயன் எனும் வேதிப்பொருளால் உருவாக்கப்பட்ட ஐபோன் பேட்டரி உண்மையில் தரமுள்ளது தானா என்பதை சோதிக்க சீன வாலிபர் முயற்சித்திருக்கிறார். சோதனை தீவிரமாக என்ன நினைத்தாரோ அந்த சீன வாலிபர் திடீரென பேட்டரியை வாயில் வைத்து கடித்துவிட்டார். சும்மா விட்டதா, ஐபோன் பேட்டரியாச்சே திடீரென அவரது முகத்திலேயே வெடிக்க வாலிபர் உள்பட அங்கு கூடியிருந்தவர்களுக்கும் சம்பவம் பதற்றத்தை பற்ற வைத்து விட்டது. 



    உடனே பதறிய சீன வாலிபர், தான் வீடியோவில் படமானதை அப்போது அறிந்திருக்கவில்லை. அவரவர் பிரபலமாக படாத-பாடு-படும் வேளையில், பத்து நொடி வீடியோவில் சீன வாலிபர் உலக ஃபேமஸ் ஆகிவிட்டார். சீன வலைத்தளங்கள் துவங்கி, உலகின் பல்வேறு நாட்டு சமூக வலைத்தளங்களிலும் ஐபோன் பேட்டரியை சோதித்தவர் வைரலாகியுள்ளார். 

    தெரிந்தோ தெரியாமலோ சம்பவத்திற்கு காரணமான சீன வாலிபர் குறித்த விவரங்களும் இச்சம்பவம் நடைபெற்ற இடம் குறித்த விவரங்களும் மர்மமாகவே இருக்கிறது. பேட்டரி முகத்தில் வெடித்த சம்பவம் அங்கு வைக்கப்பட்டிருந்த கேமராவில் பதிவாகி, அதில் இருந்து பத்து நொடி வீடியோ வேகமாக பரவி வருகிறது.

    மின்சாதன உதிரி பாகங்கள் விற்பனை மையத்திற்கு அதிரடி எண்ட்ரி கொடுத்தார் சீன வாலிபர். தனது ஐபோனிற்கான பேட்டரியை கையில் வாங்கியதும் உடனே வாயில் வைத்து கடிக்கிறார். வாயில் வைத்ததும் பேட்டரி படாறென வெடிக்க அதனை கையில் இருந்து வீசி எறிந்தார்.

    பேட்டரி முகத்தில் வெடித்து, இணையத்தில் வைரலான வீடியோவை கீழே காணலாம்..,


    இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் கடந்த ஆண்டு அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சீன நிறுவனங்களின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்திய சந்தையில் 2016-ம் ஆண்டு வாக்கில் 34 சதவிகித பங்குகளை கொண்டிருக்கும் நிலையில் கடந்த ஆண்டு மட்டும் 20% உயர்ந்து இது 54% ஆக அதிகரித்துள்ளது.

    சியோமி நிறுவன ஸ்மார்ட்போன்களின் விற்பனையே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டின் இறுதி காலாண்டில் சியோமி நிறுவனம் சாம்சங்-ஐ பின்னுக்கு தள்ளி இந்தியாவின் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனமாக சியோமி உயர்ந்திருக்கிறது.

    இந்தியாவின் முன்னணி நிறுவனமாக இருப்பதோடு, அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்கள் பட்டியலின் முதல் ஐந்து இடங்களில் சியோமி ஆதிக்கம் தொடர்கிறது. ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன் முதலிடம் பிடித்திருக்கும் நிலையில், சியோமி ரெட்மி 4 மற்றும் சாம்சங் கேலக்ஸி ஜெ2 உள்ளிட்ட நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்திருக்கின்றன. இவற்றை தொடர்ந்து ஒப்போ ஏ37 மற்றும் சியோமி ரெட்மி 4ஏ ஸ்மார்ட்போன்களும் டாப் 5 இடத்தை பிடித்துள்ளன.



    கவுண்ட்டர்பாயிண்ட் ஆய்வு நிறுவனம் வெளியிட்டிருக்கும் சமீபத்திய தகவல்களில் சாம்சங் கேலக்ஸி ஜெ7 நெக்ஸ்ட், கேலக்ஸி ஜெ7 பிரைம் மற்றும் ஜெ2 2016 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் முறையே ஆறு, ஏழு மற்றும் எட்டாவது இடங்களில் உள்ளன. இவற்றை தொடர்ந்து விவோ வை55எல் மற்றும் விவோ வை53 ஸ்மார்ட்போன்கள் ஒன்பது மற்றும் பத்தாவது இடங்களை பிடித்துள்ளன.

    சீன நிறுவனமான சியோமி 259% வருடாந்திர வளர்ச்சியை பெற்று 2017-ம் ஆண்டில் இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் பிரான்டாக இருக்கிறது. சியோமியை தொடர்ந்து ஐடெல், ஹூவாய், விவோ மற்றும் ஒப்போ உள்ளிட்ட நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்திருக்கின்றன. இவை முறையே 213%, 165%, 115% மற்றும் 104% வளர்ச்சியை பதிவு செய்திருக்கின்றன.

    இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரூ.10,000 முதல் ரூ.15,000 விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன் பிரிவு வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த பிரிவில் 37% ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து சியோமி ஆதிக்கம் செய்துள்ளது. ரூ.30,000க்கும் அதிக விலை கொண்ட பிரீமியம் பிரிவில் ஒன்பிளஸ், ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களின் ஒட்டுமொத்த ஸ்நமார்ட்போன் விற்பனையில் இந்த பிரிவு 20% வருடாந்திர வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
    இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் கடந்த ஆண்டின் இறுதி காலாண்டு விற்பனையில் சாம்சங் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி சியோமி நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது.
    புதுடெல்லி:

    2017 நான்காவது காலாண்டு நிலவரப்படி இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி முதலிடம் பிடித்துள்ளது. 

    முந்தைய காலாண்டை விட 17% வளர்ச்சியை பதிவு செய்திருந்த நிலையில், சாம்சங் இரண்டாவது இடம் பிடித்திருக்கிறது. ஸ்மார்ட்போன் விற்பனையை பொருத்த வரை சாம்சங் 73 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்திருந்த நிலையில், சியோமி நிறுவனம் 82 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து முதலிடம் பிடித்துள்ளது. 

    கனாலிஸ் வெளியிட்டிருக்கும் ஆய்வு அறிக்கையின் படி இந்திய ஸ்மார்ட்போன் சந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சி 6% அதிகரித்திருக்கிறது. விவோ, ஒப்போ மற்றும் லெனோவோ உள்ளிட்ட நிறுவனங்கள் முதல் ஐந்து இடங்களை பிடித்திருக்கின்றன. இதில் சியோமி மற்றும் சாம்சங் நிறுவனங்கள் மட்டும் 50% பங்குகளை பெற்றிருக்கின்றன.

    சியோமி நிறுவனம் மட்டும் 27% மற்றும் சாம்சங் நிறுவனம் 25% பங்குகளை பெற்றிருக்கின்றன. இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரூ.15,000 பட்ஜெட்டில் சாம்சங் அதிக கவனம் செலுத்தாததே சாம்சங் விற்பனை நிலவரத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. மறுபக்கம் சியோமி நிறுவனம் இந்தியாவில் இரண்டாவது நிறுவனமாக இருந்து தற்சமயம் முதலிடத்திற்கு முன்னேறி இருக்கிறது.

    சியோமி போன்றே விவோ, ஒப்போ மற்றும் லெனோவோ போன்ற நிறுவனங்களும் 40% பங்குகளை பெற்றிருக்கின்றன. முந்தை காலாண்டில் சியோமி மற்றும் சாம்சங் நிறுவனங்கள் 23.3% பங்குகளை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
    பாரதி ஏர்டெல் ஏற்கனவே அறிவித்த திட்டங்களை மாற்றியமைத்த நிலையில், ஜியோவுக்கு எதிராக புதிய சலுகையை அறிவித்திருக்கிறது.
    மும்பை:

    பாரதி ஏர்டெல் ரூ.399 மற்றும் ரூ.149 திட்டத்தை அந்நிறுவனம் மாற்றியமைத்த நிலையில், பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு என புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. 

    ரூ.199 விலையில் கிடைக்கும் புதிய திட்டத்தில் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.4 ஜிபி 3ஜி/4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. இதன் வேலிடிட்டி 28 நாட்கள் என ஏர்டெல் தெரிவித்துள்ளது.

    இதைத்தொடர்ந்து ரூ.349 திட்டத்தில் தினமும் 2.5 ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ரூ.399 திட்டத்தில் தினமும் 1 ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா 70 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதேபோல் ரூ.448 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.4 ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா 82 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.



    ஏர்டெல் ரூ.509 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.4 ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா 90 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. ஏர்டெல் அறிவித்து வழங்கி வரும் அனைத்து காம்போ திட்டங்களில் தினமும் 100 எஸ்.எம்.எஸ்., அன்லிமிட்டெட் உள்ளூர், வெளயூர் அழைப்புகள் மற்றும் ரோமிங் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    முன்னதாக ரிலையன்ஸ் ஜியோ குடியரசு தின சிறப்பு சலுகைகளை அறிவித்தது. அந்நிறுவனம் ரூ.98 விலையில் 28 நாட்களுக்கு 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவற்றை வழங்குகிறது. இத்துடன் ஜியோ ஏற்கனவே அறிவித்து வழங்கி வரும் 100% கேஷ்பேக் சலுகையும் வழங்கப்படுகிறது. 

    இதனால் ரூ.398 அல்லது அதற்கும் அதிகமாக ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.400 மதிப்புடைய கேஷ்பேக் வவுச்சர்கள் வழங்கப்படுகிறது. இதனை வாடிக்கையாளர்கள் மற்ற ரீசார்ஜ்களுக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும்.
    வாட்ஸ்அப் கடந்த வாரம் அறிமுகம் செய்து சில நாடுகளில் மட்டும் வெளியிட்ட வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    வாட்ஸ்அப் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டது. முதற்கட்டமாக இந்தோனேஷியா, இத்தாலி, மெக்சிகோ, லண்டன் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் வெளியிடப்பட்டது. 

    இந்நிலையில், வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் இந்தியாவிலும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் புதிய செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து இலவசமாக டவுன்லோடு செய்து பயன்படுத்த துவங்கலாம். தற்சமயம் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் மட்டும் வெளியிடப்பட்டிருக்கும் வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலி விரைவில் ஐ.ஓ.எஸ். இயங்குதளத்திற்கும் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலியை உங்களது ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்ததும் மொபைல் நம்பரை பதிவு செய்து, அதனை உறுதி செய்ய வேண்டும். இது வழக்கமான வாட்ஸ்அப் செயலியை போன்ற வழிமுறை தான். எனினும் வழக்கமான வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த வழங்கப்பட்ட மொபைல் நம்பர் இல்லாமல் புதிய மொபைல் நம்பரை வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலியில் பதிவு செய்ய வேண்டும்.



    ஒற்றை மொபைல் நம்பர் பயன்படுத்துவோர், தங்களது வழக்கமான வாட்ஸ்அப் செயலியை வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலியாக மாற்றிக் கொள்ளவோ அல்லது இரண்டாவது மொபைல் நம்பர் மூலம் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது செயலி மட்டும் மாறும், மொபைல் நம்பரை மற்ற சேவைகளுடன் பகிர்ந்து கொள்ளப்பட மாட்டாது என வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.

    வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலியில் பிஸ்னஸ் ப்ரோஃபைல்ஸ், மெசேஜிங் டூல்ஸ், மெசேஜிங் ஸ்டாட்டஸ்டிக்ஸ், வாட்ஸ்அப் வெப் மற்றும் அக்கவுண்ட் டைப் போன்ற ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது. மற்ற நாடுகளில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வாட்ஸ்அப் ஃபார் பிஸ்னஸ் ஆப் வெளியிடப்பட்டுள்ளது.

    - பிஸ்னஸ் ப்ரோஃபைல்ஸ் (Business Profiles) அம்சத்தில் வியாபார நிறுவனத்தின் முகவரி, மின்னஞ்சல் முகவரி, வலைத்தளம் மற்றும் வியாபாரம் சார்ந்த கூடுதல் தகவல்கள் பதிவிட முடியும். இந்த அம்சத்தை பயன்படுத்தி வியாபாரம் சார்ந்த முழு விவரங்களை தங்களது வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க முடியும்.

    - மெசேஜிங் டூல்ஸ் (Messaging Tools) அம்சம் கொண்டு வியாபாரம் செய்வோர் தங்களுக்கு வரும் குறுந்தகவல்களை மிகவேகமாக பதில் அனுப்ப முடியும். இதற்கென ஆட்டோ ரிப்ளை அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்கனவே சேமிக்கப்பட்ட குறுந்தகவல்களை வாட்ஸ்அப் தானாக அனுப்பும்.

    - மெசேஜிங் ஸ்டாட்டஸ்டிக்ஸ் (Messaging Statistics) அம்சத்தில் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்பட்ட குறுந்தகவல்களில் எத்தனை பேர் அதனை படித்தனர், எத்தனை பேருக்கு வெற்றிகரமாக குறுந்தகவல் அனுப்பப்பட்டது உள்ளிட்ட முழு விவரங்கள் இடம்பெற்றிருக்கிறது.

    - வாட்ஸ்அப் வெப் (WhatsApp Web) வழக்கமான இன்டர்ஃபேஸ் கொண்டு, வாட்ஸ்அப் பிஸ்னஸ் அம்சங்கள் சேர்க்கப்பட்டிருக்கிறது. இதனால் வாடிக்கையாளர்கள் தங்களது கணினியில் இருந்து நேரடியாக வாட்ஸ்அப் பிஸ்னஸ் சார்ந்த குறுந்தகவல்களை அனுப்ப முடியும்.

    - அக்கவுண்ட் டைப் (Account Type) எனும் அம்சம் இந்த செயலியின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. இந்த அம்சம் வாடிக்கையாளர்கள் தங்களை ஓர் வியாபார நிறுவனமாக வாட்ஸ்அப்பில் வெளிப்படுத்திக் கொள்ள முடியும். இதனால் அவர்களை தொடர்பு கொள்வோர் வியாபாரம் சார்ந்த விவரங்களை பார்க்க முடியும். 



    வாட்ஸ்அப் பிஸ்னஸ் கணக்குகள் வரும் நாட்களில் உறுதி செய்யப்பட்ட கணக்குகளாக (confirmed accounts) மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் பிஸ்னஸ் கணக்கில் இருக்கும் மொபைல் நம்பரும், வியாபாரத்திற்கு பயன்படுத்தப்படும் தொடர்பு எண் ஒன்றாக இருக்க வேண்டும்.

    வாட்ஸ்அப் பிஸ்னஸ் மற்றும் வழக்கமான வாட்ஸ்அப் செயலி முற்றிலும் வெவ்வேறு பயன்பாடுகளை கொண்டுள்ளது. இதனால் பழைய வாட்ஸ்அப் செயலியை வாடிக்கையாளர்கள் எவ்வித சிரமமும் இன்றி தொடர்ந்து பயன்படுத்த முடியும். இத்துடன் வாட்ஸ்அப் வாடிக்கையாளர்களுக்கு குறுந்தகவல்களை கட்டுப்படுத்தும் முழு வசதி வழங்கப்பட்டுள்ளது.

    இந்த வசதி வாடிக்கையாளர்கள் பிஸ்னஸ் கணக்கில் இருந்து வரும் குறுந்தகவல்கள் பிடிக்காத பட்சத்தில் அவற்றை பிளாக் செய்ய முடியும். மேலும் பிஸ்னஸ் கணக்கில் இருந்து வரும் குறுந்தகவல்களை ஸ்பேம் என குறிப்பிட முடியும்.
    தென் கொரிய நுகர்வோர் அமைப்பு ஆப்பிள் தலைமை செயல் அதிகாரியான டிம் குக் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறது.
    சியோல்:

    ஐபோன்களின் வேகத்தை வேண்டுமென்றே குறைத்ததால் ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் மீது தென் கொரிய நுகர்வோர் அமைப்பினர் வழக்கு தொடர்ந்திருக்கிறது. ஏற்கனவே அமெரிக்கா மற்றும் இதர நாடுகளில் ஆப்பிள் நிறுவனம் மீது இதே விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

    ஆப்பிள் நிறுவன ஐபோன்களின் ஆயுளை திட்டமிட்டு குறைப்பதாக அந்நிறுவனம் மீது குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. பேட்டரி பிழை ஏற்படும் போது ஐபோனின் வேகத்தை வேண்டுமென்றே குறைத்து, வாடிக்கையாளர்களை புதிய போன்களை வாங்க தூண்டுவதாக ஆப்பிள் நிறுவனம் மீது பல்வேறு வழக்குகள் தொடர்பப்பட்டிருக்கின்றன.

    தென் கொரிய சட்ட வல்லுநர் குழு சார்பில் அளிக்கப்பட்டிருக்கும் புகாரில் ஆப்பிள் நிறுவனம் மீது சொத்துக்களை சேதப்படுத்துவது மற்றும் ஊழல் புகார் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆப்பிள் வாடிக்கையாளர்களுக்காக, ஐபோன் வேகத்தை குறைத்ததற்கான பொறுப்பை ஆப்பிள் ஏற்க வேண்டும் என சட்ட வல்லுநர் குழு அதிகாரி பார்க் சூன் ஜங் தெரிவித்திருக்கிறார்.

    ஆப்பிள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு சியோல் மத்திய மாவட்ட அரசு சட்ட அலுவலகம் சார்பில் எவ்வித பதிலும் அளிக்கப்படவில்லை. ஆப்பிள் கொரிய அலுவலகமும் இவ்விவகாரம் குறித்து எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை. 



    கடந்த ஆண்டு இறுதியில் ஐபோன்களின் வேகம் திட்டமிட்டு ஆப்பிள் நிறுவனம் குறைப்பதாக தகவல் வெளியானது. இதற்கு ஆப்பிள் சார்பில் வெளியிட்ட பதிலில், ஐபோன்களில் வழங்கப்பட்டிருக்கும் உதிரி பாகங்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபோன் பேட்டரி தீர்ந்து போகும் போது ஐபோன் வேகம் தானாக குறைக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது, அந்நிறுவனத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. 

    சமீபத்தில் அமெரிக்க செய்தி நிறுவனத்திற்கு டிம் குக் வழங்கிய பேட்டியில், 'ஐபோன்களின் வேகத்தை குறைக்கும் அம்சத்தை வாடிக்கையாளர்கள் விரும்பாத பட்சத்தில், அதனை ஸ்விட்ச் ஆஃப் செய்யும் வசதி புதிய அப்டேட் மூலம் வழங்கப்பட இருக்கிறது.' என தெரிவித்தார். 

    ஆப்பிள் நிறுவனம் அடுத்த மாதம் வெளியிட இருக்கும் புதிய ஐ.ஓ.எஸ். அப்டேட்டில் வாடிக்கையாளர்கள் பேட்டரி விவரத்தை விரிவாக பார்த்து ஐபோன் வேகத்தை குறைத்து ஐபோன்களை ஸ்விட்ச் ஆஃப் செய்யும் அம்சத்தை தடுக்க முடியும்.
    வாட்ஸ்அப் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வாட்ஸ்அப் ஃபார் பிஸ்னஸ் செயலி ஒருவழியாக வெளியிடப்பட்டது.
    சான்பிரான்சிஸ்கோ:

    ஃபேஸ்புக் நிறுவனத்தின் எதிர்பார்க்கப்பட்ட வியாபார பயன்பாட்டிற்கான பிரத்யேக செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் ஃபார் பிஸ்னஸ் என அழைக்கப்படும் புதிய செயலி வாட்ஸ்அப் வாசிகளிடையே நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்தது. முன்னதாக இந்த செயலி சோதனை செய்யப்படும் ஸ்கிரீன்ஷாட்கள் மட்டும் இணையத்தில் வலம் வந்த நிலையில், புதிய செயலிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வாட்ஸ்அப் வெளியிட்டிருக்கிறது.

    வாட்ஸ்அப் ஃபார் பிஸ்னஸ் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் நண்பர்கள், குடும்பத்தார் மற்றும் வியாபாரம், பணி ரீதியிலான பயன்பாடுகளை பிரித்து கொள்ள முடியும். புதிய செயலி குறித்த விரிவான தகவல்கள் வாட்ஸ்அப் அதிகாரப்பூர்வ வலைப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    புதிய வாட்ஸ்அப் ஃபார் பிஸ்னஸ் செயலி வியாபாரம் செய்வோர் தங்களது வாடிக்கையாளர்களிடம் தகவல் பரிமாற்றம் செய்ய ஏதுவாக வெளியிடப்பட்டுள்ளது. 



    வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலியில் பிஸ்னஸ் ப்ரோஃபைல்ஸ், மெசேஜிங் டூல்ஸ், மெசேஜிங் ஸ்டாட்டஸ்டிக்ஸ், வாட்ஸ்அப் வெப் மற்றும் அக்கவுண்ட் டைப் போன்ற ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது. மற்ற நாடுகளில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வாட்ஸ்அப் ஃபார் பிஸ்னஸ் ஆப் வெளியிடப்பட்டுள்ளது.

    வாட்ஸ்அப் ஃபார் பிஸ்னஸ் செயலியில் பிஸ்னஸ் ப்ரோஃபைல்ஸ் அம்சத்தில் வியாபார நிறுவனத்தின் முகவரி, மின்னஞ்சல் முகவரி, வலைத்தளம் மற்றும் வியாபாரம் சார்ந்த கூடுதல் தகவல்கள் இடம்பெற்றிருக்கிறது.

    மெசேஜிங் டூல்ஸ் அம்சம் கொண்டு வியாபாரம் செய்வோர் தங்களுக்கு வரும் குறுந்தகவல்களை மிகவேகமாக பதில் அனுப்ப, ஆட்டோ ரிப்ளை அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்கனளே சேமிக்கப்பட்ட குறுந்தகவல்களை வாட்ஸ்அப் தானாக அனுப்பும். 



    மெசேஜிங் ஸ்டாட்டஸ்டிக்ஸ் அம்சத்தில் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்பட்ட குறுந்தகவல்களில் எத்தனை பேர் அதனை படித்தனர், எத்தனை பேருக்கு வெற்றிகரமாக குறுந்தகவல் அனுப்பப்பட்டது உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றிருக்கிறது. 

    வழக்கமான வாட்ஸ்அப் செயலியை வாடிக்கையாளர்கள் எவ்வித சிரமமும் இன்றி பயன்படுத்த முடியும். தனியாக எந்த செயலியையும் டவுன்லோடு செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. வாடிக்கையாளர்களுக்கு குறுந்தகவல்களை கட்டுப்படுத்த முழு வசதி வழங்கப்பட்டுள்ளது. 

    இதனால் வாடிக்கையாளர்கள் பிஸ்னஸ் கணக்கில் இருந்து வரும் குறுந்தகவல்களை பிளாக் செய்யவும் முடியும். மேலும் பிஸ்னஸ் கணக்கில் இருந்து வரும் குறுந்தகவல்களை ஸ்பேம் என்றும் குறிப்பிட முடியும். வாட்ஸ்அப் ஃபார் பிஸ்னஸ் ஆப் முதற்கட்டமாக இந்தோனேஷியா, இத்தாலி, மெக்சிகோ, லண்டன் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. வரும் வாரங்களில் மற்ற நாடுகளிலும் இந்த செயலி வழங்கப்பட இருக்கிறது.
    ஸ்மார்ட்போன்களில் இண்டர்நெட் இன்றி மெசேஜிங், செய்திகள் மற்றும் ரீசார்ஜ் என பல்வேறு சேவைகளை வழங்கும் புதிய சேவையை ஹைக் அறிமுகம் செய்துள்ளது.
    புதுடெல்லி:

    ஹைக் நிறுவனத்தின் டோட்டல் எனும் புதிய சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சேவையை கொண்டு மெசேஜிங், செய்திகள் மற்றும் ரீசார்ஜ் உள்ளிட்டவற்றை இண்டர்நெட் இணைப்பின்றி பயன்படுத்த முடியும். 

    ஹைக் டோட்டல் சேவை முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட சில ஸ்மார்ட்போன்களில் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டணம் ரூ.1 முதல் துவங்குகிறது. இந்த சேவை USSD-சார்ந்த தொழி்ல்நுட்பத்தை கொண்டு இயங்குவதால் மெசேஜிங் மற்றும் இதர சேவைகளை இயக்க முடியும்.

    மார்ச் 1-ம் தேதி முதல் தேர்வு செய்யப்பட்ட இன்டெக்ஸ் மற்றும் கார்பன் நிறுவன ஸ்மார்ட்போன்களிலும் ஏர்டெல், ஏர்செல் மற்றும் பி.எஸ்.என்.எல். உள்ளிட்ட நெட்வொர்க்களில் ஹைக் டோட்டல் சேவையை பயன்படுத்தலாம். மேலும் ஹைக் டோட்டல் வாடிக்கையாளர்களுக்கு டோட்டல் சேவையை பயன்படுத்த ரூ.200 வழங்கப்படுகிறது.



    முன்கூட்டியே இந்த சேவையை பயன்படுத்த விரும்புவோர் பிரத்யேக ஹைக் டோட்டல் வலைத்தளத்தில் பதிவு செய்ய வேண்டும். முழுமையான என்க்ரிப்ஷன் செய்யப்பட்ட ஹைக் டோட்டல் சேவையை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் தங்களது மொபைல் போன் நம்பர் கொண்டு ஒருமுறை லாக்-இன் செய்தாலே போதுமானது. 

    தற்சமயம் வரை ஹைக் டோட்டல் சேவைகளில் மெசேஜிங், செய்திகள், ரீசார்ஜ், ஹைக் வாலெட்டில் இருந்து பண பரிமாற்றம் செய்வது, கிரிக்கெட் நிலவரம், ரெயில் சார்ந்த தகவல்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்த முடியும். மேலும் இத்தகைய சேவைகள் அனைத்தையும் பயன்படுத்த அதிகபட்சம் 100 கே.பி. முதல் 1.0 எம்.பி. வரையிலான டேட்டா மட்டுமே போதுமானது.

    ஹைக் டோட்டல் வழங்கும் அனைத்து சேவைகளையும் ப்ரோபரைட்டரி தொழில்நுட்பம் (Proprietary Technology) மூலம் பயன்படுத்த முடியும். ஹைக் பொறியாளர்கள் உருவாக்கியிருக்கும் இந்த தொழில்நுட்பம் USSD ப்ரோடோகால் மூலம் இயங்குவதால் என்க்ரிப்ஷன், டேட்டா கம்ப்ரெஷன் மற்றும் டிரான்ஸ்மிஷன் உள்ளிட்டவை மேற்கொள்ளப்படுகிறது.
    ×