என் மலர்

  செய்திகள்

  பேட்டரியை சோதனையில் ஆழ்த்தியவருக்கு நேர்ந்த சோகம் வீடியோ
  X

  பேட்டரியை சோதனையில் ஆழ்த்தியவருக்கு நேர்ந்த சோகம் 'வீடியோ'

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆப்பிள் ஐபோனின் பேட்டரியை வித்தியாசமாக சோதனை செய்த வாலிபருக்கு நேர்ந்த சோகம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
  பீஜிங்:

  ஸ்மார்ட்போன் வாங்கும் முன், எந்த மாடல் வாங்கலாம், எவ்வளவு செலவு செய்யலாம் என்பதை யோசிக்கலாம். ஆனால் வாங்கும் போதே அதை யாரும் சோதனை செய்ய மாட்டார்கள். ஆனா சீனா போன்ற நாடுகளில் வசிக்கும் சில 'லெஜண்டு'களுக்கு இது பொருந்தாது போலிருக்கு.

  ஆசைபட்டு வாங்கும் ஸ்மார்ட்போனினை குறைந்த பட்சம் ஏழு நாட்களுக்காவது, மிக பத்திரமாக பார்த்து கொள்ளக் கூடிய ஆசை நம்மில் பலருக்கும் இருக்கும். ஆனால் வாங்கும் போதே ஸ்மார்ட்போனில் பிரச்சனை இருக்கிறதா என்பதை கண்டறிய முயற்சித்து ஏழரையை கூட்டிய சீன வாலிபர் வலைத்தளங்களில் வைரலாகியுள்ளார்.

  முழுக்க முழுக்க லித்தியம் அயன் எனும் வேதிப்பொருளால் உருவாக்கப்பட்ட ஐபோன் பேட்டரி உண்மையில் தரமுள்ளது தானா என்பதை சோதிக்க சீன வாலிபர் முயற்சித்திருக்கிறார். சோதனை தீவிரமாக என்ன நினைத்தாரோ அந்த சீன வாலிபர் திடீரென பேட்டரியை வாயில் வைத்து கடித்துவிட்டார். சும்மா விட்டதா, ஐபோன் பேட்டரியாச்சே திடீரென அவரது முகத்திலேயே வெடிக்க வாலிபர் உள்பட அங்கு கூடியிருந்தவர்களுக்கும் சம்பவம் பதற்றத்தை பற்ற வைத்து விட்டது.   உடனே பதறிய சீன வாலிபர், தான் வீடியோவில் படமானதை அப்போது அறிந்திருக்கவில்லை. அவரவர் பிரபலமாக படாத-பாடு-படும் வேளையில், பத்து நொடி வீடியோவில் சீன வாலிபர் உலக ஃபேமஸ் ஆகிவிட்டார். சீன வலைத்தளங்கள் துவங்கி, உலகின் பல்வேறு நாட்டு சமூக வலைத்தளங்களிலும் ஐபோன் பேட்டரியை சோதித்தவர் வைரலாகியுள்ளார். 

  தெரிந்தோ தெரியாமலோ சம்பவத்திற்கு காரணமான சீன வாலிபர் குறித்த விவரங்களும் இச்சம்பவம் நடைபெற்ற இடம் குறித்த விவரங்களும் மர்மமாகவே இருக்கிறது. பேட்டரி முகத்தில் வெடித்த சம்பவம் அங்கு வைக்கப்பட்டிருந்த கேமராவில் பதிவாகி, அதில் இருந்து பத்து நொடி வீடியோ வேகமாக பரவி வருகிறது.

  மின்சாதன உதிரி பாகங்கள் விற்பனை மையத்திற்கு அதிரடி எண்ட்ரி கொடுத்தார் சீன வாலிபர். தனது ஐபோனிற்கான பேட்டரியை கையில் வாங்கியதும் உடனே வாயில் வைத்து கடிக்கிறார். வாயில் வைத்ததும் பேட்டரி படாறென வெடிக்க அதனை கையில் இருந்து வீசி எறிந்தார்.

  பேட்டரி முகத்தில் வெடித்து, இணையத்தில் வைரலான வீடியோவை கீழே காணலாம்..,


  Next Story
  ×