என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜியோவுக்கு எதிராக ஏர்டெல் அதிரடி: புதிய திட்டம் அறிவித்தது
    X

    ஜியோவுக்கு எதிராக ஏர்டெல் அதிரடி: புதிய திட்டம் அறிவித்தது

    பாரதி ஏர்டெல் ஏற்கனவே அறிவித்த திட்டங்களை மாற்றியமைத்த நிலையில், ஜியோவுக்கு எதிராக புதிய சலுகையை அறிவித்திருக்கிறது.
    மும்பை:

    பாரதி ஏர்டெல் ரூ.399 மற்றும் ரூ.149 திட்டத்தை அந்நிறுவனம் மாற்றியமைத்த நிலையில், பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு என புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. 

    ரூ.199 விலையில் கிடைக்கும் புதிய திட்டத்தில் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.4 ஜிபி 3ஜி/4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. இதன் வேலிடிட்டி 28 நாட்கள் என ஏர்டெல் தெரிவித்துள்ளது.

    இதைத்தொடர்ந்து ரூ.349 திட்டத்தில் தினமும் 2.5 ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ரூ.399 திட்டத்தில் தினமும் 1 ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா 70 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதேபோல் ரூ.448 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.4 ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா 82 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.



    ஏர்டெல் ரூ.509 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.4 ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா 90 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. ஏர்டெல் அறிவித்து வழங்கி வரும் அனைத்து காம்போ திட்டங்களில் தினமும் 100 எஸ்.எம்.எஸ்., அன்லிமிட்டெட் உள்ளூர், வெளயூர் அழைப்புகள் மற்றும் ரோமிங் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    முன்னதாக ரிலையன்ஸ் ஜியோ குடியரசு தின சிறப்பு சலுகைகளை அறிவித்தது. அந்நிறுவனம் ரூ.98 விலையில் 28 நாட்களுக்கு 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவற்றை வழங்குகிறது. இத்துடன் ஜியோ ஏற்கனவே அறிவித்து வழங்கி வரும் 100% கேஷ்பேக் சலுகையும் வழங்கப்படுகிறது. 

    இதனால் ரூ.398 அல்லது அதற்கும் அதிகமாக ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.400 மதிப்புடைய கேஷ்பேக் வவுச்சர்கள் வழங்கப்படுகிறது. இதனை வாடிக்கையாளர்கள் மற்ற ரீசார்ஜ்களுக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும்.
    Next Story
    ×