என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    சாம்சங் கேலக்ஸி எஸ்9 சீரிஸ் விலை மற்றும் இந்திய வெளியீட்டு தகவல்கள்
    X

    சாம்சங் கேலக்ஸி எஸ்9 சீரிஸ் விலை மற்றும் இந்திய வெளியீட்டு தகவல்கள்

    சாம்சங் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீடு மற்றும் விலை குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் மார்ச் 6-ம் தேதி வெளியிடப்பட இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன்களின் விற்பனை மார்ச் 16-ம் தேதி முதல் துவங்குகிறது. சர்வதேச சந்தையிலும் இதே தேதியில் விற்பனை செய்யப்படுகிறது. 

    சாம்சங் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் சர்வதேச சந்தையில் விற்பனைக்கு வரும் அதே தேதியில் இந்தியாவிலும் விற்பனை செய்யப்பட இருப்பது இதுவே முதல் முறை ஆகும். இந்தியாவில் புதிய கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இந்தியாவில் கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் அடிப்படை விலை ரூ.60,000 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு சாம்சங் வெளியிட்ட கேலக்ஸி எஸ் 8 விலை ரூ.57,900 மற்றும் கேலக்ஸி எஸ் 8 பிளஸ் விலை ரூ.64,900 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

    கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனின் 64 ஜிபி விலை ரூ.62,500, 256 ஜிபி விலை ரூ.71,000 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. கேலக்ஸி எஸ்9 பிளஸ் 64 ஜிபி விலை ரூ.70,000, 256 ஜிபி விலை ரூ.79,000 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 

    தற்சமயம் சாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் சாம்சங் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் முன்பதிவு செய்யப்படுகின்றன. எனினும் சாம்சங் தளத்தில் விலை குறித்து எவ்வித தகவலும் இல்லை. சர்வதேச சந்தையில் கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மிட்நைட் பிளாக், லிலாக் பர்ப்பிள், கோரல் புளூ மற்றும் டைட்டானியம் கிரே என நான்கு வித நிறங்களில் கிடைக்கிறது.
    Next Story
    ×