என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    • இன்ஸ்டாகிராம் செயலியை இளைஞர்கள் தான் அதிக அளவில் பயனபடுத்துகின்றனர்.
    • முன்னதாக, இன்ஸ்டாகிராமில் 90 விநாடிகள் வரையிலான ரீல்ஸ் வீடியோக்களை பதிவேற்றம் செய்து கொள்ளும் வசதி இருந்தது.

    உலகின் முன்னணி சமூக வலைதள செயலிகளில் ஒன்றாக இன்ஸ்டாகிராம் விளங்குகிறது. இந்த செயலியில் இளம் தலைமுறையை சேர்ந்த ஆண்களும் பெண்களும் தங்களது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து லைக்குகளை குவிப்பார்கள்.

    இந்நிலையில், இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் இனி 3 நிமிடங்கள் வரையிலான வீடியோக்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என்ற புதிய அப்டேட்டை இன்ஸ்டாகிராம் நிறுவனம் அறிவித்துள்ளது

    முன்னதாக, இன்ஸ்டாகிராமில் 90 விநாடிகள் வரையிலான ரீல்ஸ் வீடியோக்களை பதிவேற்றம் செய்து கொள்ளும் வசதி இருந்தது.

    கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராமில் ஒரே நேரத்தில் பதிவிட முடியும் புகைப்படங்களின் எண்ணிக்கையை 10ல் இருந்து 20 ஆக மெட்டா நிறுவனம் உயர்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது. 

    • டாடா நிறுவனத்தின் கடந்த ஆண்டு ஐபோன் ஏற்றுமதி 125 சதவீதம் உயர்ந்துள்ளது.
    • டாடாவின் நர்சபுரா ஆலையில் கடந்தாண்டு 31,000 ஊழியர்கள் வேலை செய்துள்ளனர்.

    ஆப்பிள் நிறுவனம் ஐபோன் உற்பத்தியை இந்தியாவில் கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கியது. பாக்ஸ்கான் நிறுவனம் ஸ்ரீபெரும்புதூரில் ஐ-போன் செல்போன்களை உற்பத்தி (Assembly) செய்கிறது.

    இந்தியாவில் பாக்ஸ்கான், விஸ்ட்ரான், பெகட்ரான் ஆகிய நிறுவனங்கள் ஐ-போன் தயாரித்து ஏற்றுமதி செய்கிறது.

    இந்நிலையில், கர்நாடகாவின் நர்சபுராவில் உள்ள விஸ்ட்ரான் நிறுவனத்தை டாடா குழுமம் 125 மில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.1000 கோடி) கடந்த வருடம் அக்டோபர் மாதம் கையகப்படுத்தியது.

    நர்சபுரா ஆலையின் ஆண்டு உற்பத்தி கடந்தாண்டு மட்டும் ரூ. 40,000 கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய 2023 ஆம் ஆண்டை விட 180 சதவீதம் அதிகமாகும்.

    இந்நிறுவனத்தின் கடந்த ஆண்டு ஐபோன் ஏற்றுமதி 125 சதவீதம் உயர்ந்துள்ளது. அதாவது 2024 ஆம் ஆண்டில் மட்டும் ஏற்றுமதி ரூ.31,000 கோடியாக அதிகரித்துள்ளது.

    2023 ஆண்டு இந்நிறுவனத்தில் 19,000 ஊழியர்கள் பணியாற்றிய நிலையில் கடந்தாண்டு 31,000 ஊழியர்கள் வேலை செய்துள்ளனர். இது கிட்டத்தட்ட 63% அதிகமாகும்.

    இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஐபோன்களில் இந்த நிறுவனம் மட்டுமே 26% ஐபோன்களை உற்பத்தி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அருகே உள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் ஒரு பெரிய தீ விபத்து ஏற்பட்டது.

    இதனையடுத்து அந்த ஆலையில் ஐபோன் உதிரிப்பாகங்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. அதன் பிறகும் டாடா நிறுவனம் ஐபோன் உற்பத்தியை அதிகரித்துள்ளது.

    • ஒன்பிளஸ் 13 சீரிஸ் அறிமுகத்தின் போது இந்த அறிவிப்பை ரிலையன்ஸ் வெளியிட்டுள்ளது.
    • இதில் பயனர்கள் ஒரே நேரத்தில் பல நெட்வொர்க் செல்களுடன் [மல்டி-செல்] இணைப்பு ஏற்படுத்த முடியும்.

    நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ 5G தொழில்நுட்பத்தை கடந்த 2022 இல் அறிமுகப்படுத்தியது.

    இந்நிலையில் ஒன் பிளஸ் செல்போன் நிறுவனத்துடன் இணைந்து 5ஜி நெட்வொர்க்கின் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பமான 5.5ஜியை ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது.

    ஒன்பிளஸ் 13 சீரிஸ் அறிமுகத்தின் போது இந்த அறிவிப்பை ரிலையன்ஸ் வெளியிட்டுள்ளது. அதன்படி புதிய போன் ஜியோவின் 5.5G அல்லது Jio 5GA சேவை செயல்படும் முதல் ஸ்மார்ட்போன் ஆகும்.

     

    5G - 5.5G வித்தியாசம் என்ன?

    5G சேவையின் மேம்பட்ட பதிப்பு 5.5G என்று கூறப்படுகிறது. 5G உடன் ஒப்பிடும்போது 5.5G, சிறந்த இணைய வேகம், குறைந்த தாமதம் மற்றும் மேம்பட்ட நெட்வொர்க் கனெக்ஷனை வழங்குகிறது. இது 3GPP கீழ் உருவாக்கப்பட்டது.

    இதில் பயனர்கள் ஒரே நேரத்தில் பல நெட்வொர்க் செல்களுடன் [மல்டி-செல்] இணைப்பு ஏற்படுத்த முடியும்.

    வழக்கமாக ஒரு மொபைல் ஒரு டவரில் இருந்து சிக்னலை பெறும். அந்த டவரில் வலிமையான சிக்னல் கிடைக்கவில்லை என்றால் வேறு ஒரு டவருக்கு மாறும். ஆனால், 5.5ஜி தொழில்நுட்பத்தில் மொபைலால் ஒரே நேரத்தில் பல டவர்களில் இருந்து சிக்னலை பெறமுடியும்.

    இது வேகமான பதிவிறக்கம் மற்றும் தரவு பரிமாற்ற வேகத்தை உறுதி செய்கிறது. இந்த 5.5G நெட்வொர்க் மூலம் அதிகபட்சம் நொடிக்கு 10 ஜிபி வரை இணைய வேகத்தைப் பெறலாம். அப்லோட் வேகமும் நொடிக்கு 1 ஜிபி வரை இருக்கும்.

     

    ஒன பிளஸ் 13 அறிமுகத்தின் போது, 5.5G சேவையின் டெமோ வீடியோ காட்டப்பட்டது, இதில் டவுன்லோடிங் வேகம் 1014.96 Mbps ஆக ஜியோவின் நெட்வொர்க்கில் பதிவானது.

    வழக்கமான 5ஜி நெட்வோர்க்கில் நமது நாட்டில் நொடிக்கு 277.78 Mbps என்ற வேகத்தில் இணையம் கிடைக்கும். எனவே 5ஜி வேகத்தை விட 5.5ஜி வேகம் 380% அதிகமாகும். இதன்மூலம் 10 நொடிகளில் நம்மால் ஹெச்டி தரத்தில் 5 முழு படங்களை டவுன்லோட் செய்ய முடியும். இந்த 5.5ஜி சேவை வரும்காலங்களில் அனைத்து மற்ற ஸ்மாட்போன்களிலும் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • செயற்கை நுண்ணறிவு (AI) அம்சங்களுடன் அறிமுகமாகிறது
    • இதற்கான முன்பதிவு இந்தியாவில் தொடங்கியுள்ளது.

    இந்தியாவில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் Galaxy S25 Series மொபைல் போன்கள் வரும் 22ம் தேதி வெளியாக உள்ளன.

    சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு 2025 நிகழ்ச்சி ஜனவரி 22 ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 10:30 மணிக்கு தொடங்குகிறது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் ஜோஸில் இந்நிகழ்வானது நடைபெறுகிறது.

    இந்நிகழ்வின் முக்கிய அறிமுகமாக கேலக்ஸி எஸ் 25 சீரிஸ் இருக்கும். எஸ்25 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது செயற்கை நுண்ணறிவு (AI) அம்சங்களுடன் அறிமுகமாகிறது. S25, S25+, S25 Ultra ஆகிய 3 மாடல்கள் வெளியாகும் என எதிர்பார்காப்படுகிறது. இதற்கான முன்பதிவு இந்தியாவில் தொடங்கியுள்ளது.

    இந்த நிகழ்வில், Project Moohan என அழைக்கப்படும் எக்ஸ்டென்டட் ரியாலிட்டி (Extended reality - XR) ஹெட்செட்டையும் சாம்சங் அறிமுகப்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்டுகிறது. 

    • ஒப்போ ரெனோ 13 8ஜி ரேம் உடன் 128ஜிபி மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்டது.
    • ஒப்போ ரெனோ ப்ரோ 12ஜிபி ரேம் வரை சப்போர்ட் செய்யும் வகையில், 256 ஜிபி மற்றும் 512 ஜிபி ஸ்டோரோஜ் கொண்டது.

    ஒப்போ ரெனோ 13 5ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியா மற்றும் உலகளவில் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்தியாவில் வருகிற 9-ந்தேதி ரிலீஸ் ஆகும் என ஒப்போ நிறுவனம் அறிவித்துள்ளது.

    8ஜி ரேம் உடன் 128ஜிபி மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட செல்போன் வெளியாகலாம் எனத் தெரிகிறது. ஐவரி ஒயிட் உள்பட இரண்டு கலர்களில் கிடைக்கும்.

    12ஜிபி ரேம் வரை சப்போர்ட் செய்யும் வகையில், 256 ஜிபி மற்றும் 512 ஜிபி ஸ்டோரோஜ் கொண்டதாக ஒப்போ ரெனோ 13 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் இருக்கும்.

    ஒப்போ ரெனோ 13 ப்ரோ போன்கள் 80W wired SuperVOOC சப்போர்ட் உடன் 5800mAh பேட்டரி கொண்டதாகவும், ஒப்போ ரேனா 13 5600mAh பேட்டரி பேட்டரி கொண்டதாக இருக்கும்.

    ஒப்போ ரெனோ 13 ப்ரோ போன்களில் கேமரா 3.5x ஆப்டிகல் ஜூம் உடன் 50 மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிபோட்டா வசதி கொண்டதாக இருக்கும். ஒப்போவின் SignalBoost X1 சிப்ஸ் உடன் MediaTek Dimensity 8350 SoCs பிராசசர் கொண்டதாக இருக்கும்.

    • விளம்பர நோக்கில் பயன்படுத்தியதாக ஆப்பிள் மீது குற்றச்சாட்டு.
    • ஆப்பிள் நிறுவனம் இழப்பீடு வழங்க முன்வந்துள்ளது.

    ஆப்பிள் நிறுவனம் பயனர்களின் தனியுரிமையை மீறியது தொடர்பான வழக்கில் 95 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 815 கோடி) இழப்பீடு வழங்க இருக்கிறது. ஆப்பிள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு சேவையான சிரியிடம் மேற்கொள்ளப்படும் உரையாடல்களை விளம்பர நோக்கில் பயன்படுத்தியதாக ஆப்பிள் நிறுவனம் மீது குற்றம்சாட்டப்பட்டது.

    இதனை ஆப்பிள் நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது. எனினும், சிரி சேவையை பயன்படுத்துவோரின் தனியுரிமை சார்ந்த விஷயம் என்பதால், இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. இதற்காக ஆப்பிள் நிறுவனம் இழப்பீடு வழங்க முன்வந்துள்ளது. இதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பயனர்கள் 20 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1700 பெறுவர்.

    கடந்த செப்டம்பர் 2021 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு கடந்த 2021 பிப்ரவரி மாதத்திலேயே தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, இந்த வழக்கில் போதுமான ஆதாரங்கள் இல்லாததால், ரத்து செய்யப்பட்டு விட்டது.

    எனினும், பயனர்கள் ஆப்பிள் நிறுவனம் சிரி உரையாடல்களை பதிவு செய்வதாக குற்றம்சாட்டினர். இது தொடர்பாக சிலர் தங்களை குறிவைத்து விளம்பரங்கள் வருவதை கண்டறிந்தனர். பின்னர் இதை உறுதிப்படுத்த அவர்கள் சிரியிடம் சில உரையாடல்களை மேற்கொண்டனர். பிறகு, உரையாடல்கள் சார்ந்த விளம்பரங்கள் ஐபோனில் வருவதை அவர்கள் உறுதிப்படுத்தினர்.

    இதைத் தொடர்ந்து ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தான் ஆப்பிள் நிறுவனம் இந்திய மதிப்பில் ரூ. 815 கோடியை இழப்பீடாக வழங்க முடிவு செய்துள்ளது. அதன்படி செப்டம்ர் 17, 2014 ஆம் ஆண்டு துவங்கி டிசம்பர் 31 ஆம் தேதி 2024 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் பதிவு செய்யப்பட்ட உரையாடல்களில் பாதிக்கப்பட்ட பயனர் ஒவ்வொருத்தருக்கும் இழப்பீடு வழங்கப்பட இருக்கிறது. 

    • 2024 சிறந்த மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்போன்கள் பட்டியல்.
    • ஸ்மார்ட்போன் பிரான்டுகள் பல்வேறு புது மாடல்களை அறிமுகம் செய்தன.

    இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் கடந்த ஆண்டு ஏராளமான ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. முன்னணி ஸ்மார்ட்போன் பிரான்டுகள் பல்வேறு புது மாடல்களை அறிமுகம் செய்தன. மிட் ரேஞ்ச் பிரிவில் ஏராளமான மாடல்கள் இடம்பெற்றுள்ளன. இதில் 2024 சிறந்த மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்போன்கள் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்..

    மோட்டோ எட்ஜ் 50 நியோ:

    மிட் ரேஞ்ச் பிரிவில் மோட்டோ பிரான்டின் எட்ஜ் 50 நியோ சக்திவாய்ந்த பிராசஸர், சிறப்பான கேமரா சென்சார், வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, வீகன் லெதர் பேக் டிசைன் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் பிரீமியம் தோற்றத்துடன், சீரான வேகத்தில் இயங்கும் திறன் கொண்டுள்ளது.

     


    நத்திங் போன் 2a பிளஸ்:

    நத்திங் பிரான்டின் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் மாடலாக 2a பிளஸ் விற்பனைக்கு வந்தது. தனித்துவ டிசைன், சக்திவாய்ந்த மீடியாடெக் டிமென்சிட்டி 7350 ப்ரோ 5ஜி பிராசஸர், 8 ஜிபி ரேம் உள்ளிட்டவை இந்த ஸ்மார்ட்போனின் குறிப்பிடத்தக்க அம்சங்களாக உள்ளன. இத்துடன் இரட்டை கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளது.

    போக்கோ F6:

    போக்கோ பிரான்டின் F சீரிஸ் மாடல்கள் மிட் ரேஞ்ச்-இல் சக்திவாய்ந்த பிராசஸர் கொண்டிருக்கின்றன. அந்க வகையில் போக்கோ F6 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8s ஜென் 3 சிப்செட் உள்ளது. இந்த பட்ஜெட்டில் இத்தனை சக்திவாய்ந்த பிராசஸர் கொண்ட ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக போக்கோ F6 தனித்து நிற்கிறது.

     


    விவோ T3 அல்ட்ரா:

    விவோ நிறுவனம் மிக மெல்லிய டிசைன் மற்றும் பிரீமியம் தோற்றத்துடன் அறிமுகம் செய்த ஸ்மார்ட்போனாக விவோ T3 அல்ட்ரா மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் மீடியாடெக் டிமென்சிட்டி 9200+ பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 50MP பிரைமரி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஒன்பிளஸ் நார்டு 4:

    ஒன்பிளஸ் நிறுவனம் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்களை நார்டு சீரிசில் விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில், கடந்த ஆண்டு அந்நிறுவனம் அறிமுகம் செய்த நார்டு 4 ஸ்மார்ட்போன் மெட்டல் டிசைன், ஸ்னாப்டிராகன் 7+ ஜென் 3 பிராசஸர், 256 ஜிபி மெமரி, சிறப்பான கேமரா சென்சார் உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கிறது.

    • விவோ T3x 5ஜி ஸ்மார்ட்போன் 50MP பிரைமரி கேமரா கொண்டிருக்கிறது.
    • இந்த ஸ்மார்ட்போன் 44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.

    விவோ நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்த போன் விவோ T3x 5ஜி. பட்ஜெட் பிரிவில் நிலைநிறுத்தப்பட்ட விவோ T3x 5ஜி மாடல் தற்போது அசத்தலான விலை குறைப்பை பெற்றிருக்கிறது. விலை குறைப்பின் படி விவோ T3x 5ஜி அனைத்து வித வெர்ஷன்களுக்கும் ரூ. 1000 குறைக்கப்பட்டு இருக்கிறது.

    புதிய விலை விவரங்கள்:

    விவோ T3x 5ஜி 4ஜிபி ரேம், 128 ஜிபி ரூ. 12,499

    விவோ T3x 5ஜி 6ஜிபி ரேம், 128 ஜிபி ரூ. 13,999

    விவோ T3x 5ஜி 8ஜிபி ரேம், 128 ஜிபி ரூ. 15,499

    இந்த ஸ்மார்ட்போன் விவோ இந்தியா இ-ஸ்டோர், ப்ளி்பகார்ட் மற்றும் ரீடெயில் ஸ்டோர்களில் குறைக்கப்பட்ட புதிய விலையில் கிடைக்கிறது.

     


    அம்சங்களை பொருத்தவரை விவோ T3x 5ஜி மாடலில் 6.72 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 பிராசஸர், அட்ரினோ 710 GPU, ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட், ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஃபன்டச் ஓ.எஸ். 14 வழங்கப்பட்டு இருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 8MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், 3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போன் 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

    கனெக்டிவிட்டி்கு 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.1, யு.எஸ்.பி. டைப் சி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது.

    • ஐபோன் 16 சீரிஸ் மாடல்கள் கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டன.
    • பிக்சல் 9 சீரிஸ் மாடல்கள் கடந்த அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டன.

    இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் கடந்த ஆண்டு ஏராளமான ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இதில் பல்வேறு புது மாடல்களும், ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களின் மேம்பட்ட வெர்ஷன்களும் அடங்கும். மலிவு பட்ஜெட்டில் துவங்கி மிக அதிக விலை என பல்வேறு விலை பிரிவுகளில் ஸ்மார்ட்போன்கள் கிடைக்கின்றன.

    இதில் கடந்த ஆண்டு வெளியான ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் தலைசிறந்த மாடல்களின் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.

     


    விவோ X200 ப்ரோ:

    விவோ நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக தனது ஸ்மார்ட்போன்களின் கேமரா தரம் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக விவோ X சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் கேமரா சிறப்பாக இருப்பதை பயனர்களும் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், விவோ நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த விவோ X200 ப்ரோ ஸ்மார்ட்போன் 2024 ஆண்டின் சிறந்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக அமைந்தது.

    புகைப்படங்களை எடுக்க விவோ X200 ப்ரோ மாடலில் செய்ஸ் பிரான்டிங் கொண்ட 50MP கேமரா, 200MP பெரிஸ்கோப் டெலிபோட்டோ லென்ஸ், 50MP அல்ட்ரா வைடு கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் மீடியாடெக் டிமென்சிட்டி 9400 பிராசஸர், 16 ஜிபி ரேம், 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

     


    கூகுள் பிக்சல் 9 ப்ரோ XL:

    கூகுள் நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் அறிமுகம் செய்த பிக்சல் 9 ப்ரோ XL மாடலில் அதிநவீன, சக்திவாய்ந்த டென்சார் ஜி4 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 15 ஓ.எஸ்., 50MP பிரைமரி கேமரா, 48MP அல்ட்ரா வைடு கேமரா, 48MP பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா, OIS, வழங்கப்பட்டு இருக்கிறது.

     


    சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா:

    அதிவேகமான குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர், மேம்பட்ட டெலிபோட்டோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஏ.ஐ. சார்ந்த அம்சங்கள், அதிகபட்சம் 1 டி.பி. வரையிலான ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கு அதிகபட்சம் ஏழு ஆண்டுகளுக்கு மென்பொருள் அப்டேட் வழங்குவதாக சாம்சங் அறிவித்துள்ளது.


    ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ்:

    ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்ததில் டாப் எண்ட் ஐபோன் மாடல் தான் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ். மேம்பட்ட டிசைன், அதிவேக பிராசஸர், ஏ.ஐ. வசதிகளை வழங்கும் ஆப்பிள் இன்டெலிஜன்ஸ் என ஏராளமான சுவாரஸ்ய அம்சங்களுடன் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 1 டி.பி. வரையிலான ஸ்டோரேஜ் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் தலைசிறந்த கேமரா சென்சார்கள் வழங்கப்படுகிறது.

    • முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை கொண்டிருக்கும்.
    • பேக் கவரில் ஃபிராஸ்ட்டெட் மேட் கிளாஸ் கொண்டுள்ளது.

    சியோமி நிறுவனம் தனது முற்றிலும் புதிய ரெட்மி டர்போ 4 ஸ்மார்ட்போனினை இன்னும் சில நாட்களில் அறிமுகம் செய்ய இருக்கிறது. ஜனவரி 2 ஆம் தேதி சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் ரெட்மி டர்போ 4 டிமென்சிட்டி 8400 அல்ட்ரா சிப்செட் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை கொண்டிருக்கும்.

    வெளியீட்டுக்கு முன் புதிய ரெட்மி டர்போ 4 ஸ்மார்ட்போனின் டிசைன் விவரங்களை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் செங்குத்தாக பொருத்தப்பட்ட டூயல் 50MP கேமரா சென்சார்கள், பின்புறம் சிவப்பு நிற அக்சென்ட்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் பேக் கவரில் ஃபிராஸ்ட்டெட் மேட் கிளாஸ் கொண்டுள்ளது.

     


    இதன் ஒட்டுமொத்த தோற்றம் ஐபோன் 16 மாடலை நினைவூட்டும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் வலது புறத்தில் வால்யூம் மற்றும் பவர் பட்டன்கள் உள்ளன. இத்துடன் கீழ்புறம் ஸ்பீக்கர் இடம்பெற்று இருக்கிறது.

    புதிய ரெட்மி டர்போ 4 ஸ்மார்ட்போன் பிளாக், வைட் மற்றும் புளூ என மூன்றுவித நிறங்களில் கிடைக்கும் என்று தெரிகிறது. சீனாவில் ரெட்மி டர்போ 4 பிரான்டிங்கில் வெளியாகும் நிலையில், சர்வதேச சந்தையில் இந்த ஸ்மார்ட்போன் போக்கோ X7 ப்ரோ பெயரில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம். 

    • வாய்ஸ் கால்' மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளுக்கு தனியாக ரீசார்ஜ் 'பிளான்' வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
    • பட்டன் போன்களை இன்னும் இந்தியாவில் 15 கோடி மக்கள் பயன்படுத்துகின்றனர்.

    இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) TELIKAAMநிறுவனங்களின் கட்டண வழிகாட்டு நெறிமுறைகளில் திருத்தும் கொண்டு வந்துள்ளது.

    அதன்படி இணைய சேவையை பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்கு, 'வாய்ஸ் கால்' [டாக்-டைம்] மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளுக்கு தனியாக ரீசார்ஜ் 'பிளான்' வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    சமீப காலமாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு தேவைப்படாத சேவைகளை ரீசார்ஜ் பேக் உடன் இணைத்து அதிக நிதி சுமையை உருவாக்குகின்றன.

    அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி சேவைகளை மட்டுமே வேண்டும் வாடிக்கையாளரிடம் கூடுதல் சேவைகள் திணிக்கப்படுகின்றன. தொலை தூர பகுதிகள் மற்றும் கிராமபுறங்களில், 2ஜி நெட்வொர்க்குகள் கொண்ட பட்டன் போன்களை இன்னும் இந்தியாவில் 15 கோடி மக்கள் பயன்படுத்துகின்றனர்.

    எனவே அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் ஆகியவற்றிற்கு மட்டுமே சிறப்பு பிளான்களை கட்டாயமாக்குவது, இன்டர்நெட் தேவையில்லாத வாடிக்கையாளர்களின் தேவையற்ற சுமையை தீர்க்கும் என டிராய் தெரிவித்துள்ளது.  

    • ஏராளமான புது அம்சங்கள் மற்றும் சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.
    • பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு.

    உலகின் முன்னணி குறுந்தகவல் செயலிகளில் ஒன்றாக வாட்ஸ்அப் இருக்கிறது. வாட்ஸ்அப் செயலியில் தகவல் பரிமாற்றம் சார்ந்து ஏராளமான புது அம்சங்கள் மற்றும் சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. ஒருபக்கம் புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், மறுப்பக்கம் வாட்ஸ்அப் செயலி பழைய சாதனங்களில் இயங்கும் வசதி குறைக்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில், ஆண்ட்ராய்டு கிட்கேட் அல்லது அதற்கும் பழைய ஓ.எஸ். கொண்ட ஸ்மார்ட்போன்களில் வருகிற ஜனவரி 1ம் தேதி முதல் வாட்ஸ்அப் செயலி இயங்காது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ற சேவைகளை பயனர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் மெட்டா மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் அங்கமாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    மேலும், இந்த நடவடிக்கை செயலியின் பாதுகாப்பு மற்றும் சீரான இயக்கத்தை உறுதிப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 2013ம் ஆண்டு வெளியான ஆண்ட்ராய்டு கிட்கேட் ஓஎஸ் மிகவும் பழையது என்பதால், வாட்ஸ்அப்-இன் புதிய அம்சங்களை அதில் வழங்குவதில் நிறைய சிக்கல்கள் ஏற்படும். இதோடு பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு.

    வாட்ஸ்அப் சேவை நிறுத்தம் காரணமாக சாம்சங், எல்.ஜி. மற்றும் சோனி என பல ஸ்மார்ட்போன் பிரான்டுகளின் பழைய மாடல்களை பயன்படுத்துவோர் பாதிக்கப்படுவர். எனினும், எந்தெந்த மாடல்களுக்கு வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்படும் என்பது குறித்த பட்டியல் எதுவும் வெளியிடப்படவில்லை.

    ×