என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்கைப்"

    • கோவிட் ஊரடங்கு காலத்தில் ஸ்கைப் சேவைகள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது.
    • மைக்ரோசாப்ட் நிறுவனம், மே 5 ஆம் தேதி முதல் ஸ்கைப் சேவைகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

    2003 முதல் இரண்டு தசாப்தங்களாக வீடியோ அழைப்பு சேவைகளை வழங்கி வந்த மைரோசாப்ட் உடைய ஸ்கைப் சேவைகள் முடிவுக்கு வருகின்றன.

    கொரோனா காலத்தில் இந்த தொழில்நுட்ப சேவை மிகவும் பிரபலமானது. கோவிட் ஊரடங்கு காலத்தில் பல ஊழியர்களாலும்  வணிகங்களாலும் ஸ்கைப் சேவைகள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது.

    இருப்பினும், கோவிட்-க்குப் பிறகு பயனர் வரவேற்பு சரிவு, ஜூம், கூகிள் மீட் மற்றும் வாட்ஸ்அப் போன்ற போட்டியாளர்கள், மைக்ரோசாப்ட் அதன் தொடர்பு தளங்களை ஒருங்கிணைப்பது போன்ற காரணங்களால், ஸ்கைப் அதன் சேவைகளை நிறுத்த முடிவு செய்தது.

    மைக்ரோசாப்ட் நிறுவனம், மே 5 ஆம் தேதி முதல் ஸ்கைப் சேவைகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

    மைக்ரோசாப்ட் Office 365 இன் ஒரு பகுதியாக இருக்கும் Microsoft Teams-ஐ நோக்கி பயனர்களை திருப்ப நடவடிக்கை எடுத்து வருகிறது. Teams, செய்தி அனுப்புதல் மற்றும் வீடியோ அழைப்புகள் போன்ற பிற சேவைகளுக்கான முதன்மை தளமாக உள்ளது.

    Skype-லிருந்து Teams-க்கு மாறுவதற்கு மைக்ரோசாப்ட் பயனர்களுக்கு அவகாசம் அளித்துள்ளது. மைக்ரோசாப்ட் chat ஹிஸ்டரி மற்றும் தொடர்புகளை டீம்ஸ்க்கு தடையின்றி மாற்றுவதாகவும் உறுதியளித்துள்ளது. ஸ்கைப்பை விட டீம்ஸ் மிகவும் நவீனமான, ஒருங்கிணைந்த அனுபவத்தை வழங்குகிறது என்பதை மைக்ரோசாப்ட் தெளிவுபடுத்தியுள்ளது. 

    • ஸ்கைப் செயலி 50 மில்லியன் பயனாளர்களை எட்டி சாதனை புடைத்திருந்தது.
    • ஸ்கைப் செயலியின் சேவை மே 5-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.

    மைக்ரோசாப்ட் நிறுவனம் வீடியோ, ஆடியோ அழைப்புகள் மேற்கொள்வதற்காக 2003-ம் ஆண்டு ஸ்கைப் என்ற செயலியை அறிமுகப்படுத்தியது.

    20 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமாக செயல்பட்டு வந்த ஸ்கைப் செயலி 50 மில்லியன் பயனாளர்களை எட்டி சாதனை படைத்திருந்தது.

    இந்நிலையில், ஸ்கைப் செயலியின் சேவை மே 5-ம் தேதியுடன் முடிவுக்கு வருவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

    ஸ்கைப் செயலுக்கு பதிலாக மைக்ரோசாப்ட் டீம் என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே ஸ்கைப் பயனாளர்கள் தங்கள் விவரங்களை Microsoft Teams-ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ஸ்கைப் கால் செய்வோருக்கு புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் முற்றிலும் கிளவுட் சார்ந்து இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



    ஸ்கைப் செயலியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன் செயலியை மேலும் எளிமையாக்கும் நோக்கில் ஹைலைட்ஸ் மற்றும் கேப்ச்சர் போன்ற அம்சங்களை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் எடுத்தது.

    அந்த வகையில், ஸ்கைப் கால் செய்யும் போது அவற்றை ரெக்கார்டு செய்யும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் முழுமையாக கிளவுட் சார்ந்து இயங்கும் என மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது. மேம்படுத்தப்பட்ட பதிப்பில் புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், விண்டோஸ் 10 தவிர மற்ற இயங்குதளங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதிய அம்சம் தற்சமயம் வழங்கப்படாத நிலையில் விண்டோஸ் 10 தளத்திற்கு வரும் வாரங்களில் வழங்கப்படும் என மைக்ரோசாஃப்ட் உறுதி அளித்துள்ளது. அழைப்புகளை பதிவு செய்யும் போது மறுமுனையில் இருக்கும் அனைவருக்கும் அழைப்பு பதிவு செய்யப்படுவதை குறிக்கும் நோட்டிஃபிகேஷன் அனுப்பப்படும். 



    பதிவு செய்யப்பட்ட அழைப்புகளை பயனர்கள் அடுத்த 30 நாட்களுக்குள் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவோ அல்லது சேமித்துக் கொள்ளும் வசதி கொண்டுள்ளது.

    டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில் அழைப்புகளை பதிவு செய்ய, திரையின் கீழே காணப்படும் "+" குறியை க்ளிக் செய்து, பதிவு செய்ய துவங்கலாம். மொபைல் செயலியில் அழைப்புகளை பதிவு செய்ய வட்ட வடிவில் காணப்படும் "+" குறியை க்ளிக் செய்ய வேண்டும்.

    பதிவு செய்யப்பட்ட அழைப்புகளை டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் பதிவு செய்ய, சாட் ஸ்கிரீன் சென்று மோர் -- சேவ் டு டவுன்லோடு ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும், அழைப்பு பயனரின் டவுன்லோடு ஃபோல்டரில் பதிவு செய்யப்படும். மொபைலில் ரெக்கார்டெட் கால் ஆப்ஷனை க்ளிக் செய்து, அழுத்திப் பிடிக்க வேண்டும். 

    கம்ப்யூட்டர் மற்றும் மொபைலில் பதிவு செய்யப்படும் அழைப்புகள் MP4 வடிவில் சேமிக்கப்படும்.
    ×