search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில்வே அமைச்சகம்"

    • விழாவை காண கிராமங்களில் திரையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • பிரபலங்கள் உள்ளிட்ட ஏராளமானோருக்கு கோவில் அறக்கட்டளை சார்பில் நேரில் சென்று அழைப்பு.

    உத்தரப் பிரதேசம் மாநிலம், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ந்தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    விழாவில் கலந்துக் கொள்வதற்காக 55 நாடுகளில் இருந்து 100 உயரதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.

    உள்ளநாட்டின் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள், திரைப் பிரபலங்கள் என ஏராளமானோருக்கு கோவில் அறக்கட்டளை சார்பில் நேரில் சென்று அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. 

    மேலும், ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி பல்வேறு மாநிலங்களிலும் அன்றைய தினத்திற்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    கும்பாபிஷேக விழாவை காண கிராமங்களில் திரையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோவில் திறப்பை ஒட்டி, நாடு முழுவதும் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களையும் மின்னொளியில் ஒளிர விட ரெயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • டிக்கெட்டை ரத்து செய்தால், விலங்கு டிக்கெட்டுக்கு பணம் திரும்ப வழங்கப்படாது.
    • விலங்குகளின் உரிமையாளர்கள் ரெயில் நிறுத்தங்களில் தங்கள் செல்லப்பிராணிகளுக்கு தண்ணீர், உணவு போன்றவற்றை வழங்கலாம்.

    ஐஆர்சிடிசி இணையதளத்தில் விலங்குகளை ரெயிலில் கொண்டு செல்லஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதியைத் தொடங்கும் வகையில், மென்பொருளில் மாற்றங்களைச் செய்யுமாறு ரயில்வே வாரியம் ரயில்வே தகவல் அமைப்புகளுக்கான மையத்திடம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    காவலர்களுக்காக ஒதுக்கப்பட்ட உட்கார்ந்தபடி பயணம் செய்யக்கூடிய சாமான்கள் ஏற்றிச்செல்லும் (எஸ்எல்ஆர்) கோச்சில் விலங்குகள் வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    விலங்குகளின் உரிமையாளர்கள் ரெயில் நிறுத்தங்களில் தங்கள் செல்லப்பிராணிகளுக்கு தண்ணீர், உணவு போன்றவற்றை வழங்கலாம் என்றும் இதற்கு பயணியின் டிக்கெட் உறுதியாகி இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    டிக்கெட்டை ரத்து செய்தால், விலங்கு டிக்கெட்டுக்கு பணம் திரும்ப வழங்கப்படாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் ரெயில்வே வாரியம் சார்பில் விதிக்கப்பட்டுள்ளன.

    • ரெயில்வே சட்டத்தின் தொடர்புடைய விதிகளின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு முறையே ரூ.6.71 லட்சம் மற்றும் ரூ.8.68 லட்சம் என மொத்தம் ரூ.15.39 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
    • நீண்ட தூர ரெயில்களின் பொதுப்பெட்டிகளில் இருக்கைகளை ஆக்கிரமித்தவர்களில் 36 பேர் அடையாளம் காணப்பட்டு, கைது செய்யப்பட்டனர்.

    புதுடெல்லி:

    பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட பெட்டிகளில் வேறு யாரும் ஏறாமல் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஒரு மாதகால இயக்கத்தை ரெயில்வே பாதுகாப்புப்படை அறிமுகப்படுத்தியது.

    இந்த நடவடிக்கையின்போது, பெண்களுக்கென ஒதுக்கப்பட்ட பெட்டிகளில் பயணித்த 5,100-க்கு மேற்பட்டோரும், மாற்றுத்திறனாளிகளின் பெட்டிகளை ஆக்கிரமித்த 6,300-க்கு மேற்பட்டோரும் பிடிபட்டனர். இவர்கள் மீது ரெயில்வே சட்டத்தின் தொடர்புடைய விதிகளின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு முறையே ரூ.6.71 லட்சம் மற்றும் ரூ.8.68 லட்சம் என மொத்தம் ரூ.15.39 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

    ரெயில்களில் பயணிகளுக்கு தொந்தரவு செய்தது, பயணிகளிடம் தவறாக நடந்துகொண்டது போன்ற செயல்களில் ஈடுபட்ட 1,200-க்கும் மேற்பட்ட 3-ம் பாலினத்தவர்கள் பிடித்துச்செல்லப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் அவர்களிடமிருந்து ரூ.1.28 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

    நீண்ட தூர ரெயில்களின் பொதுப்பெட்டிகளில் இருக்கைகளை ஆக்கிரமித்தவர்களில் 36 பேர் அடையாளம் காணப்பட்டு, கைது செய்யப்பட்டனர்.

    இந்த தகவல்களை ரெயில்வே அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

    • ரெயில் நிலையங்களில் வசதிகளின் தேவையை கருத்தில் கொண்டு திட்டம் செயல்படுத்தப்படும்.
    • தற்போது உள்ள வசதிகளுக்கு மாறாக புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்படும்.

    நாடு முழுவது ரெயில் நிலையங்களை நவீனமயமாக்க அமிர்த பாரத் ரெயில் நிலைய திட்டம் என்ற புதிய திட்டத்தை ரெயில்வே அமைச்சகம் வகுத்துள்ளது. தொலைநோக்குப் பார்வையுடன் ரெயில் நிலையங்களை தொடர்ந்து மேம்படுத்த இத்திட்டம் வகை செய்யும்.

    ரெயில் நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில், வசதிகளின் தேவையை கருத்தில் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

    ரெயில் நிலையங்களின் மேல்தளத்தில் அங்காடிகள் மற்றம் வணிக நிறுவனங்களை அமைப்பது உள்பட குறைந்தபட்ச அத்தியாவசிய வசதிகள் இந்த திட்டத்தில் இடம் பெற்றிருக்கும்.

    ரெயில் நிலையங்களில் தற்போது உள்ள வசதிகளுக்கு மாறாக புதிய வசதிகளை அறிமுகப்படுத்துதலை இத்திட்டம் நோக்கமாக கொண்டது. தகவல் பலகைகள், மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள் உள்ளிட்டவை ரெயில் நிலையங்களில் உறுதி செய்யப்படும்.

    அனைத்து ரெயில் நிலையங்களிலும் பயணிகள் தங்கும் அறை, நடைமேடைகள், ஓய்வு அறைகள், அதிகாரிகள் ஆய்வு அறை ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று ரெயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • லெவல் கிராசிங் பகுதிகளில் எல்இடி பல்புகள் பொருத்தப்படுகின்றன.
    • ரெயில்களை 75 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க முடிவு.

    வட மாநிலங்கள் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் குளிர் காலம் தொடங்கி உள்ள நிலையில், இரவு வேளைகள் மற்றும் அதிகாலை வேளைகளில் காணப்படும் மூடுபனியின்போது ரெயில் பயணத்தை பாதுகாப்பானதாக மாற்றுவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    குறிப்பாக விபத்து ஏற்படுவதைத் தடுப்பது மற்றும் ரெயில் சேவையின் கால தாமதத்தைக் குறைப்பது போன்றவற்றில் தனிக் கவனம் செலுத்தப்படும் என்று ரெயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பனி படர்வை நீக்கும் கருவிகளை ரெயில் இஞ்சின்களில் பொருத்துவது, அதிக ஒலி எழுப்பக்கூடிய கருவிகளை பொருத்துவது, தண்டவாளங்களுக்கு அருகில் வெள்ளை நிற கோடுகளை போடுவது உள்ளிட்டவை மேற்கொள்ளப்படுகிறது.

    லெவல் கிராசிங் பகுதிகளில் விசில் எழுப்பக் கூடிய கருவிகள் மற்றும் எல்இடி பல்புகளை பொருத்துதல், சிக்மா வடிவிலான சிக்னல் அமைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் ரெயில்களை 60 கிலோ மீட்டரிலிருந்து 75 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

    ×