என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில் பயண கட்டண சலுகை"

    • கொரோனா பரவல் காரணமாக, கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 20-ந் தேதியுடன் மூத்த குடிமக்கள் கட்டண நிறுத்தப்பட்டது.
    • கட்டண சலுகை அளித்திருந்தால், ரூ.8 ஆயிரத்து 913 கோடி குறைவாகவே வருவாய் கிடைத்திருக்கும்.

    புதுடெல்லி:

    ரெயில்களில், 58 வயது பூர்த்தியடைந்த பெண்களுக்கு கட்டணத்தில் 50 சதவீதமும், 60 வயது பூர்த்தியடைந்த ஆண்களுக்கு கட்டணத்தில் 40 சதவீதமும் சலுகை அளிக்கப்பட்டு வந்தது. கொரோனா பரவல் காரணமாக, கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 20-ந் தேதியுடன் இச்சலுகை நிறுத்தப்பட்டது.

    அதன்பிறகு மேற்கண்ட மூத்த குடிமக்களும் முழு கட்டணம் செலுத்தி ரெயில்களில் பயணித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே, மூத்த குடிமக்கள் கட்டண சலுகை ரத்து காரணமாக, 2020-ம் ஆண்டு மார்ச் 20-ந் தேதியில் இருந்து கடந்த 5 ஆண்டுகளில் ரெயில்வேக்கு கிடைத்த கூடுதல் வருவாய் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ், மத்தியபிரதேசத்தை சேர்ந்த சந்திரசேகர் கவுர் என்பவர் கேள்வி கேட்டார்.

    அதற்கு ரெயில்வே அமைச்சகத்தின்கீழ் உள்ள ரெயில்வே தகவல் சேவை மையம் பதில் அளித்துள்ளது.

    அதில், கடந்த 5 ஆண்டுகளில் 31 கோடியே 35 லட்சம் மூத்த குடிமக்கள், ரெயில்களில் பயணித்து இருப்பதாகவும், அவர்கள் மூலம் ரூ.20 ஆயிரத்து 133 கோடி வருவாய் கிடைத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

    இது முழு கட்டணம் செலுத்தியதால் கிடைத்த தொகை. கட்டண சலுகை அளித்திருந்தால், ரூ.8 ஆயிரத்து 913 கோடி குறைவாகவே வருவாய் கிடைத்திருக்கும். எனவே, கட்டண சலுகை ரத்து காரணமாக, கூடுதலாக ரூ.8 ஆயிரத்து 913 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக ரெயில்வே தகவல் சேவை மையம் கூறியுள்ளது.

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
    • ரெயில்வேக்கு ஏற்படும் இழப்பை சமூக நலனாக அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும்.

    நாகர்கோவில்:

    மத்திய ரெயில்வேத் துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவுக்கு தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    ரெயிலில் பயணம் செய்யும் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 40 சதவீதமும், 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 50 சதவீதமும் மூத்த குடிமக்கள் என்ற அடிப்படையில் கட்டண சலுகையை ரெயில்வே துறை வழங்கி வந்தது. கொரோனா காலத்தில் இவை நிறுத்தப்பட்டது. இது முதியோர் மத்தியில் விரக்தி யை ஏற்படுத்தி உள்ளது.

    முதியோருக்கு கட்டண சலுகை வழங்குவதன் மூலம் ரெயில்வேக்கு இழப்பு ஏற்படுவதாக கூறப்பட்டாலும், அதை சமூக நலனாக அரசு ஏற்றுக் கொண்டு, மூத்த குடி மக்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை எந்த காரணத்தை கொண்டும் நிறுத் தாமல் மீண்டும் தொடர வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்.

    எனவே மக்களின் விருப்பத்தை நிறைவேற்றி, மூத்த குடிமக்களுக்கு வழங் கப்பட்ட பயண கட்டண சலுகைகளை மீண்டும் வழங்க உரிய நடவடிக்கை எடுத்து உதவ கேட்டு கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    ×