search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முன்னெச்சரிக்கை நடவடிக்கை"

    • தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ, ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • மெழுகுவர்த்தி, டார்ச் லைட், செல்போன் பவர் பேங்க், கொசுவர்த்தி உள்ளிட்டவை கையிருப்பு இருக்க வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது.

    தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக தாழ்வான இடங்களில் வெள்ளம் சூழந்துள்ளது. மேலும் அணைகள், ஆறுகள் மற்றும் நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் செல்வதால் ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ, ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் இறங்கா தவாறு கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் மூலம் கண்காணித்திட ஸ்ரீவைகுண்டம், ஏரல் மற்றும் திருச்செந்தூர் தாசில்தார்களுக்கு அறிவுறுத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தபட்டுள்ளது.

    மேலும், பொதுமக்கள் அத்தியாவசிய தேவையான குடிநீர், ஓரிரு நாட்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கையிருப்பில் வைத்துக் கொள்ளுமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    மெழுகுவர்த்தி, டார்ச் லைட், செல்போன் பவர் பேங்க், கொசுவர்த்தி உள்ளிட்டவை கையிருப்பு இருக்க வேண்டும்.

    ஒரு சில இடங்களில் மின் சப்ளை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் குடிநீர் சப்ளை மற்றும் போர் மோட்டார் இயக்கத்தில் தடை ஏற்பட வாய்ப்புள்ளது.

    எனவே எங்கெங்கு வாய்ப்புள்ளதோ அந்த ஊர்களில் எல்லாம் குடிநீர் டேங்க், சின்டெக்ஸ் டேங்க் உள்ளிட்டவற்றை இன்றே நிரப்பி வைத்துக்கொள்ள வேண்டும் என நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் கேட்டுக் கொண்டுள்ளார்.

    இதற்கிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு 25 பேர் கொண்ட 4 தேசிய பேரிடர் மீட்பு படை குழு வருகை தர உள்ளது.

    • மழைக்காலத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து அதிகாரி
    • சரியாக செயல்படுகிறதா என அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் மழைக்காலத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் ராஜராஜன் தலைமையில் வருவாய் துறையினர் நாட்டறம்பள்ளி பகுதியில் இயங்கி வரும் மழைமானியினை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    மேலும் மழைமானிகள் அனைத்தும் சரியாக செயல்படுகிறதா என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின்போது நாட்டறம்பள்ளி தாசில்தார் க.குமார், வருவாய் ஆய்வாளர் வனிதா, கிராம நிர்வாக விக்னேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • காட்டுத்தீயை தடுக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் தீயணைப்பு துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • முன் எச்சரிக்கை குறித்து கடந்த சில வாரங்களாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கோடைக்காலம் தொடங்கி உள்ளதால் கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் வனம் மற்றும் மலைப்பகு திகளான சத்தியமங்கலம், பண்ணாரி, தாளவாடி, ஆசனூர், அந்தியூர், பர்கூர், சென்னிமலை போன்ற பகுதிகளில் மரங்கள், செடி, கொடிகளில் இலைகள் காய்ந்து உதிர்ந்து வருகிறது.

    இதனால் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை தடுக்க மாவட்ட தீயணைப்பு துறை சார்பில் வனத்துறையினருக்கும், மலைவாழ் மக்களுக்கும், தன்னார்வலர்களுக்கம் முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு நடவ டிக்கைகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    மேலும் காட்டுத்தீயை தடுக்க தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் மாவட்ட தீயணைப்பு துறை சார்பில் மேற்கொள்ள ப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து ஈரோடு மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி கூறியதாவது:

    ஈரோடு மாவட்டத்தில் வனப்பபகுதியை சேர்ந்த மக்களுக்கும், வனத்துறை ஊழியர்களுக்கும் காட்டுத்தீயை தவிர்க்க எடுக்க வேண்டிய முன் எச்சரிக்கை குறித்து கடந்த சில வாரங்களாக விழி ப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    அதேபோல் பிற வனப்பகுதி மற்றும் மலைப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டால் கட்டுப்படுத்த அதே பகுதியை சேர்ந்த தன்னார்வலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு தயார் செய்து வைத்து ள்ளோம்.

    வனப்பகுதிகளில் மரம், செடி, கொடிகளில் இருந்து காய்ந்த இலைகள் உதிர்ந்து சருகாக வனத்தில் காணப்ப டும். அதிக வெயில், காற்றினால் மரங்கள் ஒன்றோடு ஒன்று உரசி தீப்பிடிக்கும்.

    அப்போது காட்டுத்தீயாக மாறும். இது தவிர மர்மநபர்கள் வனத்திற்குள்ளோ அல்லது அதன் அருகிலே சென்று சிகரெட் அல்லது வேறு எதற்காவது தீ பற்ற வைத்து அணைக்காமல் வந்து விட்டால் அதன் மூலம் தீ பரவி காட்டுத்தீயாக மாறு கிறது.

    இதனை தடுக்கவும், வனப்பகுதியில் உள்ள காய்ந்த சருகுகளை அவ்வப்போது அப்புறப்படுத்த நட வடிக்கை எடுத்துள்ளோம்.

    வனத்தை யொட்டி சாலைகளில் இருபுறமும் சிறு பள்ளம் வெட்டி (பயர் லைன்) தீத்தடுப்பு நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    வனத்துறையுடன் இணைந்து காட்டுத்தீயை தடுக்க போதிய முன்னெ ச்சரிக்கை பாதுகாப்பு நட வடிக்கை எடுத்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கடிதம்.
    • ஏற்கனவே பின்பற்றப்பட்டு வந்த நடவடிக்கைகளை மீண்டும் தீவிரப்படுத்த வேண்டும்.

    இன்றைய நிலவரப்படி உலக அளவில் கொரோனா தொற்றுக்கு 65 கோடியே 85 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சீனா, தென்கொரியா, ஜப்பான், தைவான், ஹாங்காங், ரஷியா நாடுகளில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை திடீரென உயர்ந்துள்ளது. இதனையடுத்து இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை மீண்டும் தீவிரப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    இது குறித்து அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார். பல நாடுகளில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பை சுட்டிக்காட்டியுள்ள அவர், ஏற்கனவே பின்பற்றப்பட்டு வந்த கொரோனா தடுப்பு மற்றும் பரிசோதனை நடவடிக்கைகளை மாநிலங்கள் மீண்டும் தீவிரப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

    கொரோனா பரிசோதனை ரத்த மாதிரிகளை மரபணு ஆய்வகங்களுக்கு தினமும் அனுப்ப வேண்டும் என்றும், இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை என்றும் அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, நாடு முழுவதும் போடப்பட்டுள்ள மொத்த கொரோனா தடுப்பூசி டோஸ் எண்ணிக்கை இன்று 220 கோடி என்ற அளவை எட்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தனது டுவிட்டரில் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.

    • டிசம்பர் 6-ந் தேதி நாளை என்பதால் தமிழகத்திலும் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
    • மதுரை விமான நிலையப்பகுதியிலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    மதுரை

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள பாபர் மசூதி கடந்த 1992-ஆம் ஆண்டு இடிக்கப்பட்டது.பாபர் மசூதி இடிக்கப்பட்ட டிசம்பர் 6-ந் தேதி நாளை என்பதால் தமிழகத்திலும் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

    மதுரை மாவட்டம் முழுவதும் சுமார் 2000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவில், அழகர்கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில், தல்லாகுளம் பெருமாள் கோவில் மற்றும் தேவாலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள், மக்கள் அதிகம் கூடும் பஸ்- ெரயில் நிலையங்கள், விமான நிலையம் ஆகியவற்றில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன.

    ெரயில் நிலையத்தில் பயணிகள் மெட்டல் டிடெக்டர் வழியாக உள்ளே செல்ல அனுமதிக்கப்படு கிறார்கள். பயணிகளின் உடமைகள் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறது. மேலும் பார்சல் அனுப்பவும் பல்வேறு கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளது.

    தண்டவாளங்கள், ெரயில் பெட்டிகளிலும் அடிக்கடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் உள்ள வாகன சோதனை சாவடிகளிலும் 24 மணி நேர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    மதுரை விமான நிலையப்பகுதியிலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • மயிலம், திருவக்கரை கோவில்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுப்பட்டனர்.
    • பாதுகாப்பு துறை உதவி யாளர் ஜீவானந்தம்,தலைமை காவலர் செல்வ வடிவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

    விழுப்புரம்:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடகா மாநிலம் மங்களூரில்ஆட்டோவில் குக்கர் வெடிப்பு நடந்தது. மேலும் டிசம்பர் 6 பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள் போன்ற பல்வேறு காரணங்களுக்காக முன்னெ ச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல பல்வேறு இடங்களில் (ஐ.எஸ்.ஐ.எஸ்.) அமை ப்பில் தொடர்புடைய நபர்களை போலீசார் கைது செய்தும் அவர்கள் வீடுகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் எஸ்ஐக்கள் முருகன், ரவிச்சந்திரன், பா ர்த்தசாரதி, வெங்கடேசன், சிறப்பு உதவி யாளர் ராம வெங்கடேசன், வெங்கடேசன், தலைமையி லான வெடிகுண்டு நிபுணர்கள் மயிலம் முருகன் கோவில், திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவில், திண்டிவனம் ெரயில்வே நிலையம் மற்றும் அதிக மக்கள் கூடும் இடங்களில் மெட்டல் டிடக்டர் உதவியுடனும் மற்றும் மோப்பநாய் தமிழ் வர வைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் முன்னெ ச்சரிக்கை நடவடி க்கையாக சோதனை நடத்தினார்.திண்டிவனம் ரயில்வே நிலைய த்தில்ரயில்வே பாதுகாப்பு துறை உதவி யாளர் ஜீவானந்தம்,தலைமை காவலர் செல்வ வடிவேல் ஆகியோர் உடன் இருந்தனர். இதனால் திண்டிவனம் மற்றும் மயிலம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • தொடர்மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை
    • பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று மதியம் 12 மணி முதல் மழை பெய்ய தொடங்கி தொடர்ந்து லேசானமழை பெய்தது.

    இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது திருப்பத்தூர், மாவட்டத்தில் திருப்பத்தூர் நகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட பள்ளங்களில் மழைநீர் தேங்கியது.

    பல்வேறு இடங்களில் கழிவுநீர் கால்வாய்களில் தண்ணீர் வீடுகளில் புகுந்தது. இதேபோன்று ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி, ஆலங்காயம், வாணியம்பாடி, ஆம்பூர், உள்ளிட்ட பகுதியில் லேசான மழை பெய்தது திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் வடகிழக்கு பருவமழை ஒட்டி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அனைத்து கிராம ஊராட்சிகளிலும் மழை நீர் தேங்காத வண்ணம் மின் மோட்டார் மரம் அறுக்கும் கருவி, கயிறுகள், மணல் மூட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.

    குடிசை வீட்டு பகுதிகளில் உள்ளவர்கள் அப்பகுதிகளில் உள்ள சமுதாயக்கூடம் அரசு பள்ளிகளில் தங்க வைத்துக்கப்பட்டு மருத்துவம் மற்றும் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    திருப்பத்தூரில் இன்று காலை முதல் மழை இல்லாவிட்டாலும் வானிலை அறிக்கையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மழை மற்றும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக ஆரஞ்சு அலார்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் இயங்கி வரும் நடுநிலைபள்ளிகளுக்கு கலெக்டர் அமர்குஷ்வாஹா விடுமுறை அளித்துள்ளார் திருப்பத்தூர் மாவட்டத்தில் பதிவான மழை விவரம் மில்லி மீட்டரில் வருமாறு;

    ஆம்பூர் 12.20, ஆம்பூர் சர்க்கரை ஆலை 16.20, ஆலங்காயம் 1.20, வாணியம்பாடி 5.10, திருப்பத்தூர் சர்க்கரை ஆலை 6.20, திருப்பத்தூர் 11.20 மழை அளவு பதிவாகியுள்ளது. திருப்பத்தூர் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது.

    இதேபோன்று ஆண்டியப்பனூர் அணைகொள்ளளவு எட்டி நீர் நிரம்பி வழிகிறது.

    நெல்லை மாவட்டத்தில் எலி காய்ச்சல் பாதிப்பு எதுவும் இல்லை. மேலும் எலி காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    நெல்லை:

    கேரளாவில் சமீபத்திய மழை வெள்ளம் காரணமாக அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு எலி காய்ச்சல் பரவி வருகிறது. இந்த காய்ச்சலுக்கு இதுவரை 29 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கேரளாவில் இருந்து அண்டை மாநிலமான தமிழகத்திற்கு எலி காய்ச்சல் பரவாமல் தடுக்க உரிய தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் சுகாதார துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளார்கள்.

    நெல்லை மாவட்டத்திலும் முன் ஏற்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் எலி காய்ச்சல் பாதிப்பு எதுவும் இல்லை. மேலும் எலி காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கேரள எல்லையான செங்கோட்டை, புளியரை பகுதியில் சுகாதார குழுவினர் முகாமிட்டுள்ளார்கள்.

    அந்த வழியே வரும் வாகனங்கள் சோதனை செய்யப்படுகின்றன. அரசு மருத்துவமனைகளில் உரிய மருந்துகள் தயார் நிலையில் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×