மயிலம், திருவக்கரை கோவில்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

மயிலம், திருவக்கரை கோவில்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுப்பட்டனர்.பாதுகாப்பு துறை உதவி யாளர் ஜீவானந்தம்,தலைமை காவலர் செல்வ வடிவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.
ரெயில் பயணிகளிடம் போலீசார் சோதனை நடத்திய காட்சி.
ரெயில் பயணிகளிடம் போலீசார் சோதனை நடத்திய காட்சி.
Published on

விழுப்புரம்:

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடகா மாநிலம் மங்களூரில்ஆட்டோவில் குக்கர் வெடிப்பு நடந்தது. மேலும் டிசம்பர் 6 பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள் போன்ற பல்வேறு காரணங்களுக்காக முன்னெ ச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல பல்வேறு இடங்களில் (ஐ.எஸ்.ஐ.எஸ்.) அமை ப்பில் தொடர்புடைய நபர்களை போலீசார் கைது செய்தும் அவர்கள் வீடுகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் எஸ்ஐக்கள் முருகன், ரவிச்சந்திரன், பா ர்த்தசாரதி, வெங்கடேசன், சிறப்பு உதவி யாளர் ராம வெங்கடேசன், வெங்கடேசன், தலைமையி லான வெடிகுண்டு நிபுணர்கள் மயிலம் முருகன் கோவில், திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவில், திண்டிவனம் ெரயில்வே நிலையம் மற்றும் அதிக மக்கள் கூடும் இடங்களில் மெட்டல் டிடக்டர் உதவியுடனும் மற்றும் மோப்பநாய் தமிழ் வர வைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் முன்னெ ச்சரிக்கை நடவடி க்கையாக சோதனை நடத்தினார்.திண்டிவனம் ரயில்வே நிலைய த்தில்ரயில்வே பாதுகாப்பு துறை உதவி யாளர் ஜீவானந்தம்,தலைமை காவலர் செல்வ வடிவேல் ஆகியோர் உடன் இருந்தனர். இதனால் திண்டிவனம் மற்றும் மயிலம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com