search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Precautionary measure"

    • கொக்கு மேடுபகுதியில் சாலையில் மழை நீர் வெளியேற முடியாமல் தேங்கி நிற்கிறது.
    • ஜே.சி.பி.எந்திரம் மூலம் பள்ளம் தோண்டி மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பொன்னேரி:

    தமிழகத்தில வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. இதனால் கடந்த 2 நாட்களாக பலத்த மழை கொட்டியது. இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்திலும் கனமழை கொட்டி தீர்த்தது. நேற்று திருவள்ளூர், பொன்னேரி, மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி, செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.

    மாவட்டத்தில் அதிகபட்டசமாாக பொன்னேரியில் 7.6 செ.மீட்டர் மழையும், கும்மிடிப்பூண்டியில் 5 செ.மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. கனமழை காரணமாக பொன்னேரி, மீஞ்சூர் பகுதியில் சுமார் 500 வீடுகளை மழை நீர் சூழ்ந்து உள்ளது. தண்ணீர் வெளியேற முடியாததால் தேங்கி நிற்கிறது. அதனை அகற்றும் பணி நடந்து வருகிறது.

    பொன்னேரி அடுத்த கொக்கு மேடுபகுதியில் சாலையில் மழை நீர் வெளியேற முடியாமல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் வெளியே செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்கள் தண்ணீரில் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. மின் மோட்டார் மூலம் மழை நீரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

    இதேபோல் மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகர், அங்காள பரமேஸ்வரி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளை மழை நீர் சூழ்ந்து நிற்கிறது. அத்திப்பட்டு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கதிர்வேல், வருவாய் ஆய்வாளர் அருணாச்சலம் ஆகியோர் மழைபாதித்த பகுதிகளை பார்வையிட்டு ஜே.சி.பி.எந்திரம் மூலம் பள்ளம் தோண்டி மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் தடப்பரம்பாக்கம் ஊராட்சி ஏ.ஏ.எம் நகர், துரைசாமி நகர் தட பெரும்பாக்கம் காலனி, பகுதியை சுற்றிலும் சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகளை சுற்றி மழைநீர் தேங்கிநிற்கிறது

    மேலும் பலத்த மழை காரணமாக முக்கிய சாலையான மீஞ்சூர்-வல்லூர்சாலை, வல்லூர்-திருவொற்றியூர்- மணலி சாலை சேதம் அடைந்து குண்டும் குழியுமாக மாறிவிட்டன. அதில் தண்ணீர் தேங்கி நிற்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் அந்த பள்ளத்தில் விழுந்து செல்லும் நிலை உள்ளது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் மழைவெள்ள முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் உள்ள 9 தீயணைப்பு நிலையங்களில் 100 தீயணைப்பு வீரர்கள், 50 தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர். 10 தீயணைப்பு வாகனங்கள், 6 படகுகள் மற்றும் மழைக்கால மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

     

    இதில் திருவள்ளூர் மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் வில்சன் ராஜ் தலைமையில் சிறப்பு நிலைய அலுவலர் ஞானவேல் நிலைய போக்குவரத்து அலுவலர் அழகர்சாமி மற்றும் தீயணைப்பு குழுவினர் மழைவெள்ளம் பாதித்தபகுதியில் மீட்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க ரப்பர் படகு, உயர் கோபுர விளக்கு, மிதவை மற்றும் உடை, விபத்து ஏற்படும் போது இரும்பு பொருட்களை வெட்டுவதற்கான நவீன எந்திரம், ஹைட்ராலிக் முறையில் இயங்கும் கருவி, மிதவை பம்பு, வாகனங்களின் அடியில் சிக்கியர்வளை மீட்க உதவும் பொருட்களை தயார் நிலையில் வைத்துள்ளனர்.

    மேலும் ஆபத்துக் காலங்களில் 101,112 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளவேண்டும் என்று தீயணைப்பு துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

    • மழைக்காலத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து அதிகாரி
    • சரியாக செயல்படுகிறதா என அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் மழைக்காலத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் ராஜராஜன் தலைமையில் வருவாய் துறையினர் நாட்டறம்பள்ளி பகுதியில் இயங்கி வரும் மழைமானியினை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    மேலும் மழைமானிகள் அனைத்தும் சரியாக செயல்படுகிறதா என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின்போது நாட்டறம்பள்ளி தாசில்தார் க.குமார், வருவாய் ஆய்வாளர் வனிதா, கிராம நிர்வாக விக்னேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கடிதம்.
    • ஏற்கனவே பின்பற்றப்பட்டு வந்த நடவடிக்கைகளை மீண்டும் தீவிரப்படுத்த வேண்டும்.

    இன்றைய நிலவரப்படி உலக அளவில் கொரோனா தொற்றுக்கு 65 கோடியே 85 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சீனா, தென்கொரியா, ஜப்பான், தைவான், ஹாங்காங், ரஷியா நாடுகளில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை திடீரென உயர்ந்துள்ளது. இதனையடுத்து இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை மீண்டும் தீவிரப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    இது குறித்து அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார். பல நாடுகளில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பை சுட்டிக்காட்டியுள்ள அவர், ஏற்கனவே பின்பற்றப்பட்டு வந்த கொரோனா தடுப்பு மற்றும் பரிசோதனை நடவடிக்கைகளை மாநிலங்கள் மீண்டும் தீவிரப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

    கொரோனா பரிசோதனை ரத்த மாதிரிகளை மரபணு ஆய்வகங்களுக்கு தினமும் அனுப்ப வேண்டும் என்றும், இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை என்றும் அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, நாடு முழுவதும் போடப்பட்டுள்ள மொத்த கொரோனா தடுப்பூசி டோஸ் எண்ணிக்கை இன்று 220 கோடி என்ற அளவை எட்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தனது டுவிட்டரில் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.

    • தொடர்மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை
    • பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று மதியம் 12 மணி முதல் மழை பெய்ய தொடங்கி தொடர்ந்து லேசானமழை பெய்தது.

    இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது திருப்பத்தூர், மாவட்டத்தில் திருப்பத்தூர் நகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட பள்ளங்களில் மழைநீர் தேங்கியது.

    பல்வேறு இடங்களில் கழிவுநீர் கால்வாய்களில் தண்ணீர் வீடுகளில் புகுந்தது. இதேபோன்று ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி, ஆலங்காயம், வாணியம்பாடி, ஆம்பூர், உள்ளிட்ட பகுதியில் லேசான மழை பெய்தது திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் வடகிழக்கு பருவமழை ஒட்டி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அனைத்து கிராம ஊராட்சிகளிலும் மழை நீர் தேங்காத வண்ணம் மின் மோட்டார் மரம் அறுக்கும் கருவி, கயிறுகள், மணல் மூட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.

    குடிசை வீட்டு பகுதிகளில் உள்ளவர்கள் அப்பகுதிகளில் உள்ள சமுதாயக்கூடம் அரசு பள்ளிகளில் தங்க வைத்துக்கப்பட்டு மருத்துவம் மற்றும் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    திருப்பத்தூரில் இன்று காலை முதல் மழை இல்லாவிட்டாலும் வானிலை அறிக்கையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மழை மற்றும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக ஆரஞ்சு அலார்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் இயங்கி வரும் நடுநிலைபள்ளிகளுக்கு கலெக்டர் அமர்குஷ்வாஹா விடுமுறை அளித்துள்ளார் திருப்பத்தூர் மாவட்டத்தில் பதிவான மழை விவரம் மில்லி மீட்டரில் வருமாறு;

    ஆம்பூர் 12.20, ஆம்பூர் சர்க்கரை ஆலை 16.20, ஆலங்காயம் 1.20, வாணியம்பாடி 5.10, திருப்பத்தூர் சர்க்கரை ஆலை 6.20, திருப்பத்தூர் 11.20 மழை அளவு பதிவாகியுள்ளது. திருப்பத்தூர் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது.

    இதேபோன்று ஆண்டியப்பனூர் அணைகொள்ளளவு எட்டி நீர் நிரம்பி வழிகிறது.

    கஜா புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்பு படையினர் சென்னை மற்றும் கடலூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். #Gaja #GajaCyclone
    அரக்கோணம்:

    வங்க கடலில் உருவாகியுள்ள கஜா புயல் 15-ந்தேதி கடலூருக்கும் பாம்பனுக்கும் இடையே கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நேரத்தில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனையடுத்து அரக்கோணம் அருகே தக்கோலத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படை மையத்தில் இருந்து ஒரு குழுவிற்கு 27 பேர் வீதம் 10 குழுவினர் மழை, புயல் ஆகியவற்றினால் ஏற்படும் இடர்பாடு காலங்களில் உதவி செய்வதற்காக மொத்தம் 270 பேர் உதவி கமாண்டர் ராஜன்பாலு தலைமையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த மீட்பு படையினர் கடலூர், சிதம்பரம், புதுச்சேரி, ராமநாதபுரம், சென்னை, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு தனித்தனியாக பிரித்து அனுப்பப்பட்டுள்ளனர்.

    மறு அறிவிப்பு வரும் வரை வீரர்கள் அந்தந்த பகுதிகளில் பணியில் ஈடுபட்டிருப்பார்கள். #Gaja #GajaCyclone
    ×