search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருக்குறள்"

    • 1330 திருக்குறள்களுக்கும், 1330 கதைகளை கொண்ட 7 அடி உயரத்தில் திருக்குறள் புத்தகம் தயாரிக்கப்பட்டது.
    • முடிவில் பல்கலைக்கழக இணை பேராசிரியர் இந்து நன்றி கூறினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் இன்று 7 அடி உயரத்தில் திருக்குறள் புத்தகம் வெளியீட்டு விழா நடைபெற்றது.

    தமிழ் பல்கலைக்கழகம் அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் அகழ் கலை இலக்கிய மன்றம் பெரம்பலூர் சார்பில் 1330 திருக்குறள்களுக்கும் 1330 கதைகளைக் கொண்ட 7 அடி உயரத்தில் திருக்குறள் புத்தகம் தயாரிக்கப்பட்டது.

    இந்த பிரம்மாண்ட புத்தகத்தை பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் முன்னிலையில் பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா, சென்னை தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் அவ்வை. அருள் ஆகியோர் வெளியிட்டனர்.

    இந்த 7 அடி உயர திருக்குறள் புத்தகம் மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பதிவாளர் தியாகராஜன், அகழ் கலை இலக்கிய மன்றம் நிறுவனர் வினோதினி, பல்கலைக்கழக வளர் தமிழ் புல முதன்மையர் குறிஞ்சி வேந்தன், பாண்டிச்சேரி ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் வெங்கடேசன், தொழில் அதிபர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பல்கலைக்கழக இணை பேராசிரியர் இந்து நன்றி கூறினார்.

    • 12-ம் வகுப்பு மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    • மாணவர்கள் திருக்குறளை கற்றுக்கொண்டு பல்வேறு போட்டி தேர்வுகளில் கலந்து கொண்டனர்.

    தஞ்சாவூர்:

    திருக்குறள் உலகப் பொதுமறை நூலாக போற்றப்படுகிறது.

    திருக்குறளை பள்ளி மாணவ-மாணவிகள் தெரிந்து கொள்ளும் வகையில் புது முயற்சியாக தஞ்சாவூர் மேம்பாலம் பகுதியில் இயங்கி வரும் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒலிபெருக்கி மூலம் திருக்குறள் கற்றுத் தரப்படுகிறது.

    இதன் பற்றிய விவரம் வருமாறு:-

    தஞ்சாவூர் மேம்பாலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பகுதி மற்றும் முழுவதும் என பார்வைத்திறன் குறையுடைய மாணவ- மாணவியர்கள் என 1 முதல் 12 -ம் வகுப்பு வரை சுமார் 150 -க்கும் மேற்பட்டோர் சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மூலம் பிரெய்லி எழுத்து கொண்டு கல்வி பயின்று வருகின்றனர்.

    இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அங்கேயே விடுதியில் தங்கி கல்வி பெற்று வருகின்றனர்.

    கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பள்ளியில் படிக்கும் மாணவ -மாணவியர்கள் அரசு பொதுத் தேர்வுகளில் 10 முதல் 12- ம் வகுப்பு மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    தமிழகத்தில் பார்வைத் திறன் குறையுடைய மாணவர்களுக்கு சென்னை (பூந்தமல்லி), திருச்சி, தஞ்சாவூர் ஆகிய 3 இடங்களில் மட்டுமே இந்த சிறப்பு பள்ளி செயல்பட்டு வருகிறது.

    தஞ்சையில் மட்டுமே ஆண், பெண் ஆகிய இருபாலரும் படிக்கும் வசதி உள்ளது.

    இந்நிலையில் இப்பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு திருக்குறளை கற்றுத் தரும் வகையில் புது முயற்சியாக ஒலிபெருக்கி வைத்து ஒரு மணி நேரத்திற்கு ஒரு தடவை ஒரு திருக்குறள் மற்றும் அதன் பொருள் ஆகியவை தானியங்கி கருவியின் மூலம் தினமும் ஒளிபரப்பப்படுகிறது.

    மேலும் அந்த திருக்குறளை உற்று நோக்கும் வகையில் முன்னதாக ஒரு மணி நேரம் முடிவடைந்ததும், அடுத்த ஒரு மணி நேரத்தில் அலாரம் அடிக்கப்பட்டு பின்னர் திருக்குறள் ஒலிபெருக்கி மூலம் கூறப்படுகிறது.

    இதன் மூலம் பார்வை திறன் குறையுடைய மாணவர்கள் அந்த அலாரத்தை கவனித்தும், பின்னர் திருக்குறளை மனதில் உள்வாங்கி அவற்றை கற்றுக் கொள்கின்றனர்.

    இதன் மூலம் மாணவ- மாணவிகள் திருக்குறளை கற்று கொண்டு பல்வேறு போட்டி தேர்வுகளிலும் பங்கு பெறுகின்றனர்.

    தாங்கள் படித்த பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் இணைந்து இந்த வசதியை செய்து கொடுத்துள்ளனர்.

    மேலும் இப்பள்ளியில் சிறப்பு அம்சமாக கணிணி பயன்பாடு பாடப்பிரிவு கணிணி வாய்ஸ் மூலம் கற்றுத் தரப்படுகிறது.

    இதுகுறித்து பள்ளி ஆசிரியை புவனேஸ்வரி கூறுகையில், பார்வைத் திறன் குறையுடைய மாணவர்கள் கடிகாரத்தை நேரில் பார்க்க முடியாததால், ஒரு மணி நேரத்திற்கு ஒரு மணி நேரம் அலாரம் அடித்து பின்னர் ஒலிபெருக்கி மூலம் திருக்குறள் ஒலிபரப்பப்பட்டு அதன் பொருளும் கூறப்படுகிறது.

    இதனால் மாணவர்கள் திருக்குறளை எளிதில் கற்றுக் கொள்ள முடிகிறது என்றார்.

    மற்ற மாணவர்களை போல் பார்வைத் திறன் குறையுடைய மாணவர்கள் திருக்குறளை கற்க புது முயற்சி எடுக்கும் பள்ளி ஆசிரியர்களை பொதுமக்கள், தமிழ் ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.

    • தமிழ் மீது அதிக ஆர்வம் கொண்டவர்.
    • கவிதை திறன் மூலம் புத்தகங்களும் எழுதி சாதனை படைத்துள்ளார்.

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள ஒருங்கிணைந்த வி.ஏ.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் உமாராணி (வயது 52). இவர் எஸ்.வி.நகரம் ஊராட்சியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். கடந்த 25 ஆண்டுகளாக ஆசிரியையாக பணியாற்றி வரும் இவர், தமிழ் மீது அதிக ஆர்வம் கொண்டுள்ளார்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா விடுமுறையில் சிறு சிறு சாதனை முயற்சிகளை மேற்கொண்டார். தமிழ் வளர்ச்சி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் அப்போது அவர் திருக்குறளில் உள்ள 1330 குறள்களை நாணயங்கள், வளையல், குடை, சோயா பீன்ஸ், அகல் விளக்கு, பாசிமணி உள்ளிட்ட பொருட்களில் எழுதி அதனை கவிதை திறன் மூலம் புத்தகங்களும் எழுதி சாதனை படைத்துள்ளார்.

    இது சம்பந்தமாக 'ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' உலக சாதனைக்கு அனுப்பப்பட்டது. இதனையொட்டி முத்தமிழ் அறிஞர் சங்கம், ஆரணி லயன்ஸ் சங்கம், சில்க் சிட்டி லயன்ஸ் சங்கம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் மூலமாக ஆசிரியை உமாராணி சாதனை விருதுகள் பெற்றுள்ளார்.

    இதையறிந்த தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆசிரியை உமாராணியை அழைத்து திருக்குறள் சாதனையாளர் என பாராட்டி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஆசிரியை உமாராணி கூறுகையில், ''திருக்குறளை தேசிய நூலாக அரசு அறிவிக்க வேண்டும், வாழ்க்கையின் அனைத்து நெறிமுறைகளும் திருக்குறளில் அடங்கியுள்ளது. அதனை பின்பற்றினாலே மனிதன் நல்ல மனிதனாக வாழ முடியும். எனது சாதனைப் பயணம் தொடரும்'' என்றார்.

    • சிவகங்கை மாவட்ட அளவில் மாணவ-மாணவிகளுக்கு திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டிக்கு 31-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
    • நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப் பங்களை அனுப்ப வேண்டும்.

    சிவகங்கை

    உலக பொதுமறையாம் திருக்குறளில் உள்ள கருத்துக்களை மாணவ-மாணவிகள் அறிந்து கொள்ளும் வகையில் 1330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் போட்டி சிவகங்கை மாவட்ட அள வில் நடைபெற உள்ளது.

    இதில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.15 ஆயிரம் ரொக்கப்பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்படுகிறது. இந்த போட்டியில் சிவகங்கை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள் கலந்து கொள்ள விண்ணப்பிக்கலாம்.

    இதற்கான விண்ணப்பங்களை www.tamilvalarchithurai.com என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு 04575-241487, 99522 80798 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    வருகிற 31-ந்தேதிக்குள் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

    மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

    • குமரி மாவட்ட நாடகத் தந்தை எனப் போற்றப்படுபவர் டாக்டர் சாமுவேல் இரணியல் கலைத்தோழன்.
    • தமிழ் அறிஞர்கள் முன்னிலையில் திருக்குறளில் உள்ள 1330 குறளையும் மனப்பாடம் செய்து எழுதும் முயற்சியில் ஈடுபட்டார்.

    சென்னை:

    செம்மொழி தமிழ் வளர்ச்சி கழக செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    குமரி மாவட்ட நாடகத் தந்தை எனப் போற்றப்படுபவர் டாக்டர் சாமுவேல் இரணியல் கலைத்தோழன். இவரது மகன் பேராசிரியர் சா.கலைப்புனிதன். தற்போது அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணைச் செயலாளராக உள்ளார். கடந்த ஜூன் மாதம் 18-ந்தேதி தந்தையர் தினத்தன்று தனது தந்தையின் நினைவாக சென்னையில் உள்ள செம்மொழி தமிழ் வளர்ச்சி கழக அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் தமிழ் அறிஞர்கள் முன்னிலையில் திருக்குறளில் உள்ள 1330 குறளையும் மனப்பாடம் செய்து எழுதும் முயற்சியில் ஈடுபட்டார். சுமார் 5 மணி நேரம் 48 நிமிடத்தில் எவ்வித பிழையுமின்றி எழுதி முடித்து உள்ளார்.

    இந்த சாதனை முயற்சியை லண்டனில் இருந்து வெளி வரும் வேர்ல்டு புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் இரண்டரை மாத கால பரிசோதனைக்கு பிறகு அங்கீகரித்தது. முதன்முதலாக திருக்குறளில் உள்ள 1330 குறளையும் மனப்பாடம் செய்து எவ்வித பிழையுமின்றி எழுதி டாக்டர் கலைபுனிதன் சாதனை படைத்துள்ளார் என பாராட்டியதோடு சான்றிதழ் வழங்கி தனது இந்திய பதிப்பில் அதன் விவரங்களையும் வெளியிட்டது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கோவை மத்திய ஜெயிலில் குறள் கூறும் பொருள் என்ற தலைப்பில் தினமும் காலை 7 மணிக்கு ஏதாவது ஒரு கைதியின் மூலம் ஒலிபெருக்கியில் ஒரு திருக்குறள் வாசிக்கப்படும்.
    • அறிஞர்களின் சிந்தனைத்துளிகள், அன்றைய தினத்தில் நடந்த வரலாற்று நிகழ்வுகள், தன்னம்பிக்கை பொன்மொழிகள் ஆகியவை தினமும் வாசிக்கப்படுகிறது.

    கோவை:

    கோவை மத்திய ஜெயிலில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள், குண்டர் தடுப்பு பிரிவு கைதிகள், உயர் பாதுகாப்பு பிரிவு கைதிகள் என 1,500-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் குற்றங்களுக்கு தகுந்தவாறு வெவ்வேறு பிளாக்குகளில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளிடம் நல்லெண்ணத்தை அதிகரிக்கும் வகையிலும், திருந்தும் வகையிலும் கல்விக்கூடம் மூலம் கற்பித்தல், நூலகம் மூலம் வாசிப்புத்திறனை மேம்படுத்துதல், யோகா பயிற்சி, உடற்பயிற்சிகள் அளித்தல் போன்றவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    அதன் ஒரு பகுதியான ஜெயில் வளாகத்தில் திருக்குறள் வாசிக்கும் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. கோவை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. சண்முகசுந்தரம் அறிவுரையின் பேரில் சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா மேற்பார்வையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து டி.ஐ.ஜி. சண்முகசுந்தரம் கூறியதாவது:-

    கோவை மத்திய ஜெயிலில் குறள் கூறும் பொருள் என்ற தலைப்பில் தினமும் காலை 7 மணிக்கு ஏதாவது ஒரு கைதியின் மூலம் ஒலிபெருக்கியில் ஒரு திருக்குறள் வாசிக்கப்படும். தொடர்ந்து குறளின் பொருளும் வாசிக்கப்படும். அதைத்தொடர்ந்து அறிஞர்களின் சிந்தனைத்துளிகள், அன்றைய தினத்தில் நடந்த வரலாற்று நிகழ்வுகள், தன்னம்பிக்கை பொன்மொழிகள் ஆகியவை தினமும் வாசிக்கப்படுகிறது.

    சிறைத்துறை நிர்வாகத்தினர் மூலம் இவை தயார் செய்து கைதியிடம் அளிக்கப்படும். அவர் கட்டுப்பாட்டு அறையில் உள்ள மைக்கை பயன்படுத்தி வாசிப்பார். அனைத்து பிளாக்குகளிலும் ஒலிபெருக்கி உள்ளது. இதன் மூலம் சிறையில் உள்ள அனைத்து கைதிகளும் திருக்குறள், அதன் பொருள், தன்னம்பிக்கை பொன்மொழிகள் உள்ளிட்டவற்றை கேட்டு அறிந்து கொள்வர். இந்த மாதம் முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.

    சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா கூறும்போது சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ள கைதிகளை நல்வழிப்படுத்திட இந்த குறள் கூறும் பொருள் திட்டம் முக்கிய பங்கு வகிக்கும் என்றார்.

    • பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 50 பேருக்கு திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.
    • பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவர் ராமதாஸின் 85- வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு புத்தகம் வழங்கப்பட்டது.

    பல்லடம்:

    பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவர் ராமதாஸின் 85- வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, பல்லடம் பச்சாபாளையம் மாகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கொடியேற்று விழாவும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் விழாவும் நடைபெற்றது. பின்னர் பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 50 பேருக்கு திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.

    திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாக்களில்,மாவட்ட தலைவர் கிரிஸ் சரவணன், மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் பன்னீர்செல்வம், வெற்றிச்செல்வன், நந்தகோபால், மாதப்பூர் சாமிநாதன்,புரட்சிமணி,பிரகாஷ், பூபதி, முன்னவன், மற்றும் மாவட்ட,ஒன்றிய,நகர நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அரசு அலுவலகங்களில் தினமும் ஒரு திருக்குறளை எழுத வேண்டும் என்று தலைமைச்செயலர் இறையன்பு உத்தரவிட்டார்.
    • அனைத்து பள்ளிகளிலும் தினமும் ஒரு திருக்குறளை எழுத நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    தருமபுரி,

    தமிழ்நாட்டில் உள்ள அரசு அலுவலகங்களில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் படிக்கும் வகையில் தினமும் ஒரு திருக்குறளை எழுத வேண்டும் என்று தமிழ்நாடு அரசின் தலைமைச்செயலர் இறையன்பு உத்தரவிட்டார்.

    இதன்படி தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் தினமும் ஒரு திருக்குறள் எழுதப்பட்டு அதற்குரிய விளக்கமும் எழுதப்படுகிறது. இதை அந்த அலுவலகங்களுக்கு வரும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையிடுகிறார்கள்.

    இதன்படி கலெக்டர் அலுவலகம், பேரூராட்சி உதவி இயக்குனர் அலுவலகம், ஊரக வளர்ச்சித்துறை அலுவலகம், சுகாதாரத் துறை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களில் தினமும் ஒரு திருக்குறள் எழுதப்படுகிறது.

    இதேபோல் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி, நகராட்சி அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம், வனத்துறை அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் ஆகியவற்றிலும் தினமும் ஒரு திருக்குறள் எழுதி வைக்கப்படுகிறது.

    இதன் ஒரு பகுதியாக தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் தினமும் ஒரு திருக்குறள் எழுதி வைக்கப்படும் பணியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் மற்றும் கல்வித்துறை சார்ந்த அதிகாரிகள் பார்வையிட்டனர்.

    இதேபோல் மாவட்டத்திலுள்ள அரசு மேல்நிலை, உயர்நிலைப்பள்ளிகள் நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகள் என அனைத்து பள்ளிகளிலும் தினமும் ஒரு திருக்குறளை எழுத நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பணியை கல்வித்துறை அதிகாரிகள் பார்வையிட்டு வருகிறார்கள்.

    • தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார்.
    • சிறுமிக்கு அவார்டு, மெடல் மற்றும் சர்டிபிகேட் ஆகியவை வழங்கி பாராட்டினர்.

    அவினாசி :

    திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்து கருவலூரை சேர்ந்தவர்கள் விக்னேஷ் -ரோகினி. இவர்களது மகள் இனியா (வயது 5).

    இவர் அவினாசியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார் .இந்த நிலையில் சீர்காழியில் நடந்த ஜாக்கி புக் ஆப் வோல்டு ரெக்கார்ட நிறுவனம் நடத்தும் 10நிமிட சவால் நிகழ்ச்சியில் ஆன்லைன் மூலம் கலந்து கொண்டு 10 நிமிடத்தில் 135 திருக்குறள் ஒப்புவித்து சாதனை படைத்துள்ளார். இதனைப் பாராட்டி ஜாக்கி புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்ட் நிறுவனம் சிறுமிக்கு அவார்டு, மெடல் மற்றும் சர்டிபிகேட் ஆகியவை வழங்கி பாராட்டினர்.

    • பிரதமர் மோடிக்கு பப்புவா நியூகினியாவில் சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • பப்புவா நியூ கினியாவின் உள்ளூர் மொழியில் (டோக் பிசின்) திருக்குறளை அவர் வெளியிட்டார்.

    பப்புவா நியூ கினியா:

    ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி பப்புவா நியூ கினியா சென்றார். அங்கு பிரதமர் மோடிக்கு சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

    இந்நிலையில், பிரதமர் மோடி பப்புவா நியூ கினியாவின் உள்ளூர் மொழியில் (டோக் பிசின்) திருக்குறளை வெளியிட்டார்.

    இதுதொடர்பாக, பிரதமர் மோடி தனது சமூக வலைதளத்தில் தமிழில் வெளியிட்ட செய்தியில், பப்புவா நியூ கினியாவில் டோக் பிசின் மொழியில் திருக்குறளை வெளியிட்ட பெருமை எனக்கும் பிரதமர் ஜேம்ஸ் மராபேவிற்கும் கிடைத்தது. குறள் ஒரு தலைசிறந்த படைப்பு. குறளை டோக் பிசின் மொழியில் மொழிபெயர்க்க எடுத்த முயற்சிக்காக மேற்கு புதிய பிரிட்டன் மாகாண கவர்னர் மற்றும் சுபா சசீந்திரன் ஆகியோரைப் பாராட்டுகிறேன் என பதிவிட்டுள்ளார்.

    டோன் பிசின் மொழியில் திருக்குறளை வெளியிட்ட பிரதமர் மோடி

    • இரவில் செல்லும் மோடிக்கு பப்புவா நியூகினியாவில் சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்படுகிறது.
    • பப்புவா நியூ கினியாவின் உள்ளூர் மொழியில் (டோக் பிசின்) திருக்குறளை வெளியிடுகிறார்.

    பிரதமர் மோடி, ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று இரவு தீவு நாடான பப்புவா நியூ கினியாவுக்கு செல்கிறார். அங்கு சூரியோதயத்திற்கு பின் எந்த தலைவருக்கும் சம்பிரதாய வரவேற்பு தரக்கூடாது என்று கட்டுப்பாடு உள்ள நிலையில் மோடி வருகையையொட்டி அந்த கட்டுப்பாட்டை பப்புலா நியூ கினியா அரசு தளர்த்தி உள்ளது. இரவில் செல்லும் மோடிக்கு பப்புவா நியூகினியாவில் சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர் மோடி, பப்புவா நியூ கினியாவின் உள்ளூர் மொழியில் (டோக் பிசின்) திருக்குறளை வெளியிடுகிறார்.

    • தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் நாள்தோறும் ஒரு பொருளுடன் கூடிய திருக்குறளை கரும்பலகையில் எழுதி வைக்க வேண்டும்.
    • திருக்குறள் மற்றும் தமிழ் கலைச்சொற்கள் எழுதும் பணியை கண்காணித்து அறிக்கை அனுப்ப வேண்டும்.

    சென்னை:

    தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் நாள்தோறும் ஒரு பொருளுடன் கூடிய திருக்குறளை கரும்பலகையில் எழுதி வைக்க வேண்டும்.

    ஆட்சி சொல்லகராதியில் இருக்கும் ஆங்கிலச் சொல் ஒன்றையும், அதற்குரிய தமிழ் சொல்லையும் கரும்பலகையில் எழுதி வைக்க வேண்டும்.

    தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலக துறைகள், தன்னாட்சி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களிலும் இதை பின்பற்ற வேண்டும்.

    திருக்குறள் மற்றும் தமிழ் கலைச்சொற்கள் எழுதும் பணியை கண்காணித்து அறிக்கை அனுப்ப வேண்டும் என்று அனைத்து துறை செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், துறைத்தலைவர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

    ×