search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திமுக பிரமுகர்"

    • நீதிபதி பிறப்பித்த உத்தரவில் போலீஸ் படையை அனுப்பி ராமலிங்கத்தை வெளியேற்ற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
    • வீட்டை காலி செய்யும் இடத்தில் போலீசாரும் நிறுத்தப்பட்டிருந்தனர்.

    சென்னை:

    தி.நகர் அப்துல் அஜீஸ் தெருவில் உள்ள தனது வீட்டை கிரிஜா என்ற பெண் தி.மு.க. பிரமுகரான ராமலிங்கம் என்பவருக்கு வாடகைக்கு கொடுத்திருந்தார்.

    சரியாக வாடகை கொடுக்காததால் வீட்டை காலி செய்யுமாறு வயதான தம்பதிகளான கிரிஜாவும் அவரது கணவரும் தெரிவித்தனர். ஆனால் ராமலிங்கம் வீட்டை காலி செய்யாமல் இருந்தார். கடந்த 13 ஆண்டுகளாக ராமலிங்கத்திடம் இருந்து வீட்டை பெற முடியாமல் இருந்த நிலையில் கிரிஜா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவில் 48 மணி நேரத்துக்குள் தி.மு.க. பிரமுகரை வாடகை வீட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோருக்கு உத்தரவிட்டார்.

    நீதிபதி பிறப்பித்த உத்தரவில் போலீஸ் படையை அனுப்பி ராமலிங்கத்தை வெளியேற்ற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து இன்று காலையில் வயதான தம்பதியின் வீட்டை நானே காலி செய்து விடுகிறேன் என்று ராமலிங்கம் போலீசாரிடம் தெரிவித்தார்.

    இதன்படி அவர் வாடகை வீட்டில் உள்ள தனது பொருட்களை ஒரு வேனில் ஏற்றி வீட்டை காலி செய்தார். வீட்டை காலி செய்யும் இடத்தில் போலீசாரும் நிறுத்தப்பட்டிருந்தனர். தாமாகவே முன்வந்து கோர்ட்டு உத்தரவை ஏற்று தி.மு.க. பிரமுகர் ராமலிங்கம் வீட்டை காலி செய்துவிட்டதால் அவரை வலுக்கட்டாயமாக வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படவில்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    • பரிமளம் என்பவர் மூலம் 24 மணி நேரமும் மது விற்பனை செய்து வருவதாகவும் தகவல் கிடைத்தது.
    • கடந்த ஆண்டும் போலீசாரை தாக்க முயன்றுள்ள பழைய வீடியோவும் பரவியது.

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட் டம் ஆலங்குடியை அடுத்த வானக்கண்காடு கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன். தி.மு.க. பிரமுகரும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான இவர் அங்குள்ள டாஸ்மாக் கடையில் அரசு அனுமதியின்றி பார் நடத்தி வருவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.

    அத்துடன் பரிமளம் என்பவர் மூலம் 24 மணி நேரமும் மது விற்பனை செய்து வருவதாகவும் தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு தனிப்படை போலீசாருடன் சென்று அதிரடியாக ஆய்வு நடத்தினார்.

    அப்போது சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டிருந்த பரிமளத்தை மதுபாட்டில்களுடன் பிடித்து போலீசார் அவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றியுள்ளனர். அப்போது அங்கு வந்த மதியழகன், பரிமளத்தை கீழே இறக்கிவிட்டதுடன் போலீசாருடன் வாக்குவாதம் செய்து காலணியை கழற்றி தாக்க முயன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது.

    இதே போல கடந்த ஆண்டும் போலீசாரை தாக்க முயன்றுள்ள பழைய வீடியோவும் பரவியது. போலீசாரை தாக்க முயன்றும், அனுமதி இல்லாமல் பார் நடத்தியும் வந்த மதியழகன் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க தயங்குவதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரப்பப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று இரவு தனிப்படை போலீஸ்காரர் முத்துக்குமார் கொடுத்த புகாரின் பேரில் மதியழகன், பரிமளம் ஆகியோர் மீது பணி செய்யவிடாமல் தடுத்தது, போலீசாரை தாக்க முயன்றது, காலணியை கழற்றி தாக்க முயன்றது உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • தி.மு.க. நிர்வாகியும், உவரி மீனவர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவருமான அந்தோணி ராய் என்பவர் உத்திராண்டு ராமனிடம் தகராறு செய்தார்.
    • உத்திராண்டு ராமனை பணி செய்ய விடாமல் தடுத்து அவதூறாக பேசி, மிரட்டல் விடுத்துள்ளார்.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள உவரியில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்கள் பிடித்ததாக மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் ராதாபுரம் மீன்வளத்துறை ஆய்வாளர் உத்திராண்டு ராமன் மற்றும் உவரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுருக்குமடி‌ வலையில் பிடித்த மீன்களை பறிமுதல் செய்தார்.

    அப்போது அங்கு வந்த பரதர் உவரியை சேர்ந்த தி.மு.க. நிர்வாகியும், உவரி மீனவர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவருமான அந்தோணி ராய் (வயது 43) என்பவர் உத்திராண்டு ராமனிடம் தகராறு செய்தார். அவரை பணி செய்ய விடாமல் தடுத்து அவதூறாக பேசி, மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது. இதுகுறித்து மீன்வள ஆய்வாளர் உவரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் இன்ஸ்பெக்டர் பிரேமா ஸ்டாலின் விசாரணை நடத்தினார்.

    அதில் அவர் அரசு பணியை செய்ய விடாமல் அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்தது உறுதியானது. இதையடுத்து அவர்மீது 353-அரசு பணியை செய்யவிடாமல் தடுத்தல், 294(பி)-அவதூறாக பேசுதல், 506(2)-கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தார்.

    இதனை அறிந்த அந்தோணி ராய் தலைமறைவானார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் நேற்று இரவு அவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • உவரியில் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்கள் பிடிப்பதாக மீன்வளத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
    • உத்திராண்டு ராமன் கொடுத்த புகாரின்பேரில் உவரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தோணிராயை வலைவீசி தேடிவருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் உவரியில் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்கள் பிடிப்பதாக மீன்வளத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அவர்கள் உத்தரவின்பேரில் ராதாபுரம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆய்வாளர் உத்திராண்டு ராமன், உவரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    அப்போது, அங்கு சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்கள் பிடிக்கப்பட்டது தெரியவந்தது. அவ்வாறு பிடிக்கப்பட்ட மீன்களை உத்திராண்டு ராமன் பறிமுதல் செய்ய முயன்றார்.

    அந்த சமயத்தில் அங்கு உவரி மீனவர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவரும், தி.மு.க. பிரமுகருமான அந்தோணி ராய் என்பவர் வந்தார். அவர் மீன்வளத்துறை அதிகாரி உத்திராண்டு ராயிடம் தகராறு செய்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் அவரை பணி செய்ய விடாமல், தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து உத்திராண்டு ராமன் கொடுத்த புகாரின்பேரில் உவரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தோணிராயை வலைவீசி தேடிவருகின்றனர். இதற்கிடையே, மீன்வளத்துறை அதிகாரியை, அந்தோணி ராய் மிரட்டி வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ காட்சிகள் வாட்ஸ்-அப்பில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கருணாநிதி உடல்நலம் கவலைக்கிடமாக இருப்பதாக டி.வி.யில் செய்தி பார்த்த தி.மு.க. பிரமுகர் மாரடைப்பால் இறந்த சம்பவம் பெண்ணாடத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    பெண்ணாடம்:

    கருணாநிதி உடல்நலம் கவலைக்கிடமாக இருப்பதாக டி.வி.யில் செய்தி பார்த்த தி.மு.க. பிரமுகர் மாரடைப்பால் இறந்த சம்பவம் பெண்ணாடத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கடலூர் மாவட்டம் பெண்ணாடம் வடக்கு ரத வீதியை சேரந்தவர் குப்புசாமி(வயது 75). தி.மு.க. பிரமுகர். இவர் தி.மு.க.தலைவர் கருணாநிதி மீது மிகுந்த பாசம் வைத்திருந்தார்.

    கருணாநிதி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தநிலையில் நேற்று மாலை குப்புசாமி வீட்டில் டி.வி.பார்த்து கொண்டிருந்தார். அப்போது கருணாநிதியின் உடல்நிலை கவலைக் கிடமாக இருப்பதாக செய்தி வாசிக்கப்பட்டது.

    இதைகேட்டதும் குப்புசாமி திடீரென்று மயங்கி விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரது உடலை பரிசோதித்த டாக்டர்கள் அவர் மாரடைப்பால் இறந்துவிட்டார் என்று தெரிவித்தனர்.

    இறந்துபோன குப்புசாமிக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.
    ×