search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார்கில் போர்"

    • குறிப்பாக கார்கில் போரின் போது ஜம்மு காஷ்மீரில் நான் பணியாற்றிய அனுபவம் என் வாழ்நாளில் மறக்க முடியாதது.
    • ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவராவது ராணுவத்தில் பணியாற்றி முடிந்தவரை நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள முத்துலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ் (வயது 70). இவரது மனைவி கருப்பாயம்மாள். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இவர்கள் 3 பேருமே ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர்.

    இதில் முதல் மகனான கண்ணன் கடந்த 19-வது வயதில் ராணுவத்தில் சேர்ந்தார். 28 ஆண்டுகள் தனது பணியை முடித்துவிட்டு ஊருக்கு திரும்பிய அவருக்கு உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    மிகப்பெரிய தலைவருக்கு அளிக்கப்படும் வரவேற்பை போல நகர் முழுவதும் பிரம்மாண்ட பேனர்கள் வைத்து கண்ணனுக்கு மாலை அணிவித்து அதிர்வேட்டுகள் வெடித்து ஊர்வலமாக அழைத்து வந்தனர். இது அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது குறித்து ராணுவ வீரர் கண்ணன் கூறுகையில், கடந்த 1995ம் ஆண்டு 19வது வயதில் ராணுவத்தில் பணியில் சேர்ந்தேன். 28 ஆண்டுகள் நல்ல முறையில் நாட்டுக்காக சேவையாற்றி தற்போது பணி முடித்து ஊருக்கு திரும்பியுள்ளேன்.

    எனக்கு நித்யதாரணி என்ற மனைவியும், 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். எனது பணியின் போது உயர் அதிகாரிகள் பல முறை என்னை சிறப்பாக பணியாற்றியதற்காக கவுரவித்துள்ளனர். குறிப்பாக கார்கில் போரின் போது ஜம்மு காஷ்மீரில் நான் பணியாற்றிய அனுபவம் என் வாழ்நாளில் மறக்க முடியாதது. நாட்டிற்காக பணியாற்றிய போது கிடைத்த மகிழ்ச்சியை போல் தற்போது கிராம மக்கள் அளித்த வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.

    பள்ளி படிப்பின் போதே எனது நண்பர்கள் பலர் டாக்டர், கலெக்டர், என்ஜினீயர் ஆக வேண்டும் என்று பேசி வந்தனர். அப்போதிருந்தே எனக்கு ராணுவத்தில் சேர வேண்டும் என்பதுதான் குறிக்கோளாக இருந்தது. எனது ஆசைக்கு எனது பெற்றோரும் உறுதுணையாக இருந்தனர்.

    ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவராவது ராணுவத்தில் பணியாற்றி முடிந்தவரை நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் என்பதே எனது விருப்பமாகும் என்றார்.

    தனது மகனுக்கு அளித்த வரவேற்பு குறித்து தந்தை ராஜ் தெரிவிக்கையில்,

    எனது 3 மகன்களையுமே ராணுவத்தில் சேர்த்துள்ளேன். அவர்கள் இதன் மூலம் நாட்டுக்கு சேவையாற்றுவதுடன் ஒழுக்கத்துடன் வாழ கற்றுக் கொடுப்பார்கள் என்று நம்புகிறேன். ராணுவத்தில் இருந்து திரும்பிய எனது மகனுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு என்னை கண் கலங்க வைத்தது. இதன் பிறகு எங்கள் கிராமத்தில் உள்ள இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருந்து ராணுவத்தில் பணியாற்ற அவன் உதவ வேண்டும் என்பதே எனது விருப்பமாகும் என்றார்.

    • லடாக் கூடுதல் காவல்துறை இயக்குநர் ஜெனரல் எஸ்.டி சிங் ஜம்வால் காவல் நிலையத்தை திறந்து வைத்தார்.
    • சவாலான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் பெண்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை சேவைகளை வழங்கும்.

    யூனியன் பிரதேசமான லடாக்கில் முதன்முதலில் மகளிர் காவல் நிலையம் செயல்படத் தொடங்கப்பட்டுள்ளது.

    லடாக் கூடுதல் காவல்துறை இயக்குநர் ஜெனரல் எஸ்.டி சிங் ஜம்வால், பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கையாளும் காவல் நிலையத்தை திறந்து வைத்தார்.

    இதுகுறித்த அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,"இந்த மகளிர் காவல் நிலையம் தேவைப்படும் பெண்களுக்கு உடனடி உதவி மற்றும் ஆதரவை உறுதி செய்வதற்காக 24 மணிநேரமும் செயல்படும். கூடுதலாக, சவாலான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் பெண்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை சேவைகளை வழங்கும் வள மையமாக இது செயல்படும்.

    கார்கிலில் மகளிர் காவல் நிலையத்தை நிறுவுவது ஒரு முக்கியமான தருணத்தைக் குறிக்கிறது. ஏனெனில், இது அப்பகுதியில் பெண்கள் எதிர்கொள்ளும் கவலைகள் மற்றும் சவால்களை நிவர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும்" என்றார்.

    மேலும், லடாக் காவல்துறை தலைவர் கூறியதாவது:-

    கார்கிலில் மகளிர் காவல் நிலையம் திறப்பு விழா என்பது அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் பாதுகாப்பான சமுதாயத்தை உருவாக்குவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாகும். இந்த முயற்சியானது பெண்கள் தங்கள் கவலைகள் உணர்வுபூர்வமாகவும் விரைவாகவும் தீர்க்கப்படும் என்பதை அறிந்து அதிக நம்பிக்கையுடன் காவல்துறையை அணுக உதவும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உயிர் தியாகம் செய்த இந்திய ராணுவ வீரர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது.
    • இந்த நிகழ்வில் இரு ராணுவ வீரர்களின் குடும்பத்தினர்கள் கலந்து கொண்டனர்.

    திருத்துறைப்பூண்டி:

    கார்கில் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு போராடி உயிர் தியாகம் செய்த இந்திய ராணுவ வீரர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி மரியாதை செய்யும் நிகழ்வு திருத்துறைப்பூண்டி நூற்றாண்டு லயன் சங்கம் சார்பில் நடைபெற்றது.

    முன்னாள் ராணுவ வீரர்கள் குழந்தைவேலு, ஜகபர் அலி ஆகியோருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் சங்கத் தலைவர் முகம்மது இக்பால்தீன், தங்கமணி, வட்டாரத் தலைவர் கண்ணன், சங்க உறுப்பினர்கள் கார்த்தி, பார்த்திபன், நவீன், அரசு வழக்கறிஞர் ஷர்மிலிபானு மற்றும் இரு ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

    கார்கில் போரின் மகனை பறிகொடுத்து 19 ஆண்டுகளாகியும் இன்னும் நிவாரணம் வரவில்லை அரசு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை என பெற்றோர் உருக்கமாக தெரிவித்துள்ளனர். #KargilVijayDiwas
    டேராடூன்:

    கடந்த 1999-ம் ஆண்டு நடந்த கார்கில் போரில் பாகிஸ்தானை தோற்கடித்து இந்தியா கார்கில் பகுதியை மீட்டது. இந்த போரில் உயிர்தியாகம் செய்த வீரர்களில் உத்தரகாண்டை சேர்ந்த ராஜேஷ் கரங் என்பவரும் ஒருவர். கரங்கின் நினைவாக கிராமத்தில் அவரது சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    கார்கில் தினம் இன்று கொண்டாடப்படும் வேளையில் மகனின் சிலைக்கு மாலை அணிவித்த கரங்கின் பெற்றோர், “எங்களது மகனை இழந்து 19 ஆண்டுகள் ஆகிறது. ஆனால், இன்னும் நிவாரணம் எங்களது கைக்கு வந்து சேரவில்லை. இன்னொரு மகனுக்கு வேலை மற்றும் நிலம் வழங்கப்படும் என்ற அரசின் வாக்குறுதிகள் அப்படியே உள்ளது” என வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
    ×