search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒப்பந்ததாரர்"

    • வருமான வரித்துறையினர் எதற்காக சோதனை நடத்தினார்கள் என்று தெரியவில்லை.
    • பாராளுமன்ற தேர்தல் காரணமாக வேலுமணி வீட்டில் சோதனை நடத்தப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூர் பகுதியை சேர்ந்தவர் வேலுமணி. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்ததாரரான இவரது வீட்டிற்கு இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் 7 பேர் கொண்ட குழுவினர் வந்தனர்.

    அவர்கள் வேலுமணியின் வீடு மற்றும் அலுவலகத்தில் திடீரென சோதனை மேற்கொண்டனர். 2 இடங்களிலும் அங்குலம் அங்குலமாக சோதனை செய்தனர். இதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் வீடு, அலுவலகத்திற்குள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இந்த சோதனை மதியத்திற்கு மேலும் நீடித்தது.வருமான வரித்துறையினர் எதற்காக சோதனை நடத்தினார்கள் என்று தெரியவில்லை. பாராளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கும் வகையில் திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சில தினங்களுக்கு முன்பு முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்கள் 2பேரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் கணக்கில் வராத பல லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. எனவே பாராளுமன்ற தேர்தல் காரணமாக வேலுமணி வீட்டில் சோதனை நடத்தப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

    • கோவிலில் புனரமைப்பு பணியில் ஒப்பந்ததாரர் ரூ.12 லட்சம் மோசடி செய்துள்ளார்.
    • ஸ்ரீவில்லிபுத்தூர் மேஜிஸ்திரேட் கோர்ட்டில் பெருமாள் வழக்கு தொடுத்தார்.

    விருதுநகர்

    வத்திராயிருப்பு அருகே உள்ள மகாராஜபுரத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது52). அங்குள்ள ஒரு சமுகாத்தினருக்கு சொந்தமான கோவிலில் நிர்வாகியாக உள்ளார். அதே ஊரை சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரர் சுப்பையா. கோவிலில் புனரமைப்பு பணிகளை ரூ.79 லட்சத்து 40 ஆயிரத்து 375 மதிப் பீட்டில் மேற்கொள்ள ஒப்பந்தம் செய்து அந்த தொகை கோவில் நிர்வா கத்தின் சார்பில் சுப்பையா விடம் கொடுக்கப்பட்டது.

    முழுவதுமாக பணிகள் முடிவடையாத நிலையில் நிர்வாகத்திடம் கூடுதலாக சுப்பையா பணம் கேட்டார். அப்போது ஏற்கனவே கொடுத்த பணத்திற்கு வரவு-செலவு கணக்கு களை ஒப்படைக்குமாறு நிர்வாகத்தின் தரப்பில் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர் கணக்கு கொடுக்கவில்லை. இதை தொடர்ந்து தாசில்தார் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.

    அப்போதும் செலவு கணக்கு கொடுக்க சுப்பையா மறுத்துவிட்டார். இதையடுத்து கோவில் பணிகளில் சுப்பையா ரூ.12 லட்சம் அளவுக்கு மோசடி செய்துள்ளதாகவும்,அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் ஸ்ரீவில்லிபுத்தூர் மேஜிஸ்திரேட் கோர்ட்டில் பெருமாள் வழக்கு தொடுத்தார்.

    கோர்ட்டு உத்தர வின்பேரில் ஒப்பந்ததாரர் சுப்பையா, மற்றொரு சுப்பையா, ராமராஜ், ஜெயக்குமார், சரவணன், சிற்பி சீனிவாசன் ஆகிய 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒப்பந்ததாரர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • படுகாயமடைந்த என்ற பெண் சம்பவ இடத்திலயே உயிரிழந்தார்.

    மதுரை

    மதுரை மாநகராட்சி 20-வது வார்டுக்குட்பட்ட விளாங்குடி சொக்கநாதபுரம் 1-வது தெரு பகுதியில் தமிழ் முரசு என்பவர் வீடு கட்டி வருகிறார். இந்த பணிகளை அழகுபெருமாள் என்ற ஒப்பந்ததாரர் மேற்கொண்டு வருகிறார். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள எம்.ரெட்டியபட்டியை சேர்ந்த மூக்காயி(52), தொண்டிச் சாமி, கட்டையன்(46), ஜோதி(52) ஆகிய 4 தொழிலாளர்கள் நேற்று கட்டிட வேலை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது மாடிக்கு செல்வதற்காக அமைக்கப் பட்ட படிக்கட்டு கட்டுமானம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் வேலை பார்த்து கொண்டிருந்த 4 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கினர். படுகாயமடைந்த என்ற பெண் சம்பவ இடத்திலயே உயிரிழந்தார்.

    மேலும் 3 பேரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். அவர்களை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் தொடர் பாக கூடல்புதூர் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் ஒப்பந்ததாரர் அழகு பெருமாள், பொறியாளர் இளமதி மற்றும் வீட்டின் உரிமையாளர் தமிழ் முரசு ஆகிய 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாணவர்களின் உணவு தேவைக்கான அரிசி, பருப்பு, சத்து மாவு, மாணவர்களின் விளையாட்டு பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் சேதமாயின.
    • பாதிப்படைந்த உணவு பொருட்களை வாங்கி கொடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த புளியம்பட்டி கிராமத்தில் குழந்தைகள் மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தில் 15 குழந்தைகள் படித்து வருகின்றனர். இம்மைய கட்டிடத்தின் மேற்கூரை பழுதடைந்திருப்பதால் மழை காலங்களில் மழை நீர் கட்டிடத்தினுள் வருவதாக புகார் வந்ததையடுத்து, மேற்கூரை மாற்ற ஒப்புதல் பெறப்பட்டது.

    இதையடுத்து நேற்று அங்கன்வாடி மையத்திற்கு வந்த ஒப்பந்ததாரர், அங்கன்வாடி பணியாளர் இல்லாத நிலையில், மேற்கூரையை உடைத்தெடுத்து சென்றுள்ளார். நேற்று இரவு மழை பெய்த காரணத்தால் கட்டிடத்தினுள் இருந்த அனைத்து பொருட்களும் நீரில் நனைந்து சேதமானது. மாணவர்களின் உணவு தேவைக்கான அரிசி, பருப்பு, சத்து மாவு, மாணவர்களின் விளையாட்டு பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் சேதமாயின. இன்று காலை வழக்கம்போல் பணிக்கு வந்த அங்கன்வாடி பணியாளர் பழனியம்மாள் மேற்கூரை இடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அனுமதியின்றி மேற்கூரை எடுக்கப்பட்டது குறித்து ஒப்பந்ததாரரை கேட்டபோது, பணி ஆணை வழங்கப்பட்டதால், பணிகளை தொடங்கி விட்டோம் என மெத்தனமாக பதில் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அங்கன்வாடி மேற்பார்வையாளர் மீனா அவர்களிடம் கேட்டபோது, புளியம்பட்டியில் செயல்பட்டும் வரும் இந்த அங்கன்வாடி பணியாளர் பழனியம்மாள் இரு குழந்தைகள் மையத்தில் பணிபுரிந்து வருகிறார். ஒப்பந்ததாரர் குழந்தைகள் மைய பணியாளரிடம் தெரிவித்துவிட்டு மேற்கூரையை எடுத்துள்ளார். பாதிப்படைந்த உணவு பொருட்களை வாங்கி கொடுப்பதாக உறுதியளித்துள்ளார். தற்போது 15 குழந்தைகளை மாற்று கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.

    • நுகர்வோர் குறை தீர் ஆணையம் உத்தரவு
    • ஒரு மாத காலத்திற்குள் வழங்கவேண்டும்

    நாகர்கோவில்:

    குலசேகரம் அருகே குளச்ச விளாகம் பகுதியை சேர்ந்த வர் வின்சென்ட். இவர் கச்சக்கோட்டுவிளையில் உள்ள ஒரு ஒப்பந்தகாரரிடம் 1,600 சதுர அடியில் ஒரு வீடு கட்டி தர கேட்டுக் கொண்டார். இதற்காக சுமார் ரூ.16,69,000-ஐ ஒப்பந்ததாரரிடம் வின்சென்ட் கொடுத்தார். ஒப்பந்தத்தில் கூறியபடி வீட்டின் கட்டுமானம் இல்லை.

    இதற்கிடையே அந்த ஒப்பந்ததாரா் உரிமம் இல்லாத ஒப்பந்தகாரர் என்றும் தரமில்லாத பொருட்களை கொண்டு வீடு கட்டியதும் தெரிய வந்துள்ளது. மேலும் ஒரு கட்டிட கலை நிபுணரைக் கொண்டு ஆய்வு செய்து அறிக்கை பெற்றதில் மேற்படி ஒப்பந்தகாரர் கூடுதலாக ரூ.3,99,000 பெற்றுள்ளதும் தெரிய வந்துள்ளது.

    இதனால் மனவேதனை அடைந்த வின்சென்ட் இதுபற்றி சம்பந் தப்பட்ட ஒப்பந்ததாரரிடம் கேட்டுள்ளார். ஆனால் சரியான பதில் இல்லை. பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை என தெரிகிறது. பின்னர் வின்சென்ட், வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பி யும் உரிய பதில் கிடைக்க வில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான வின்சென்ட் மாவட்ட நுகர் வோர் குறைதீர் ஆணை யத்தில் வழக்கு தொடர்ந் தார்.

    வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் ஒப்பந்தகாரரின் சேவை குறைப்பாட்டினை சுட்டிக் காட்டி பாதிக்கப்பட்ட வின்சென்டிடம் அதிகமாக பெற்ற ரூ.3,99,000, அபராதமாக ரூ.25 ஆயிரம் மற்றும் ரூ.5 ஆயிரம் வழக்கு செலவு ஆகியவற்றை ஒரு மாத காலத்திற்குள் வழங்கவேண்டும் என உத்தரவிட்டனர்.

    • கோவிலுக்கு செல்லக்கூடிய சாலையை அதிகாரிகள் அகற்றி மீட்டனர்.
    • தவறான முறையில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டு உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

    இதற்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார்.

    மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த மக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    அப்போது ஒரத்தநாடு தாலுகா வடக்கூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    வடக்கூர் வடக்கு தெற்கு தெருவில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமித்த வைத்திருந்த 70-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு சொந்தமான கோவிலுக்கு செல்லக்கூடிய சாலையை அதிகாரிகள் அகற்றி மீட்டனர்.

    ஆனால் தற்போது அந்த சாலை வழியாக செல்ல ஆக்கிரமித்தவர் தடுக்கிறார்.

    எனவே மீட்டு தரப்பட்ட சாலையை எங்களது பயன்பாட்டுக்கு தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பூதலூர் ஒன்றியம் புதுக்கரி யாபட்டி கிராம மக்கள் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது;-

    சானூரப்பட்டி ஊரா ட்சியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலமாக தவறான முறையில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டு உள்ளது.

    எனவே அரசுக்கு இழப்பீடு செய்த பணியாளர்கள், ஒப்பந்தகாரர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் சம்பந்தபட்ட தனியார்களிடம் இருந்து மேற்படி தொகையை திரும்ப பெற்று அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

    • பணிகளை முடித்தபின்னர் ‘பில் பாஸ்’ செய்ய மறுத்ததாக புகார்
    • தனக்கு 75000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் தான் பில்களை பாஸ் பண்ணுவேன் என கூறியுள்ளார்.

    கன்னியாகுமரி:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் குளத்தூர் பஞ்சாயத்து அலுவலகத்திற்குட்பட்ட பகுதிகளில் நடக்கும் வேலை களை கோட்டயம் பகுதியை சார்ந்த பீட்டர் என்பவர் ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறார்.

    இவர் பணிகளை முடித்ததும் அதற்கான செலவின் பட்டியலை பஞ்சாயத்து அலுவலகத்தில் செலவு பணத்தை பஞ்சாயத்து அலுவலக செயலாளர் சந்தோஷ்குமார் லஞ்சம் பெற்று விட்டு தான் பாஸ் பண்ணுவாராம். ஊழியர்கள் முதல் செக்கட்டறி வரை லஞ்சம் கொடுத்த பின்னர் ஒப்பந்த காரருக்கு ஒன்றுமே கிடைப்பதில்லையாம்.இந்த நிலையில் ஒப்பந்தகாரர் 2.5 லட்சம் ரூபாய்க்கு 3 வேலைகளை ஒப்பந்தம் எடுத்து பின்னர் அந்த வேலைகளை செய்து முடத்துள்ளார்.

    ஆனால் செக்கட்டறி சந்தோஷ்குமார் பில்களை தர மறுத்துள்ளார். தனக்கு 75000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் தான் பில்களை பாஸ் பண்ணுவேன் என கூறியுள்ளார். 75000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் தனக்கு நஷ்டம் தான் வரும் என்று ஒப்பந்தகாரர் புலம்பியுள்ளார். மன வேதனை அடைந்த ஒப்பந்தகாரர் செக்கட்டறி சந்தோஷ்குமாரின் லஞ்ச வேட்டைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று நினைத்து லஞ்ச ஒழிப்பு துறையை நாடியுள்ளார். அவர்களின் அறிவுரை படி செக்கட்டறி சந்தோஷ் குமாருக்கு ஒப்பந்தகாரர் பீட்டர் தொலை பேசியில் அழைத்து லஞ்சம் பணம் 75000 ரூபாய் பீல் வந்த உடன் தரலாம் என்று கூறியுள்ளார். அதற்கு செக்கட்டறி சந்தோஷ்குமார் முன் பணமாக 5000 தர வேண்டும் என்று கூறியுள்ளார்.

    லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் கொடுத்த பவுடர் தடவிய 5000 ரூபாய் பணத்தை பஞ்சாயத்து அலுவலகத்தில் வைத்து செக்கட்டறி சந்தோஷ்குமாரிடம் ஒப்பந்த காரர் கொடுத்துள்ளார். மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் கையும் களவுமாக செக்கட்டறி சந்தோஷ்குமாரை கைது செய்தனர். இதை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் பஞ்சாயத்து அலுவலகத்தில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் பஞ்சாயத்து ஊழியர்களிம் விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.சோதனையில் செக்கட்டறி மட்டுமில்லாமல் பல ஊழியர்கள் சிக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. குளத்தூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் திடீரென லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்து செக்கட்டறி யை கைது செய்த சம்பவம் அந்த இடத்தில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.

    ×