என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரோலக்ஸ்"

    • காட்டு யானைக்கு மயக்க ஊசியை செலுத்தினர்.
    • 4 யானைகள் உதவியுடன் ரோலக்ஸ் காட்டு யானையை கயிறு கட்டி, அங்கு தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில் ஏற்றினர்.

    பேரூர்:

    கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய தொண்டாமுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான நரசீபுரம், கெம்பனூர், மருதமலை மற்றும் தடாகம் சுற்று வட்டாரத்தில் கடந்த சில மாதங்களாக ஒரு ஒற்றை ஆண் காட்டு யானை சுற்றி திரிந்து வந்தது. அந்த யானைக்கு மக்கள் ரோலக்ஸ் என பெயரிட்டு அழைத்து வந்தனர்.

    இந்த ரோலக்ஸ யானை அடிக்கடி ஊருக்குள் புகுந்து, விளைநிலங்கள், வீடுகளை சேதப்படுத்தி வந்தது. சில நேரங்களில் மனிதர்களையும் தாக்கி கொன்றது.

    இதையடுத்து ரோலக்ஸ் யானையை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வனத்துறையினர் ரோலக்ஸ் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு செய்தனர்.

    இதற்காக பொள்ளாச்சி டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு நரசிம்மன், முத்து என்ற 2 கும்கி யானைகள் அழைத்து வரப்பட்டு, ரோலக்ஸ் யானையை கண்காணித்து வந்தனர்.

    கடந்த மாதம் வன மருத்துவர்கள் விஜயராகவன் தலைமையிலான குழுவினர் ரோலக்ஸ் யானைக்கு மயக்க ஊசி செலுத்த முயற்சித்தனர். அப்போது அந்த யானை டாக்டர் விஜயராகவனை தாக்கியது. இதனால் ரோலக்ஸ் யானையை பிடிக்கும் பணி தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டது.

    இந்நிலையில் ரோலக்ஸ் யானையை பிடிக்க வந்த, கும்கி யானைகள் நரசிம்மன், முத்து ஆகிய 2 யானைகளுக்கும் திடீரென மதம் பிடித்ததால் அந்த யானைகள் மீண்டும் டாப்சிலிப் யானைகள் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டன.

    அவற்றுக்கு பதிலாக டாப்சிலிப்பில் இருந்து சின்னத்தம்பி, கபில்தேவ் கும்கி யானைகள் அழைத்து வரப்பட்டு, ரோலக்ஸ் யானையை கண்காணித்து பிடிக்க முயற்சி நடந்து வந்தது. நேற்றிரவு நீலகிரி மாவட்டம் முதுமலையில் இருந்து வசீம் மற்றும் பொம்மன் என்ற 2 கும்கி யானைகள் அழைத்து வரப்பட்டன.

    இதையடுத்து, கபில்தேவ், சின்னத்தம்பி, வசீம் மற்றும் பொம்மன் ஆகிய 4 கும்கி யானைகள் உதவியுடன் ரோலக்ஸ் யானை நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். இன்று அதிகாலை 4 மணியளவில் ரோலக்ஸ் காட்டு யானை தொண்டாமுத்தூர் அடுத்த இச்சிக்குழி பகுதியில் நிற்பது தெரியவந்தது.

    இதையடுத்து முதன்மை தலைமை வன பாதுகாவலர் வெங்கடேசன் மேற்பார்வையில், கால்நடை மருத்துவர்கள் கலைவாணன் தலைமையில் மருத்துவர்கள் ராஜேஷ், வெண்ணிலா குழுவினர் மற்றும் வனத்துறையினர் அந்த பகுதிக்கு சென்றனர்.

    பின்னர் கால்நடை மருத்துவர் கலைவாணன் தலைமையிலான மருத்துவர்கள் ராஜேஷ், வெண்ணிலா குழுவினர் ரோலக்ஸ் காட்டு யானைக்கு மயக்க ஊசியை செலுத்தினர்.

    மயக்க ஊசி செலுத்தியதும் ரோலக்ஸ் காட்டு யானை நின்று விட்டது. இதையடுத்து வனத்துறையினர் கபில்தேவ், வசிம், கொம்பன் மற்றும் சின்னத்தம்பி ஆகிய 4 யானைகள் உதவியுடன் ரோலக்ஸ் காட்டு யானையை கயிறு கட்டி, அங்கு தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில் ஏற்றினர்.

    கடந்த சில மாதங்களாக தொண்டாமுத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை அச்சுறுத்தி வந்த ரோலக்ஸ் காட்டு யானை பிடிபட்டதால் அப்பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

    4 கும்கி யானைகள் உதவியுடன் பிடிக்கப்பட்ட யானையை வனத்துறையினர் லாரியில் ஏற்றினர். பிடிபட்ட ரோலக்ஸ் காட்டு யானையை வனத்துறையினர் முதுமலையில் உள்ள யானைகள் முகாமுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர்.

    • லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான படம் விக்ரம்.
    • இப்படத்தில் சூர்யா ரோலக்ஸ் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் தயாரித்து நடித்திருந்த படம் விக்ரம். இதில் விஜய் சேதுபதி, பகத் ஃபாசில், சூர்யா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் கடந்த ஆண்டு ஜூன் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் 100 நாட்கள் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்திருந்தது. மேலும் விக்ரம் திரைப்படம் 400 கோடிக்கும் மேல் வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின.


    சூர்யா - ரோலக்ஸ்

    சூர்யா - ரோலக்ஸ்

    இப்படத்தில் ரோலக்ஸ் என்ற கதாப்பாத்திரத்தில் சூர்யா நடித்திருந்தது பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் விக்ரம் திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்ததை ஒட்டி ரோலக்ஸின் காணப்படாத புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    • லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான படம் ‘விக்ரம்’.
    • இப்படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது.

    இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'விக்ரம்'. இந்த படத்தில் பகத் பாசில், விஜய் சேதுபதி, காளிதாஸ், காயத்ரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது. இந்த படத்தில் நடிகர் சூர்யா, ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் அடுத்த பாகத்திற்காக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


    இந்நிலையில், ரோலக்ஸ் கதாபாத்திரம் வைத்து தனி திரைப்படம் உருவாகயிருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் நடிகர் சூர்யா, ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்துள்ளார். அப்போது தனது அடுத்த படங்கள் குறித்து அவர் கூறியுள்ளார். அதில், 'ரோலக்ஸ்' கேரக்டரை வைத்து லோகேஷ் கனகராஜ் தன்னிடம் கதை சொன்னதாகவும் அதில் நடிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • 2 வருட காலத்தில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை கொண்டு, தினசரி பணியாளர்களை நிர்வகித்து இப்பணியை முடித்துள்ளார்.
    • ஒப்பந்ததாரரின் தரம், வேகம் அர்ப்பணிப்பு பாராட்டிற்குரியது.

    பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர் குர்தீப் தேவ் பாத், தனது 9 ஏக்கர் நிலத்தில் கட்டிட பணிக்காக தனது ஒப்பந்ததாரர் ரவீந்தர் சிங் ரூப்ராவிற்கு ரூ.1 கோடி மதிப்பிலான ரோலக்ஸ் வாட்ச்சை பரிசளித்துள்ளார். ரோலக்ஸ் வாட்ச், 18 காரட் தங்கத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    பஞ்சாபின் ஜிராக்பூர் அருகே கட்டப்பட்டுள்ள ஆரம்பர பங்களா கோட்டையை போல் உள்ளது. இதுதொடர்பாக தொழிலதிபர் குர்தீப் தேவ் பாத் கூறுகையில்,

    பஞ்சாப் மாநிலம் ஷாகோட்டை சேர்ந்த ஒப்பந்ததாரரான ரூப்ரா, 2 வருட காலத்தில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை கொண்டு, தினசரி பணியாளர்களை நிர்வகித்து இப்பணியை முடித்துள்ளார். அவரது தரம், வேகம் அர்ப்பணிப்பு பாராட்டிற்குரியது.

    இது ஒரு வீடு மட்டுமல்ல. இது பிரமாண்டமான அறிக்கை. காலமற்ற நேர்த்தியை பிரதிபலிக்கும் வகையில் கவனமாக வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டது. அவரது அர்ப்பணிப்பு, நான் கேட்டதை விட அதிகமாக வழங்கியுள்ளது. தான் விரும்பிய ஆடம்பர பங்களாவை சிறப்பாக கட்டி கொடுத்ததற்காக பரிசு அளித்ததாக அவர் தெரிவித்தார்.

    கட்டிடக்கலைஞர் ரஞ்சோத் சிங்கால் செயல்படுத்தப்பட்ட வடிவமைப்பு, எஸ்டேட்டைச் சூழ்ந்துள்ள ஒரு பரந்த எல்லை சுவரைக் கொண்டுள்ளது, இது ஒரு தனியார் கோட்டையாக அமைந்துள்ளது.

    • 67வது தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளில் சூர்யாவின் சூரரைப் போற்று மற்றும் ஜெய்பீம் திரைப்படம் பல விருதுகளை குவித்துள்ளது.
    • இதில் கலந்துக் கொண்ட சூர்யா ரோலக்ஸ் கேரக்டர் குறித்து பேசியுள்ளார்.

    67வது தென்னிந்திய பிலிம்பேர் விருது வழங்கும் விழா நேற்று முன்தினம் பெங்களூரில் நடைபெற்றது. இதில் சூர்யா நடிப்பில் வெளியான 'சூரரைப் போற்று' திரைப்படம் 8 விருதுகளை பெற்றது. இதில் சிறந்த இயக்குனர் (சுதா கொங்கரா), சிறந்த நடிகர் (சூர்யா), சிறந்த நடிகை (அபர்ணா பாலமுரளி), சிறந்த இசை ஆல்பம் (ஜி.வி.பிரகாஷ்), சிறந்த துணை நடிகை (ஊர்வசி), சிறந்த பின்னணி பாடகர் (கோவிந்த் வசந்தா, கிறிஸ்டின் ஜோஸ்), சிறந்த பின்னணி பாடகி (தீ), சிறந்த ஒளிப்பதிவு (நிகோத் பொம்மி) ஆகிய பிரிவுகளில் விருதுகளை அள்ளி சென்றுள்ளது. மேலும் 'ஜெய்பீம்' திரைப்படம் 2 விருதுகளையும் பெற்றது.

     

    விக்ரம் - ரோலக்ஸ்

    விக்ரம் - ரோலக்ஸ்

    இந்நிலையில் இவ்விழாவில் மனைவி ஜோதிகாவுடன் கலந்துகொண்ட சூர்யாவிடம், ரோலக்ஸ் கேரக்டர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சூர்யா, "நான் இன்று என்னவாக இருந்தாலும் அதற்கு ஊக்கமாக இருந்தவர் கமல்ஹாசன். அவர் இப்படி ஒரு வாய்ப்பு இருக்கிறது என்று சொன்னதும் மறுக்க முடியவில்லை. அவருக்காகவே அந்த ரோலக்ஸ் கேரக்டரில் நடித்தேன்" என்றார். 'ரோலக்ஸ் மீண்டும் வருவாரா?' என்ற கேள்விக்கு, "இதற்கு காலம் பதில் சொல்லும். படம் உருவானால் அந்த கேரக்டரில் நிச்சயம் மீண்டும் நடிப்பேன்" என்றார். 

    ×