இணையத்தை கலக்கும் ரோலக்ஸின் காணப்படாத புகைப்படம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான படம் விக்ரம்.இப்படத்தில் சூர்யா ரோலக்ஸ் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
சூர்யா - ரோலக்ஸ்
சூர்யா - ரோலக்ஸ்
Published on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் தயாரித்து நடித்திருந்த படம் விக்ரம். இதில் விஜய் சேதுபதி, பகத் ஃபாசில், சூர்யா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் கடந்த ஆண்டு ஜூன் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் 100 நாட்கள் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்திருந்தது. மேலும் விக்ரம் திரைப்படம் 400 கோடிக்கும் மேல் வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின.

சூர்யா - ரோலக்ஸ்
சூர்யா - ரோலக்ஸ்

சூர்யா - ரோலக்ஸ்

இப்படத்தில் ரோலக்ஸ் என்ற கதாப்பாத்திரத்தில் சூர்யா நடித்திருந்தது பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் விக்ரம் திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்ததை ஒட்டி ரோலக்ஸின் காணப்படாத புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 

X

Maalai Malar
www.maalaimalar.com