search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் டிஆர்பி ராஜா"

    • கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.
    • உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள் தொழில் துவங்குவதை கண்காணிக்க தமிழக அரசு சிறப்பு குழு அமைத்துள்ளது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சியில் தொழில் தொடங்க பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    அதுமட்டுமின்றி கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.

    உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள் தொழில் துவங்குவதை கண்காணிக்க தமிழக அரசு சிறப்பு குழு அமைத்துள்ளது.

    தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, தொழில்துறை செயலாளர் அருண்ராய், மின் வாரிய தலைவர், தகவல் தொழில் நுட்ப துறை செயலாளர் உள்பட 17 பேர் இடம் பெற்றுள்ளனர்.

    • பெண்கள் முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
    • இன்றும், நாளையும் இந்த மாநாட்டில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

    சென்னை:

    உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * பெண்கள் முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

    * கடந்த 2 ஆண்டுகளில் 200க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    * ஜவுளி, மின்னணு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன.

    * தமிழகம் முழுவதும் சீரான வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

    * தமிழகம் முழுவதும் தொழில்களை துவங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    * ஏற்கனவே தமிழகத்தில் உள்ள நிறுவனங்கள் தங்கள் திட்டங்களை விரிவுபடுத்தி உள்ளன. இதுவே தமிழகத்தில் தொழில் தொடங்க சிறந்த சூழல் உள்ளதற்கு சான்று.

    * எல்லா துறைகளிலும் திறமையான பணியாளர்களை தமிழகம் கொண்டுள்ளது.

    * இன்றும், நாளையும் இந்த மாநாட்டில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் சிறப்பு அமர்வுகள் நடைபெற உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் மாநிலம், அதனால் சிறந்த தொழிலாளர்கள் தமிழகத்தில் உண்டு.
    • 2030க்குள் 1 ட்ரில்லியன் பொருளாதாரத்தை தமிழகம் எட்டும்.

    சென்னை:

    உலக முதலீட்டாளர் மாநாட்டை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வரவேற்புரை ஆற்றினார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய ஜவுளி, வர்த்தக தொழில்துறை மந்திரி பியூஷ்கோயலுக்கு ஜல்லிக்கட்டு காளை நினைவுப் பரிசை வழங்கினார். இதைத்தொடர்ந்து மத்திய மந்திரி பியூஷ் கோயல் உரையாற்றினார்.

    இதையடுத்து உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * எல்லா வெளிநாடுகளும் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளதால், தற்போது கோட் சூட் அணிந்துள்ளேன்.

    * இன்று சென்னையில் பெய்யும் மழை போல முதலீடும் மழையாக பெய்யும் என நம்புகிறேன்.

    * முதலமைச்சராக மட்டுமின்றி சகோதரனாக உங்களை வரவேற்கிறேன்.

    * தனித்த தொழில்வளம் கொண்ட மாநிலம் தமிழ்நாடு.

    * பழங்காலத்திலேயே கடல் தாண்டி வணிகம் செய்தவர்கள் தமிழர்கள்.

    * திரை கடல் ஓடியும் திரவியம் தேடு என்ற பழமொழி தமிழில் உண்டு.

    * கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் மாநிலம், அதனால் சிறந்த தொழிலாளர்கள் தமிழகத்தில் உண்டு.

    * எங்கள் அழைப்பை ஏற்று வந்துள்ள அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் நன்றி. வெளிநாட்டு தூதரக அதிகாரிகள், தொழில் கூட்டமைப்பினருக்கு நன்றி.

    * எனது அழைப்பை ஏற்று வந்துள்ள மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுக்கு நன்றி. வங்கிப் பணியாளராக இருந்து நிதி, வர்த்தகத்துறையில் சிறந்து விளங்குபவர் பியூஸ் கோயல்.

    * அமெரிக்க உள்ளிட்ட 9 நாடுகள் எங்களுடன் பங்குதாரராக உள்ளன.

    * தொழில் வளர்ச்சிக்கு இந்த மாநாடு வழிவகுக்கும். பல சாதனைகளை மிஞ்சக்கூடிய மாநாடாக இது இருக்கும்.

    * இந்திய பொருளாதாரத்தை வடிவமைப்பதில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கும்.

    * 2030க்குள் 1 ட்ரில்லியன் பொருளாதாரத்தை தமிழகம் எட்டும்.

    * பொருளாதார வளர்ச்சிக்கு சட்டம் ஒழுங்கு பேணப்பட்டு, அமைதி நிலவ வேண்டும். பொருளாதார வளர்ச்சிக்கு உள்கட்டமைப்பு சிறப்பாக இருக்க வேண்டும்.

    * 2021ல் பொறுப்பேற்ற பிறகு இந்த வசதிகளை சிறப்பாக மேம்படுத்தி வருகிறோம்.

    * திறமையான இளைஞர் சக்தியை உருவாக்குவதில் தமிழகம் உறுதியாக இருக்கிறது என்று கூறினார்.

    • தொழில் துறையில் தமிழகம் முன்னிலையில் உள்ளது.
    • வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு.

    சென்னை:

    உலக முதலீட்டாளர் மாநாட்டை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வரவேற்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * தொழில் துறையில் தமிழகம் முன்னிலையில் உள்ளது.

    * இந்தியாவில் வாகன உற்பத்தி துறையில் தமிழகம் முன்னிலையில் உள்ளது.

    * ஏற்றுமதிக்கான குறியீட்டு எண்ணில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

    * வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு.

    * நான் முதல்வன் திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

    * தமிழ்நாட்டில் 230 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதத்தில் உள்ளோம்.

    * தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளும் சீராக வளர வேண்டும் என்பது முதல்வரின் இலக்கு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாநாட்டில் 30 ஆயிரத்துக்கம் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்க பதிவு செய்துள்ளனர்.
    • நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் செம்கார்ப், டாடா பவர் நிறுவனம் முதலீடு செய்கிறது.

    சென்னை:

    சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நாளை தொடங்க உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. உலக முதலீட்டாளர் மாநாடு நாளை மற்றும் நாளை மறுநாள் என இரு தினங்கள் நடைபெற உள்ளது.

    மாநாட்டில் 30 ஆயிரத்துக்கம் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்க பதிவு செய்துள்ளனர். வெளிநாட்டு பிரதிநிதிகள் 450-க்கும் மேற்பட்டோர் பங்கு பெறுகின்றனர்.

    மாநாடு ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

    ஓசூரில் 7000 கோடி ரூபாய் அளவுக்கு டாடா நிறுவனம் முதலீடு செய்கிறது. இதனால் 30 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் செம்கார்ப், டாடா பவர் நிறுவனம் முதலீடு செய்கிறது. கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, பெரம்பலூர், மாவட்டங்களில் காலணி தயாரிக்கும் தொழிற்சாலைகள் அமைய உள்ளன. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மாநாட்டில் கையெழுத்தாகிறது.

    • நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் பாலிவுட் நடிகர் அமீர் கான் ஆகியோர் உடனடியாக படகு மூலம் மீட்கப்பட்டனர்.
    • நடிகர் விஷ்ணு விஷால் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

    சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள போரூர், துரைப்பாக்கம், மேடவாக்கம், முடிச்சூர், பள்ளிக்கரணை பகுதிகளை சேர்ந்தவர்கள், தங்களுக்கு உள்ள பிரச்னைகள் மற்றும் தேவைப்படும் உதவிகளை தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவிக்கலாம் என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதிவிட்டிருந்தார்.

    இந்நிலையில், நடிகர் விஷ்ணு விஷால் தான் வசிக்கும் இடத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ளதாகவும், வீட்டிற்குள் தண்ணீர் புகுந்துள்ளதாகவும் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

    இதைதொடர்ந்து, நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் பாலிவுட் நடிகர் அமீர் கான் ஆகியோர் உடனடியாக படகு மூலம் மீட்கப்பட்டனர்.

    பிறகு, நடிகர் விஷ்ணு விஷால் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

    இந்நிலையில், பாலிவுட் நடிகர் அமீர் கானை பாராட்டி அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாடு அரசின் செயல்பாட்டை பாராட்டியதற்கு நன்றி விஷ்ணு விஷால். சிறந்த மனிதனாக திகழ்வதற்கு உங்கள் அருகே இருக்கும் நபருக்கும் நன்றி. மீட்பு உதவி பெறுவதற்கு அவர் எந்த வகையிலும் தன்னுடைய புகழை அவர் பயன்படுத்தாதது என்னை பிரமிக்க வைத்தது.

    தங்களது செல்வாக்கை பயன்படுத்தி தேவையான விஷயத்தை சாதிக்க நினைப்பவர்களுக்கு பாடமாக உள்ளார். புயலின் தீவிரத்தை உணர்ந்து பொறுமையாக மீட்பு உதவிகள் வரும் வரை காத்திருக்கும் நடிகர் அமீர்கான் போன்றவர்களுக்கு நன்றி. மீட்புப் பணிகள் திட்டமிட்டபடி தொடரும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்தி சார்ந்த வேளாண் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
    • சிறு, குறு தொழில்கள் நலிவடையாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இன்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பட்டுக்கோட்டையில் தென்னை சார்ந்த தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். என்னுடைய கோரிக்கையும் அதுதான். தென்னை சார்ந்த தொழிற்சாலை அமைப்பது தொடர்பாக 4 நிறுவனங்களிடம் பேசி உள்ளோம். இதற்காக நில தேவைகள் அதிகமாக உள்ளது. நில எடுப்பு நடந்து முடிந்த பிறகு விரைவிலே தென்னை சார் தொழிற்சாலை அமைக்கப்படும்.

    தஞ்சையில் ஐ.டி பார்க் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. ஐ.டி பார்க்க செயல்பாட்டுக்கு வந்ததும் டெல்டா மாவட்டங்களில் படித்த ஏராளமானவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

    டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்தி சார்ந்த வேளாண் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    சிறு, குறு தொழில்கள் நலிவடையாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழ்நாட்டில் தான் தொழில் தொடங்க ஏராளமானோர் முன் வருகின்றனர். முதலீடு அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டில் நடக்க உள்ள முதலீட்டாளர் மாநாட்டில் அதிக அளவில் முதலீடுகள் ஈர்க்கும் வகையில் இருக்கும். அவர்களுக்கு அரசு சார்பில் பல்வேறு சலுகைகள் வழங்கப்படும். தமிழ்நாடு மட்டும்தான் சொன்னதை செய்கிறது. ஏற்கனவே தொழில் தொடங்கியவர்கள் மீண்டும் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முன் வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்திய அமைச்சரவையில் யாரெல்லாம் அமைச்சர்கள், அவர்கள் வசமிருக்கும் துறைகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்.
    • அமுல் என்பது கூட்டுறவு சங்கம். மத்திய கூட்டுறவு துறை அமைச்சராக இருப்பவர் அமித் ஷா.

    சென்னை:

    அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவுக்கும், தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலைக்கும் இடையே வலைதளத்தில் நடக்கும் மோதல் எல்லோரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    தமிழகத்தில் அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்வது ஆவின் பால் நிறுவனத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய மந்திரி அமித் ஷாவுக்கு கடிதம் எழுதி இருந்தார்.

    இதுபற்றி தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பதிவில் 'அமித் ஷாவின் 9 ஆண்டுகால வரலாற்றில் மு.க.ஸ்டாலின் எழுதியதை போல் தவறான கடிதத்தை யாரும் எழுதி இருக்க மாட்டார்கள்' என்று குறிப்பிட்டார்.

    அதாவது பால்வளத்துறைக்கும் அமித் ஷா துறைக்கும் சம்பந்தம் இல்லை என்று அவர் கூறியதாக கூறப்படுகிறது.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கடுமையாக விமர்சித்து ஒரு பதிவை வெளியிட்டார்.

    அதில், தமிழக பா.ஜ.க.விற்கு 20 ஆயிரம் புத்தகங்கள் படித்தது போதவில்லை என நினைக்கிறேன். இன்னும் நிறைய படிக்க வேண்டியுள்ளது. முதலில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இருந்து தொடங்கினால் நன்றாக இருக்கும்.

    அதற்கு முன்பு மத்திய அமைச்சரவையில் யாரெல்லாம் அமைச்சர்கள், அவர்கள் வசமிருக்கும் துறைகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளுங்கள். அமுல் என்பது கூட்டுறவு சங்கம். மத்திய கூட்டுறவு துறை அமைச்சராக இருப்பவர் அமித் ஷா. எனவே தான் அவருக்கு கடிதம் எழுதப்பட்டது. தமிழக பாஜகவிற்கு கொஞ்சம் கூட அறிவே இல்லை.

    தங்கள் சொந்த அரசை பற்றியே தெரியவில்லை. உங்கள் தலைவர்களை தர்ம சங்கடத்திற்கு ஆளாக்குவதை எப்போது தான் நிறுத்தப் போகிறீர்களோ? நீங்கள் அடிக்கும் ஜோக் உங்களுக்கு தான். 9 ஆண்டுகால வரலாறு என்று கூறினீர்களே? அமித்ஷா அமைச்சராக இருப்பதே கடந்த 4 ஆண்டுகளாக தான். இது கூடவா தெரியவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

    இதற்கும் பதிலளித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    தந்தையின் பாரம்பரியத்தில் இயங்குபவருக்கும் தி.மு.க.வின் பகுத்தறிவற்ற தலைவர்களுக்கும் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களின் செயல்பாடுகள் குறித்து சில பள்ளிகளில் படிப்பு தேவைப்படும்.

    அமுல் மற்றும் நந்தினி, நந்தினி மற்றும் மில்மா பால் நிறுவனங்களுக்கு இடையேயான எல்லை தாண்டிய சந்தைப்படுத்துதல் தொடர்பான சிக்கல்களை தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் தீர்த்து வருகிறது.

    பால்வள மேம்பாட்டு வாரியம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. நீங்கள் தமிழகத்தின் தொழில்துறை அமைச்சராக இருப்பது வருத்தம் அளிக்கிறது' என்று குறிப்பிட்டுள்ளார்.

    துறைகள் தொடர்பான விபரம் தெரிந்தவர் யார் என்ற பாணியில் தொடரும் இந்த யுத்தம் வலைதளத்தில் உலா வருபவர்களால் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.

    ×