search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Shivraj Singh Chauhan"

  இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • மத்திய பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றது.
  • கடந்த முறை நடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது.

  போபால்:

  இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளின் ஆணி வேராக இருப்பது தொண்டர்களே. தங்கள் தலைவர்களுக்காக தயக்கம் இன்றி களத்தில் இறங்கி செயலாற்றுவது வழக்கம். தங்களின் தலைவர்கள் வெற்றிபெற வேண்டி தொண்டர்கள் பல வினோதமான செயல்களை செய்வார்கள்.

  பா.ஜ.க.வைச் சேர்ந்த ராம்தாஸ் புரி என்பவர், கடந்த 6 ஆண்டாக செருப்பு அணியாமல் நடப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

  இதுதொடர்பாக அவர் கூறுகையில், மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சியில் அமரும் வரை கால்களில் செருப்பு மற்றும் ஷூ அணிய மாட்டேன். கடந்த 2018-ல் நான் எனது செருப்புகளை கழற்றிய நான், கடந்த 6 ஆண்டாக செருப்பு அணியாமல் இருந்துவருகிறேன். மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சியில் அமர்ந்தால் தான் மீண்டும் அதனை அணிந்துகொள்வேன் என தெரிவித்தார்.

  இதற்கிடையே, சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.

  இந்நிலையில், முன்னாள் முதல் மந்திரியான சிவராஜ் சிங் சவுகான் இன்று ம.பி.யின் அனுப்பூர் பகுதிக்குச் சென்றார். அங்கு மாவட்ட தலைவராக இருக்கும் ராம்தாஸ் புரியைச் சந்தித்து புதிய ஷூக்களைக் கொடுத்தார்.

  பா.ஜ.க. வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்ததை தொடர்ந்து, ராம்தாஸ் புரி அந்த ஷூக்களை மகிழ்ச்சியுடன் அணிந்து கொண்டார்.

  கடந்த முறை நடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது குறிப்பிடத்தக்கது.


  • பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜக. தலைவர்களை பிரியங்கா காந்தி நடிகர்களுடன் ஒப்பிட்டுப் பேசினார்.
  • இதையடுத்து, மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் பிரியங்காவிற்கு கண்டனம் தெரிவித்தார்.

  போபால்:

  மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரசாரக் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

  கர்நாடக மாநில தேர்தல் பிரசாரத்தின் போது எதிர்க்கட்சியினர் அவதூறு பேசுவதாக நீலிக்கண்ணீர் வடித்த பிரதமர் மோடி, மத்தியப் பிரதேச தேர்தல் பிரசாரத்தின்போதும் அதையே குறிப்பிட்டு பேசினார்.

  சல்மான்கான் நடித்த மேரா நாம் படத்தின் கதாபாத்திரத்தை கூறி அழுதார். மேரா நாம் என்ற படத்தின் பெயர், கதை மோடியை வைத்தே எடுக்கப்பட்டதோ என்று தோன்றுகிறது.

  முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகானும் ஒரு சிறந்த நடிகர். நடிப்பில் அவர் அமிதாப் பச்சனையே மிஞ்சிவிடுவார். அவர் செய்யும் வேலைகள் நகைப்புக்குரியதாக இருக்கும்.

  மாநில உள்துறை மந்திரி நரோத்தம் மிஸ்ராவுக்கு சட்டம்-ஒழுங்கைப் பற்றி கவலை இல்லை. எந்தப் படத்தில், எந்த ஹீரோயின் என்ன உடை அணிந்து வந்தார் என்பதுதான் அவரது கவலை என காட்டமாக பேசியிருந்தார்.

  அதாவது பதான் படத்தில் தீபிகா படுகோனே காவிநிற உடை உடுத்தி வந்ததை கடுமையாக மிஸ்ரா விமர்சித்திருந்ததை குறிப்பிட்டு பிரியங்கா பேசியிருந்தார்.

  இந்நிலையில், முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கூறுகையில், பிரியங்கா இவ்வளவு கீழ்த்தரமாக இருப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. மக்களின் பிரச்சினைகள், வளர்ச்சி பணிகளை பற்றி பேசவேண்டும். தேர்தலில் காங்கிரஸ் தீவிரம் காட்டவில்லை என்பதையே இது காட்டுகிறது என கண்டனம் தெரிவித்தார்.

  • ம.பி. சட்டசபையில் உள்ள 230 இடங்களுக்கு நவம்பர் 17 அன்று வாக்கெடுப்பு
  • ம.பி.யில் காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.க.வும் நேரிடையாக மோதுகின்றன.

  இந்தியாவில் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது.

  மத்திய பிரதேச மாநிலத்தின் 230 சட்டசபை இடங்களுக்கு நவம்பர் 17 அன்று வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. டிசம்பர் 3 அன்று தேர்தல் முடிவுகள் வெளியாகும்.

  ம.பி.யில் காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.க.வும் நேரிடையாக மோதுகின்றன.

  இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ததியா (Datia) நகரில், பா.ஜ.க.வின் தேசிய துணை தலைவரும், மத்திய பிரதேச முதல்வருமான சிவராஜ் சிங் சவுகன் ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அதில் முந்தைய காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும், முந்தைய ம.பி. முதல்வருமான கமல்நாத்தை கடுமையாக விமர்சித்தார்.

  அப்போது அவர் கூறியதாவது:

  நான் பதவியேற்ற போது ம.பி. எப்படி இருந்தது என உங்களுக்கு தெரியும். துப்பாக்கிகள், துப்பாக்கி குண்டுகள், கும்பலாக அப்பாவி மக்கள் கடத்தப்படுவது, கும்பல் கும்பலாக மக்கள் கொல்லப்படுவது, கொள்ளையர்கள் அப்பாவி மக்களை அடித்து நொறுக்குவது போன்றவைதான் ம.பி.யின் அடையாளமாக இருந்து வந்தது. நான் முதல்வரானதும் குவாலியருக்கு வந்தேன். காவல் அதிகாரிகளை சந்தித்து, 'ம.பி.யில் ஒன்று நான் இருக்க வேண்டும் அல்லது கொள்ளையர்கள் இருக்க வேண்டும்' என கூறி உறுதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டேன். காங்கிரஸ் ம.பி.யை ஆளும் போதெல்லாம் மக்களுக்கு நாசமும் இழப்புமே மிஞ்சுகிறது. காங்கிரஸ் கட்சியின் கமல்நாத் முதல்வராக இருந்த போது எந்த நல்ல திட்டத்தை நிறைவேற்றவும் 'பணம் இல்லை, பணம் இல்லை' என புலம்புவதையே வழக்கமாக கொண்டிருந்தார். எதற்கெடுத்தாலும் அழுகின்ற இவரை போன்ற மனிதர் மீண்டும் முதல்வரானால் நன்றாக இருக்குமா?

  இவ்வாறு சவுகன் பேசினார்.

  • ரூ.19,620 கோடிக்கு வளர்ச்சி திட்டங்களை மோடி தொடங்கி வைத்தார்
  • எதிர்கட்சிகளிடம் வளர்ச்சி திட்டம் எதுவும் இல்லை என்றார் மோடி

  மத்திய பிரதேச மாநிலத்தின் 230 இடங்களை கொண்ட சட்டசபைக்கு அடுத்த மாத இறுதிக்குள் தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது அங்கு பா.ஜ.க.வின் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. பா.ஜ.க.வை எதிர்த்து இந்திய தேசிய காங்கிரஸ் ஆட்சியமைக்க தீவிரமாக போராடி வருகிறது.

  இந்நிலையில், ம.பி.யில் உள்ள குவாலியர் நகருக்கு இன்று வந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரூ.19,260 கோடிக்கான வளர்ச்சி திட்டங்களை துவங்கி வைத்து பொது மக்களிடையே உரையாற்றினார்.

  அக்கூட்டத்தில் அவர் தெரிவித்ததாவது:

  மத்திய அரசிலும் மாநில அரசிலும் ஒரே கட்சி ஆட்சியில் இருப்பதை "இரட்டை எஞ்சின்" (double engine) என எதிர் கட்சியினர் கிண்டல் செய்கின்றனர். "இரட்டை எஞ்சின்" நல்லதுதான். இதன் மூலம் மாநிலம் "இரட்டை வளர்ச்சி" காண முடிகிறது.

  பா.ஜ.க.வின் ஆட்சியில் பல்வேறு துறைகளில் நாடு முன்னேறி வருவதை எதிர்கட்சிகளுக்கு காண சகிக்கவில்லை. அவர்களிடம் வளர்ச்சி திட்டமோ அல்லது நாட்டின் வளர்ச்சி குறித்த தொலைநோக்கு பார்வையோ எதுவும் கிடையாது. உலகளாவிய மன்றங்களில் இந்தியா இப்போது பாராட்டப்படுவதை அவர்களால் தாங்கி கொள்ள முடியவில்லை. உலகம் முழுவதும் இந்தியாவை புகழும் போது, இங்குள்ள எதிர்கட்சிகளுக்கு தங்கள் நாற்காலியை தவிர வேறு எதையும் பார்க்க முடியவில்லை. அதனால், இந்தியாவிற்கு கிடைக்கும் பாராட்டை காண பிடிக்காமல் வயிற்றெரிச்சலில் குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள்.

  எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கொலை மற்றும் ஊழல் தலைவிரித்தாடுகிறது.

  பின் தங்கிய நிலையில் இருந்த ம.பி. மாநிலம் இன்று வளர்ச்சி பட்டியலில் 10-ஆம் இடத்தில் உள்ளது. அடுத்த 5 ஆண்டுகள் ம.பி.யின் வளர்ச்சிக்கு முக்கியமான ஆண்டுகள். ம.பி.யை நாட்டின் முதன்மையான முதல் 3 மாநிலங்களில் ஒன்றாக நாம் மாற்ற வேண்டும். உங்களின் ஒரு ஓட்டு ம.பி.யை முதல் நிலைக்கு கொண்டு செல்லும்.

  இவ்வாறு மோடி தெரிவித்தார்.

  ம.பி.யில் 2003 ஆண்டு முதல் 2013 வரை தொடர்ந்து 3 முறை சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வென்றது குறிப்பிடத்தக்கது.

  • இந்து மதத்தில், ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் ஷண்மத மார்க்கங்களை நிறுவியவர்
  • ஓம்காரேஷ்வர் நகரில்தான் ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் ஆரம்ப வேதக்கல்வி பயின்றார்

  இந்து மதத்தின் தற்போதைய கட்டமைப்பை உருவாக்கிய இந்து மத குருக்களில் முதன்மையானவர்களாக கருதப்படும் பலரில் ஸ்ரீராமானுஜர் மற்றும் ஸ்ரீமத்வாச்சாரியார் ஆகியோருடன் ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் ஒருவர். இந்துக்களுக்கு வைணவம், சைவம், ஸாக்தம், கவுமாரம், காணாதிபத்யம் மற்றும் சவுரபம் என 6 பிரதான வழிகளில் ஷண்மத வழிபாட்டு மார்க்கங்களை நிறுவியவர்.

  இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் காந்த்வா மாவட்டத்தில் காந்த்வா நகருக்கருகே மந்தாதா பகுதியில் உள்ளது ஓம்காரேஷ்வர் கோவில். இது ஒரு புகழ் பெற்ற இந்து மத சைவ கோயில். இக்கோவில் நர்மதை நதிக்கரை ஓரம் உள்ளது. ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் ஓம்காரேஷ்வர் நகரில்தான் ஆரம்ப வேதகல்வியை பயின்றார்.

  இப்பகுதியில் உலகெங்கும் உள்ள இந்துக்களால் மதிக்கப்படும் மத குருவான ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் அவர்களுக்கு 108 அடியில் மிக பெரிய சிலை ஒன்று நிறுவப்பட்டு ம.பி. மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகன் அவர்களால் இன்று திறந்து வைக்கப்பட்டது. திறந்து வைத்த முதல்வர், இங்கு முறைப்படி பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினார்.

  அப்போது உரையாற்றிய அவர் கூறியதாவது:

  கலாச்சார ரீதியாக ஸ்ரீ ஆதி குரு சங்கராச்சார்ய மகராஜ் நாட்டை ஒருங்கிணைத்தார். வேதங்களின் சாரம் சாமானிய மக்களுக்கும் புரியும் வகையில் பரவ தீவிரமாக செயல்பட்டார். நமது நாட்டின் 4 மூலைகளிலும் 4 மடங்களை நிறுவினார். அவரது உயரிய, சிறந்த முயற்சியினால்தான் நாடு இத்தனை ஆண்டுக்காலம் ஒன்றாக, ஒற்றுமையாக உள்ளது.

  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

  இப்பகுதிக்கு செல்ல விரும்பும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ம.பி.யின் இந்தோர் நகரிலிருந்து 80 கிலோமீட்டர் பயணம் செய்து இந்த இடத்தை அடையலாம்.


  • மத்திய பிரதேச முதல் மந்திரி சென்ற ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
  • விசாரணையில் தொழில்நுட்ப கோளாறு காரணம் என தெரிய வந்தது.

  போபால்:

  மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் இன்று மனாவர் பகுதியில் இருந்து தர் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக தனியார் ஹெலிகாப்டரில் பயணம் செய்து கொண்டிருந்தார்.

  இந்நிலையில், திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சிவராஜ் சிங் சவுகான் சென்ற ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

  அதன்பின், சிவராஜ் சிங் சவுகான் சாலை மார்க்கமாக புறப்பட்டுச் சென்று பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

  மத்திய பிரதேசத்தில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என முதல்வர் சிவராஜ் சிங் நம்பிக்கை தெரிவித்தார். #MadhyaPradeshElections #ShivrajSinghChauhan
  இந்தூர்:

  பாஜக ஆளும் மத்தியப் பிரதேச மாநிலத்தில் இன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. வாக்காளர்கள் காலை முதலே வாக்குச்சாவடிகளுக்கு சென்று ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வந்து ஓட்டு போட்டனர்.  வாக்குப்பதிவு தொடங்கியதும் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், புத்னியில் உள்ள நர்மதா நதிக்கரைக்கு குடும்பத்தினருடன் சென்று சிறப்பு வழிபாடு நடத்தினார். இதையடுத்து வாக்குச்சாவடிக்கு சென்று ஓட்டு போட்டார்.

  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சிவராஜ் சிங் சவுகான், பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என 100 சதவீதம் உறுதியாக நம்புவதாக கூறினார். 200 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு வைத்திருப்பதாகவும், இதற்காக லட்சக்கணக்கான தொண்டர்கள் பணியாற்றி வருவதாகவும் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.

  மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ள தொகுதிகளில் பிற்பகல் 3 மணிக்கும், மற்ற பகுதிகளில் மாலை 5 மணிக்கும் வாக்குப்பதிவு நிறைவடைகிறது. டிசம்பர் 11-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. #MadhyaPradeshElections #ShivrajSinghChauhan
  மத்தியப்பிரதேசம் சட்டசபை தேர்தலில் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் புத்னி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். #MPpolls #ShivrajSinghChauhan #Budhniconstituency
  போபால்:

  230 இடங்களை கொண்ட மத்தியப்பிரதேசம் மாநில சட்டசபைக்கு நவம்பர் 28-ம் தேர்தல் நடைபெறுகிறது.  இந்த தேர்தலில் போட்டியிடும்  177 வேட்பாளர்களின் முதல் பட்டியலை டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை கடந்த இரண்டாம் தேதி வெளியிட்டது. இன்று மேலும் 17 வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில்,  முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் புத்னி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். #MPpolls #ShivrajSinghChauhan #Budhniconstituency
  ×