search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யோகி ஆதித்யநாத்"

    • உ.பி.யில் ஓநாய்கள் தாக்குதலில் கடந்த 2 மாதங்களில் 8 குழந்தைகள் உள்பட 9 பேர் பலியாகினர்.
    • உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஓநாய்களை சுட்டுபிடிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    உத்தர பிரதேசம் மாநிலம் பக்ராயிச் மாவட்டம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள கிராமங்களில் ஓநாய்கள் புகுந்து மனித வேட்டையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. ஓநாய்கள் தாக்குதலில் கடந்த 2 மாதங்களில் 8 குழந்தைகள் உள்பட 9 பேர் பலியாகினர். 36 பேர் படுகாயம் அடைந்தனர்.

    ஓநாய்களை கூண்டு வைத்து பிடிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஓநாய்களை சுட்டுபிடிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    துப்பாக்கி சுடுதலில் நிபுணத்துவம் பெற்ற 9 குழுக்கள் வனத்துறை சார்பில் களம் இறக்கப்பட்டுள்ளன. மயக்க மருத்து கொடுத்து ஓநாய்களை சுட்டு பிடிக்க முன்னுரிமை அளிக்கப்படும். அது பயனளிக்காதநிலையில் அவற்றை சுட்டு கொல்ல அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், உத்தரப்பிரதேச அரசை விட ஓநாய்கள் அதி புத்திசாலிகளாக இருப்பதால் அவற்றை பிடிப்பது எளிதான காரியமில்லை அம்மாநில பெண் அமைச்சர் பேபி ராணி மவுரியா பேசியுள்ள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக பேசிய அவர், "பல குழுக்கள் அமைக்கப்பட்டு ஓநாய்கள் தேடப்பட்டு வருகின்றன. நாங்கள் அவற்றைப் பிடித்து விடுவோம். ஆனால் ஓநாய்கள் அரசாங்கத்தை விட, புத்திசாலித்தனமாக இருப்பதால் பிடிப்பதற்கு நேரம் எடுக்கிறது. வனத்துறை அமைச்சர் தனிப்பட்ட முறையில் தேடுதலை மேற்பார்வையிட்டு வருகிறார்"என்று தெரிவித்துள்ளார். 

    • ஓநாய்கள் தாக்குதலில் கடந்த 2 மாதங்களில் 8 குழந்தைகள் உள்பட 9 பேர் பலியாகினர்.
    • துப்பாக்கி சுடுதலில் நிபுணத்துவம் பெற்ற 9 குழுக்கள் வனத்துறை சார்பில் களம் இறக்கப்பட்டுள்ளன.

    லக்னோ:

    உத்தர பிரதேசம் மாநிலம் பக்ராயிச் மாவட்டம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள கிராமங்களில் ஓநாய்கள் புகுந்து மனித வேட்டையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. ஓநாய்கள் தாக்குதலில் கடந்த 2 மாதங்களில் 8 குழந்தைகள் உள்பட 9 பேர் பலியாகினர். 36 பேர் படுகாயம் அடைந்தனர்.

    ஓநாய்களை கூண்டு வைத்து பிடிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஓநாய்களை சுட்டுபிடிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    துப்பாக்கி சுடுதலில் நிபுணத்துவம் பெற்ற 9 குழுக்கள் வனத்துறை சார்பில் களம் இறக்கப்பட்டுள்ளன. மயக்க மருத்து கொடுத்து ஓநாய்களை சுட்டு பிடிக்க முன்னுரிமை அளிக்கப்படும். அது பயனளிக்காதநிலையில் அவற்றை சுட்டு கொல்ல அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    • அராஜகம் மற்றும் குண்டர்கள் அட்டூழியம் சமாஜ்வாடி கட்சியின் டி.என்.ஏ.-வில் வேரூன்றியுள்ளது- ஆதித்யநாத்
    • அந்த வார்தைக்கு முழு அர்த்தம் என்ன? என்பதை அறிந்திருக்க வேண்டும்- அகிலேஷ் யாதவ்.

    உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று பேசும்போது "அராஜகம் மற்றும் குண்டர்கள் அட்டூழியம் சமாஜ்வாடி கட்சியின் டி.என்.ஏ.-வில் வேரூன்றியுள்ளது. இது சமூக கட்டமைப்பு கிழித்தெறிந்து, மக்களுக்கு இடையூறுகளை விளைவிக்கும் அடையாளமாக உருவாக்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டிருந்தார்.

    இதற்கு அகிலேஷ் யாதவ் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அகிலேஷ் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    நீங்கள் குற்றச்சாட்டை கூறுவதற்கு முன், அந்த வார்தைக்கு முழு அர்த்தம் என்ன? என்பதை தெரிந்திருக்க வேண்டும். DNA = Deoxyribonucleic Acid. இது பற்றி உங்களுக்கு தெரிந்தாலும், உங்களால் பேச முடியாது. எம்.பி., எம்.எல்.ஏ.,க்களை கோடிக்கணக்கில் பணம் கொடுத்து சேர்ப்பவர்கள், எவ்வளவு குறைவாக பேசுகிறார்களோ, அவ்வளவு மரியாதையும் அதிகம்.

    இவ்வாறு அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

    • திருமணத்துக்கு பிறகு, கணவரின் ஊரான அயோத்தியில் மரியம் வசிக்கத் தொடங்கினார்.
    • ஆத்திரம் அடைந்த அர்ஷத், தன் மனைவியை பிறந்த வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் பரைச் நகரை சேர்ந்தவர் மரியம். அவருக்கும், அயோத்தியை சேர்ந்த அர்ஷத் என்பவருக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் 13-ந்தேதி திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு, கணவரின் ஊரான அயோத்தியில் மரியம் வசிக்கத் தொடங்கினார்.

    அயோத்தி நகர சாலைகள், அங்குள்ள வளர்ச்சி, அழகு ஆகியவை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால், உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தையும், பிரதமர் மோடியையும் கணவர் முன்னிலையில் புகழ்ந்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அர்ஷத், தன் மனைவியை பிறந்த வீட்டுக்கு அனுப்பி வைத்தார். பெரியவர்கள் சமாதானத்துக்கு பிறகு, மரியம் மீண்டும் அயோத்தியில் கணவர் வீட்டுக்கு சென்றார். ஆனால், கோபத்தில் இருந்த அர்ஷத், மரியமை அடித்து உதைத்தார். பிரதமர் மோடியையும் ஆதித்யநாத்தையும் வசைபாடிய அவர், தன் மனைவியை பார்த்து 'தலாக், தலாக், தலாக்' என்று மூன்று முறை கூறினார்.

    மேலும், அர்ஷத்தின் குடும்பத்தினர் மரியமின் கழுத்தை நெரிக்க முயன்றனர். மேற்கண்ட தகவல்களை பரைச் நகர போலீசில் மரியம் புகார் மூலம் தெரிவித்தார். அதன்பேரில், கணவர் அர்ஷத் உள்பட அவருடைய குடும்பத்தினர் 8 பேர் மீது முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • சட்டசபை அதிகாரிகள் முழங்கால் அளவு தண்ணீரில் தத்தளித்தனர்.
    • சட்டசபை செயலக அலுவலகத்திலும் மழைநீர் புகுந்தது.

    உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நேற்று பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது.

    இந்நிலையில், கனமழையால் அம்மாநில சட்டசபைக்குள்ளும் தண்ணீர் தேங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தண்ணீர் தேங்கியதன் காரணமாக முதல்வர் யோகி ஆதித்யநாத் சட்டசபை வளாகத்தில் இருந்து மாற்று வாசல் வழியாக வெளியே அழைத்துச் செல்லப்பட்டார்.

    சட்டசபை அதிகாரிகள் முழங்கால் அளவு தண்ணீரில் தத்தளித்தனர். சட்டசபை செயலக அலுவலகத்திலும் மழைநீர் புகுந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    உ.பி. சட்டசபையில் இதற்கு முன்பு இந்த அளவு தண்ணீர் தேங்கியதை நாங்கள் பார்த்ததில்லை என்று அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் தெரிவித்தனர்.

    டெல்லியில் பெய்துவரும் கனமழையால் நேற்று பாராளுமன்ற வளாகத்திற்க்குள்ளும் மழைநீர் தேங்கியது குறிப்பிடத்தக்கது.

    • பதவிக்காக உ.பி. பாஜகவில் கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல்.
    • யோகி ஆதித்யநாத்- துணை முதல்வர் மவுரியா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    உத்தர பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு நடைபெற்று வருகிறது. துணை முதல்வராக கேஷவ் பிரசாத் மவுரியா இருந்து வருகிறார். இவர் "அரசை விட கட்சி பெரியது" எனத் தெரிவித்திருந்தார்.

    இதனைத் தொடர்ந்து முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கும், கேஷவ் பிரசாத் மவுரியாவுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாகவும், பதவிக்காக உள்கட்சி சண்டை நடைபெற்று வருவதாகவும் அகிலேஷ் யாதவ் நேற்று தெரிவித்திருந்தார்.

    அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கேஷவ் பிரசாத் யாதவ் "சமாஜ்வாடி கட்சியால் கம்பேக் கொடுக்க (மீண்டும் ஆட்சிக்கு வர) முடியாது. மத்தியிலும், மாநிலத்திலும் அரசு மற்றும் அமைப்பை பாஜக வலுவாக கொண்டுள்ளது" எனக் கூறியிருந்தார்.

    இந்த நிலையில் அகிலேஷ் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் மழைக்கால சலுகை: 100 கொண்டு வாருங்கள். ஆட்சி அமைக்கவும் (Monsoon offer: Bring hundred, form government) எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அதற்கான விளக்கம் எதையும் அவர் தெரிவிக்கவில்லை.

    இந்த நிலையில் சமாஜ்வாடி கட்சி தலைவர் ஒருவர் "2022 உத்தர பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாடி கட்சி 111 இடங்களில் வெற்றி பெற்றது. அதிருப்தியில் உள்ள 100 பாஜக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை நாங்கள் பெற்றால் அதன்பின் நாங்கள் எளிதாக ஆட்சி அமைக்க முடியும்" என விளக்கம் அளித்துள்ளார்.

    யோகி ஆதித்யநாத்தின் தலையீட்டை விரும்பாத பெரும்பாலான பாஜக எம்எல்ஏ-க்கள் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. அவர்களை இழுக்கும் வகையில் அகிலேஷ் யாதவ் இதை பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    மக்களவை தேர்தலில் உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜக மோசமான தோல்வியை சந்தித்தது. இதனால் கட்சி மேலிடம் பல மாற்றங்களை மேற்கொள்ள தயாராகி வருகிறது. இதற்கிடையேதான் உள்கட்சி சண்டை தலைதூக்கியுள்ளதாக கருதப்படுகிறது.

    • பிரதமரும், உள்துறை மந்திரியும் உத்தர பிரதேச மாநில அரசியல் நிலவரம் குறித்து ஆலோசித்தனர்.
    • உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் மாநில கவர்னரை சந்தித்துப் பேசினார்.

    லக்னோ:

    உத்தர பிரதேச மாநில பா.ஜ.க. துணை முதல் மந்திரி கேசவ் பிரசாத் மவுரியா வெளியிட்ட கருத்தால் மாநில தலைவர் பூபேந்திர சவுத்ரி பதவி விலக உள்ளதாக தகவல் வெளியானது. இதனால் அம்மாநில பா.ஜ.க.வில் கோஷ்டி பூசல் உச்சத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை உள்துறை மந்திரி அமித்ஷா சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது உத்தர பிரதேச மாநில அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினர்.

    இந்நிலையில், இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் திடீரென இன்று கவர்னர் மாளிகைக்குச் சென்றார். அங்கு கவர்னர் ஆனந்திபென் பட்டேலை சந்தித்துப் பேசினார். இருவரும் மாநில அரசியல் குறித்து விவாதித்ததாக தகவல் வெளியானது.

    உத்தர பிரதேச மாநில அரசில் கோஷ்டி சண்டை நடந்து வருகிறது. பா.ஜ.க.வினர் பதவிக்காக சண்டையிட்டு வருவதாக சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசில் கோஷ்டி சண்டை நடைபெற்று வருகிறது.
    • பாஜக தலைவர்கள் அவர்களுக்குள்ளேயே சண்டையிட்டு வருகிறார்கள்.

    உத்தர பிரதேச மாநில அரசில் கோஷ்டி சண்டை நடைபெற்று வருகிறது. பாஜக-வினர் பதவிக்காக சண்டையிட்டு வருவதாக சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்திருந்தார்.

    இதற்கு அம்மாநில துணை முதல்வரான கேஷவ் பிரசாத் மவுரியா பதிலடி கொடுத்துள்ளார். "மத்தியிலும், உத்தர பிரதேசத்திலும் அரசாங்கத்தையும், அமைப்பையும் பாஜக வலுவாக கொண்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சி மீண்டும் ஆட்சிக்கு (கம்பேக்) வர வாய்ப்பே இல்லை" என கேஷவ் பிரசாத் மவுரியா தெரிவித்துள்ளார்.

    உத்தர பிரதேச மாநில சமாஜ்வாடி கட்சித் தலைவரான அகிலேஷ் யாதவ் "யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசில் கோஷ்டி சண்டை நடைபெற்று வருகிறது. பாஜக தலைவர்கள் அவர்களுக்குள்ளேயே சண்டையிட்டு வருகிறார்கள். அவர்களுடைய ஊழல் பற்றி மக்களுக்கு தெரிந்துள்ளது. அவர்களுடைய பதவி விளையாட்டால் மக்கள் கோபம் அடைந்துள்ளனர்" என கட்சி நிகழ்ச்சியில் பேசும்போது தெரிவித்திருந்தார்.

    இதற்கு முன்னதாக பேசும்போது "பாஜக மற்ற கட்சிகளை பிரிக்கும் வேலையை செய்தது. தற்போது தங்களுக்குள்ளேயே அதை செய்து வருகிறது. உட்கட்சி பூசலால் புதை மணலில் மூழ்கி வருகிறது. பாஜக-வை சேர்ந்த ஒருவர் கூட மக்களை பற்றி சிந்திக்கவில்லை" எனக் கூறியிருந்தார்.

    உத்தர பிரதேச மாநிலத்தின் துணை முதல்வரான கேஷவ் பிரசாத் மவுரியா பாஜக செயற்குழு கூட்டத்தில் பேசும்போது "அரசைவிட அமைப்பு (பாஜக கட்சி) பெரியது. அமைப்பை விட யாரும் பெரியவர்கள் கிடையாது" எனக் கூறினார். இதை மேற்கொள்காட்டி அகிலேஷ் யாதவ் அவ்வாறு தெரிவித்திருந்தார்.

    • அரசைவிட அமைப்பு (பாஜக கட்சி) பெரியது.
    • அமைப்பை விட யாரும் பெரியவர்கள் கிடையாது- உ.பி. துணை முதல்வர் மவுரியா

    உத்தர பிரதேச மாநில பாஜக அரசில் கோஷ்டி சண்டை நடக்கிறது. கட்சியினர் பதவிக்காக சண்டையிட்டு வருவதால், மக்கள் சிரமப்படுகின்றனர் என சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

    உத்தர பிரதேச மாநிலத்தின் துணை முதல்வரான கேஷவ் பிரசாத் மவுரியா பாஜக செயற்குழு கூட்டத்தில் பேசும்போது "அரசைவிட அமைப்பு (பாஜக கட்சி) பெரியது. அமைப்பை விட யாரும் பெரியவர்கள் கிடையாது" எனப் பேசியிருந்தார்.

    பாஜக கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவை சந்தித்தப்பின் மவுரியா இவ்வாறு கூறியிருப்பது முதல்வர் யோகி ஆதித்யநாத்தை மறைமுகமாக விமர்சித்திதுள்ளதாக பார்க்கப்படுகிறது.

    இதனைத் தொடர்ந்து சமாஜ்வாடி கட்சித் தலைவரான அகிலேஷ் யாதவ் "யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசில் கோஷ்டி சண்டை நடைபெற்று வருகிறது. பாஜக தலைவர்கள் அவர்களுக்குள்ளேயே சண்டையிட்டு வருகிறார்கள். அவர்களுடைய ஊழல் பற்றி மக்களுக்கு தெரிந்துள்ளது. அவர்களுடைய பதவி விளையாட்டால் மக்கள் கோபம் அடைந்துள்ளனர்" என கட்சி நிகழ்ச்சியில் பேசும்போது தெரிவித்துள்ளார்.

    இதற்கு முன்னதாக பேசும்போது "பாஜக மற்ற கட்சிகளை பிரிக்கும் வேலையை செய்தது. தற்போது தங்களுக்குள்ளேயே அதை செய்து வருகிறது. உட்கட்சி பூசலால் புதை மணலில் மூழ்கி வருகிறது. பாஜக-வை சேர்ந்த ஒருவர் கூட மக்களை பற்றி சிந்திக்கவில்லை" என்றார்.

    சமீபத்தில் முடிவடைந்த மக்களவை தேர்தலில் உத்தர பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சி 37 இடங்களில் வெற்றி பெற்றது. 2019-ல் 62 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக இந்த முறை 33 இடங்களில்தான் வெற்றி பெற்றது. பாஜக-வின் அதீத நம்பிக்கைதான் இந்த தோல்விக்கு காரணம் என தலைவர்கள் மத்தியில் யோகி ஆதித்யநாத் தெரிவித்திருந்தார்.

    • இந்திய நாட்டின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை சமாஜ்வாதி கட்சி எப்போதுமே மதித்ததில்லை.
    • 'செங்கோல்' இந்தியாவின் பெருமையான அடையாளங்களுள் ஒன்று.

    செங்கோல் குறித்த சமாஜ்வாதி எம்.பி. ஆர்.கே.சவுத்ரியின் கருத்துக்கு, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில்,

    இந்திய நாட்டின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை சமாஜ்வாதி கட்சி எப்போதுமே மதித்ததில்லை. 'செங்கோல்' பற்றிய அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் கண்டனத்துக்குரியது மட்டுமின்றி அவர்களின் அறியாமையையும் காட்டுகிறது. குறிப்பாக தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரான இந்தியா கூட்டணி கட்சிகளின் அறியாமையை காட்டுகிறது.

    'செங்கோல்' இந்தியாவின் பெருமையான அடையாளங்களுள் ஒன்று. பாரத பிரதமர் நரேந்திர மோடி பாராளுமன்றத்தில் செங்கோலுக்கு உயரிய மரியாதையை அளித்து இந்தியர்கள் அனைவருக்குமே பெருமை சேர்த்துள்ளார் என்று பதிவிட்டுள்ளார்.

    • உத்தர பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க. 33 இடங்களிலும், மகாராஷ்டிராவில் பா.ஜ.க. 9 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
    • பா.ஜ.க. பெரும்பான்மையை இழக்க காரணமான 2 மாநிலங்களின் முக்கிய தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    டெல்லி வருமாறு உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் மகாராஷ்டிரா துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கும பா.ஜ.க. மேலிடம் அழைப்பு விடுத்துள்ளது.

    பா.ஜ.க. பெரும்பான்மையை இழக்க காரணமான 2 மாநிலங்களின் முக்கிய தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    உத்தர பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க. பின்னடவை சந்தித்ததற்கான காரணம் குறித்தும், மகாராஷ்டிராவில் வெற்றி கிடைக்காமல் போனது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த நிலையில், தேர்தல் தோல்வியை அடுத்து உத்தர பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் மாற்றப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் உத்தர பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க. 33 இடங்களிலும், மகாராஷ்டிராவில் பா.ஜ.க. 9 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

    • வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்தே பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
    • அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

    இந்திய திருநாட்டின் பாராளுமன்ற 18-வது மக்களவைக்கான தேர்தல் அட்டவணை கடந்த மார்ச் மாதம் 16-ந்தேதி அறிவிக்கப்பட்டது. அப்போது இந்த தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது.

    அதன்படி முதல் கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ந்தேதி 102 தொகுதிகளுக்கு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த 40 தொகுதிகளும் அடங்கும்.

    இதையடுத்து ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20 மற்றும் 25-ந்தேதிகளில் தொடர்ச்சியாக 6 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்தன. மேற்குவங்காளம், ஆந்திர மாநிலங்களை தவிர மற்ற இடங்களில் அமைதியாக தேர்தல் நடந்து முடிந்தன.

    இந்த நிலையில் 7-வது மற்றும் இறுதிக்கட்டமாக 8 மாநிலங்களை சேர்ந்த 57 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்தே பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

    அந்த வகையில், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா இமாச்சல பிரதேச மாநிலம் பிலாஸ்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். அவரது மனைவி மல்லிகா நட்டாவும் தனது வாக்கினை செலுத்தினார்.


    உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூரில் உள்ள கோரக்நாத்தில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.


    சமாஜ்வாதி கட்சியின் காஜிபூர் மக்களவை வேட்பாளர் அப்சல் அன்சாரியின் சகோதரரும், முன்னாள் எம்எல்ஏவுமான சிப்கதுல்லா அன்சாரி உத்தரபிரதேச மாநிலம் காஜிபூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

    பஞ்சாப்பில் ஆனந்த்பூர் சாஹிப் தொகுதிக்கு உட்பட்ட லக்னூரில் உள்ள வாக்குச்சாவடியில் ஆம் ஆத்மி எம்பி ராகவ் சதா பொதுமக்களுடன் வரிசையில் நின்று தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.

    எஸ்பிஎஸ்பி தலைவரும், உ.பி., அமைச்சருமான ஓம் பிரகாஷ் ராஜ்பர் பல்லியாவில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

    ×