என் மலர்

  நீங்கள் தேடியது "பொன்முடி"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தமிழ் மீதும் தமிழ் வளர்ச்சி மீதும் அக்கறை கொண்டிருப்பது திராவிட மாடல் ஆட்சி.
  • இன்னும் சொல்ல வேண்டும் என்றால் கருணாநிதி காலத்தில் சமூக அறிவியல் பாடத்திட்டத்தை தமிழ் வழி பாடப்பிரிவாக கொண்டு வந்தவர் கருணாநிதி.

  விழுப்புரம்:

  தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விழுப்புரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

  அண்ணா பல்கலைக்கழகத்தில் சிவில் மற்றும் மெக்கானிக் தமிழ் வழி பாடப்பிரிவில் மாணவர்கள் சேர்க்கப்பட மாட்டாது என அண்ணா பல்கலைக்கழகம் ஒரு சுற்றறிக்கை கடந்த சில தினங்களுக்கு முன்பாக வெளியிட்டு இருந்தது. அந்தப் பாடப்பிரிவுகள் மூடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக நேற்று முன்தினம் விழுப்புரம் அண்ணா உறுப்பு கல்லூரி விழாவில் நான் கலந்து கொள்ள சென்ற பொழுது கல்லூரி முதல்வரும் நிருபர்களும் என்னிடம் கூறினார்கள். ஆனால் இது சம்பந்தமாக உயர்கல்வித்துறை செயலாளருக்கோ எனக்கோ எந்தவித தகவலும் தெரிவிக்கப்படவில்லை. தன்னிச்சையாக இந்த அறிவிப்பு வெளியிட்டப்பட்டு இருந்தது. உடனடியாக அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தரிடம் தொடர்பு கொண்டு கேட்டேன். அந்த அறிவிப்பை திரும்ப பெறுவதாக நேற்று காலை அறிவித்திருந்தார்.

  தமிழ் வழியில் படிக்க மாணவர்கள் இல்லை என்று அதை மூடுவது முக்கியமல்ல. தி.மு.க.ஆட்சிக்காலத்தில் தான் பொறியியல் படிப்பில் தமிழ் வழியில் பாடப் பிரிவுகள் கொண்டு வரவும் சட்டம் இயற்றப்பட்டது.

  நான் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த போது அப்போதைய தமிழக முதலமைச்சர் கருணாநிதி அண்ணா பல்கலைக்கழகத்தில் சிவில் மற்றும் மெக்கானிக்கல் பாடப்பிரிவுகளில் தமிழ் வழி கொண்டுவர நடவடிக்கை மேற்கொண்டார்.

  தமிழ் மீதும் தமிழ் வளர்ச்சி மீதும் அக்கறை கொண்டிருப்பது திராவிட மாடல் ஆட்சி. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் கருணாநிதி காலத்தில் சமூக அறிவியல் பாடத்திட்டத்தை தமிழ் வழி பாடப்பிரிவாக கொண்டு வந்தவர் கருணாநிதி.

  ஒன்றும் அறியாத அண்ணாமலை ஏதோ அரசியல் காரணங்களுக்காக பேச வேண்டும் என்று அவர் வாய்க்கு வந்ததை பேசி வருகிறார். அவருக்கு தமிழைப் பற்றியும் தெரியாது. தமிழரது வரலாறும் தெரியாது. கன்னடத்தில் இருந்து இங்கு வந்து அரசியல் செய்ய வந்திருக்கிறார். அவருக்கு தமிழைப் பற்றி என்ன தெரிந்துவிடப் போகிறது. அவர் நான் மழுப்பலாக பதில் அறிவித்திருந்தேன் என்று கூறிவருகிறார். நான் என்ன மழுப்பலாக அறிவித்து விட்டேன். அவர்கள் போல் மும்மொழிக் கொள்கை பாடத்திட்டத்தை மக்களிடம் திணிப்பதற்கு முயல்கிறேனா. அவருக்கு ஒன்றும் தெரியாது. தெரியாமல் அரசியல் காரணங்களுக்காக அண்ணாமலை தொடர்ந்து இதுபோல் பேசி வருகிறார்.

  இப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் கலைய வேண்டும் என்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு வேண்டுமென்று சட்டமாக இயற்றி அது தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஒப்புதல் அளித்த பிறகு இது போன்ற பிரச்சனைகள் களையப்படும்

  மேலும் பொறியியல் கல்லூரி உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் இருக்கும் ஒரு சில இடங்களில் நிதி பற்றாக்குறையால் அப்பணிகள் மெதுவாக நடைபெறுகிறது. படிப்படியாக கட்டமைப்பு உயர்த்தப்பட்டு மாணவரின் கல்வித் திறனை உயர்த்துவதற்கு இந்த அரசு தொடர்ந்து பாடுபடும்.

  இவ்வாறு அமைச்சர் பொன்முடி கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இந்திய கல்வி வளர்ச்சி குழுமம் சார்பில் உயர்கல்வியில் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டு பிடிப்புகள் குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கம் சென்னையில் நடந்தது.
  • பாலிடெக்னிக் கல்லூரிகளில் தற்போது மாணவர்களின் சேர்க்கை குறைந்து வருகிறது. அதனை மேம்படுத்த தொழில்துறை 4.0 திட்டம் அறிமுகபடுத்தப்பட்டுள்ளது.

  சென்னை:

  இந்திய கல்வி வளர்ச்சி குழுமம் சார்பில் உயர்கல்வியில் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டு பிடிப்புகள் குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கம் சென்னையில் நடந்தது. நிகழ்ச்சிக்குஅமைப்பின் தலைவரும் வி.ஐ.டி. வேந்தருமான விசுவநாதன் தலைமை தாங்கினார்.

  கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்வியாளர்களை ஒருங்கிணைத்து இந்திய கல்வி வளர்ச்சி குழுமம் நடத்தும் இந்த கருத்தரங்கு பயனுள்ளது.

  அனைத்து மாநிலங்களையும் அவர்கள் கல்வி கொள்கையை பின்பற்ற மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். மாநிலங்கள் தங்கள் கல்வி தரத்தை உயர்த்திக் கொள்ள உரிமை வழங்கபட வேண்டும்.

  பாலிடெக்னிக் கல்லூரிகளில் தற்போது மாணவர்களின் சேர்க்கை குறைந்து வருகிறது. அதனை மேம்படுத்த தொழில்துறை 4.0 திட்டம் அறிமுகபடுத்தப்பட்டுள்ளது.

  புதிய கல்வி கொள்கையில் ஒரு சில வரவேற்க தக்க நல்ல விஷயங்கள் இருந்தாலும் அதில் நுழைவு தேர்வு உள்ளிட்ட பல முடிவுகளை நாங்கள் எதிர்க்கிறோம்.

  3-ம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு நுழைவு தேர்வு வைத்தால் அவர்கள் எவ்வாறு எழுத முடியும். அனைத்து மாநிலங்களுக்கும் தங்களுக்கென தனி கல்வி கொள்கை வைத்துள்ளது. மாநிலங்கள் ஊக்கப்படுத்த பட வேண்டும்,அவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

  பூனை செல்வதற்கு ஒரு ஓட்டை எலி செல்வதற்கு ஒரு ஒட்டையா என முன்னாள் முதல்வர் அண்ணாவின் வார்த்தைகளை சுட்டிக்காட்டி எங்களுக்கு 2 மொழிகள் போதும். மூன்றாவதாக ஒரு மொழியை திணிக்ககூடாது.

  இது தொடர்பாக ஏஐசிடிஇ தலைவருக்கு கோரிக்கை வைக்கிறோம்.

  இவ்வாறு அவர் பேசினார்.


  அதை தொடர்ந்து ஏஐசிடிஇ தலைவர் சீதாராம் நிருபர்களிடம் கூறியதாவது:-

  உயர்கல்வியில் கொண்டு வரப்படக்கூடிய மாற்றங்கள் குறித்து கல்வியாளர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் கலந்துரையாடினோம்.

  தேசிய கல்வி கொள்கையின் மூலம் உயர்கல்வியில் தரத்தை உயர்த்துவது தான் நோக்கம்.

  கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி வட்டார மொழிகளில் கொண்டு வருவதில் உறுதியாக உள்ளோம்.

  வேலை வாய்ப்புகளை உருவாக்குவதே எங்களின் முக்கிய நோக்கம் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள பொறியியல் கல்லூரிகளை தொழில் நிறுவனங்களுடன் சேர்ந்து தொடர்பு ஏற்படுத்தி வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்..

  தமிழ்நாட்டில் உள்ள சில தரமற்ற கல்லூரிகளை மூடுவது குறித்து ஆராய்ந்து முடிவெடுக்க முடியும். உடனடியாக முடிவெடுக்க முடியாது என்றார்.

  விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு வி.ஐ.டி. வேந்தர் விசுவநாதன் நினைவு பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் வி.ஐ.டி. துணைத் தலைவர் ஜி.வி. செல்வம் மற்றும் கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • எந்த கடவுளுக்கும் எதிராக நாங்கள் செயல்படுவதில்லை என அமைச்சர் பொன்முடி பேட்டி
  • அண்ணாவுக்கு இந்து மதத்தின் மீது கோபம் இருந்திருந்தால் விநாயகர் சதுர்த்திக்கு விடுமுறை விட்டிருப்பாரா?

  சென்னை:

  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மற்ற மதத்தினரின் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்கிறார், ஆனால் இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்காதது ஏன்? என பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பினார். இதற்கு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பதில் அளித்தார்.

  சென்னை அண்ணா அறிவாலயத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

  விநாயகர் சதுர்த்திக்கு அரசு விடுமுறை விட்டவர் அண்ணாதான் என அண்ணாமலையே கூறியிருக்கிறார். அண்ணா விடுமுறை விடுகிறார் என்றால், அவருக்கு இந்து மதத்தின் மீது கோபம் இருந்திருந்தால் விடுமுறை விட்டிருப்பாரா?

  எங்களைப் பொருத்தவரை சமூக நீதிதான் முக்கியம். அனைத்து சமுதாயமும், அனைத்து மதத்தினரும் ஒன்றாக இருக்க வேண்டும். எந்த கடவுளுக்கும் எதிராக நாங்கள் செயல்படுவதில்லை.

  சதுர்த்தி கொண்டாடவில்லை என்றால்...? நேற்று என்ன நடந்தது பார்த்தீர்களா? வேண்டுமென்றே வீண் ஆடம்பரமாக செய்து 2 பேர் உயிர்நீத்திருக்கிறார்கள். அந்த மாதிரி நிகழ்வுகளையெல்லாம் தடை செய்ய வேண்டும் என்பதுதான் தமிழக முதலமைச்சரின் நோக்கமே தவிர இதை நிறுத்த வேண்டும் என்பது கிடையாது.

  இது அவர்களின் தனிப்பட்ட கொள்கை. அதனால், இதற்கு போய் வாழ்த்து சொல்லவேண்டும் என்பதெல்லாம்... அவர்களின் எதிர்பார்ப்பு என்பது வேற... அவர்கள் எல்லாம் எதிர்பார்க்கிறார்கள். பாபர் மசூதியை இடித்தார்கள். மதவெறியை தூண்டி விடுவதே அவர்கள்தான்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்துவிட்ட நிலையில் தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
  • தரவரிசையில் முதல் 10 இடங்கள் பிடித்த அனைவரும் 200க்கு 200 கட்ஆப் மதிப்பெண் பெற்றுள்ளனர்

  சென்னை:

  அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில், இளநிலைப் படிப்புகளுக்கு 2.10 லட்சம் இடங்கள் உள்ளன. இதன் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கான கலந்தாய்வு இணையவழியில் வரும் 20-ம் தேதி முதல் நடைபெற உள்ளது. பொறியியல் படிப்புக்கு 1.69 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

  இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்துவிட்ட நிலையில், தகுதி பெற்ற மாணவ, மாணவிகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தரவரிசைப் பட்டியலை http://tneaonline.org என்ற இணையதளத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

  இந்த ஆண்டு 1,48,811 இடங்கள் அரசு ஒதுக்கீட்டில் உள்ளன. 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் 10968 இடங்கள் உள்ளன. தொழிற்கல்வி மாணவர்களுக்கு 2 சதவீத இடங்கள் என்ற அடிப்படையில் 175 இடங்கள் உள்ளன.

  தரவரிசையில் முதல் 10 இடங்கள் பிடித்த அனைவரும் 200க்கு 200 கட்ஆப் மதிப்பெண் பெற்றுள்ளனர். அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

  மாற்றுத் திறனாளிகள், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடு உட்பட சிறப்புபிரிவுக்கான கலந்தாய்வு வரும் 20 முதல் நடைபெற உள்ளது. அதன்பிறகு, பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு 25-ம்தேதி முதல் பல சுற்றுகளாக நடக்க உள்ளது. 431 பொறியியல் கல்லூரிகள் கலந்தாய்வில் பங்கேற்க உள்ளன.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அமைச்சர் பொன்முடி மீதான சொத்து குவிப்பு, செம்மண் குவாரி வழக்கு விசாரணைக்கு வந்தது
  • குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து தி.மு.க. வக்கீல்கள் மனுதாக்கல் செய்தனர்.

  விழுப்புரம்:

  விழுப்புரம் விழுப்புரம், விழுப்புரத்தை சேர்ந்த அமைச்சர் பொன்முடி, அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2006-ம் ஆண்டு விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கின் விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

  இவ்வழக்கில் அமைச்சர் பொன்முடி, விசாலாட்சி ஆகிய இருவரும் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து ஏற்கனவே கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

  இந்நிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது சாட்சிகள் யாரும் ஆஜர் ஆகாததால் இவ்வழக்கு விசாரணையை வருகிற 27-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார்.

  இதேபோல் வானூர் தாலுகா பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததாக அமைச்சர் பொன்முடி, கவுதமசிகாமணி எம்.பி., ராஜமகேந்திரன், சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத் ஆகிய 7 பேர் மீது கடந்த 2012-ம் ஆண்டில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

  இதுதொடர்பான வழக்கு விசாரணையும் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயச்சந்திரன், கோபிநாத், சதானந்தன் ஆகிய 3 பேர் மட்டும் ஆஜராகினர். அமைச்சர் பொன்முடி, கவுதமசிகாமணி எம்.பி., ராஜமகேந்திரன், கோதகுமார் ஆகிய 4 பேரும் ஆஜராகவில்லை. அவர்கள் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து தி.மு.க. வக்கீல்கள் மனுதாக்கல் செய்தனர். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி பூர்ணிமா, இவ்வழக்கின் விசாரணையையும் வருகிற 27-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கலந்தாய்விற்கு மாணவர்கள் ஜூன் 20-ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
  • ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க ஜூலை 19ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

  சென்னை:

  தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்டு 16-ஆம் தேதி தொடங்கும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார்.

  சென்னை தலைமைச் செயலகத்தில் அவர் கூறியதாவது:-

  இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் எந்த வகையில் மாணவர் சேர்க்கையை நடத்துவது என்பது குறித்து கலந்தாலோசித்து முடிவு செய்திருக்கிறோம்.

  குறிப்பாக பொறியியல் கல்லூரிகளில் அதிகமாக மாணவர்கள் சேராத சூழ்நிலை, குறிப்பிட்ட காலத்தில் இடம் கிடைக்காத சூழ்நிலை உள்பட பல்வேறு காரணங்களையும் ஆலோசித்தோம். சென்ற ஆண்டு அண்ணா பல்கலைக் கழகத் தில் மட்டும் 631 இடங்கள் காலியாக இருந்தன. அதற்கு முந்தைய வருடம் 750 இடங்கள் காலியாக இருந்தது. இதற்கு காரணம் அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து விட்டு பின்னர் நீட் தேர்வு மூலம் மருத்துவ கல்லூரி உள்பட மற்ற கல்லூரிகளில் இடம் கிடைத்த காரணத்தால் அங்கு சென்று சேர்ந்து விடுவதுதான். அதனால் இங்கு காலி இடங்கள் ஏற்பட்டு விடுகிறது. எனவே இவற்றை மாற்றி அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இப்போது இந்த ஆண்டு நீட் தேர்வு முடிவு வந்த பிறகுதான் பொறியியல் கல்லூரி அட்மிஷன் தொடங்கப்படும்.

  பிளஸ்-2 தேர்வு முடிவு வந்த பிறகு ஆன்லைனில் விண்ணப்பம் சமர்ப்பிக்க இறுதி நாள் 19.7.2022. அதாவது ஜூன் 20-ல் தொடங்கி ஜூலை 19 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பத்தை சொந்தமாகவும் விண்ணப் பிக்கலாம். அல்லது அவர வர் படிக்கும் பள்ளிகள் மூலமாகவும் விண்ணப் பிக்கலாம். இது தவிர தமிழகம் முழுவதும் மொத்தம் 110 இடங்களிலும் விண்ணப்பிக்க வசதிகள் ஏற்படுத்தப்படும்.

  விண்ணப்பங்கள் பெற்ற பிறகு சான்றிதழ் சரி பார்க்கப்படுவது 20.7.22 முதல் 31.7.22 வரை நடைபெறும். அதன் பிறகு தர வரிசை பட்டியல் 8.8.22 அன்று வெளியிடப்படும். ஆகஸ்டு 16 முதல் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படை வீரர்கள், விளையாட்டு வீரர்களுக்கு இட ஒதுக்கீடு (கவுன்சிலிங்) நடைபெறும். அதன் பிறகு 22-ந்தேதியில் இருந்து பொது கல்வி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு, 22.8.22 முதல் 14.10.22 வரை இட ஒதுக்கீடு நடைபெறும். இதில் துணை கலந்தாய்வு 15.10.22, 16.10.22 நடைபெறும். எஸ்.சி. கலந்தாய்வு 17, 18 ஆகிய 2 நாட்கள் நடைபெறும். 18-ந்தேதியுடன் அட்மிஷன் முடிந்து விடும். இதில் முதல் 15 ஆயிரம் பேருக்கு 1 வாரத்தில் கலந்தாய்வு நடைபெறும்.

  அந்த ஒரு வாரத்துக்குள் அவர்கள் பணம் கட்டியாக வேண்டும். அப்படி கட்டாவிட்டால் அவர்களது அட்மிஷன் ரத்து செய்யப்பட்டு அடுத்த மாணவருக்கு அந்த இட வாய்ப்பு வழங்கப்படும். தனியார் அல்லது அரசு பொறியியல் கல்லூரி என எந்த கல்லூரியாக இருந்தாலும் ஒரு வாரத்தில் பணம் கட்ட வேண்டும். 2 மாதத்தில் 4 ரவுண்டு கலந்தாய்வு முடிவு பெறும். பிளஸ்-2 தேர்வு முடிவு ஜூன் 23-ல் வெளி யிடப்படுவதால் அரசு கலைக் கல்லூரிகளில் சேர ஜூன் 27-ல் விண்ணப்பம் போடலாம். கடைசி தேதி ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம். ஜூலை 25-ந்தேதி முதல் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  ×