என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • டெல்டா ஏர்லைன்ஸில் அவர் பணிபுரிந்து வந்தார்.
    • சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் உள்ள விமானி அறையில் இருந்து போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டார்.

    இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துணை விமானி ருஸ்டம் பகவாகர், குழந்தைகளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் அமெரிக்க போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

    டெல்டா ஏர்லைன்ஸில் அவர் பணிபுரிந்து வந்த நிலையில் சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் உள்ள விமானி அறையில் இருந்து போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டார்.

    டெல்டா போயிங் விமானம் மின்னியாபோலிஸிலிருந்து புறப்பட்டு சான் பிரான்சிஸ்கோவில் தரையிறங்கியது. விமானம் நின்ற சிறிது நேரத்திலேயே, போலீசார் விமானி அறையில் நுழைந்து பகவாகரை கைது செய்தனர்.

    குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை இந்த ஆண்டு ஏப்ரல் முதல் நடந்து வருகிறது. பகவாகர் மீதான குற்றச்சாட்டுகளால் அதிர்ச்சியடைந்ததாக கூறிய டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் அவரை இடைநீக்கம் செய்வதாக அறிவித்தது. 

    • அவர் தனக்கு "க்ரானிக் டிராமாடிக் என்செபலோபதி" என்ற மூளை நோய் இருப்பதாக கூறியுள்ளார்.
    • ஆஸ்கார் விருது பெற்ற நடிகைகள் மெர்லின் ஸ்டீப், அன்னா ஹாத்வே ஆகியோரின் படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்தது.

    அமெரிக்காவின் நியூயார்க் நகரின் மத்திய மன்ஹாட்டனில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் காவல் துறை அதிகாரி உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

    இந்த தாக்குதலை நடத்திய லாஸ் வேகாஸைச் சேர்ந்த 27 வயது ஷேன் தமுரா என்பவரும், தன்னைத்தனே சுட்டுக்கொண்டதில் உயிரிழந்ததாக நியூயார்க் காவல்துறை தெரிவித்துள்ளது.

    போலீஸ் கூற்றுப்படி, உயிரிழந்த சந்தேகத்திற்கிடமான ஷேன் தமுரா, கைத்துப்பாக்கிக்கான உரிமம் பெற்றிருந்தார். காலாவதியான தனியார் துப்பறிவாளர் உரிமமும் அவரிடம் இருந்துள்ளது.

    அமெரிக்க நேரப்படி திங்கட்கிழமை மாலை சுமார் 6:40 மணியளவில் மன்ஹாட்டனின் மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் உள்ள பார்க் அவென்யூ வானளாவிய கட்டிடத்தின் வரவேற்பறையில் அந்த நபர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

    பின்னர் அவர் 33வது தளத்திற்குச் சென்று தன்னைத்தானே சுட்டுக்கொண்டார். அவரிடம் ஒரு தற்கொலை கடிதம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில் அவர் தனக்கு "க்ரானிக் டிராமாடிக் என்செபலோபதி" (Chronic Traumatic Encephalopathy - CTE) என்ற மூளை நோய் இருப்பதாக எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    சம்பவம் நடந்த மிட் டவுன் மன்ஹாட்டன் கட்டிடத்திலிருந்து 15 நிமிடங்கள் தொலைவில், ஆஸ்கார் விருது பெற்ற நடிகைகள் மெர்லின் ஸ்டீப், அன்னா ஹாத்வே ஆகியோரின் படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
    • ஆண்கள் இரட்டையரில் இத்தாலி ஜோடி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

    வாஷிங்டன்:

    வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் இரட்டையர் பிரிவில் நடைபெற்ற இறுதிச்சுற்றில் இத்தாலியின் சைமோன் பொலேலி-ஆண்ட்ரியா வவசோரி ஜோடி, மொனாக்கோவின் ஹியூகோ நைஸ்-பிரான்சின் ரோஜர் வாஸ்லின் ஜோடி உடன் மோதியது.

    இதில் அதிரடியாக ஆடிய இத்தாலி ஜோடி 6-3, 6-4 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

    • வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
    • கனடா வீராங்கனை லேலா பெர்னாண்டஸ் இறுதிச்சுற்றில் சாம்பியன் பட்டம் வென்றார்.

    வாஷிங்டன்:

    வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற இறுதிச்சுற்றில் கனடாவின் லேலா பெர்னாண்டஸ், ரஷியாவின் அன்னா கலின்ஸ்கயா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய லேலா 6-1, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். இந்தப் போட்டி 70 நிமிடங்கள் நடைபெற்றது.

    நடப்பு தொடரில் முன்னணி வீராங்கனைகளான ஜெசிகா பெகுலா, எலினா ரிபாகினா ஆகியோரை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
    • கஜகஸ்தானின் எலினா ரிபாகினா அரையிறுதி சுற்றில் தோல்வி அடைந்தார்.

    வாஷிங்டன்:

    வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற அரையிறுதி சுற்றில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, கனடாவின் லைலா பெர்னாண்டஸ் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய லைலா 6-7 (2-7), 7-6 (7-3), 7-6 (7-3) என்ற செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார். இதனால் ரிபாகினா தொடரில் இருந்து வெளியேறினார்.

    • ஏர்லைன்ஸ் விமானம் AA-3023, புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தது.
    • 173 பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

    அமெரிக்காவில் டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை 07:49 மணிக்கு மியாமிக்கு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் AA-3023, புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தது.

    அப்போது தரையிறங்கும் கியர் பழுதடைந்ததால் டயர் தீப்பிடித்தது. இதனால் ஓடுபாதையில் அடர்த்தியான புகை கிளம்பியது.

    எச்சரிக்கையான விமானி உடனடியாக விமானத்தை நிறுத்தினார். விமானத்தில் இருந்த 173 பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

    இந்தச் சம்பவத்தில் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  

    • காலநிலை மாற்றம் என்பது உலகம் சந்திக்கும் முக்கிய பிரச்சினைகளுள் ஒன்று.
    • இதனால் வெப்ப அலை என பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

    வாஷிங்டன்:

    காலநிலை மாற்றம் என்பது உலகம் சந்திக்கும் முக்கிய பிரச்சினைகளுள் ஒன்று. இதனால் பனிப்பாறை உருகி கடல் மட்டம் உயர்தல், வெப்ப அலை என பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. எனவே காலநிலை மாற்றத்தை சமாளிக்க தேவையான நடவடிக்கை எடுக்க உலக நாடுகளை ஐ.நா.சபை வலியுறுத்துகிறது.

    இந்நிலையில், அமெரிக்காவின் டெக்சாஸ், மைனே உள்ளிட்ட மாகாணங்களில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக, வட கரோலினாவில் 113 டிகிரி, வாஷிங்டன் டி.சி.யில் 109 டிகிரி என வெயில் கொளுத்துகிறது. இதனை தாக்குப் பிடிக்க முடியாமல் அங்குள்ள மக்கள் திணறுகின்றனர். இதனால் சுமார் 10 கோடி பேரை கடுமையான வெப்ப அலை தாக்கும் அபாயம் இருப்பதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    வரும் 29-ம் தேதி வரை இந்த வெயில் நீடிக்கும் என்பதால் பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    • வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
    • கஜகஸ்தானின் எலினா ரிபாகினா காலிறுதி சுற்றில் வெற்றி பெற்றார்.

    வாஷிங்டன்:

    வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற காலிறுதி சுற்றில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, போலந்தின் மக்டலேனா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய ரிபாகினா 6-3, 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.

    • வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
    • ரஷியாவின் மெத்வதேவ் காலிறுதி சுற்றில் தோல்வி அடைந்தார்.

    வாஷிங்டன்:

    வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற காலிறுதி சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், பிரான்சின் கொரன்டின் மவுடெட் உடன் மோதினார்.

    இதில் 6-1 என முதல் செட்டை மெத்வதேவ் வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட பிரான்ஸ் வீரர் அடுத்த இரு செட்களை 6-4, 6-4 என செட் கணக்கில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்தார். இதன்மூலம் மெத்வதேவ் இந்தத் தொடரில் இருந்து வெளியேறினார்.

    • வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
    • யூகி பாம்ப்ரி ஜோடி காலிறுதி சுற்றில் தோல்வி அடைந்தது.

    வாஷிங்டன்:

    வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் இரட்டையர் பிரிவில் நடைபெற்ற காலிறுதி சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடி, பிரிட்டனின் நீல் கப்ஸ்கி-ஆஸ்திரேலியாவின் ஜான் பாட்ரிக் ஸ்மித் ஜோடி உடன் மோதியது.

    இதில் யூகி பாம்ப்ரி ஜோடி முதல் செட்டை 6-3 என வென்றது. ஆனால் அடுத்த இரு செட்களை 4-6, 7-10 என்ற செட் கணக்கில் இழந்த யூகி பாம்ப்ரி ஜோடி தொடரில் இருந்து வெளியேறியது.

    • வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் 2வது சுற்றில் தோல்வி அடைந்தார்.

    வாஷிங்டன்:

    வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் நடந்து வருகிறது. இத்தொடர் வரும் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் முன்னாள் உலக நம்பர் 1 வீராங்கனையான அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ்,

    போலந்தின் மக்டலேனா பிரெச் உடன் மோதினார்.

    இதில் ஏழு முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான வீனஸ் வில்லியம்ஸ் 2-6, 2-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    • சுதந்திரத்தைப் பயன்படுத்தும் பல தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்ற நாடுகளில் முதலீடு செய்கின்றன
    • சிலிக்கான் பள்ளத்தாக்கில் ஒரு புதிய தேசபக்தி தேவை.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தொழில்நுட்ப வேலைகளில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், இந்தியர்களை வேலைக்கு அமர்த்தக்கூடாது என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

    வாஷிங்டனில் நடந்த AI மாநாட்டில் பேசிய அவர், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

    "நாம் வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்துவதை நிறுத்த வேண்டும். அமெரிக்கர்களுக்கு வேலை வழங்க வேண்டும். அமெரிக்கர்கள் தாங்கள் கவனிக்கப்படவில்லை என்று உணர்கிறார்கள்.

    நாட்டில் கிடைக்கும் சுதந்திரத்தைப் பயன்படுத்தும் பல தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்ற நாடுகளில் முதலீடு செய்கின்றன. எனது நிர்வாகத்தின் போது இந்தக் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பேன்" என்று தெரிவித்தார்.

    பெரிய அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் சீனாவில் தொழிற்சாலைகளை அமைத்து வருகின்றன. இந்தியர்களை வேலைகளில் அமர்த்துகின்றன என்றும் அவர் விமர்சித்தார்.

    மேலும், "இங்குள்ள மக்களின் வாய்ப்புகளைப் பற்றி நீங்கள் கவலைப்படவில்லை. நீங்கள்  அமெரிக்கர்களை புறக்கணிக்கிறீர்கள்.  AI பந்தயத்தில் வெற்றி பெற, சிலிக்கான் பள்ளத்தாக்கில் ஒரு புதிய தேசபக்தி தேவை. இங்குள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள் நாட்டை முதன்மைப்படுத்த வேண்டும்" என்று அவர் அழைப்பு விடுத்தார்.  

    ×