என் மலர்
அமெரிக்கா
- இன்று நாங்கள் டைம்ஸ் சதுக்கத்தில் சர்வதேச யோகா தினத்தை கொண்டாடி வருகிறோம்.
- இன்று 8,000 முதல் 10,000 பேர் பங்கேற்று எங்களுடன் இணைந்து யோகா செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
நியூயார்க்:
பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்தது.
இதையடுத்து, 2015-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 10-வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் சர்வதேச யோகா தினமான இன்று, இந்திய தூதர் பினயா பிரதான் கூறுகையில், "இன்று நாங்கள் டைம்ஸ் சதுக்கத்தில் சர்வதேச யோகா தினத்தை கொண்டாடி வருகிறோம். எங்களுடன் பல நாடுகளைச் சேர்ந்த யோகா பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்த யோகா நிகழ்ச்சி நாள் முழுவதும் நடைபெறும். இன்று 8,000 முதல் 10,000 பேர் பங்கேற்று எங்களுடன் இணைந்து யோகா செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
இந்த ஆண்டு யோகா தினத்தின் கருப்பொருள் 'யோகா நமக்காகவும் சமூகத்திற்காகவும்' என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இன்று இங்கு நடைபெறும் யோகா நிகழ்ச்சி அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் பங்கேற்கும் அனைவருக்கும் ஊக்கமளிக்கும் என்று கூறினார்.
- டெஸ்லா நிறுவனத்தின் மின்சார வாகன உற்பத்தியில் எலான் மஸ்க் முக்கிய பங்காற்றியுள்ளார்.
- இதற்காக அவர் அதிக சம்பளத்தை எதிர்பார்ப்பதாக குற்றச்சாட்டு உள்ளது.
நியூயார்க்:
உலக பணக்காரர்களில் ஒருவர் எலான் மஸ்க். டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்சின் சி.இ.ஓ.வும், எக்ஸ் தள உரிமையாளருமான இவரது தொலைநோக்கு பார்வை தொழில்நுட்ப துறையில் மாற்றங்களை விதைக்கிறது. ஏஐ, ரோபோடிக்ஸ், சிப் மேக்கிங் போன்றவற்றில் பல்வேறு ஆய்வுகளை செய்துவருகிறார்.
எலக்ட்ரிக் வாகன உற்பத்தியாளரான டெஸ்லா நிறுவனத்தின் முன்னேற்றத்திலும் முக்கிய பங்காற்றியுள்ளார். இதற்காக அவர் அதிக சம்பளத்தை எதிர்பார்ப்பதாக பலரும் குற்றம் சாட்டுகின்றனர். டெஸ்லா நிறுவன பங்குதாரர்களும் இதற்கு உடன்படவில்லை. இதுதொடர்பான வழக்கு டெலோவேர் கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்நிலையில், டெஸ்லா பங்குதாரர்களின் கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில் எலான் மஸ்கிற்கு 56 பில்லியன் டாலர் சம்பளம் அளிப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மஸ்க் ஆனந்தத்தில் திளைத்துள்ளார்.
இதில் கவனிக்கப்பட வேண்டியது என்னவெனில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வருவாயை விட இவரது சம்பளம் அதிகம். 2023-24-ம் நிதியாண்டில் டாடா மோட்டார்ஸின் வருவாய் 52.44 பில்லியன் டாலர் ஆகும்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆண்டு வருவாயை விட அதிக சம்பளம் பெறுவதால் எலான் மஸ்க் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
- தற்போது தனது மகளுக்கு ஒரு சகோதரி வேண்டும் என்ற ஆசையில் 11-வது முறையாக கர்ப்பமாகி இருக்கிறார்.
- தனது மகன்கள் ஒவ்வொருவரும் வருங்காலத்தில் என்னவாக வர வேண்டும் என்ற கனவுகளை அவர்களே தெரிவிக்கும் வகையில் ஒரு வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த 31 வயதான பெண் ஒருவர், ஒரு மகளை பெறுவதற்கான ஆசையில் 9 மகன்களுக்கு தாயாகி உள்ளார். இதுதொடர்பாக அவர் தனது கதையை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
யலன்சியா ரொசாரியோ என்ற பெயர் கொண்ட அந்த பெண்ணுக்கு ஒரு மகள் வேண்டும் என ஆசைப்பட்டார். ஆனால் அவருக்கு அடுத்தடுத்து ஆண் குழந்தைகளே பிறந்தன. ஆனால் மகள் வேண்டும் என்ற ஆசையில் அடுத்தடுத்து 9 முறை கர்ப்பமான அவருக்கு ஒவ்வொரு முறையும் ஆண் குழந்தைகளே பிறந்தது.
இந்நிலையில் 10-வது முறையாக அவர் கர்ப்பமானார். பிரசவத்தின் போது அவர் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார். அதில் அவரது ஆசைப்படியே ரொசாரியோவுக்கு அழகான, ஆரோக்கியமான பெண் குழந்தை பிறந்தது. அதன்பிறகு அவரது ஆசை தீரவில்லை. தற்போது தனது மகளுக்கு ஒரு சகோதரி வேண்டும் என்ற ஆசையில் 11-வது முறையாக கர்ப்பமாகி இருக்கிறார். அதோடு அவர் தனது மகன்கள் ஒவ்வொருவரும் வருங்காலத்தில் என்னவாக வர வேண்டும் என்ற கனவுகளை அவர்களே தெரிவிக்கும் வகையில் ஒரு வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
- 10 முறை கிராமிய விருதை வென்றுள்ளார்.
- கடந்த மார்ச் மாதம் புதிய ஆல்பம் ஒன்றை ரிலீஸ் செய்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மதுபோதையில் கார் ஓட்டியதாக பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் டிம்பர்லேக் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சஃப்போல்க் கவுன்ட்டி மாவட்ட அட்டார்னி அலுவலகம் இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளது.
டிம்பர்லேக் தி சோசியல் நெட்வொர்க் மற்றும் பிரண்ட்ஸ் வித் பெனிபிட்ஸ் போன்ற படங்களில் நடித்துள்ளார். பாடகர்களுக்கு வழங்கப்படும் மிகவும் உயரிய விருதான கிராமிய விருதுகளை 10 முறை வென்றுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் தனது புதிய ஆல்பமான எவ்ரிதிங் ஐ தாட் இட் வாஸ் (Everything I Thought It Was) வெளியிட்டார். இதை பிரபலப்படுத்தும் வகையில் "Forget Tomorrow" என்ற பெயரில் உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
ஜஸ்டின் டிம்பர்லேக் அடுத்த வாரம் சிகாகோவின் யுனைடெட் சென்டர் மற்றும் நியூயார்க்கின் மேடிசன் ஸ்கொயர் கார்டனில் தலா இரண்டு இசை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளார்.
ஜூலை 9-ந்தேதி வடஅமெரிக்காவின் கென்டக்கியில் தனது பயணத்தை முடித்து, மாத இறுதியில் ஐரோப்பியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
- முகாம்களில் தங்களின் துயர நிலையிலும் இறுக்கமான மனதுடன் பாலஸ்தீன மக்கள் கொண்டாடும் பக்ரீத் இது.
- 3 கட்ட பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தத்தை எட்ட முடியும் என்பதை நான் தீவிரமாக நம்புகிறேன்.
உலகம் முழுவதும் இன்று (ஜூன் 17) திங்கட்கிழமை பக்ரீத் பண்டிகை கொண்டாட்டங்கள் கோலாகலமாக தொடங்கியுள்ளது. உலகெங்கிலும் பரந்து விரிந்த அதிக மக்களைக் கொண்ட இரண்டாவது பெரிய மதம் இஸ்லாம் (முதலாவது கிறிஸ்துவம்) ஆகும் . இந்நிலையில் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி தேசியத் தலைவர்களும் உலகத் தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
தற்போது உள்ள உலக நடப்பின்படி இஸ்லாமிய மக்களைக்கொண்ட பாலஸ்தீன நாட்டின்மீது இஸ்ரேல் தொடுத்துள்ள போரில் இதுவரை சுமார் 37,000 மக்கள் பலியாகியுள்ளனர். வெடிகுண்டுகளால் தகர்க்கப்பட்ட மசூதிகளே காஸாவில் மிஞ்சுகின்றன. முகாம்களில் தங்களின் துயர நிலையிலும் இறுக்கமான மனதுடன் பாலஸ்தீன மக்கள் கொண்டாடும் பக்ரீத் இது. தற்காலிகமாக தாக்குதலை இஸ்ரேல் நிறுத்திவைத்துள்ளதால் சற்று ஆசுவாசப்பட அவர்களுக்கு கிடைத்துள்ள நேரம் இது.

அமெரிக்காவில் விரைவில் அதிபர் தேர்தல் வர உள்ளதால் காஸா போர் நிறுத்தத்துக்கு அதிபர் ஜோ பைடன் அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ள நிலையில் இன்று பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு முக்கியத்துவம் வாய்ந்த வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான இந்த போரின் கொடூரங்களை நிறுத்துவதற்கான சரியான மற்றும் சிறந்த வழி இதுதான். ஆயிரக்கணக்கான குழந்தைகளும் அப்பாவி மக்களும் இந்த போரில் கொல்லப்பட்டுள்ளனர். தங்களின் வீடுகளையும் சொந்தங்களையும் இழந்து நிற்கும் அம்மக்களின் வலி மிகவும் ஆழமானது.
3 கட்ட பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தத்தை எட்ட முடியும் என்பதை நான் தீவிரமாக நம்புகிறேன். இதற்கு ஹமாஸும், இஸ்ரேல் அரசும் உடன்பட்டு இந்த வன்முறை வெறியாட்டங்களை நிறுத்த வழிவகை செய்ய வேண்டும். இறைத்தூதர் இப்ராஹிம் கடவுளுக்காக தனது மகனையே தியாகம் செய்ய முன்வந்த இந்த பக்ரீத் திருநாளில் காஸாவில் தற்காலிகமாக நிலவி வரும் அமைதி நிரந்தரமானதாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
- டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது.
- அதன்படி, முதலில் ஆடிய அயர்லாந்து 106 ரன்கள் எடுத்தது.
புளோரிடா:
டி20 உலகக் கோப்பை தொடரின் 36வது லீக் ஆட்டம் புளோரிடாவில் நடைபெறுகிறது. இதில் பாகிஸ்தான், அயர்லாந்து அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 106 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கரீத் டெலானி 31 ரன்கள் எடுத்தார்.
பாகிஸ்தான் சார்பில் ஷாஹின் அப்ரிடி, இமாத் வாசிம் தலா 3 விக்கெட்டும், முகமது அமீர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்குகிறது.
- புனேவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நகைக்கடை பிஎன்ஜி ஜுவல்லர்ஸ்.
- கலிபோர்னியா நகைக்கடையில் 20 பேர் கொண்ட கும்பல் நகைகளை கொள்ளை அடித்தது.
வாஷிங்டன்:
மகாராஷ்டிர மாநிலம் புனேவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது பி.என்.ஜி. ஜூவல்லர்ஸ். இதன் அமெரிக்க கிளை கலிபோர்னியாவில் செயல்பட்டு வருகிறது.
கலிபோர்னியாவில் உள்ள சன்னிவேல் பகுதியில் உள்ள நகைக்கடையில் 20 பேர் கொண்ட கும்பல் திடீரென உள்ளே புகுந்தது. அவர்கள் ஒவ்வொருவரும் அங்கிருந்த பல்வேறு நகைகளை சில நிமிடங்களில் கொள்ளை அடித்துச் சென்றது.
இதுதொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன. கொள்ளை போன நகைகளின் மதிப்பு வெளியாகவில்லை.
விசாரணையில், கொள்ளையர்கள் கடையை தொடர்ந்து நோட்டமிட்டதும், முன்கூட்டியே திட்டமிட்டு இந்த கொள்ளையை அரங்கேற்றியதும் தெரிய வந்துள்ளது.
நகை கொள்ளை தொடர்பாக 5 பேரை கைது செய்துள்ள போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டப்பகலில் நகைக்கடையில் புகுந்து நகைகளைக் கொள்ளை அடித்துச் சென்றது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
This is law & order failure!!
— Nabila Jamal (@nabilajamal_) June 15, 2024
Planned attack on Indian jewellery store PNG in San Francisco
20 masked men in 'smash & grab' robbery looted entire store before fleeing. Only 5 arrested
pic.twitter.com/TdJFV5T9zp
- தனது 53வது வயதில் ரயில் ஓட்டுநராக தனது பணியைத் தொடங்கினார் ஹெலன்
- ஹெலனுக்கு விரைவில் 82 வது பிறந்தநாள் வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
வயது என்பது வெறும் நம்பர் தான் என்பதை நிரூபித்த பலரின் உதாரணங்களை நாம் கேள்விப்பட்டிருப்போம். அந்த வகையில் உலகின் வயதான ரயில் ஓட்டுநர் என்ற பெருமையை அமெரிக்காவைச் சேர்ந்த 81 வயது மூதாட்டி ஒருவர் பெற்று அனைவரையும் வாயடைக்கச் செய்துள்ளார்.

அமெரிக்காவின் பாஸ்டன் நகரத்தில் உள்ள மாசௌசெட்சில் வாழும் ஹெலன் ஆண்டெனுச்சி என்ற 81 வயது மூதாட்டி அந்நகரின் மாசௌசெட்ஸ் போக்குவரத்து நிறுவனத்தின் சார்பில் இயக்கப்படும் ரயிலில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். கடந்த 1995 ஆம் ஆண்டு தனது 53வது வயதில் ரயில் ஓட்டுநராக தனது பணியைத் தொடங்கிய ஹெலன் தற்போதுவரை ஓய்வு ஒழிச்சலின்றி சுறுசுறுப்பான தேனியைப் போல் தனது பணியை தொடர்ந்து செய்து வருகிறார்.
இவரின் சக ஊழியர் கின்னஸ் சாதனைக்கு இவரது பெயரை விண்ணபித்ததை அடுத்து உலகின் மிக வயதான ரயில் ஓட்டுநர் என்று கின்னஸ் சாதனை அங்கீகாரம் பெற்றுள்ளார் ஹெலன். தனக்கு கிடைத்த அங்கீகாரம் குறித்து ஹெலன் பேசுகையில், இந்த ஆரவாரம் எல்லாம் எதற்கு என்று தெரியவில்லை. எனக்கு 5 குழந்தைகள் உள்ளன. எனவே கொஞ்சம் நிம்மதிக்காகவும், அமைதிக்காகவும் வீட்டை விட்டு வெளியே வர இந்த வேலையை செய்யத் தொடங்கினேன். இப்போதைக்கு பணி ஓய்வு பெறும் திட்டம் எதுவும் என்னிடம் இல்லை என்று தெரிவித்துள்ளார். ஹெலனுக்கு விரைவில் 82 வது பிறந்தநாள் வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

- இரு பெண்களும் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் விழுந்தனர்.
- துப்பாக்கி சூடு நடத்திய வாலிபர் கவுரவ் சிங் கில் என்பது தெரியவந்தது.
வாஷிங்டன்:
இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டம் நூர் மஹால் பகுதியை சேர்ந்தவர் ஜஸ்விர் கவுர் (வயது 29). இவர் தனது கணவருடன் அமெரிக்கா வின் நியூஜெர்சி மாகாணத்தில் கார்டரெட் பகுதியில் ரூஸ்வெல்ட் அவென்யூ என்ற இடத்தில் வசித்து வந்தார். ஜஸ்விர் கவுருடன் அவரது உறவுக்கார பெண் ககன்தீப் கவுர் (வயது 20) என்பவரும் தங்கி இருந்தார்.
இந்த நிலையில் ஜஸ்விர் கவுர் வீட்டுக்குள் புகுந்த வாலிபர் ஒருவர், அங்கிருந்த ஜஸ்விர் கவுர், ககன்தீப் கவுரை துப்பாக்கியால் சுட்டார். இதில் இரு பெண்களும் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் விழுந்தனர். உடனே அந்த வாலிபர் தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இரண்டு பெண்களையும் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி ஜஸ்விர் கவுர் உயிரிழந்தார். ககன்தீப் கவுருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே துப்பாக்கி சூடு நடத்திய வாலிபர் கவுரவ் சிங் கில் (வயது 19) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். இவர் பஞ்சாப்பின் நகோதர் நகரை சேர்ந்தவர். அவர் எதற்காக தாக்குதல் நடத்தினார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- இந்திய அணி ஏற்கனவே சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது.
- கனடா 4 ஆட்டத்தில் ஒரு வெற்றி, 2 தோல்வி பெற்று 3 புள்ளிகளுடன் உள்ளது.
புளோரிடா:
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 'ஏ' பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா தான் மோதிய 3 ஆட்டங்களிலும் வென்று சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது.
அயர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா ஆகிய அணிகளை வீழ்த்திய இந்தியா, தனது 4-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் இன்று கனடாவை எதிர்கொள்ள இருந்தது. இப்போட்டி அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள லாடர்ஹில்லில் நடைபெற இருந்தது.
மழை பெய்ததால் மைதானத்தில் ஈரப்பசை அதிகம் இருந்ததால். இதனால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், இந்தியா-கனடா இடையிலான போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதன்மூலம் இந்திய அணி 4 போட்டிகளில் விளையாடி 7 புள்ளிகளுடன் ஏ பிரிவில் முதலிடத்தில் உள்ளது. கனடா 3 புள்ளிகள் பெற்று 3-ம் இடத்தில் உள்ளது.
- ஏ பிரிவில் இந்தியா, அமெரிக்கா அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறின.
- பாகிஸ்தான், கனடா மற்றும் அயர்லாந்து அணிகள் தொடரிலிருந்து வெளியேறின.
நியூயார்க்:
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெறுகிறது. இதில் 4 பிரிவுகளின் கீழ் மொத்தம் 20 அணிகள் மோதுகின்றன.
லீக் சுற்றில் வெற்றி பெறும் அணிகள் அடுத்து நடைபெறும் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பெறும். சூப்பர் 8 சுற்றில் வெற்றி பெறும் அணிகள் அரையிறுதிக்கும், அதில் வெற்றி பெறும் இரு அணிகள் இறுதிப்போட்டிக்கும் முன்னேறும். இதுவரை 32 லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன.

இந்நிலையில், டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றுக்கு இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் தகுதி பெற்றுள்ளன.

ஏ பிரிவில் இருந்து இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறின. பாகிஸ்தான், கனடா மற்றும் அயர்லாந்து அணிகள் தொடரிலிருந்து வெளியேறின.
பி பிரிவில் இருந்து ஆஸ்திரேலியா சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. நமீபியா மற்றும் ஓமன் அணிகள் தொடரிலிருந்து வெளியேறின.
சி பிரிவில் இருந்து ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளன. நியூசிலாந்து, உகாண்டா, பப்புவா நியூ கினியா அணிகள் வெளியேறின.
டி பிரிவில் தென் ஆப்பிரிக்க அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. இலங்கை மற்றும் நேபாளம் அணிகள் வெளியேறின.
- அட்மாஸ்ஃபியர் எனப்படும் ரைட் திடீரென செயல்படாமல் போனதால் அதிர்ச்சி.
- மறு அறிவிப்பு வரும் வரை ரைடு செயல்படாது என அறிவிப்பு.
அமெரிக்காவில் உள்ள ஓரிகானின் மாகாணத்தில் அமைந்துள்ள போர்ட்லேண்ட் நகரத்தில் நூற்றாண்டு பழமையான பொழுதுபோக்கு பூங்கா உள்ளது.
கோடை விடுமுறைக்காக பூங்கா நேற்று முதல் திறக்கப்பட்டது. இங்கு, ஏராளமான மக்கள் வந்து இங்குள்ள ரைடுகளில் தங்களின் நேரத்தை போக்கி வந்தனர்.
இந்நிலையில், AtmosFEAR எனப்படும் ரைடர் ஒன்றில் ஏறிய மக்கள் சுமார் அரை மணி நேரம் தலைகீழாக தொங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அட்மாஸ்ஃபியர் எனப்படும் ரைட் திடீரென செயல்படாமல் போனதால், அதில் இருந்த மக்கள் கீழே இறங்க முடியாமல் தவித்தனர்.
பிறகு, இதுகுறித்து தகவல் தெரியவந்த நிலையில் அவசரகால பணியாளர்கள் ரைடரை சரிசெய்து அதில் இருந்து 28 பேரையும் பத்திரமாக மீட்டனர்.
இதுகுறித்து கேளிக்கை பூங்காவில் உள்ள அதிகாரிகளின் அறிக்கையின்படி, "அவசரகால குழுவினர் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட 25 நிமிடங்களுக்குப் பிறகு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் காயங்கள் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 28 பேருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது" என்றது.
இந்த ரைடு கடந்த 2021ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. மேலும், இதுபோன்ற சம்பவம் இதுவரை இங்கு நடந்ததில்லை என்று பூங்கா தரப்பில் தெரிவித்துள்ளது. மேலும், மறு அறிவிப்பு வரும் வரை ரைடு செயல்படாது என்றும் தெரிவித்தது.
இருப்பினும், ரைடில் தலைகீழாக தொங்கும் மக்களின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.






