என் மலர்tooltip icon

    உலகம்

    • மக்கள் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கிப் போராடினர்.
    • நாணய மதிப்பு வீழ்ச்சி அடைந்ததால் அந்நாட்டின் மத்திய வங்கி கவர்னர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    தெஹ்ரான்:

    ஈரானிய நாணயமான ரியால், அமெரிக்க டாலருக்கு எதிராக மிக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்தது. டிசம்பர் 28 அன்று, ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ரியால் மதிப்பு 1.42 மில்லியனாக வீழ்ந்தது.

    பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வால் ஆத்திரமடைந்த மக்கள் மற்றும் வியாபாரிகள் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கிப் போராடினர். போராட்டக்காரர்களைக் கலைக்கப் போலீசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர். நிலைமை மோசமானதால் மத்திய வங்கி ஆளுநரான முகமது ரெசா ஃபர்சின் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    அமெரிக்காவின் பொருளாதாரத் தடை, பணவீக்கம், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பெட்ரோல் விலை மாற்றம் ஆகியவையே இந்த நெருக்கடிக்கு முக்கியக் காரணங்களாகும்.

    ஒரு வாரத்துக்கும் மேலாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தப் போராட்டத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் சிக்கி 10 பேர் பலியானதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த சிலர் இறந்ததை அடுத்து, போராட்டத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. பல்வேறு மாகாணங்களில் பரவிய போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது.

    • வெனிசுலாவில் பதற்றமான சூழல் நிலவுவதால் அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
    • அதிபர் நிக்கோலஸ் மதுரோ, அவரது மனைவியை அமெரிக்க படைகள் கைதுசெய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

    வாடிகன் சிட்டி:

    வெனிசுலா மீது திடீர் தாக்குதல் நடத்திய அமெரிக்கா, அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை சிறை பிடித்தது. அவர்கள் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

    வெனிசுலாவில் பதற்றமான சூழல் நிலவுவதால் அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அமெரிக்க படைகள் கைது செய்துள்ளது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், ரோம் நகரின் செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் திரண்டிருந்த மக்களிடையே போப் லியோ உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    இந்த இக்கட்டான சூழ்நிலையில் வெனிசுலாவில் அமைதி திரும்பவும், அந்நாட்டின் தன்னாட்சி அதிகாரம் பாதுகாக்கப்பட வேண்டும்.

    புவிசார் அரசியல் நிலைகளைவிட வெனிசுலா மக்களின் நலன் அனைத்தையும் விட மேலானதாக இருக்க வேண்டும்.

    வன்முறையை கைவிட்டு விட்டு நாடு அமைதி மற்றும் நீதியில் பயணிக்க வேண்டும்.

    இந்த நெருக்கடியால் வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள மனிதாபிமான மற்றும் சட்ட ரீதியான பாதிப்புகள் குறித்து கவலை தெரிவித்தார்.

    • கிரீஸ் நாடு முழுவதும் விமான சேவை திடீரென நிறுத்தப்பட்டது.
    • இதனால் அங்குள்ள பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

    ஏதென்ஸ்:

    கீரிஸ் நாட்டில் இருந்து உலகின் பல்வேறு பகுதிகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், கிரீசில் உள்ள விமான போக்குவரத்து தகவல் தொடர்பு மையத்தி ல்ரேடியோ அலைவரிசை அமைப்பில் நேற்று திடீரென கோளாறு ஏற்பட்டது. விமான போக்குவரத்து தொடர்பான தகவல்களைப் பரிமாறுவதில் சிக்கல் ஏற்பட்டது.

    நாடு முழுவதும் இயங்கும் விமான நிலையங்களில் போக்குவரத்து தொடர்பான செயல்பாடுகள் ஸ்தம்பித்தன. இதனால் நாடு முழுதும் நூற்றுக்கணக்கான விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது. விமானசேவை முடங்கியதால் ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களில் சிக்கித் தவித்தனர்.

    பாதுகாப்பு காரணங்களுக்காக விமான நிலைய செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

    ஆனாலும், கிரீஸ் வான்வழியாக செல்லும் சில சர்வதேச விமானங்கள் மட்டும் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டன.

    • மார்க்கெட்டில் பொருட்கள் வாங்கிக் கொண்டு சொந்த ஊர் திரும்பியபோது விபத்து.
    • 25 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 14 பேரை காணவில்லை.

    நைஜீரியாவின் வடகிழக்கு மாநிலமான யோப்பில் பயணிகள் படகு கவிழ்ந்து 25 பேர் பலியான நிலையில், 14 பேரை காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஜிகாவா மாநிலத்தில் உள்ள அதியானி கிராமத்தில் இருந்து புறப்பட்ட படகு, யோப் மாநிலத்தில் உள்ள கார்பிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    படகில் 52 பேர் பயணம் செய்துள்ளனர். இதில் குறைந்தது 25 பயணிகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இது வரை 13 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 25 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மாயமான 14 பேரை தேடும்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது யோப் மாநில அவசரநிலை மேலாண்மை ஏஜென்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

    லீக்கேஜ் காரணமாக படகு நீரில் மூழ்கியதாக ஜிகாவா மாநில போலீசார் தெரிவித்துள்ளனர். விபத்து நடந்த சனிக்கிழமை (நேற்று) மார்க்கெட் நாள். அன்றைய தினம் பொருட்களை வாங்கிய பின்னர், சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். ஓட்டுனர் உயிர் பிழைத்திருந்தால், கவனக்குறைவுக்காக அவர் மீது வழக்கு தொடரப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

    • சிரியாவில் ஐ.எஸ். சிலிப்பர் செல்கள் அடிக்கடி கொடூரமான தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
    • அவர்களை வேட்டையாடும் பணியில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படை செயல்பட்டு வருகிறது.

    சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாத குழு ஆயுதங்கள் பதுக்கி வைத்திருந்த இடங்கள் மீது பிரிட்டிஷ் மற்றும் பிரான்ஸ் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன.

    சிரியாவின் ஹொம்ஸ் மாகாணத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பால்மைரா நகருக்கு சற்றே வடக்குப் பகுதியில் உள்ள மலைப்பகுதிகளில் சுரங்கங்கள் அமைத்து ஐ.எஸ். அமைப்பினர் ஆயுதங்கள் பதுக்கி வைத்துள்ளனர். இந்த இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    சிரியாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஐ.எஸ். பயங்கரவாத குழுவிற்கு எதிராக இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ், அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையுடன் இணைந்து போரிட்டு வருகிறது.

    இங்கிலாந்து ராணுவம் தைபூன் FGR4 என போர் விமானத்தை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் குறித்து சிரியா அரசு கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. ஐ.எஸ்.க்கு எதிரான படையுடன் சிரியா கடந்த வருடம் இணைந்தது.

    சிரியாவில் இருந்து 2019-ல் ஐ.எஸ். ஒழிக்கப்பட்ட போதிலும், ஐ.எஸ். சிலிப்பர் செல்கள் அடிக்கடி சிரியா மற்றும் ஈராக்கில் மோசமான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

    • "மின்னணு தோல்" தொழில்நுட்பம் ரோபோக்களின் எதிர்காலத்தையே மாற்றப்போகிறது.
    • ரோபோக்கள், திசுக்களின் மென்மை மற்றும் அழுத்தத்தைத் துல்லியமாக உணர இது உதவும்.

    மனிதர்களைப் போலவே ரோபோக்களும் வலி மற்றும் உணர்வுகளை உடனடியாக உணர்ந்து எதிர்வினை ஆற்றும் செயற்கைத் தோலை உருவாக்கி ஹாங்காங் நகரப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் அசத்தியுள்ளனர்.

    Neuromorphic E-Skin என்ற தோல் மூலம் உணர்வுகளை உடனுக்குடன் ரோபோக்கள் கண்டறிந்து, தற்காத்துக் கொள்ளும் திறனை பெறுகிறது.

    "மின்னணு தோல்" தொழில்நுட்பம் உலகில் ஒரு மிகப்பெரிய புரட்சியாகப் பார்க்கப்படுகிறது. மனிதர்களைப் போலவே மென்மையான உணர்வுகளை உணரக்கூடிய "மின்னணு தோல்" (Electronic Skin அல்லது E-Skin) தொழில்நுட்பம் ரோபோக்களின் எதிர்காலத்தையே மாற்றப்போகிறது.

    மின்னணு தோல் (E-Skin) என்றால் என்ன என்று பார்க்கலாம்..

    இது மிக மெல்லிய, நெகிழ்வான ஒரு படலம். இதில் ஆயிரக்கணக்கான நுண்ணிய சென்சார்கள் பொருத்தப்பட்டிருக்கும். மனித உடலில் உள்ள நரம்புகள் எப்படி மூளைக்குத் தகவல்களை அனுப்புகிறதோ, அதேபோல இந்த சென்சார்கள் தொடுதல், அழுத்தம் மற்றும் வெப்பநிலையை ரோபோவின் கணினிக்கு அனுப்பும்.

    ஒரு ரோபோ முட்டையை உடைக்காமல் தூக்குவதற்கும், அதே சமயம் ஒரு கனமான இரும்புத் தூணைத் தூக்குவதற்கும் எவ்வளவு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதை இந்த உணர்வுதான் தீர்மானிக்கும்.

    அறுவை சிகிச்சை செய்யும் ரோபோக்கள், திசுக்களின் மென்மை மற்றும் அழுத்தத்தைத் துல்லியமாக உணர இது உதவும்.

    முதியவர்கள் அல்லது நோயாளிகளைப் பராமரிக்கும் ரோபோக்கள், மனிதர்களைக் காயப்படுத்தாமல் மென்மையாகக் கையாள இந்தத் தொழில்நுட்பம் அவசியம்.

    செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தொடு உணர்வு வெறுமனே தொடுதலை உணர்வது மட்டும் போதாது, அது என்ன பொருள் என்பதைப் புரிந்துகொள்ள AI பயன்படுத்தப்படுகிறது.

    உதாரணமாக, ஒரு ரோபோ கண்ணை மூடிக்கொண்டு ஒரு பையைத் தொட்டாலும், அதன் மென்மை மற்றும் வடிவத்தை வைத்து அது "ஆப்பிள்" அல்லது "டென்னிஸ் பந்து" என்பதைக் கண்டறியும் திறன் தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது.

    சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் (NUS), அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளனர்.

    சில ஆய்வுகளில், மனித நரம்புகளை விட வேகமாகச் செயல்படும் "செயற்கை நரம்பு மண்டலங்கள்" உருவாக்கப்பட்டுள்ளன.

    இந்தத் தொழில்நுட்பம் முழுமையடையும் போது, ரோபோக்கள் வெறும் இயந்திரங்களாக இல்லாமல், மனிதர்களுக்கு இன்னும் நெருக்கமான, பாதுகாப்பான உதவியாளர்களாக மாறும்.

    • ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் யூதர்கள் நிகழ்ச்சீ நடந்து கொண்டிருந்தது.
    • கடற்கரையில் 2 மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

    ஆஸ்திரேலியாவின் நியுசவுத் வேல்ஸ் மாகாணத்தின் சிட்னி நகரில் போண்டி என்ற இடத்தில் உள்ள கடற்கரை மிக பிரபலமானது.

    அந்தக் கடற்கரையில் கடந்த மாதம் யூதர்கள் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் அப்பாவி பொதுமக்கள் 15 பேர் பலியாகினர்.

    இதற்கிடையே, துப்பாக்கிச்சூடு நடத்தியவர் மீது பாய்ந்து துப்பாக்கியை பிடுங்கிய அல் அகமதுக்கு பாராட்டுகள் குவிந்தன. இந்நிலையில், போண்டி கடற்கரை துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு சிட்னி டெஸ்ட் போட்டியில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

    ஆஷஸ் தொடரின் 5-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் போண்டி கடற்கரை துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி, முன்களப் பணியாளர்களுக்கு ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வீரர்கள் நன்றி தெரிவித்தனர்.

    தாக்குதல் நடத்தியவர்களிடம் இருந்து துப்பாக்கியைப் பறித்து குண்டடிப்பட்ட அகமது அல் அகமதை நேரில் அழைத்து கவுரவிக்கப்பட்டார்.

    • போக்குவரத்து போலீசார் மீது துப்பாக்கிச்சூடு.
    • காவல் நிலையத்திற்கு சென்ற போலீசார் மீதும் துப்பாக்கிச்சூடு.

    பாகிஸ்தானில் உள்ள பக்துன்க்வா மாகாணத்தில் இரண்டு வெவ்வேறு இடத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 4 போலீசார் கொல்லப்பட்டனர். லக்கி மார்வாத் மற்றும் பன்னு மாவட்டங்களில் இந்த துப்பாச்சிசூடு சம்பங்கள் நடைபெற்றுள்ளது.

    மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத மர்மக் கும்பல், சரை நவுரங் நகரில் போக்குவரத்து போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 3 போலீசார் கொல்லப்பட்டனர்.

    மந்தான் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒரு போலீசார் கொல்லப்பட்டனர். போலீசார் வீட்டில் இருந்து காவல் நிலையத்தில் ரிப்போர்ட் அளிக்க செல்லும்போது, துப்பாக்கி ஏந்திய நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

    • ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் மீது ஒருதலைப்பட்சமாகத் தாக்குதல் நடத்துவது என்பது போர் நடவடிக்கை.
    • நியூயார்க் நகரில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான வெனிசுலா நாட்டு மக்களையும் இது நேரடியாகப் பாதிக்கும்.

    வெனிசுலா மீது நேற்று திடீர் தாக்குதல் நடத்திய அமெரிக்கா, அந்நாட்டு அதிபர் நிகொலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை சிறைபிடித்தது. அவர்கள் அமெரிக்காவுக்கு நாடு கடதப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

    மேலும் வெனிசுலா எண்ணெய் இருப்பை இனி அமெரிக்க நிறுவனங்களே நிர்வகிக்கும் என்றும், அமெரிக்காவுக்கு சாதகமான அரசு அமையும் வரை அங்கு அமெரிக்க ராணுவம் தங்கியிருக்கும் என்றும் டிரம்ப் அறிவித்தார்.

    இந்த தாக்குதலில் பொதுமக்கள் ராணுவ வீரர்கள் உட்பட 40 பேர் உயிரிழந்ததாக வெனிசுலா அதிகாரிகள் தெரிவித்தனர்.

    வெனிசுலாவில் பதற்றமான சூழல் நிலவுவதால் அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அந்நாட்டின் துணை அதிபரை, தற்காலிக அதிபராக நியமித்து வெனிசுலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இந்த தாக்குதலுக்கு ரஷியா, ஈரான், சீனா உள்ளிட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

    மதுரோவும் அவரது மனைவியும் நியூ யார்க் அழைத்து வரப்பட்டுள்ளதாக டிரம்ப் அறிவித்திருந்தார். மேலும், அவர்கள் மீது பயங்கரவாத போதைப்பொருள்  சட்டத்தின் கீழ் வழக்குபதியப்பட்டு விசாரணை நடைபெறும் என்று அமெரிக்கா தனது அறிக்கையில் தெரிவித்தது. மதுரோ நியூ யார்க் சிறையில் தற்போது அடைக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில் நியூயார்க் மேயர் ஜோஹ்ரான் மாம்தானி இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக தான் டிரம்ப் இடம் நேரடியாக தொடர்புகொண்டு தான் பேசியதாக மாம்தானி பேட்டியில் தெரிவித்தார்.

    அவர் கூறியதாவது, ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் மீது ஒருதலைப்பட்சமாகத் தாக்குதல் நடத்துவது என்பது போர் நடவடிக்கை. இது அமெரிக்காவின் கூட்டாட்சி சட்டங்களுக்கும், சர்வதேச சட்டங்களுக்கும் எதிரானது.

    இந்தத் தாக்குதல் வெளிநாடுகளில் மட்டும் தாக்கத்தை ஏற்படுத்தாது, நியூயார்க் நகரில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான வெனிசுலா நாட்டு மக்களையும் இது நேரடியாகப் பாதிக்கும்.

    அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே தனது நிர்வாகத்தின் முக்கிய நோக்கம் " என்று தெரிவித்தார்.  

    • அமெரிக்க மக்கள் இதை விரும்பவில்லை, அவர்கள் பொய்களை கேட்டு அவர்கள் சோர்வடைந்துள்ளனர்.
    • எண்ணெய் வளத்தை கைப்பற்றுவதற்கான போரில் பாதிக்கப்போவது என்னவோ அமெரிக்க மக்கள் தான்.

    வெனிசுலா மீதான டிரம்பின் நடவடிக்கை அமெரிக்காவுக்கு பாதுகாப்பானதல்ல என முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். மேலும், இதுதொடர்பாக கமலா ஹாரிஸ் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    மதுரோ ஒரு மிருகத்தனமான, சட்டவிரோத சர்வாதிகாரி என்பது இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது மற்றும் விவேகமற்றது என்ற உண்மையை மாற்றாது. இந்த படத்தை நாங்கள் முன்பே பார்த்திருக்கிறோம்.

    எண்ணெய் வளத்தை கைப்பற்றுவதற்கான போரில் பாதிக்கப்போவது என்னவோ அமெரிக்க மக்கள் தான். எண்ணெய் மற்றும் தனிப்பட்ட அதிகாரத்திற்காக டிரம்ப் அரசு இந்த நடவடிக்கையைத் தொடர்ந்துள்ளது.

    அமெரிக்க மக்கள் இதை விரும்பவில்லை, அவர்கள் பொய்களை கேட்டு அவர்கள் சோர்வடைந்துள்ளனர்.

    இது போதைப்பொருள் அல்லது ஜனநாயகம் பற்றியது அல்ல. இது எண்ணெய் மற்றும் ஒரு பிராந்திய பலசாலியாகக் காட்டிக்கொள்ளும் டொனால்ட் டிரம்பின் விருப்பத்தை கொண்டது. அவருக்கு இதில் அக்கறை இருந்திருந்தால், தண்டனை பெற்ற போதைப்பொருள் கடத்தல்காரரை அவர் மன்னித்திருக்க மாட்டார் அல்லது மதுரோவின் கூட்டாளிகளுடன் ஒப்பந்தங்களைத் தொடரும்போது, வெனிசுலாவின் சட்டப்பூர்வமான எதிர்க்கட்சியை ஓரங்கட்டியிருக்க மாட்டார் என்று கூறியுள்ளார்.

    • தலைநகர் காரகாஸ்-இல் உள்ள முக்கிய ராணுவ நிலைகள் மீது அமெரிக்கா, ஆபரேஷன் சதர்ன் ஸ்பியர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது.
    • வெனிசுலாவில் பதற்றமான சூழல் நிலவுவதால் அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

    வெனிசுலா தலைநகர் காரகாஸ்-இல் உள்ள முக்கிய ராணுவ நிலைகள் மீது அமெரிக்கா, ஆபரேஷன் சதர்ன் ஸ்பியர் என்ற பெயரில் நேற்று அதிகாலை வான்வழித் தாக்குதல் நடத்தியது.

    இதில், அந்நாட்டு அதிபர் நிகொலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அமெரிக்க ராணுவம் சிறைபிடித்தது. அவர்கள் அமெரிக்காவுக்கு நாடு கடதப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

    மேலும் வெனிசுலா எண்ணெய் இருப்பை இனி அமெரிக்க நிறுவனங்களே நிர்வகிக்கும் என்றும், அமெரிக்காவுக்கு சாதகமான அரசு அமையும் வரை அங்கு அமெரிக்க ராணுவம் தங்கியிருக்கும் என்றும் டிரம்ப் அறிவித்தார்.

    வெனிசுலாவில் பதற்றமான சூழல் நிலவுவதால் அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. வெனிசுலா இடைக்கால அதிபராக துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ்-ஐ நியமிக்க வெனிசுலா உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இந்நிலையில் நேற்று வெனிசுலாவில் அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உடபட 40 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலோர் மதுரோவின் பாதுகாப்பிற்கு இருந்த வெனிசுலா ராணுவத்தைச் சேர்ந்தவர்கள்.

    அதிபர் மாளிகை மற்றும் ராணுவ முகாம்களுக்கு அருகில் வசித்து வந்த பொதுமக்களும் இந்தத் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

    அமெரிக்க தாக்குதலில் பல கட்டிடங்கள் தரைமட்டமானதாகவும், ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    முன்னதாக டொனால்ட் டிரம்ப் பேசுகையில் இந்த ராணுவ நடவடிக்கையில் ஒரு அமெரிக்க வீரர் கூட காயமடையவில்லை என்றும், முழு தாக்குதலையும் டிவி ஷோ போல தான் நேரலையில் பார்த்ததாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • வெனிசுலாவில் பதற்றமான சூழல் நிலவுவதால் அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
    • வெனிசுலாவுக்கு எதிரான டிரம்பின் நடவடிக்கைக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது.

    வெனிசுலா மீது நேற்று திடீர் தாக்குதல் நடத்திய அமெரிக்கா, அந்நாட்டு அதிபர் நிகொலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை சிறைபிடித்தது. அவர்கள் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

    மேலும் வெனிசுலா எண்ணெய் இருப்பை இனி அமெரிக்க நிறுவனங்களே நிர்வகிக்கும் என்றும், அமெரிக்காவுக்கு சாதகமான அரசு அமையும் வரை அங்கு அமெரிக்க ராணுவம் தங்கியிருக்கும் என்றும் டிரம்ப் அறிவித்தார்.

    வெனிசுலாவில் பதற்றமான சூழல் நிலவுவதால் அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வெனிசுலாவுக்கு எதிரான டிரம்பின் நடவடிக்கை, சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என சீனா, ரஷியா, பிரேசில், கியூபா உள்ளிட்ட நாடுகளுடன் ஐ.நா. சபையும் கண்டனத்தை தெரிவித்தது.

    இந்த நிலையில், வெனிசுலாவின் இடைக்கால அதிபராக தற்போதைய துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்கை நியமித்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    முன்னதாக, வெனிசுலா துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் அரசுத் தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், "வெனிசுலாவின் ஒரே அதிபர் நிக்கோலஸ் மதுரோ மட்டும்தான். அவரை உடனடியாகவும், நிபந்தனையின்றியும் அமெரிக்கா விடுதலை செய்ய வேண்டும். எங்கள் நாட்டு மக்களைப் பாதுகாக்க அனைத்து பாதுகாப்புப் படைகளையும் நாங்கள் தயார் நிலையில் வைத்துள்ளோம் என்றார். 

    ×