என் மலர்tooltip icon

    உலகம்

    • வெனிசுலா எண்ணெய் இருப்பை இனி அமெரிக்க நிறுவனங்களே நிர்வகிக்கும் என்றும், அமெரிக்காவுக்கு சாதகமான அரசு அமையும் வரை அங்கு அமெரிக்க ராணுவம் தங்கியிருக்கும் என்றும் டிரம்ப் அறிவித்தார்.
    • ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிராக வெனிசுலா மக்கள் கிளர்ந்தெழுவார்கள்.

    வெனிசுலா மீது நேற்று திடீர் தாக்குதல் நடத்திய அமெரிக்கா, அந்நாட்டு அதிபர் நிகொலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை சிறைபிடித்தது. அவர்கள் அமெரிக்காவுக்கு நாடு கடதப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

    மேலும் வெனிசுலா எண்ணெய் இருப்பை இனி அமெரிக்க நிறுவனங்களே நிர்வகிக்கும் என்றும், அமெரிக்காவுக்கு சாதகமான அரசு அமையும் வரை அங்கு அமெரிக்க ராணுவம் தங்கியிருக்கும் என்றும் டிரம்ப் அறிவித்தார்.

    வெனிசுலாவில் பதற்றமான சூழல் நிலவுவதால் அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் வெனிசுலா துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் அரசுத் தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

    அவர் பேசியதாவது, "வெனிசுலாவின் ஒரே அதிபர் நிக்கோலஸ் மதுரோ மட்டும்தான். அவரை உடனடியாகவும், நிபந்தனையின்றியும் அமெரிக்கா விடுதலை செய்ய வேண்டும்.

    அதிபர் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் எங்கே இருக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது. அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா என்பதற்கான ஆதாரத்தை டிரம்ப் அரசாங்கம் உடனடியாக வழங்க வேண்டும்.

    வெனிசுலா மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் ஒரு கொடூரமான செயல். இது சர்வதேச சட்டங்களை முற்றிலும் மீறிய அராஜகம்.

    எங்கள் நாட்டு மக்களைப் பாதுகாக்க அனைத்து பாதுகாப்புப் படைகளையும் நாங்கள் தயார் நிலையில் வைத்துள்ளோம்.

    ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிராக வெனிசுலா மக்கள் கிளர்ந்தெழுவார்கள்.

    அதிபர் மதுரோவை பிடித்துச் சென்றதன் மூலம் எங்களைப் பணிய வைக்கலாம் என்று அமெரிக்கா நினைத்தால் அது ஒருபோதும் நடக்காது. நாங்கள் இறுதிவரை போராடுவோம்" என்று தெரிவித்தார்.

    துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் இப்போது தற்காலிகமாகப் பொறுப்புகளைக் கவனித்து வருகிறார்.

    இருப்பினும், மதுரோவை மீண்டும் கொண்டு வரும் வரை தான் அதிபராகப் பொறுப்பேற்கப் போவதில்லை என்றும், மதுரோவே நாட்டின் சட்டப்பூர்வமான தலைவர் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.  

    • அதிபர் மதுரோ கைது செய்யப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்புதான், சீனாவின் சிறப்புத் தூதரை அவர் சந்தித்துப் பேசினார்.
    • வெனிசுலாவின் எண்ணெய் ஏற்றுமதியில் சீனா தோராயமாக 76–80% வாங்குகிறது.

    அமெரிக்க படைகளால் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், வெனிசுலா மீதான அமெரிக்காவின் தாக்குதலைக் கண்டு சீனா மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளது. இதனை கடுமையாக கண்டிக்கிறோம்.

    ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் மீது வெளிப்படையாக ராணுவத்தைப் பயன்படுத்துவதும், அந்த நாட்டு அதிபரை அராஜகமாகப் பிடிப்பதும் சர்வதேச சட்டங்களை படுமோசமாக மீறும் செயல்.

    அமெரிக்காவின் இந்தச் செயல் ஐநா சபையின் அடிப்படை விதிகள் மற்றும் கொள்கைகளை மீறுவதாக உள்ளது.

    மற்ற நாடுகளின் பாதுகாப்பையும், இறையாண்மையையும் அமெரிக்கா மதிப்பதில்லை என்பதையே இது காட்டுகிறது.

    அமெரிக்காவின் இத்தகையநடவடிக்கைகள், லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பிராந்தியத்தின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது என்று சீனா சாடியுள்ளது.

    அதிபர் மதுரோ கைது செய்யப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்புதான், சீனாவின் சிறப்புத் தூதரை அவர் சந்தித்துப் பேசினார். அந்தச் சந்திப்பில் சீனா-வெனிசுலா இடையிலான உறவு குறித்து விவாதிக்கப்பட்டது.

    இந்தச் சூழலில் அமெரிக்காவின் இந்த அதிரடித் தாக்குதல் சீனாவிற்குப் பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

    எண்ணெய்:

    உலகின் மிகப்பெரிய எண்ணெய் இருப்பு வெனிசுலாவில் உள்ளது. இது தோராயமாக 303 பில்லியன் பீப்பாய்கள் எண்ணெயைக் கொண்டுள்ளது. இது சவுதி அரேபியா மற்றும் அமெரிக்காவை விட அதிகம்.

    வெனிசுலாவின் எண்ணெய் ஏற்றுமதியில் சீனா தோராயமாக 76–80% வாங்குகிறது. நவம்பர் 2025 இல், சீனா ஒரு நாளைக்கு வெனிசுலாவிலிருந்து 613,000 பீப்பாய்கள் கச்சா எண்ணெயை வாங்கியது.

    வெனிசுலாவின் கனரக கச்சா எண்ணெய் சீன சுத்திகரிப்பு நிலையங்களுக்கு மிகவும் மதிப்புமிக்கது மற்றும் குறைந்த விலையில் கிடைக்கிறது.

    வெனிசுலா சீனாவிடம் பல ஆண்டுகளாக வாங்கிய சுமார் 60 பில்லியன் டாலர் கடனை செலுத்த வேண்டியுள்ளது. இந்தக் கடன் எண்ணெய்க்கு ஈடாக திருப்பிச் செலுத்தப்படுகிறது. எனவே வெனிசுலாவின் ஸ்திரத்தன்மை சீனாவிற்கு மிகவும் முக்கியமானது.

    இனி வெனிசுலாவின் எண்ணெய் இருப்பை அமெரிக்காவே நிர்வகிக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.  

    • தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து அங்கு வன்முறை தீவிரமடைந்தது.
    • வங்கதேசத்தில் 15 நாளில் 4 இந்துக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

    டாக்கா:

    வங்கதேசத்தில் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து வன்முறைகள் தீவிரமடைந்துள்ளன. மாணவர் போராட்டத்தை நடத்திய இந்திய எதிர்ப்பாளர் ஓஸ்மான் ஹாதி மற்றும் இந்து இளைஞர் தீபு சந்திர தாஸ் ஆகியோர் அடித்துக் கொல்லப்பட்டனர்.

    இதையடுத்து, ராஜ்பாரி மாவட்டத்தைச் சேர்ந்தஅம்ரித் மண்டல் (29), என்ற இந்து இளைஞரை, அப்பகுதியைச் சேர்ந்த கும்பல் கடுமையாக தாக்கியது. இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார். ஆடை தொழிற்சாலை ஒன்றில் பிஜேந்திர பிஸ்வாஸ் (42) என்ற இந்து தொழிலாளி சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

    இதற்கிடையே, ஷரியத்பூர் மாவட்டத்தில் மேலும் கோகோன் சந்திர தாஸ் ஒரு கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டார். அவர் தெருவில் உருண்டு புரண்டபடி வலியில் அலறி துடித்தார். அருகில் இருந்த குளத்தில் அவர் குதித்தார். உடல்நிலை மோசமான காரணத்தால் டாக்கா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

    இந்நிலையில், மூன்று நாள் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சந்திர தாஸ் உயிரிழந்தார்.

    • வெனிசுலா அதிபர், அவரது மனைவி ஆகியோர் நாடு கடத்தப்பட்டனர்.
    • வெனிசுலா நாட்டை அமெரிக்கா நிர்வாகம் செய்யும் என டிரம்ப் அறிவித்தார்.

    கராகஸ்:

    வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப் பொருள் கடத்தப்படுவதாகவும், இதற்கு வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ உடந்தையாக இருப்பதாகவும் அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி வந்தார்.

    வெனிசுலா தலைநகர் கராகஸ் நகரில் நேற்று சுமார் 7 இடங்களில் அமெரிக்க ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதனால் அங்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே, வெனிசுலா அதிபரும், அவரது மனைவியும் நாடு கடத்தப்பட்டதாகவும், வெனிசுலா நாட்டை அமெரிக்கா நிர்வாகம் செய்யும் என அதிபர் டிரம்ப் அறிவித்தார். அமெரிக்காவின் இந்த அடாவடி நடவடிக்கையால் சர்வதேச அரசியலில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    இது சுதந்திரத்திற்கான நேரம். அதிபர் நிக்கோலஸ் மதுரோ, வெனிசுலா மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடூரமான குற்றங்களுக்கு சர்வதேச நீதியை எதிர்கொள்வார்.

    பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண அவர் மறுத்ததால் அமெரிக்கா அரசு சட்டத்தை அமல்படுத்துவதற்கான தனது வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளது. நமது நாட்டில் இறையாண்மை கொண்ட அரசு ஆட்சி செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது.

    நாங்கள் ஒழுங்கைக் கொண்டுவரப் போகிறோம், அரசியல் கைதிகளை விடுவிப்போம். ஒரு விதிவிலக்கான நாட்டைக் கட்டியெழுப்புவோம், எங்கள் குழந்தைகளை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வருவோம். நாங்கள் பல ஆண்டுகளாகப் போராடி வருகிறோம், எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து இருக்கிறோம். நாம் அனைவரும் விழிப்புடனும் இருப்போம். வெனிசுலா சுதந்திரமாகிவிடும் என தெரிவித்துள்ளார்.

    • புதிய அரசு அமையும்வரை வெனிசுலா நாட்டை அமெரிக்கா நிர்வாகம் செய்யும் என்றார் டிரம்ப் .
    • ரஷியா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் இந்த நடவடிக்கையை கண்டித்துள்ளன.

    வாஷிங்டன்:

    வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப் பொருள் கடத்தப்படுவதாகவும், இதற்கு வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ உடந்தையாக இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி வந்தார்.

    இதற்கிடையே, வெனிசுலா தலைநகர் கராகஸ் நகரில் இன்று அதிகாலை 2 மணியளவில் சுமார் 7 இடங்களில் அமெரிக்க ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதனால் வெனிசுலாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாவும் அறிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, வெனிசுலா அதிபரும், அவரது மனைவியும் நாடு கடத்தப்பட்டதாக அதிபர் டிரம்ப் அதிரடியாக அறிவித்தார். வெனிசுலா நாட்டை அமெரிக்கா நிர்வாகம் செய்யும் என டிரம்ப் அறிவித்துள்ளார்.

    அமெரிக்காவின் இந்த அடாவடி நடவடிக்கையால் சர்வதேச அரசியலில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ரஷியா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் இந்த நடவடிக்கையை கண்டித்துள்ளன.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கைது செய்யப்பட்ட வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் படத்தைப் பகிர்ந்திருந்தார். அந்த புகைப்படத்தில் வெனிசுலா அதிபர் கண்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • இந்த ராணுவ நடவடிக்கையில் ஒரு அமெரிக்க வீரர் கூட கொல்லப்படவில்லை.
    • அவர்கள் எங்களது வலிமையைக் கண்டு பயந்துவிட்டார்கள்.

    வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதை பொருள் கடத்தப்படுவதாகவும், இதற்கு வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ உடந்தையாக இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி வந்தார்.

    இந்நிலையில் இன்று (ஜனவரி 3) அமெரிக்க ராணுவத்தினர் வெனிசுலாவின் தலைநகரான கராகஸ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரிய அளவிலான வான்வழித் தாக்குதல் நடத்தினர்.

    கராகஸில் உள்ள முக்கிய ராணுவ தளமான பியூர்டே தியுனா, லா கார்லோட்டா விமான தளம் மற்றும் லா குவைரா துறைமுகம் உள்ளிட்ட பல ராணுவ மற்றும் உள்கட்டமைப்பு இடங்கள் தாக்கப்பட்டன.

    இதன்பின் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில், மதுரோ மற்றும் அவரின் மனைவி அமெரிக்க படையினரால் சிறைபிடிக்கப்ட்டு நாடுகடத்தப்பட்டதாக அறிவித்தார்.

    அமெரிக்காவில் மதுராவுக்கு எதிராக எதிராக போதை பொருள் பயங்கரவாத சதி திட்ட வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இருவரும் அமேரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டு அங்கு அவர்கள் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று தெரிகிறது.

    அமெரிக்காவின் இந்த அடாவடி நடவடிக்கையால் சர்வதேச அரசியலில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ரஷியா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் இந்த நடவடிக்கையை கண்டித்துள்ளன.

    இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து டிரம்ப் Fox news சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் இனி வெனிசுலாவின் எதிர்காலத்தை அமெரிக்காவே தீர்மானிக்கும், அங்குள்ள எண்ணெய் இருப்பை அமெரிக்க நிறுவனங்கள் நிர்வகிக்கும், அங்கு அமெரிக்காவுக்கு சாதகமான அரசு அமையும் வரை அமெரிக்க ராணுவம் அங்கு இருக்கும் என்று தெரிவித்தார்.

    மேலும் இந்த தாக்குதல் குறித்து பேசிய அவர், "இந்த ராணுவ நடவடிக்கையில் ஒரு அமெரிக்க வீரர் கூட கொல்லப்படவில்லை. யாரும் காயமடையவில்லை. இது ஒரு மிகப்பெரிய வெற்றி.

    இந்த முழு நடவடிக்கையும் ஒரு டிவி ஷோ போல இருந்தது. அவ்வளவு துல்லியமாக இது நடந்தது.

    நாங்கள் இந்தத் திட்டத்தை மிகச் சிறப்பாகச் செயல்படுத்தினோம். நான் இங்கே அமர்ந்து கொண்டு இவை அனைத்தையும் ஒரு திரையில் பார்த்துக் கொண்டிருந்தேன். மிகவும் அற்புதமாக இருந்தது.

    அங்கே பெரிய அளவில் எதிர்ப்பு எதுவும் இருக்கவில்லை. அவர்கள் எங்களது வலிமையைக் கண்டு பயந்துவிட்டார்கள். எந்த ஒரு உயிரிழப்பும் இன்றி அந்த சர்வாதிகாரியை நாங்கள் பிடித்துவிட்டோம்.

    இது அமெரிக்க ராணுவ வரலாற்றில் ஒரு மிகச்சிறந்த தருணம். நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நினைத்தோமோ, அதை மிகச் சரியாகச் செய்து முடித்துவிட்டோம்" என்று தெரிவித்தார்.   

    • டிரம்ப்பை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்த மத்தியஸ்தம் செய்ததாக சீனா தெரிவித்தது.
    • சீனா தெரிவித்த கருத்தை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது.

    கடந்த மே மாதம் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான மோதலை வர்த்தக காரணம் காட்டி நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி வருகிறார்.

    அதை திட்டவட்டமாக மறுத்த இந்தியா, பாகிஸ்தான் கெஞ்சியதால்தான் தாக்குதலை நிறுத்தினோம் என்றும் இதில் 3-ம் தரப்பு தலையீடு இல்லை என்றும் தெரிவித்தது. ஆனால் போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் மத்தியஸ்தம் செய்தார் என்று பாகிஸ்தான் தெரிவித்தது.

    இதற்கிடையே டிரம்ப்பை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்த மத்தியஸ்தம் செய்ததாக சீனா தெரிவித்தது.

    இதுதொடர்பாக சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ கூறும்போது, பல நாடுகள் இடையேயான மோதலை தீர்க்க நாங்கள் கவனம் செலுத்தினோம். வடக்கு மியான்மர், ஈரான் அணுசக்திப் பிரச்சினை மற்றும் இந்தியா-பாகிஸ் தான் இடையேயான மோதல், பாலஸ்தீனம்- இஸ்ரேல் பிரச்சினைகள், கம்போடியா-தாய்லாந்துக்கு இடையிலான மோதல் ஆகியவற்றில் மத்தியஸ்தம் செய்தோம் என்றார்.

    சீனா தெரிவித்த கருத்தை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்த நிலையில் போரை நிறுத்த சீனா மத்தியஸ்தம் செய்ததாக பாகிஸ்தான் தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தாகீர் அந்த்ராபி கூறியதாவது:-

    இந்தியாவுடனான மோதலின்போது சீன தலைவர்கள் பாகிஸ்தான் தலைமையுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தனர். மே 6 முதல் 10-ம் தேதி வரையிலான நாட்களில் அல்லது அதற்கு முன்னரும், பின்னரும் இந்திய தலைமையுடனும் சீன தலைவர்கள் சில தொடர்புகளை ஏற்படுத்தினர்.

    மிகவும் நேர்மறையான தூதரக பரிமாற்றங்களால் வகைப்படுத்தப்பட்ட அந்தத் தொடர்புகள் பதற்றத்தைத் தணிப்பதிலும், பிராந்தி யத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பைக் கொண்டுவர முயற்சிப்பதிலும் பங்களித்தன என்று நான் நினைக்கிறேன்.

    எனவே மத்தியஸ்தம் குறித்த சீனாவின் விளக்கம் சரியானது என்பதில் உறுதி யாக இருக்கிறேன். இது மோதலைத் தீர்ப்பதில் மேற்கொள்ளப்பட்ட பல சர்வதேச முயற்சிகளின் சிறப்பம்சமாக இருந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாங்கள் எங்களது சொத்துக்களைத் திரும்பப் பெறுகிறோம். மதுரோ தனது குற்றங்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது.
    • எங்களது மேற்பார்வையில் அங்கே ஜனநாயகம் நிலைநாட்டப்படும்.

    வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதை பொருள் கடத்தப்படுவதாகவும், இதற்கு வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ உடந்தையாக இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி வந்தார்.

    இந்நிலையில் இன்று (ஜனவரி 3) அமெரிக்க ராணுவத்தினர் வெனிசுலாவின் தலைநகரான கராகஸ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரிய அளவிலான வான்வழித் தாக்குதல் நடத்தினர்.

    கராகஸில் உள்ள முக்கிய ராணுவ தளமான பியூர்டே தியுனா, லா கார்லோட்டா விமான தளம் மற்றும் லா குவைரா துறைமுகம் உள்ளிட்ட பல ராணுவ மற்றும் உள்கட்டமைப்பு இடங்கள் தாக்கப்பட்டன.

    இதன்பின் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில், மதுரோ மற்றும் அவரின் மனைவி அமெரிக்க படையினரால் சிறைபிடிக்கப்ட்டு நாடுகடத்தப்பட்டதாக அறிவித்தார்.

    அமெரிக்காவில்  மதுராவுக்கு எதிராக எதிராக போதை பொருள் பயங்கரவாத சதி திட்ட வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இருவரும் அமேரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டு அங்கு அவர்கள் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று தெரிகிறது. 

    அமெரிக்காவின் இந்த அடாவடி நடவடிக்கையால் சர்வதேச அரசியலில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ரஷியா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் இந்த நடவடிக்கையை கண்டித்துள்ளன. 

    இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து டிரம்ப் Fox news சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

    அதில் அவர் கூறியதாவது,    

    "வெனிசுலா இப்போது சுதந்திரமான நாடு. ஒரு பயங்கரமான சர்வாதிகாரி பிடிபட்டுள்ளார். மதுரோவும் அவருடைய மனைவியும் இப்போது ஒரு கப்பலில் நியூயார்க் நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அமெரிக்காவின் பிடியில் உள்ளனர்.  

    வெனிசுலாவில் உள்ள எண்ணெய் விவகாரத்தில் அமெரிக்கா இனி மிகவும் வலுவாக ஈடுபடும். அந்த எண்ணெய் வளங்கள் உண்மையில் எங்களுடையவை. அமெரிக்க நிறுவனங்கள் அவற்றை உருவாக்கின, ஆனால் அந்த நிறுவனங்கள் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டன.

    அவர்கள் எங்களது எண்ணெய் உரிமைகளைப் பறித்தார்கள். நாம் அங்கிருந்து வெளியேறும்போது அந்த எண்ணெயை அப்படியே விட்டு வந்திருக்கக்கூடாது. நாமே அதை எடுத்திருக்க வேண்டும்.

    இப்போது நாம் அந்த எண்ணெயை மீட்கப்போகிறோம். வெனிசுலாவிடம் உலகின் மிகப்பெரிய எண்ணெய் இருப்பு உள்ளது. இனி அதை அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் நிர்வகிக்கும்.

    இதன் மூலம் நமது நாட்டு மக்களுக்குக் குறைந்த விலையில் பெட்ரோல் கிடைக்கும், மேலும் வெனிசுலா மக்களும் வறுமையிலிருந்து மீட்கப்படுவார்கள்.

    இது ஒரு புதிய விடியல். நாங்கள் எங்களது சொத்துக்களைத் திரும்பப் பெறுகிறோம். மதுரோ தனது குற்றங்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. வெனிசுலா மக்கள் இனி நிம்மதியாக வாழலாம்.

    இனி வெனிசுலாவின் எதிர்காலத்தை அமெரிக்காதான் தீர்மானிக்கும். அங்கு யார் அதிகாரத்தில் இருக்க வேண்டும், அந்த நாடு எப்படி இயங்க வேண்டும் என்பதை நாங்களே முடிவு செய்வோம்.

    வெனிசுலாவில் ஒரு இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கான பணிகளை நாங்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டோம். அது அமெரிக்காவிற்கு உண்மையாக இருக்கும் ஒரு அரசாங்கமாக அமையும்.

    அமெரிக்காவிற்கு எதிரான சக்திகள் அல்லது நமது கொள்கைகளுக்குப் பொருந்தாத நபர்கள் புதிய ஆட்சியில் இருக்க மாட்டார்கள். வெனிசுலா இனி ஒருபோதும் அமெரிக்காவின் எதிரியாக இருக்க முடியாது.

    எங்களது மேற்பார்வையில் அங்கே ஜனநாயகம் நிலைநாட்டப்படும். ஆனால், அதற்கு முன்னதாக அந்த நாட்டின் பொருளாதாரம் மற்றும் எண்ணெய் வளங்களைச் சீரமைக்க வேண்டியது அவசியம். அதை அமெரிக்க நிபுணர்கள் செய்வார்கள்.

    ஒரு நிலையான சூழல் ஏற்படும் வரை அமெரிக்க ராணுவம் அங்கேயே தங்கியிருக்கும். வெனிசுலாவை ஒரு பாதுகாப்பான மற்றும் அமெரிக்காவிற்குச் சாதகமான நாடாக மாற்றுவதே எங்களது இலக்கு" என்று தெரிவித்தார்.   

    20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தே, அமெரிக்காவின் பெரிய எண்ணெய் நிறுவனங்கள்தான் வெனிசுலாவின் எண்ணெய் கிணறுகளை உருவாக்கி, சுத்திகரிப்பு நிலையங்களைக் கட்டி, தொழிலை நடத்தி வந்தன.

    2007ல் அப்போதைய அதிபர் ஹியூகோ சாவேஸ், அமெரிக்க நிறுவனங்களின் வசமிருந்த எண்ணெய் கிணறுகளை அரசுடைமை ஆக்கினார்.

    வெனிசுலாவின் எண்ணெய் வெனிசுலாவுக்கே சொந்தம், அமெரிக்காவிற்கு இதில் பங்கு இல்லை என்று கூறி அமெரிக்க நிறுவனங்களை வெளியேற்றினார்.  இந்நிலையில் அமெரிக்கா மீண்டும் தனது வல்லதிகாலத்தை வெனிசுலாவில் நிறுவும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.  

    • நாடு முழுவதும் நடந்து வரும் போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
    • அமெரிக்க அரசு களத்தில் இறங்கி பதிலடி கொடுக்க தயாராக உள்ளது என டிரம்ப் எச்சரிக்கை.

    ஈரானில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு, பணவீக்கம் ஆகியவற்றால் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    நாடு முழுவதும் நடந்து வரும் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. பல இடங்களில் போராட்டக்காரர்கள்- போலீசார் இடையே மோதல் நடந்தது. இதில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இந்த மோதலில் 8 பேர் பலியானார்கள்.

    இதற்கிடையே அமைதியான போராட்டங்களுக்கு எதிராக ஈரான் அரசு வன்முறையை பயன்படுத்தினால், அமெரிக்க அரசு களத்தில் இறங்கி பதிலடி கொடுக்க தயாராக உள்ளது என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.

    இந்த நிலையில் டிரம்ப்பின் மிரட்டலுக்கு ஈரான் பதிலடி கொடுத்துள்ளது. இது தொடர்பாக ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியின் ஆலோ சகர் அலி ஷாம்கானி கூறுகையில்," ஈரானின் பாதுகாப்பு என்பது யாராலும் தாண்டக்கூடாத சிவப்பு கோடு. இதை மீறி வெளிநாட்டு சக்திகள் உள்நாட்டு விஷயத்தில், பாதுகாப்பில் தலையிட நினைத்தால் அவர்களின் கை துண்டிக்கப்படும். ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் காசாவில் அமெரிக்காவின் தலையீடு என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தியது என்பதை ஈரான் மக்கள் நன்கு அறிவார்கள்" என்றார்.

    ஈரானின் தேசிய பாது காப்பு கவுன்சில் செயலாளர் அலி லாரிஜானி கூறும் போது,"ஈரானில் போராட் டங்களை அமெரிக்காவும், இஸ்ரேலும் தூண்டி விடு கின்றன. எங்களின் உள்நாட்டுப் பிரச்சினையில் அமெரிக்கா தலையிடுவது முழுப் பிராந்தியத்திலும் குழப்பத்திற்கும் அமெரிக்க நலன்களின் அழிவிற்கும் வழிவகுக்கும் என்பதை டிரம்ப் தெரிந்துகொள்ள வேண்டும்" என்றார்.

    அதேபோல் ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாப் கூறும்போது, அனைத்து அமெரிக்க ராணுவ தளங்களும் படைகளும் சட்ட பூர்வமான இலக்குகளாக மாறும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

    இதற்கிடையே ஈரானின் ஐ.நா. தூதர் அமீர் சயீத் இரவானி, ஐ.நா. பொதுச் செயலாளர் மற்றும் பாதுகாப்பு சபைத் தலைவருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் ஈரானில் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு மத்தியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்துள்ள சட்ட விரோத அச்சுறுத்தல்களை ஐ.நா. சபை கண்டிக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளார். அந்த அறிக்கைகள் ஐ.நா. சாசனம் மற்றும் சர்வதேச சட்டத்தின் கடுமையான மீறல்" என்றும் கூறி உள்ளார்.

    அந்தக் கடிதத்தில், அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், ஈரான் தற்காப்பு உரிமையை உறுதியாக பயன்படுத்தும் என்று கூறி உள்ளதாகத் தெரிகிறது.

    • எங்களிடம் அங்கே நிறைய எண்ணெய் இருந்தது. அவர்கள் எங்கள் நிறுவனங்களை அங்கிருந்து விரட்டியடித்தார்கள்.
    • இது வெறும் எச்சரிக்கை மட்டுமல்ல, நாங்கள் சொன்னதைச் செய்வோம்.

    வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதை பொருள் கடத்தப்படுவதாகவும், இதற்கு வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ உடந்தையாக இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி வந்தார்.

    இந்நிலையில் இன்று (ஜனவரி 3) அமெரிக்க ராணுவத்தினர் வெனிசுலாவின் தலைநகரான கராகஸ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரிய அளவிலான வான்வழித் தாக்குதல் நடத்தினர்.

    கராகஸில் உள்ள முக்கிய ராணுவ தளமான பியூர்டே தியுனா, லா கார்லோட்டா விமான தளம் மற்றும் லா குவைரா துறைமுகம் உள்ளிட்ட பல ராணுவ மற்றும் உள்கட்டமைப்பு இடங்கள் தாக்கப்பட்டன.

    இதன்பின் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில், மதுரோ மற்றும் அவரின் மனைவி அமெரிக்க படையினரால் சிறைபிடிக்கப்ட்டு நாடுகடத்தப்பட்டதாக அறிவித்தார்.

    அமெரிக்காவின் இந்த அடாவடி நடவடிக்கையால் சர்வதேச அரசியலில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இது வெனிசுலாவின் எண்ணெய் வளத்தின் மீது ஆதிக்கம் செலுத்த அமெரிக்காவின் நடவடிக்கை என்றும் கருத்து நிலவுகிறது.

    20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தே, அமெரிக்காவின் பெரிய எண்ணெய் நிறுவனங்கள்தான் வெனிசுலாவின் எண்ணெய் கிணறுகளை உருவாக்கி, சுத்திகரிப்பு நிலையங்களைக் கட்டி, தொழிலை நடத்தி வந்தன.

    2007ல் அப்போதைய அதிபர் ஹியூகோ சாவேஸ், அமெரிக்க நிறுவனங்களின் வசமிருந்த எண்ணெய் கிணறுகளை அரசுடைமை ஆக்கினார். வெனிசுலாவின் எண்ணெய் வெனிசுலாவுக்கே சொந்தம், அமெரிக்காவிற்கு இதில் பங்கு இல்லை என்று கூறி அமெரிக்க நிறுவனங்களை வெளியேற்றினார்.

    இந்நிலையில் வெனிசுலா எண்ணெய் வளங்கள் குறித்து டிரம்ப்  கடந்த மாதம் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில் பேசும் டிரம்ப், " வெனிசுலா ஒரு அழகான நாடு. அது மிகவும் வளமான நாடு. ஆனால், இப்போது அது ஒரு தவறான நபரால் (நிக்கோலஸ் மதுரோவால்) ஆளப்படுகிறது. அவர் அந்த நாட்டைச் சீரழித்துக்கொண்டிருக்கிறார்.

    அவர்கள் எங்கள்(அமெரிக்க நிறுவனங்களின்) எண்ணெய் உரிமைகளைப் பறித்தார்கள். எங்களிடம் அங்கே நிறைய எண்ணெய் இருந்தது. அவர்கள் எங்கள் நிறுவனங்களை அங்கிருந்து விரட்டியடித்தார்கள்.

    நாம் அங்கே எதையும் விட்டு வந்திருக்கக் கூடாது, அந்த எண்ணெயை நாமே எடுத்திருக்க வேண்டும். நாங்கள் அவற்றை இப்போது திரும்பப் பெற விரும்புகிறோம். இது வெறும் எச்சரிக்கை மட்டுமல்ல, நாங்கள் சொன்னதைச் செய்வோம்." என்று டிரம்ப் பேசியுள்ளார். 

    • மதுரோ மற்றும் அவரது மனைவி சிறை பிடிக்கப்பட்டதாக டிரம்ப் அறிவித்தார்.
    • வெனிசுலாவில் தற்போது தேசிய அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

    வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதை பொருள் கடத்தப்படுவதாகவும், இதற்கு வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ உடந்தையாக இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி வந்தார்.

    இதையடுத்து வெனிசுலா படகுகள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தி வந்தது. வெனிசுலாவை சுற்றி கரீபியன் கடல்பகுதியில் அமெரிக்கா தனது படைகளை குவித்தது.

    வெனிசுலா அதிபர் பதவியில் இருந்து மதுரோ வெளியேற வேண்டும் என்று டிரம்ப் நேரடியாக எச்சரிக்கை விடுத்தார்.

    இந்நிலையில் இன்று (ஜனவரி 3) அமெரிக்க ராணுவத்தினர் வெனிசுலாவின் தலைநகரான கராகஸ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரிய அளவிலான வான்வழித் தாக்குதல் நடத்தினர்.

    கராகஸில் உள்ள முக்கிய ராணுவ தளமான பியூர்டே தியுனா, லா கார்லோட்டா விமான தளம் மற்றும் லா குவைரா துறைமுகம் உள்ளிட்ட பல ராணுவ மற்றும் உள்கட்டமைப்பு இடங்கள் தாக்கப்பட்டன.

    இதன்பின், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பில், "அமெரிக்கா, வெனிசுலா மற்றும் அதன் தலைவர் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மீது ஒரு பெரிய அளவிலான தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

    அதிபர் மதுரோவும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டு, நாட்டிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை அமெரிக்க சட்ட அமலாக்கத் துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது" என்று தெரிவித்தார்.

    மதுரோ மீது அமெரிக்காவில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றவியல் வழக்குகள் உள்ளதால் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்று தெரிகிறது.

    இந்நிலையில் வெனிசுலா மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு ரஷியா, ஈரான், மற்றும் ஐரோப்பிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

    ரஷிய வெளியுறவு அமைச்சகம் இந்தத் தாக்குதலை வெனிசுலா மீதான ஆயுதமேந்திய ஆக்கிரமிப்பு என்று கண்டித்துள்ளது. இது சர்வதேச சட்டங்களை மீறும் செயல் என்றும் தங்களின் அரசியல் சித்தாந்தத்திற்காக அமெரிக்கா இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

    வெனிசுலாவின் நெருங்கிய நட்பு நாடான ஈரான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இந்தத் தாக்குதல் வெனிசுலாவின் இறையாண்மையையும் அதன் பிராந்திய ஒருமைப்பாட்டையும் அப்பட்டமாக மீறும் செயல் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தை அமெரிக்கா மீறியுள்ளது என தெரிவித்துள்ளது.

    இந்தச் சூழலை பெரும் கவலையுடன் கவனித்து வருவதாகவும், நிலைமையை ஆராய அவசரக் குழுவைக் கூட்டியுள்ளதாகவும் ஜெர்மனி வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

     இப்பிரச்சினைக்கு அமைதி வழியில் தீர்வு காண மத்தியஸ்தம் செய்ய தயாராக உள்ளதாக ஸ்பெயின் அரசு ஸ்பெயின் அரசு அறிவித்துள்ளது.

    மேலும் கொலம்பியா, கியூபா உள்ளிட்ட நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

    இதற்கிடையே, வெனிசுலாவில் தற்போது தேசிய அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.   

    • அதிபர் மதுரோவும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டு, நாட்டிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
    • இந்த நடவடிக்கை அமெரிக்க சட்ட அமலாக்கத் துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது.

    வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதை பொருள் கடத்தப்படுவதாகவும், இதற்கு வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ உடந்தையாக இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி வந்தார்.

    இதையடுத்து வெனிசுலா படகுகள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தி வந்தது. வெனிசுலாவை சுற்றி கரீபியன் கடல்பகுதியில் அமெரிக்கா தனது படைகளை குவித்தது.

    வெனிசுலா அதிபர் பதவியில் இருந்து மதுரோ வெளியேற வேண்டும் என்று டிரம்ப் நேரடியாக எச்சரிக்கை விடுத்தார்.

    மேலும் வெனிசுலாவில் தரைவழித் தாக்குதல் நடத்தப்படலாம் என்று டிரம்ப் கூறி இருந்தார்.

    இந்நிலையில் வெனிசுலா தலைநகர் கராகசின் பல பகுதிகளில் இன்று அதிகாலை பலத்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தன.

    குண்டுகள் வெடித்ததில் அங்கு தீ பிழம்பு ஏற்பட்டு கரும்புகை எழும்பியது. மேலும் தலைநகரின் பல இடங்களில் விமானங்கள் தாழ்வாக பறந்து சென்றன.

    வெடிப்பு சத்தங்களை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறினர். தலைநகர் கராகசில் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுராவும் அவரது மனைவி சிலியா புளோரஸ்-உம் சிறை பிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

    டிரம்ப் தனக்கு சொந்தமான ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அமெரிக்கா, வெனிசுலா மற்றும் அதன் தலைவர் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மீது ஒரு பெரிய அளவிலான தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

    அதிபர் மதுரோவும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டு, நாட்டிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை அமெரிக்க சட்ட அமலாக்கத் துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது.

    கூடுதல் விவரங்கள் பின்னர் வெளியிடப்படும். இன்று காலை 11 மணிக்கு, மார்-ஏ-லாகோவில் ஒரு செய்தியாளர் சந்திப்பு நடைபெறும்" என்று தெரிவித்துள்ளார்.

    அமெரிக்காவின் இந்த அடாவடி நடவடிக்கையால் சர்வதேச அரசியலில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. வெனிசுலாவில் எண்ணெய் வளங்கள் அதிகம் உள்ளது. அங்கு எண்ணெய் தேசியமயமாக்கப்பட்டுள்ளது. அதை எடுக்கும் தொழிலை தனியார் மயமாக்காமல் அந்நாட்டு இடதுசாரி அரசே எடுத்து நடத்தி வருகிறது.

    இதனால் போதைப்பொருளை காரணம் காட்டி வெனிசுலா எண்ணெய் வளங்களை தனியாருக்கு திறக்க அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் ஒரு சாரார் கருதுகின்றனர். 

    வெனிசுலா எதிர்கட்சித் தலைவர் மரியாவுக்கு 2025 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டதும் அதை அவர் டிரம்ப்க்கு சமர்ப்பிப்பதாக கூறியிருந்ததும்  குறிப்பிடத்தக்கது. 

    ×