என் மலர்
உலகம்

நாடு கடத்தப்பட்ட வெனிசுலா அதிபர்: நோபல் பரிசு வென்ற மரியா கொரினா சொன்னது இதுதான்
- வெனிசுலா அதிபர், அவரது மனைவி ஆகியோர் நாடு கடத்தப்பட்டனர்.
- வெனிசுலா நாட்டை அமெரிக்கா நிர்வாகம் செய்யும் என டிரம்ப் அறிவித்தார்.
கராகஸ்:
வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப் பொருள் கடத்தப்படுவதாகவும், இதற்கு வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ உடந்தையாக இருப்பதாகவும் அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி வந்தார்.
வெனிசுலா தலைநகர் கராகஸ் நகரில் நேற்று சுமார் 7 இடங்களில் அமெரிக்க ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதனால் அங்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, வெனிசுலா அதிபரும், அவரது மனைவியும் நாடு கடத்தப்பட்டதாகவும், வெனிசுலா நாட்டை அமெரிக்கா நிர்வாகம் செய்யும் என அதிபர் டிரம்ப் அறிவித்தார். அமெரிக்காவின் இந்த அடாவடி நடவடிக்கையால் சர்வதேச அரசியலில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
இது சுதந்திரத்திற்கான நேரம். அதிபர் நிக்கோலஸ் மதுரோ, வெனிசுலா மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடூரமான குற்றங்களுக்கு சர்வதேச நீதியை எதிர்கொள்வார்.
பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண அவர் மறுத்ததால் அமெரிக்கா அரசு சட்டத்தை அமல்படுத்துவதற்கான தனது வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளது. நமது நாட்டில் இறையாண்மை கொண்ட அரசு ஆட்சி செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது.
நாங்கள் ஒழுங்கைக் கொண்டுவரப் போகிறோம், அரசியல் கைதிகளை விடுவிப்போம். ஒரு விதிவிலக்கான நாட்டைக் கட்டியெழுப்புவோம், எங்கள் குழந்தைகளை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வருவோம். நாங்கள் பல ஆண்டுகளாகப் போராடி வருகிறோம், எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து இருக்கிறோம். நாம் அனைவரும் விழிப்புடனும் இருப்போம். வெனிசுலா சுதந்திரமாகிவிடும் என தெரிவித்துள்ளார்.






