என் மலர்tooltip icon

    உலகம்

    நியூ யார்க் சிறையில் அடைக்கப்பட்ட வெனிசுலா அதிபர் மதுரோ - டிரம்புக்கு மேயர் மம்தானி நேரடி எதிர்ப்பு
    X

    நியூ யார்க் சிறையில் அடைக்கப்பட்ட வெனிசுலா அதிபர் மதுரோ - டிரம்புக்கு மேயர் மம்தானி நேரடி எதிர்ப்பு

    • ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் மீது ஒருதலைப்பட்சமாகத் தாக்குதல் நடத்துவது என்பது போர் நடவடிக்கை.
    • நியூயார்க் நகரில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான வெனிசுலா நாட்டு மக்களையும் இது நேரடியாகப் பாதிக்கும்.

    வெனிசுலா மீது நேற்று திடீர் தாக்குதல் நடத்திய அமெரிக்கா, அந்நாட்டு அதிபர் நிகொலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை சிறைபிடித்தது. அவர்கள் அமெரிக்காவுக்கு நாடு கடதப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

    மேலும் வெனிசுலா எண்ணெய் இருப்பை இனி அமெரிக்க நிறுவனங்களே நிர்வகிக்கும் என்றும், அமெரிக்காவுக்கு சாதகமான அரசு அமையும் வரை அங்கு அமெரிக்க ராணுவம் தங்கியிருக்கும் என்றும் டிரம்ப் அறிவித்தார்.

    இந்த தாக்குதலில் பொதுமக்கள் ராணுவ வீரர்கள் உட்பட 40 பேர் உயிரிழந்ததாக வெனிசுலா அதிகாரிகள் தெரிவித்தனர்.

    வெனிசுலாவில் பதற்றமான சூழல் நிலவுவதால் அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அந்நாட்டின் துணை அதிபரை, தற்காலிக அதிபராக நியமித்து வெனிசுலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இந்த தாக்குதலுக்கு ரஷியா, ஈரான், சீனா உள்ளிட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

    மதுரோவும் அவரது மனைவியும் நியூ யார்க் அழைத்து வரப்பட்டுள்ளதாக டிரம்ப் அறிவித்திருந்தார். மேலும், அவர்கள் மீது பயங்கரவாத போதைப்பொருள் சட்டத்தின் கீழ் வழக்குபதியப்பட்டு விசாரணை நடைபெறும் என்று அமெரிக்கா தனது அறிக்கையில் தெரிவித்தது. மதுரோ நியூ யார்க் சிறையில் தற்போது அடைக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில் நியூயார்க் மேயர் ஜோஹ்ரான் மாம்தானி இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக தான் டிரம்ப் இடம் நேரடியாக தொடர்புகொண்டு தான் பேசியதாக மாம்தானி பேட்டியில் தெரிவித்தார்.

    அவர் கூறியதாவது, ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் மீது ஒருதலைப்பட்சமாகத் தாக்குதல் நடத்துவது என்பது போர் நடவடிக்கை. இது அமெரிக்காவின் கூட்டாட்சி சட்டங்களுக்கும், சர்வதேச சட்டங்களுக்கும் எதிரானது.

    இந்தத் தாக்குதல் வெளிநாடுகளில் மட்டும் தாக்கத்தை ஏற்படுத்தாது, நியூயார்க் நகரில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான வெனிசுலா நாட்டு மக்களையும் இது நேரடியாகப் பாதிக்கும்.

    அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே தனது நிர்வாகத்தின் முக்கிய நோக்கம் " என்று தெரிவித்தார்.

    Next Story
    ×