என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • தமிழில் விக்ரம் பிரபு நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான படம் வாகா.
    • கடந்த 15 நாட்களில் 4 முறை அவர் துபாய் சென்று வந்துள்ளார்.

    தமிழில் விக்ரம் பிரபு நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான படம் வாகா. இதில் கதாநாயகியாக கன்னட நடிகை ரன்யா ராவ் (31) நடித்திருந்தார். இவர் தற்போது தங்கக்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

    பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் நடிகை ரன்யா ராவ் சுமார் 14.8 கிலோ தங்கத்துடன் பிடிபட்டதாக கூறப்படுகிறது.

    நேற்று இரவு துபாயில் இருந்து பெங்களூரு வந்திறங்கிய அவர் உடலில் அதிகபடியான நகைகளை அணித்திருந்ததை கண்டு சந்தேகமடைந்த வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து அவரது உடைமைகளை அதிகாரிகள் சோதனை நடத்தியதில் தங்ககட்டிகள் இருப்பது கண்டரியப்பட்டது. கடந்த 15 நாட்களில் 4 முறை அவர் துபாய் சென்று வந்துள்ளார்.

    இதனை கண்காணித்த அதிகாரிகள் இந்த முறை அவர் வருவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பே விமான நிலையத்தில் காத்திருந்து அவரை மடக்கிப்பிடித்து சோதனை செய்து நகைகளை கைப்பற்றினர்.

    வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும்போது அவர் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக தங்கநகை, தங்க பிஸ்கட்டை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதனைத்தொடர்ந்து நடிகை ரன்யா ராவிடம் இருந்த நகை, தங்கக்கட்டி என்று மொத்தம் 14.80 கிலோ மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. நடிகை ரன்யா ராவை கைது செய்து வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

    கடத்தலின் பின்னணியில் இன்னும் வேறு பல நபர்கள் இருக்கலாம் என்ற அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். ஐ.பி.எஸ். அதிகாரியான ரன்யா ராவின் தந்தை கர்நாடகாவில் ஏ.டி.ஜி.பி.யாக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. 

    • இந்திய அணி வெற்றி பெற 265 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா.
    • பொறுப்புடன் ஆடிய விராட் கோலி அரை சதம் கடந்து அசத்தினார்.

    புதுடெல்லி:

    9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

    துபாயில் நடைபெறும் முதல் அரையிறுதியில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வருகின்றன. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 264 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கி ஆடி வருகிறது.

    இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபியில் விராட் கோலி 46-வது ரன்னை கடக்கும்போது சாம்பியன்ஸ் டிராபியில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.

    இதில் ஷிகர் தவான் 701 ரன்கள் எடுத்து முதலிடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் விடுதலை செய்ய வலியுறுத்தி போராட்டம்.
    • மார்ச் 21-ஆம் தேதி அனைத்து கட்சிக்கும் அழைப்பு விடுத்து ரெயில் மறியல் போராட்டம் நடத்த திட்டம்.

    இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் அருகே தங்கச்சி மடத்தில் கடந்த 5 நாட்களாக மீனவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் போராட்டத்தை தங்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளனர்.

    மேலும், மார்ச் 21-ஆம் தேதி அனைத்து கட்சிக்கும் அழைப்பு விடுத்து ரெயில் மறியல் போராட்டம் நடத்த மீனவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

    • ஜெய் நடிப்பில் சமீபத்தில் வெளியானது பேபி அண்ட் பேபி திரைப்படம் .
    • ஜெய் அடுத்ததாக அறிமுக இயக்குனரான பாபு விஜய் இயக்கும் திரைப்படத்தில் நடிக்கிறார்.

    ஜெய் நடிப்பில் சமீபத்தில் வெளியானது பேபி அண்ட் பேபி திரைப்படம் . இப்படத்தை பிரதாப் இயக்கினார். ஜெய் உடன் இப்படத்தில் யோகி பாபு, சத்யராஜ், பிரக்யா, மற்றும் பலர் நடித்தனர். திரைப்படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.

    இந்நிலையில் ஜெய் அடுத்ததாக அறிமுக இயக்குனரான பாபு விஜய் இயக்கும் திரைப்படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தை பாபு விஜய் BV Frames நிறுவனத்தின் கீழ் தயாரிக்கவுள்ளது.

    விஜய் பாபு இதற்குமுன் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கிய சர்கார் மற்றும் தர்பார் ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணி ஆற்றியது குறிப்பிடத்தக்கது. இப்படம் ஒரு ரொமாண்டிக் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது.

    யோகி பாபு, கருடா ராம், ஸ்ரீமன் மற்றும் ஆதித்யா கதிர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் சென்னை, கொடைக்கானல், நெல்லூர் அதன் சுற்று வட்டார பகுதிகளில் படமாக்கபடவுள்ளது. இதனை குறித்த மேலும் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 2023 ஆம் ஆண்டு வெளியான பிரபல இந்தி வெப் சீரிஸானா லஸ்ட் ஸ்டோரீஸ் 2 இல் தம்மனா நடித்திருந்தார்.
    • கடைசியாக தம்மனா மகா கும்பமேளாவில் புனித நீராடியது குறிப்பிடத்தக்கது.

    தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் தமன்னா. இவர் கடந்த சில வருடங்களாக இந்தி சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். 2023 ஆம் ஆண்டு வெளியான பிரபல இந்தி வெப் சீரிஸான லஸ்ட் ஸ்டோரீஸ் 2 இல் தமன்னா நடித்திருந்தார்.

    இதில் உடன் நடித்த இந்தி நடிகர் விஜய் வர்மாவுடம் தமன்னா காதல் வயப்பட்டார். நியூ இயர் சமயத்தில் இருவரும் கோவாவில் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலானதை தொடர்ந்து அவர்களது உறவு வெளிச்சத்துக்கு வந்தது.

     

    அதன்பின்னர் வெளிப்படையாக பல நிகழ்ச்சிகளில் சேர்ந்தே வளம் வந்தனர். இடையில், அவர்களின் திருமண திட்டங்கள் பற்றிய செய்திகளும் வெளிவந்தன. ஆனால் இருவரும் சில வாரங்களுக்கு முன்பு பிரிந்துவிட்டதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

    பிரபல இந்தி சினிமா இதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், தமன்னாவும் விஜய்யும் சில வாரங்களுக்கு முன்பு  பிரிந்துவிட்டனர் என்று சினிமா வட்டாரம் கூறியதாக தெரிவித்துள்ளது.

    ஆனால் அவர்கள் நல்ல நண்பர்களாகவே இருப்பார்கள். இருவரும் தங்கள் வேலையில் கவனம் செலுத்துவதோடு, அடுத்த படங்களுக்காக கடினமாக உழைக்கிறார்கள் என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இருவரும் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை டெலிட் செய்ததாக கூறப்படுகிறது. கடைசியாக தம்மனா மகா கும்பமேளாவில் புனித நீராடியது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்திய அணி வெற்றிபெற 265 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா.
    • இந்திய அணி முதல் 16 ஓவரில் 82 ரன்களை எடுத்துள்ளது.

    துபாய்:

    சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி துபாயில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 264 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் கேப்டன் ஸ்மித் 73 ரன்னிலும், அலெக்ஸ் கேரி 61 ரன்னிலும் அவுட்டாகினர்.

    இந்தியா சார்பில் ஷமி 3 விக்கெட்டும், ஜடேஜா, வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டும், அக்சர் படேல், பாண்ட்யா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, சுப்மன் கில் இறங்கினர். ரோகித் சர்மா அதிரடியாக ஆடினார்.

    அணியின் எண்ணிக்கை 30 ஆக இருந்தபோது சுப்மன் கில் 8 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து ரோகித் சர்மா 28 ரன்னில் வெளியேறினார்.

    விராட் கோலியுடன் ஷ்ரேயாஸ் அய்யர் இணைந்து பொறுப்புடன் ஆடினார்.

    இந்திய அணி 16 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 82 ரன்களை எடுத்துள்ளது.

    • பல்கலைக்கழகங்களுக்கான நிதி அதிகரிப்பு குறித்த வாக்கெடுப்பு இன்று நடைபெற இருந்தது.
    • ஆளுங்கட்சி உறுப்பினரான ஜாஸ்மினா ஒப்ராடோவிக் என்பவருக்கு பக்கவாதம் ஏற்பட்டது.

    செர்பியா நாட்டு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கண்ணீர் குண்டுகள், புகைகுண்டுகளை வீசியதால் 3 எம்பிக்கள் காயமடைந்தனர்.

    இன்று (மார்ச் 04) கூடிய மக்களவை கூட்டத்தின்போது சேர்பியன் ப்ராக்ரசிவ் கட்சி தலைமயிலான ஆளும் கூட்டணி (SNS) யை எதிர்த்து எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.

    பல்கலைக்கழகங்களுக்கான நிதி அதிகரிப்பு குறித்த வாக்கெடுப்பு இன்று நடைபெற இருந்தது. ஆனால் இந்த அவை சட்டவிரோதமானது என்றும் அந்நாட்டு பிரதமர் மிலோஸ் உசெவிகின் ராஜினாமாவை முதலில் உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.

    ஒரு கட்டத்தில் எதிர் கட்சி எம்பிக்கள் சிலர் தங்களது இருக்கைகளை விட்டு இறங்கி மக்களவை சபாநாயகரை நோக்கி ஓடினர். அவர்களுக்கும் அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த காவலர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இதற்கிடையே மற்ற சில எதிர்கட்சி உறுப்பினர்கள் கருப்பு மற்றும் இளஞ்சிவப்பு நிற புகைக்குண்டுகளை மக்களவைக்குள் வீசி, அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் சுமார் 3 எம்பிக்கள் காயமடைந்துள்ளனர் என்றும் ஆளுங்கட்சி உறுப்பினரான ஜாஸ்மினா ஒப்ராடோவிக் என்பவருக்கு பக்கவாதம் ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் சபாநாயகர் உறுதிப்படுத்தியுள்ளார்.

    கடந்த 4 மாதங்களுக்கு முன் ரெயில் நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து 15 பேர் பலியான விபத்தின் பின்னணியில் உள்ள ஊழலை எதிர்த்து மக்கள் போராட்டம் வெடித்தது.

    இதன் தொடர்ச்சியாக கடந்த ஜனவரி மாதம் அந்நாட்டு பிரதமர் உசெவிக் தனது பதவியை ராஜிநாமா செய்தார். ஆனால் அவரது ராஜிநாமா மக்களவையில் உறுதி செய்யப்படாமல் மற்ற வேலைகளில் ஈடுபட்டதினால் எதிர் கட்சியினர் தற்போது அமளியில் ஈடுபட்டுள்ளனர்.

    • ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • உதயநிதி ஸ்டாலின் நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் ஒருங்கிணைப்பில் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கும் விழா மற்றும் இஃப்தார் (நோன்பு திறக்கும்) நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். விழாவில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். மேலும், ஏழை, எளிய மக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கினார்.

    இந்த விழாவில் மா. சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, தயாநிதி மாறன், கலந்து கொண்டனர்.

    • பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.
    • இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மார்ச் 16-ம் தேதி நடக்கிறது.

    லாகூர்:

    பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மார்ச் 16-ம் தேதி நடைபெறுகிறது.

    இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் பங்கேற்குன் பாகிஸ்தான் அணி இன்று தேர்வு செய்யப்பட்டது. இதில் கேப்டன் முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

    பாகிஸ்தான் அணி கேப்டனாக சல்மான் அலி ஆகாவும், துணை கேப்டனாக ஷதாப் கானும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சொந்த மண்ணில் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்த நிலையில் முக்கிய வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஒருநாள் தொடருக்கான அணியில் முகமது ரிஸ்வான், பாபர் அசாம் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

    • இயக்குநர் விஜய் ‘D Studios Post’ என்ற பெயரில் புதிய போஸ்ட் புரொடக்ஷன் ஸ்டுடியோவினை தொடங்கியுள்ளார்.
    • பல திரைப்பிரபலங்கள் இந்த விழாவில் கலந்துக் கொண்டனர்.

    ரசிகர்கள் விரும்பும்படியான பல வெற்றிப்படங்களைக் கொடுத்த இயக்குநர் விஜய் 'D Studios Post' என்ற பெயரில் புதிய போஸ்ட் புரொடக்ஷன் ஸ்டுடியோவினை மார்ச் 2 அன்று தொடங்கியுள்ளார். இந்த ஸ்டுடியோவை இயக்குநர் பிரியதர்ஷன், ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம், வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் & வேந்தர் டாக்டர் ஐசரி கே கணேஷ் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் பாலாஜி ஆகிய பிரபலங்கள் தொடங்கி வைத்தனர்.

    இந்த நிகழ்வு சென்னையின் மிகப்பெரிய போஸ்ட் புரொடக்ஷன் ஸ்டுடியோவின் பிரமாண்டமான தொடக்க விழா என்பது குறிப்பிடத்தக்கது. டிஐ, டால்பி அட்மாஸ் சவுண்ட் மிக்ஸ், டப்பிங், டிசிபி (DCP), ஓடிடி மாஸ்டரிங், விஎஃப்எக்ஸ் மற்றும் டிஐடி (DIT) ஸ்டோரேஜ் ஆகியவற்றிற்கான ஒரே இடமாக இந்த போஸ்ட் புரொடக்ஷன் ஸ்டுடியோ உருவாகியுள்ளது.

    இந்த நிகழ்வில் அரசியல்வாதிகள், திரைப்பட பிரபலங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டு தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

     

    நிகழ்வுக்கு வந்த விருந்தினர்களை தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பன் வரவேற்றார். இந்த ஸ்டுடியோவின் நிறுவனர் மற்றும் தலைவர் இயக்குநர் விஜய்.

    ஹெட் ஆஃப் சவுண்ட் - ராஜகிருஷ்ணன், ராஜசேகரன் விஷுவல் பிரிவின் தலைவராகவும், முத்துகிருஷ்ணன் குரல் பிரிவின் தலைவராகவும் உள்ளனர்.

     

    'டி ஸ்டுடியோஸ் போஸ்ட்' அமைந்துள்ள இடம்: எண். 87/4, பிளாட் எண். 1A, 1B & 1D, சம்பு பிரசாத் அவென்யூ, சாலிகிராமம், சென்னை, தமிழ்நாடு - 600 093

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்தி எதிர்ப்புப் போர்வையில், வளையலைத் திருடும் திமுக கவுன்சிலர்.
    • திருட்டையும் திமுகவையும் எப்போதும் பிரிக்கவே முடியாது.

    தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

    மேலும், "இந்தி எதிர்ப்புப் போர்வையில், வளையலைத் திருடும் குன்னூர் நகர்மன்ற 25-வது வார்டு திமுக கவுன்சிலர் ஜாகிர் உசேன்.

    திருட்டையும் திமுகவையும் எப்போதும் பிரிக்கவே முடியாது!" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 264 ரன்கள் எடுத்தது.
    • ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரி ஆகியோர் அரை சதம் அடித்தனர்.

    துபாய்:

    சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி துபாயில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 264 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் கேப்டன் ஸ்மித் 73 ரன்னிலும், அலெக்ஸ் கேரி 61 ரன்னிலும் அவுட்டாகினர்.

    டிராவிஸ் ஹெட் 39 ரன்னும், லபுசேன் 29 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    இந்தியா சார்பில் ஷமி 3 விக்கெட்டும், ஜடேஜா, வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டும், அக்சர் படேல், பாண்ட்யா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ×