ஜெய் - மீனாட்சி கோவிந்தராஜன் இணைந்து நடிக்கும் ரொமாண்டிக் திரில்லர் திரைப்படம்

ஜெய் நடிப்பில் சமீபத்தில் வெளியானது பேபி அண்ட் பேபி திரைப்படம் . ஜெய் அடுத்ததாக அறிமுக இயக்குனரான பாபு விஜய் இயக்கும் திரைப்படத்தில் நடிக்கிறார்.
ஜெய் - மீனாட்சி கோவிந்தராஜன் இணைந்து நடிக்கும் ரொமாண்டிக் திரில்லர் திரைப்படம்
Published on

ஜெய் நடிப்பில் சமீபத்தில் வெளியானது பேபி அண்ட் பேபி திரைப்படம் . இப்படத்தை பிரதாப் இயக்கினார். ஜெய் உடன் இப்படத்தில் யோகி பாபு, சத்யராஜ், பிரக்யா, மற்றும் பலர் நடித்தனர். திரைப்படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.

இந்நிலையில் ஜெய் அடுத்ததாக அறிமுக இயக்குனரான பாபு விஜய் இயக்கும் திரைப்படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தை பாபு விஜய் BV Frames நிறுவனத்தின் கீழ் தயாரிக்கவுள்ளது.

விஜய் பாபு இதற்குமுன் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கிய சர்கார் மற்றும் தர்பார் ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணி ஆற்றியது குறிப்பிடத்தக்கது. இப்படம் ஒரு ரொமாண்டிக் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது.

யோகி பாபு, கருடா ராம், ஸ்ரீமன் மற்றும் ஆதித்யா கதிர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் சென்னை, கொடைக்கானல், நெல்லூர் அதன் சுற்று வட்டார பகுதிகளில் படமாக்கபடவுள்ளது. இதனை குறித்த மேலும் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com