என் மலர்
தலைப்புச்செய்திகள்
- அந்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
- இந்திய சமூகத்தினருடன் உரையாட உள்ளார்.
மொரிஷியஸ் நாட்டின் 57-வது தேசிய தின கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அந்நாட்டுக்கு புறப்பட்டு சென்றார். இரண்டு நாள் பயணமாக மொரிஷியஸ் புறப்பட்ட பிரதமர் மோடி அந்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "நான் மொரீஷியஸுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறேன். அங்கு நான் அவர்களின் 57வது தேசிய தின கொண்டாட்டங்களில் பங்கேற்கிறேன். எனது நண்பரும் பிரதமருமான டாக்டர் நவின்சந்திர ராம்கூலமை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். அங்குள்ள இந்திய சமூகத்தினருடன் உரையாடவும் ஆவலாக உள்ளேன்."
"மொரீஷியஸ் ஒரு நெருங்கிய கடல்சார் அண்டை நாடு மற்றும் ஒரு முக்கிய இந்தியப் பெருங்கடல் கூட்டாளி. நாம் மதிப்புகள் மற்றும் ஆழமாக வேரூன்றிய கலாச்சார உறவுகளால் இணைக்கப்பட்டுள்ளோம். எனது வருகை நமது நட்பின் அடித்தளத்தை மேலும் வலுப்படுத்தும் மற்றும் இந்தியா-மொரீஷியஸ் உறவுகளில் ஒரு பிரகாசமான அத்தியாயத்தை உருவாக்கும்," என்று குறிப்பிட்டுள்ளார்.
- கோப்பை சூதாட்டம் தொடர்பாக ஏற்கனவே டெல்லியில் 5 பேர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
- தாவூத் இப்ராஹிமின் ‘டி கும்பல்' ஈடுபட்டு உள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
புதுடெல்லி:
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்தது. இதில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் பலப் பரீட்சை செய்தன. முன்னதாக இந்த போட்டியை வைத்து ரூ.5 ஆயிரம் கோடிக்கு மாபெரும் சூதாட்டம் நடந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:-
சர்வதேச சூதாட்டக்காரர்களுக்கு விருப்பமானதாக இந்திய அணி உள்ளது. அவர்கள் அனைவரும் நிழல் உலக தாதா கும்பலுடன் தொடர்புடையவர்கள். ஏராளமானோர் போட்டியை பார்க்க துபாயில் குவிந்து இருந்தனர். துபாயில் நடக்கும் சூதாட்டத்தில், பாகிஸ்தானில் பதுங்கி வாழும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் 'டி கும்பல்' ஈடுபட்டு உள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனிடையே ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை சூதாட்டம் தொடர்பாக ஏற்கனவே டெல்லியில் 5 பேர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான அரையிறுதிப் போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டு கைதானதாகவும், அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையிலேயே, தற்போது விசாரணை துபாய் வரை நீண்டுள்ளதாகவும் போலீசார் கூறினர்.
- உயிரிழந்த உடல்களை கங்கை நதியில் வீசுவதையும் பார்த்து உள்ளேன்.
- கட்டுக்கதையில் இருந்து வெளியே வர வேண்டிய நேரம் இது.
மும்பை:
மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சியின் 19-வது ஆண்டு நிறுவன தினம் தாதரில் கொண்டாடப்பட்டது. இதில் கட்சியின் தலைவர் ராஜ்தாக்கரே கலந்துகொண்டு பேசியதாவது:-
எனது கட்சி பிரமுகர் பாலாநந்த்காவ்கர் மகா கும்பமேளா சென்றிருந்தார். அங்கிருந்து புனித கங்கை நீரை கொண்டு வந்தார். ஆனால் அதனை நான் குடிக்க மறுத்து விட்டேன் ஏனெனில் கங்கை நதியின் நிலை குறித்து சமூக ஊடகங்களில் பல வீடியோக்களை பார்த்து உள்ளேன்.
சிலர் ஆற்றில் தங்கள் உடல்களை சொறிந்து கழுவுவதை கண்டு உள்ளேன். மேலும் உயிரிழந்த உடல்களை கங்கை நதியில் வீசுவதையும் பார்த்து உள்ளேன். இந்தியாவில் உள்ள எந்த நதியும் சுத்தமாக இல்லை. ராஜீவ்காந்தி பிரதமராக இருந்த போது கங்கை நதி விரைவில் சுத்தம் செய்யப்படும் என அவர் பேசியதை நான் கேள்விப்பட்டு உள்ளேன். இப்போது இந்த கட்டுக்கதையில் இருந்து வெளியே வர வேண்டிய நேரம் இது.
இவ்வாறு அவர் பேசினார்.
- நிபுணர் குழு, மின்சார பஸ் டிரைவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என பரிந்துரைத்தது.
- விக்ரோலி மற்றும் காட்கோபர் டெப்போக்களில் 90 புதிய பஸ்கள் இயக்கப்படும்.
மும்பை:
மும்பை குர்லா மேற்கில் எஸ்.ஜி. பார்வே பகுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் 9-ந்தேதி பெஸ்ட் மின்சார பஸ் விபத்துக்குள்ளானது, இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். பஸ் டிரைவர் 3 நாட்கள் பயிற்சிக்கு பிறகு டிசம்பர் 1-ந்தேதி முதல் மின்சார பஸ்சை ஓட்டியதாக கூறப்படுகிறது. இது விபத்துக்கு காரணமாக அமைந்து இருக்கலாம் என தெரிகிறது. மேலும், இந்த விபத்துக்கு மனிதத்தவறும் காரணமாக கூறப்படுகிறது. இந்த விபத்துக்குப்பிறகு பெஸ்ட் நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு, மின்சார பஸ் டிரைவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என பரிந்துரைத்தது.
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல் மின்சார பஸ் கடந்த 2017-ம் ஆண்டு நவம்பரில் பெஸ்ட் நிறுவனத்தில் சேர்க்கப்பட்டது. பெரும்பாலான மின்சார பஸ்கள் தானியங்கி பரிமாற்றத்தை கொண்டுள்ளன. விபத்துகளை தடுப்பதற்கும், வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலும் பஸ் டிரைவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
பெஸ்ட் நிறுவனத்திற்கு முறையே 2100 மற்றும் 2400 பஸ்களை வழங்குவதற்கான 2 தனித்தனி ஒப்பந்தங்கள் போடப்பட்டு வாங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, விக்ரோலி மற்றும் காட்கோபர் டெப்போக்களில் 90 புதிய பஸ்கள் இயக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மழைக்காலங்களில் பாதுகாப்பு கருதி அங்கு மலையேற தடை விதிக்கப்பட்டு உள்ளது.
- 3 பேருக்கு சுமார் ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
ஜகார்த்தா:
இந்தோனேசியாவின் மேற்கு நுசா தெங்காரா மாகாணத்தில் லோம்போக் தீவு அமைந்துள்ளது. அங்குள்ள ரிஞ்சானி தேசிய பூங்கா பிரபல சுற்றுலா தலமாக திகழ்கிறது. அங்குள்ள ரிஞ்சானி மலை சாகச வீரர்களுக்கு உகந்த இடமாக இருப்பதால் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு வந்து செல்கின்றனர்.
ஆனால் மழைக்காலங்களில் பாதுகாப்பு கருதி அங்கு மலையேற தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 3 வாலிபர்கள் அங்கு சுற்றுலா சென்றிருந்தனர். சாகச வீரர்களான அவர்கள் தடையை மீறி ரிஞ்சானி மலை மீது ஏறினர்.
இது அங்கிருந்த கண்காணிப்பு கேமரா மூலம் கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவர்கள் 3 பேருக்கும் சுமார் ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரிஞ்சானி தேசிய பூங்காவுக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
- மேத்யூஸ் - நாட் ஸ்கைவர் பிரண்ட் சிறிது நேரம் பார்ட்னர்ஷிப் அமைத்து குஜராத் அணிக்கு வலு சேர்த்தனர்.
- மும்பை 6 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் குவித்தது.
மும்பை:
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் மும்பையில் இன்று நடைபெற்று வரும் 19-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஹேய்லி மேத்யூஸ் - அமெலியா கெர் களமிறங்கினர். இதில் அமெலியா கெர் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த மேத்யூஸ் - நாட் ஸ்கைவர் பிரண்ட் சிறிது நேரம் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு வலு சேர்த்தனர். இவர்களில் மேத்யூஸ் 27 ரன்களிலும், நாட் ஸ்கைவர் பிரண்ட் 38 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

அதிரடியாக விளையாடிய ஹர்மன்ப்ரீத் கவுர் 54 ரன்களில் ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் மும்பை 6 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி குஜராத் களமிறங்கி உள்ளது.
இறுதியில் குஜராத் அணி வெற்றிக்கு கடைசி இரண்டு ஓவர்களில் வெற்றிபெற 22 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. இறுதியில் கன்வர் 10 ரன்களிலும், சிம்ரன் ஷேக் 18 ரன்களிலும் ஆட்டமிழக்க, குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களில் ஆல் அவுட்டானது.
இதன்மூலம் மும்பை அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி வெற்றியைப் பதிவுசெய்து.
- சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் வசுந்தரா நடிப்பில் தென்மேற்கு பருவகாற்று திரைப்படம் வெளியானது
- அடுத்ததாக சுனில் இயக்கும் தெலுங்கு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
2010 ஆம் ஆண்டு சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் வசுந்தரா இருவரும் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது தென்மேற்கு பருவக்காற்று. இப்படத்திற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வசுந்தரா வென்றார்.
இதைத் தொடர்ந்து போராளி, துணிக துணிக,தலைக்கூத்தல், கண்ணை நம்பாதே போன்ற திரைப்படத்தில் நடித்து மக்கள் மனதில் பதிந்தார், கடைசியாக சூர்யா நடித்த கங்குவா திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். அடுத்ததாக சுனில் இயக்கும் தெலுங்கு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த நிலையில் வசுந்தரா நடிகை அவதாரத்தில் இருந்து எழுத்தாளர் அவதாரம் எடுத்துள்ளார். தற்பொழுது தி அக்கியூஸ்ட் என்ற கிரைம் நாவலை எழுதியுள்ளார். அடுக்குமாடியில் நடந்த மர்மமான கொலையை பற்றி மையமாக வைத்து இந்த கிரைம் நாவல் எழுதப்பட்டுள்ளது.
வசுந்தரா எழுதிய (The Accused) நாவலை வாங்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சுமார் 25 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
- வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
பீகார் மாநிலம் அர்ரா என்ற பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் நகைக்கடை ஒன்றில் இன்று சினிமா பாணியில் துப்பாக்கி முனையில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.
நகைக்கடை இன்று வழக்கம்போல் காலை கடை திறக்கப்பட்டு வியாபாரம் நடந்துகொண்டிருந்தபோது, திடீரென 6க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் கையில் துப்பாக்கியுடன் உள்ளே புகுந்தனர்.
கெள்ளையர்களை கண்டு அதிர்ச்சி அடைந்த நகைக்கடை ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர், துப்பாக்கி காட்டி ஊழியர்களை மிரட்டிய கொள்ளையர்கள் நகைக்கடையில் இருந்து சுமார் 25 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியானது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
இதில், கெள்ளையர்கள் 6 பேரில் இருவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும், கைதானவர்களிடம் இருந்து நகைகள், இருசக்கர வாகனங்கள், 10 தோட்டாக்கள், 2 துப்பாக்கிககளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இதற்கிடையே, தப்பியோடிய மற்ற 4 பேரையும் பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
- இயக்குநர் உதய் கே இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ' அஃகேனம் '
- படத்தின் முதல் பாடலான மெல்லாலி மெல்லாலி பாடலை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.
நடிகர்- தயாரிப்பாளர்- விநியோகஸ்தர் - என பன்முக ஆளுமை கொண்ட அருண் பாண்டியன் மற்றும் அவரது மகள் கீர்த்தி பாண்டியன் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'அஃகேனம் ' என பெயரிடப்பட்டு, அதற்கான ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இயக்குநர் உதய் கே இயக்கத்தில் உருவாகி வரும் ' அஃகேனம் ' எனும் திரைப்படத்தில் அருண்பாண்டியன், கீர்த்தி பாண்டியன், பிரவீண் ராஜா , ஆதித்யா ஷிவ்பிங்க், ரமேஷ் திலக், ஜி. எம். சுந்தர், ஆதித்யா மேனன், சீதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
விக்னேஷ் கோவிந்தராஜன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பரத் வீரராகவன் இசைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை திவேத்தியன் கவனிக்க, கலை இயக்கத்தை ராஜா மேற்கொண்டிருக்கிறார். அத்துடன் இந்த படத்தில் பணியாற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் 'அஃகேனம்' படத்தின் மூலம் அறிமுகமாகிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.
படத்தின் முதல் பாடலான மெல்லாலி மெல்லாலி பாடலை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.
பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய உணர்வுபூர்வமான படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஏ & பி குரூப்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண்பாண்டியன் தயாரித்திருக்கிறார்.
இந்த நிலையில் படத்தின் டைட்டில் டிராக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. அக்கேனம் என தலைப்பிடப்பட்ட இந்த பாடலை டிரியா பாண்டியன் மற்றும் டக்கால்டி இணைந்து சண்டி வரிகளில் பாடியுள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஒய் நாட் ஸ்டுடியோஸ் சஷிகாந்த் எழுதி, இயக்கி தயாரித்துள்ள திரைப்படம் 'TEST
- இதில் சித்தார்த் கிரிக்கெட் வீரராகவும், மாதவன் பயிற்சியாளராகவும் நடித்து உள்ளதாக தெரிகிறது.
விக்ரம் வேதா', 'இறுதிச்சுற்று', 'மண்டேலா' போன்ற படங்களை தயாரித்த ஒய் நாட் ஸ்டுடியோஸ் சஷிகாந்த் எழுதி, இயக்கி தயாரித்துள்ள திரைப்படம் 'TEST. இந்தப் படத்தில் மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் ஆகியோர் நடித்துள்ளனர்.
இதற்கு முன் சித்தார்த், மாதவன், மீரா ஜாஸ்மின் ஆகியோர் ஆய்த எழுத்து, ரங் தே பசந்தி ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் திரைப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி உள்ளது. இதில் சித்தார்த் கிரிக்கெட் வீரராகவும், மாதவன் பயிற்சியாளராகவும் நடித்து உள்ளதாக தெரிகிறது.
இந்தப் படம் நேரடியாக ஓ.டி.டி. தளத்தில் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்தத் திரைப்படம் வருகிற ஏப்ரல் 4-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகவுள்ளது. முன்னதாக வெளியிடப்பட்ட டெஸ்ட் திரைப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் படத்தின் முதல் பாடலான தி அரேனா பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடல் படத்தின் தீம் பாடலைப் போல் அமைந்துள்ளது. இப்பாடல் நட்சத்திர கிரிக்கெட் வீரர்களுக்கு சமர்பணமாக அமைந்துள்ளது. பாடலை சக்திஸ்ரீ கோபாலன் இசையமைத்துள்ளார். பிரபல ராப் பாடகர் யோகி பி இதில் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- எல்லை தாண்டி மீன்பிடித்ததாக காரைக்கால் மீனவர்கள் 13 பேர் கைது.
- சிறைக்காவல் முடிந்து மல்லாகம் நீதிமன்றத்தில் காரைக்கால் மீனவர்கள் 13 பேர் அஜர் ஆகினர்.
ரூ.3.25 லட்சம் அபராதம் கட்டினால் காரைக்கால் மீனவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று இலங்கை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக காரைக்கால் மீனவர்கள் 13 பேரை துப்பாக்கி முனையில் இலங்கை கடற்படை செய்து செய்தது.
சிறைக்காவல் முடிந்து மல்லாகம் நீதிமன்றத்தில் காரைக்கால் மீனவர்கள் 13 பேர் அஜர் ஆகினர்.
இந்நிலையில், இதுதொடர்பாக விசாரணை நடத்திய இலங்கை நீதிபதி ரூ.3.25 லட்சம் அபராதம் கட்டினால் காரைக்கால் மீனவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.
- ரொமான்ஸ் ஜானரில் '2கே லவ் ஸ்டோரி' என்ற படத்தை இயக்கினார்.
- படத்தின் ஓடிடி வெளியீட்டை படக்குழு அறிவித்துள்ளது.
வெண்ணிலா கபடிக்குழு படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான சுசீந்திரன் "நான் மகான் அல்ல, பாண்டிய நாடு, ஆதலால் காதல் செய்வீர், ஜீவா, ஈஸ்வரன்" உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.
இவர் தற்போது இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வை சொல்லும் படமாக, ரொமான்ஸ் ஜானரில் '2கே லவ் ஸ்டோரி' என்ற படத்தை இயக்கினார். இப்படம் கடந்த மாதம் வெளியாகி மக்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்றது.
இன்றைய இளம் தலைமுறையின் காதல், நட்பு என அவர்களது வாழ்வை பிரதிபலிக்கும் படைப்பாக இந்த படம் உருவாகியுள்ளது.
சிட்டி லைட் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். புதுமுக நாயகன் ஜெகவீர் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடித்துள்ளார். மேலும் பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் படத்தின் ஓடிடி வெளியீட்டை படக்குழு அறிவித்துள்ளது. திரைப்படம் விரைவில் அமேசான் மற்றும் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






