2 நாள் பயணமாக மொரிஷியஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி

அந்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.இந்திய சமூகத்தினருடன் உரையாட உள்ளார்.
2 நாள் பயணமாக மொரிஷியஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி
Published on

மொரிஷியஸ் நாட்டின் 57-வது தேசிய தின கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அந்நாட்டுக்கு புறப்பட்டு சென்றார். இரண்டு நாள் பயணமாக மொரிஷியஸ் புறப்பட்ட பிரதமர் மோடி அந்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "நான் மொரீஷியஸுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறேன். அங்கு நான் அவர்களின் 57வது தேசிய தின கொண்டாட்டங்களில் பங்கேற்கிறேன். எனது நண்பரும் பிரதமருமான டாக்டர் நவின்சந்திர ராம்கூலமை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். அங்குள்ள இந்திய சமூகத்தினருடன் உரையாடவும் ஆவலாக உள்ளேன்."

"மொரீஷியஸ் ஒரு நெருங்கிய கடல்சார் அண்டை நாடு மற்றும் ஒரு முக்கிய இந்தியப் பெருங்கடல் கூட்டாளி. நாம் மதிப்புகள் மற்றும் ஆழமாக வேரூன்றிய கலாச்சார உறவுகளால் இணைக்கப்பட்டுள்ளோம். எனது வருகை நமது நட்பின் அடித்தளத்தை மேலும் வலுப்படுத்தும் மற்றும் இந்தியா-மொரீஷியஸ் உறவுகளில் ஒரு பிரகாசமான அத்தியாயத்தை உருவாக்கும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com