என் மலர்
தலைப்புச்செய்திகள்
- என்னை சந்திக்கவே தயங்குவார் எடப்பாடி பழனிசாமி.
- இ.பி.எஸ். தான் முதலமைச்சர் வேட்பாளர் என அமித்ஷா எங்கேயும் கூறவில்லை.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* நயினார் நாகேந்திரன் கூட்டணியை சரியாக வழிநடத்தவில்லை என்பதே எனது குற்றச்சாட்டு.
* இ.பி.எஸ்.-ஐ நயினார் தூக்கி பிடித்ததே கூட்டணியில் இருந்து வெளியேற காரணம்.
* இ.பி.எஸ்.-ஐ முதலமைச்சர் வேட்பாளராக ஏற்பேன் என ஒருபோதும் நான் கூறவில்லை.
* என்னை சந்திக்கவே தயங்குவார் எடப்பாடி பழனிசாமி.
* 2021-ல் அ.தி.மு.க. வெற்றி பெறாமல் இருந்ததற்கு காரணம் என்ன என்பது அனைவருக்கும் தெரியும்.
* கூட்டணியில் இருந்து வெளியேறுவதன் பின்னணியில் அண்ணாமலை இல்லை.
* இ.பி.எஸ். தான் முதலமைச்சர் வேட்பாளர் என அமித்ஷா எங்கேயும் கூறவில்லை.
* அ.தி.மு.க.வோடு அ.ம.மு.க. தொண்டர்கள் எப்படி ஒன்றாக இணைந்து பணியாற்ற முடியும்.
* அ.தி.மு.க.வை சேர்ந்த ஒருவர் முதலமைச்சர் வேட்பாளர் என்றே அமித்ஷா கூறினார்.
* இ.பி.எஸ்.-ஐ முதலமைச்சர் வேட்பாளராக ஏற்பது தற்கொலைக்கு சமமான முடிவு.
இவ்வாறு அவர் கூறினார்.
- மக்களின் பதிவுகளில் பிரசாரத்தை எலான் மஸ்க் அனுமதிக்கிறார்.
- உக்ரேனியர்களை கொல்வதை நிறுத்துங்கள்.
வரி விதிப்பு விவகாரம் மற்றும் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்பாக இந்தியாவை அமெரிக்க அதிபர் டிரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ கடுமையாக விமர்சித்து வருகிறார். அவர் தனது கருத்துக்களை எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
இந்த நிலையில் இந்தியாவை விமர்சிக்கும் பீட்டர் நவரோவின் கருத்துகளின் உண்மைதன்மை சரிபார்ப்பு நடவடிக்கையை எக்ஸ் வலைதள நிர்வாகம் எடுத்து உள்ளது. இதனால் கோபம் அடைந்த பீட்டர் நவரோ எக்ஸ் வலைதளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க்கை சாடியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறியதாவது:-
மக்களின் பதிவுகளில் பிரசாரத்தை எலான் மஸ்க் அனுமதிக்கிறார். உண்மை சரிபார்ப்பு குறிப்புகள் முட்டாள்தனமான குறிப்புகளாக உள்ளன. இந்தியா லாபம் ஈட்டுவதற்காக மட்டுமே ரஷிய எண்ணெயை வாங்குகிறது. ரஷியா உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்குவதற்கு முன்பு இந்தியா ரஷிய எண்ணெயை வாங்கவில்லை. உக்ரேனியர்களை கொல்வதை நிறுத்துங்கள். அமெரிக்க வேலைகளை எடுப்பதை நிறுத்துங்கள் என்று தெரிவித்து உள்ளார்.
- நான் எதற்கும் தயாராக இருக்கிறேன்.
- தி.மு.க.வை வீழ்த்த அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும்.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை பொறுப்பில் இருந்து நீக்கியதால் தங்களுக்கும் பதவி வேண்டாம் என அவரது ஆதரவாளர்கள் 1,000-க்கும் மேற்பட்டோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்து கடிதம் மூலம் தலைமைக்கு அனுப்பி உள்ளனர்.
இந்நிலையில் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி.யும், செங்கோட்டையன் ஆதரவாளருமான சத்தியபாமா தனது கட்சி பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,
* அ.தி.மு.க.வில் எனது பொறுப்பை ராஜினாமா செய்யப் போகிறேன்.
* செங்கோட்டையனுக்கு ஆதரவாக மாவட்ட மகளிர் அணி செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளேன்.
* நான் எதற்கும் தயாராக இருக்கிறேன்.
* தி.மு.க.வை வீழ்த்த அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று கூறினார்.
நேற்று செங்கோட்டையனின் பதவி பறிக்கப்பட்ட நிலையில் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து ராஜினாமா செய்து வருகின்றனர்.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்துக் கொண்டிருப்பவர் எஸ்.ஜே சூர்யா. குறிப்பாக பல நட்சத்திர ஹீரோக்களுக்கு வில்லனாக நடித்து வருகிறார். இவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக அமைந்துள்ளது.
இந்நிலையில் தற்போது எஸ்ஜே சூர்யா மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். இவர் இயக்கும் படத்திற்கு கில்லர் என தலைப்பு வைத்துள்ளனர். படத்தின் பூஜை விழா சமீபத்தில் நடைப்பெற்றது. படத்திற்கு இசை புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.
இப்படத்தை ஸ்ரீ கோகுலம் மூவீஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் நாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கிறார். படத்தில் நடிக்கும் பிற நடிகர்களை பற்றிய தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. திரைப்படம் இந்தியா மற்றும் மெக்சிகோ ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட இருக்கிறது.
இந்நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் ப்ரீத்தி அஸ்ரானியை வாழ்த்தி படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சிகப்பு நிற ஆடையில் கையில் ஒரு புல்லட் வைத்துள்ளார்.
அண்மையில் வெளியான விஜய் ஆண்டனியின் மார்கன்' திரைப்படம் மக்களிடையே வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் விஜய் ஆண்டனியின் 25வது படமான சக்தித் திருமகன் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை அருண் பிரபு இயக்கியுள்ளார். அருண் பிரபு இயக்கத்தில் இதற்கு முன் அருவி மற்றும் வாழ் போன்ற வெற்றித் திரைப்படங்கள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் கதாநாயகியாக த்ரிப்தி நடித்திருக்கிறார். இவர் ஒரு விளம்பர பட நடிகை மற்றும் இவர் இதற்கு முன் அமேசான் மினி வெப் தொடரில் நடித்துள்ளார். திரைப்படம் வரும் 19 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
படத்தின் டிரெய்லரை நாளை மாலை 5 மணிக்கு வெளியட இருப்பதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
- நயினார் நாகேந்திரன் நல்ல மனிதர்.
- செங்கோட்டையன் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கு ஆதரவு உண்டு.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பிரிந்து சென்ற டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேச தயாராக உள்ளதாக பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:
* நயினார் நாகேந்திரன் நல்ல மனிதர். அவரின் முயற்சிக்கு வாழ்த்துகள்.
* முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை கண்டிப்பாக சந்திப்பேன்.
* ஒருங்கிணைப்பு தொடர்பான 10 நாட்கள் கெடு முடிந்ததும் செங்கோட்டையன் தன்னிடம் பேசுவார் என நம்பிக்கை உள்ளது.
* அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
* செங்கோட்டையன் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கு ஆதரவு உண்டு.
இவ்வாறு அவர் கூறினார்.
லவ் டுடே, டிராகன் படத்தின் வெற்றியை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐகே படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார்.
அதனை தொடர்ந்து இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் அடுத்ததாக ட்யூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன்,டிராவிட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ஊரும் பிளட் வீடியோவை படக்குழு கடந்த வாரம் வெளியிட்டது. பாடல் வெளியான போது ஏகப்பட்ட விமர்சனம் எழுந்தது. பாடல் சரியில்லை, சாய் அபயங்கர் ஏன் இப்படி இசையமைத்துள்ளார், பாடலின் வரிகள் எதுவும் புரியவில்லை என விமர்சனங்கள் எழுந்தது.
இதெற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சாய் அபயங்கர் அந்த பாடலின் வரிகளை பாடி ஒரு வீடியோ வெளியிட்டார் அதன் பிறகு அப்பாடல் இன்ஸ்டாகிராமில் வைரலாகி பலரும் அந்த பாடலை உபயோகித்து பலரும் ரீல்ஸ் செய்தனர். தற்பொழுது பாடல் யூடியூபில் 15 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
இப்படம் தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
- சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க முடியும்.
- சூரியனில் இருந்து வரும் கதிர்கள் பூமியின் மீது பட்டு, அதனுடைய நிழல் நிலவு மீது படுவதை லூனார் எக்லிப்ஸ்.
கொடைக்கானல்:
இன்று இரவு 9 மணி முதல் அதிகாலை 2 மணி வரை முழு சந்திர கிரகணமான அரிய நிகழ்வு வானில் நடைபெற உள்ளது. இதனையடுத்து கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் அமைந்துள்ள வான் இயற்பியல் ஆய்வகத்தில் இந்த முழு சந்திரகிரகணத்தை கண்டு ரசிக்க ராட்சத தொலை நோக்கிகள் அமைத்து விளக்க உரையுடன் ஆராய்ச்சியாளர்கள் முழு சந்திர கிரகணத்தை பற்றி எடுத்துரைக்க உள்ளனர்.
மேலும் வான் இயற்பியல் ஆய்வகத்தில் நுழைவு கட்டணமின்றி இன்று இரவு மட்டும் சுற்றுலாப்பயணிகள், பொதுமக்கள் இலவசமாக அனுமதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆராய்ச்சியாளர் கிறிஸ்பின் கார்த்திக் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
இன்று நடைபெற உள்ள முழு சந்திர கிரகணமானது இந்தியாவில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தென்படுகிறது. இந்த சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க முடியும். சூரியனில் இருந்து வரும் கதிர்கள் பூமியின் மீது பட்டு, அதனுடைய நிழல் நிலவு மீது படுவதை லூனார் எக்லிப்ஸ். இதில் 2 விதமாக காட்சியளிக்கிறது. இதனை லைட் ஷேடோ, டார்க் ஷேடோ என்றும் சூரியனில் இருந்து வரும் கதிர்கள் ஒன்று விலகி செல்லுதல், குறுகி செல்லுதல் இதனை லைட் ஷேடோ, டார்க் ஷேடோ என்றும் அழைக்கப்படுகிறது.
இன்று இரவு 8:57 மணிக்கு எக்லிப்ஸ் தொடங்கும் 10 மணி அளவில் டார்க் ஷேடோ தொடங்கி 12 மணிக்கு வரை நடைபெறுகிறது. இறுதியாக 2 மணிக்கு நிறைவடையும். 11:40 மணிக்கு சூரியனில் இருந்து வரும் கதிர்கள் பூமியின் வளிமண்டல பகுதியில் பட்டு எதிரொலிக்கும் அலைநீள கதிர்கள் நிலவு மீது சிவப்பு கதிர்கள் பிரதிபலிக்கும்போது ரெட் மூனாக காட்சியளிக்கிறது. இதனை வீட்டின் மொட்டை மாடியில் இருந்து இந்த நிகழ்வை பார்க்கலாம். அதே போல இன்று இரவு விமானத்தில் செல்பவர்கள் எளிதாக காணலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நடிகர் சூர்யாவின் 44-வது படம் ரெட்ரோ. கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்தார். திரைப்படம் கடந்த மே 1 வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
சூர்யா நடித்த திரைப்படங்களில் மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்த திரைப்படமாக ரெட்ரோ உருமாறியது. ரெட்ரோ படம் உலக அளவில் ரூ.235 கோடி வசூலில் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சூர்யா அவரது திரைப்பயணத்தில் 28 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதனை கொண்டாடி வாழ்த்தும் வகையில் ரெட்ரோ படக்குழு ஒரு சிறப்பு காட்சியை வெளியிட்டுள்ளனர். அதில் படத்தில் இடம் பெற்ற சூர்யா சிரிக்க முயற்சிக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த ஒரு காட்சியின் நடிப்பே சூர்யா ஒரு நடிகராக யார் என்று நமக்கு புரிந்துவிடும்.
- திராவிடத்தால் வாழ்கிறோம் என பெருமிதத்துடன் சொல்கின்ற தமிழர்களை இங்கு பார்க்கிறேன்.
- சுயமரியாதை, சமத்துவ எண்ணம், சமூகநீதி கோட்பாட்டையும் விடமாட்டோம்.
லண்டன் நகரில் நடைபெற்ற தமிழ்க்கனவு நிகழ்ச்சியில் இங்கிலாந்து வாழ் தமிழர்கள் இடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
* உலகில் எங்கு சென்றாலும் தமிழர்களாகிய நாம் நமது மொழியையும் பண்பாட்டையும் விடமாட்டோம்.
* சுயமரியாதை, சமத்துவ எண்ணம், சமூகநீதி கோட்பாட்டையும் விடமாட்டோம்.
* திராவிடத்தால் வாழ்கிறோம் என பெருமிதத்துடன் சொல்கின்ற தமிழர்களை இங்கு பார்க்கிறேன்.
* தமிழுக்குத் தீங்கு நினைக்கும் யாருடைய எண்ணமும் ஒருபோதும் நிறைவேறாது.
* தமிழ்நாட்டின் பெருமையை எடுத்துச் சொல்கிற தூதுவர்களாக இங்கிலாந்து வாழ் தமிழர்கள் திகழ்கின்றனர்.
* சிறந்த உட்கட்டமைப்பு, திறமையான இளைஞர்கள், அமைதியான சூழல் காரணமாக தமிழ்நாட்டில் முதலீடுகள் குவிகின்றன.
* தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வருமாறு இங்கிலாந்து வாழ் தமிழர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.
- தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
- இன்றைய சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
- ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.
- வரும் செவ்வாய்க்கிழமை முக்கிய நிர்வாகிகளுடன் செய்தியாளர்களை செங்கோட்டையன் சந்திக்க உள்ளார்.
அ.தி.மு.க. மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் நேற்று முன்தினம் பரபரப்பு பேட்டி அளித்தார். அப்போது, வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவதற்கு கட்சியில் இருந்து விலகி சென்றவர்களை எல்லாம் மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும். அதற்கு 10 நாள் கெடு நிர்ணயித்து இருக்கிறேன். அது நடக்கவில்லை என்றால் இதே கோரிக்கைகளை வலியுறுத்துபவர்களை எல்லாம் ஒன்றிணைப்பேன். எடப்பாடி பழனிசாமியின் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பிரசார பயணத்தில் பங்கேற்க மாட்டேன்' என்றார். இது அ.தி.மு.க.வில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே திண்டுக்கலில் அ.தி.மு.க. மூத்த தலைவர்களுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தினார்.
இதனை தொடர்ந்து அ.தி.மு.க. அமைப்பு செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.
எடப்பாடி பழனிசாமியின் அதிரடி நடவடிக்கைக்கு பல்வேறு கட்சியினரும் அதிருப்தி தெரிவித்தனர்.
இந்நிலையில், செங்கோட்டையன் வரும் 9-ந்தேதி மீண்டும் செய்தியாளர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும், அப்போது முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
வரும் செவ்வாய்க்கிழமை முக்கிய நிர்வாகிகளுடன் செய்தியாளர்களை செங்கோட்டையன் சந்திக்க உள்ளார். கட்சி பொறுப்பில் இருந்து நீக்கியவர்களை ஒருங்கிணைத்து, தனது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.






