என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    செங்கோட்டையனுக்கு ஆதரவாக கட்சி பதவியை துறக்கும் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி.
    X

    செங்கோட்டையனுக்கு ஆதரவாக கட்சி பதவியை துறக்கும் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி.

    • நான் எதற்கும் தயாராக இருக்கிறேன்.
    • தி.மு.க.வை வீழ்த்த அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும்.

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை பொறுப்பில் இருந்து நீக்கியதால் தங்களுக்கும் பதவி வேண்டாம் என அவரது ஆதரவாளர்கள் 1,000-க்கும் மேற்பட்டோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்து கடிதம் மூலம் தலைமைக்கு அனுப்பி உள்ளனர்.

    இந்நிலையில் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி.யும், செங்கோட்டையன் ஆதரவாளருமான சத்தியபாமா தனது கட்சி பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,

    * அ.தி.மு.க.வில் எனது பொறுப்பை ராஜினாமா செய்யப் போகிறேன்.

    * செங்கோட்டையனுக்கு ஆதரவாக மாவட்ட மகளிர் அணி செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளேன்.

    * நான் எதற்கும் தயாராக இருக்கிறேன்.

    * தி.மு.க.வை வீழ்த்த அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று கூறினார்.

    நேற்று செங்கோட்டையனின் பதவி பறிக்கப்பட்ட நிலையில் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து ராஜினாமா செய்து வருகின்றனர்.

    Next Story
    ×