என் மலர்
நீங்கள் தேடியது "சத்தியபாமா எம்பி"
- மக்கள் எண்ணம் நிறைவேற வேண்டும்.
- முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்ற வாய்ப்பாக இருக்கும்.
கோபி:
கோபி கரட்டூர் பகுதியில் அமைந்துள்ள அ.தி.மு.க கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்தித்தபோது 10 நாட்கள் கெடு என்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து செங்கோட்டையனின் அமைப்புச்செயலாளர் பதவியும், அவர் வசித்து வந்த ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பதவியும் பறித்து எடப்பாடி பழனிசாமி அதிரடியாக பறித்தார்.
செங்கோட்டையனுக்கு ஆதரவாக கோபி ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் 1000-க்கும் மேற்பட்டோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து முன்னாள் திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் சத்தியபாமாவிடம் வழங்கினர். இந்த கடிதங்கள் அனைத்தும் பெறப்பட்டு தலைமைக்கு அனுப்பி வைக்க உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து திருப்பூர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சத்திய பாமா செய்தியாளர்கள் சந்திப்பின்போது, அ.தி.மு.க நூறாண்டுகள் ஆட்சியில் இருக்கும் என சட்டமன்றத்தில் சூழலை ஏற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் எண்ணங்கள் நிறைவேற வேண்டும்.
அதே போல அ.தி.மு.க. தொண்டர்கள், மக்கள் எண்ணங்களை பிரதிபலிக்கும் விதமாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் குரலை வெளிப்படுத்தி இருந்தார்.
இதன் காரணமாக அவர் கட்சிப் பொறுப்புகளில் இருந்து விலக்கப்பட்ட காரணமாக கோபி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து பொறுப்பாளர்களும் தங்கள் ராஜினாமா கடிதத்தை வழங்கி உள்ளனர்.
மக்கள் எண்ணம் நிறைவேற வேண்டும். 2026 சட்டமன்றத் தேர்தலில் வென்றால்தான் அனைவருக்கும் மரியாதை. அப்போதுதான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்ற வாய்ப்பாக இருக்கும். அனைவரும் ஒன்றுபட்டு இயக்கத்திற்காக பாடுபடுவோம் அதுவே நம் லட்சியம், என்றார் .
அதைத் தொடர்ந்து அவர் தனது வடக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் சத்தியபாமாவின் மகளிர் அணி பதவியை பறித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
- நான் எதற்கும் தயாராக இருக்கிறேன்.
- தி.மு.க.வை வீழ்த்த அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும்.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை பொறுப்பில் இருந்து நீக்கியதால் தங்களுக்கும் பதவி வேண்டாம் என அவரது ஆதரவாளர்கள் 1,000-க்கும் மேற்பட்டோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்து கடிதம் மூலம் தலைமைக்கு அனுப்பி உள்ளனர்.
இந்நிலையில் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி.யும், செங்கோட்டையன் ஆதரவாளருமான சத்தியபாமா தனது கட்சி பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,
* அ.தி.மு.க.வில் எனது பொறுப்பை ராஜினாமா செய்யப் போகிறேன்.
* செங்கோட்டையனுக்கு ஆதரவாக மாவட்ட மகளிர் அணி செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளேன்.
* நான் எதற்கும் தயாராக இருக்கிறேன்.
* தி.மு.க.வை வீழ்த்த அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று கூறினார்.
நேற்று செங்கோட்டையனின் பதவி பறிக்கப்பட்ட நிலையில் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து ராஜினாமா செய்து வருகின்றனர்.
கடந்த 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 37 தொகுதிகளில் அ.தி.மு.க. அமோக வெற்றிபெற்று 2 தொகுதிகளை பா.ஜனதா கூட்டணி வென்றது.
வருகிற 2019-ம் ஆண்டில் இந்த பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் முடிவடைந்து மீண்டும் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தநிலையில் பாராளுமன்றத்தில் எம்.பி.க்களின் செயல்பாடுகள் குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், தேசிய அளவில் ஒட்டுமொத்த எம்.பி.க்களின் வருகை பதிவேடு 80 சதவீதம் உள்ளது. விவாதங்களில் பங்கேற்பு 63.6 சதவீதமாகவும் உள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்த வரை எம்.பி.க்களின் வருகை பதிவேடு 78 சதவீதம் உள்ளது. விவாதங்களில் பங்கேற்பு 43.6 சதவீதம் உள்ளது. அதே நேரத்தில் சராசரியாக 404 கேள்விகள் எழுப்பி உள்ளனர்.
தமிழ்நாட்டை சேர்ந்த அ.தி.மு.க. எம்.பி.க்களில் யாரும் அனைத்து நாட்களும் பாராளுமன்றத்துக்கு வரவில்லை. குறைந்தது 90 சதவீதம் நாட்கள் கூட வரவில்லை.
ஆனால் திருப்பூர் தொகுதி பெண் எம்.பி. வி.சத்யபாமா 87 சதவீதம் நாட்கள் வருகை தந்து முதலிடம் பிடித்துள்ளார். 119 விவாதங்களில் பங்கேற்று 412 கேள்விகள் எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும் போது, ‘‘பாராளுமன்றத்தில் நான் எனது தொகுதியை பாதித்த பல்வேறு பிரச்சனைகள் குறித்து கேள்விகள் எழுப்பினேன். அவற்றில் பெரும்பாலானவை ரெயில்வே சம்பந்தமானவை. தமிழக மக்களை பாதித்த ஜல்லிக்கட்டு, நீட் தேர்வு பிரச்சனைகளையும் எழுப்பினேன். விவாதத்தில் மேலும் பல பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்பி பதில் பெற்றேன்’’ என்றார்.
அ.தி.மு.க. எம்.பி.க்களில் ஈரோடு தொகுதியை சேர்ந்த செல்வகுமார் சின்னையன் எம்.பி. மிக குறைந்த அளவிலான விவாதத்தில் பங்கேற்று இருக்கிறார். அவர் 24 விவாதங்களில் கலந்து கொண்டு 92 கேள்விகள் கேட்டு இருக்கிறார். அவரது வருகை பதிவேடு 73 சதவீதமாகும்.

பொதுவாக பாராளுமன்றத்துக்கு வருகை தந்து கேள்விகள் கேட்டு பதிலை பெறுவதை வைத்து மட்டுமே ஒரு எம்.பி.யின் செயல்பாடு சிறந்தது என கூறமுடியாது. தொகுதியில் அவரது செயல்பாடு சிறந்த முறையில் இருக்க வேண்டும். அதே நேரத்தில் பாராளுமன்ற கூட்டத்தில் அவர் பங்கேற்க வேண்டும் என ஜனநாயக மறுசீரமைப்பு அமைப்பின் நிறுவனர் ஜெகதீப் சோக்கர் கூறியுள்ளார். ஒரு எம்.பி. பாராளுமன்றத்துக்கு வருவது 50 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தால் தொகுதி மக்களுக்கு சேவை செய்யும் பிரதிநிதிக்கு தகுதியானவராக இல்லை என்பதே சரியானது என்றும் அவர் தெரிவித்தார். #SathyabamaMP






