என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

செங்கோட்டையனுக்கு ஆதரவாக ராஜினாமா கடிதம்- முன்னாள் எம்.பி. சத்தியபாமா பதவி பறிப்பு
- மக்கள் எண்ணம் நிறைவேற வேண்டும்.
- முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்ற வாய்ப்பாக இருக்கும்.
கோபி:
கோபி கரட்டூர் பகுதியில் அமைந்துள்ள அ.தி.மு.க கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்தித்தபோது 10 நாட்கள் கெடு என்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து செங்கோட்டையனின் அமைப்புச்செயலாளர் பதவியும், அவர் வசித்து வந்த ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பதவியும் பறித்து எடப்பாடி பழனிசாமி அதிரடியாக பறித்தார்.
செங்கோட்டையனுக்கு ஆதரவாக கோபி ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் 1000-க்கும் மேற்பட்டோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து முன்னாள் திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் சத்தியபாமாவிடம் வழங்கினர். இந்த கடிதங்கள் அனைத்தும் பெறப்பட்டு தலைமைக்கு அனுப்பி வைக்க உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து திருப்பூர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சத்திய பாமா செய்தியாளர்கள் சந்திப்பின்போது, அ.தி.மு.க நூறாண்டுகள் ஆட்சியில் இருக்கும் என சட்டமன்றத்தில் சூழலை ஏற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் எண்ணங்கள் நிறைவேற வேண்டும்.
அதே போல அ.தி.மு.க. தொண்டர்கள், மக்கள் எண்ணங்களை பிரதிபலிக்கும் விதமாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் குரலை வெளிப்படுத்தி இருந்தார்.
இதன் காரணமாக அவர் கட்சிப் பொறுப்புகளில் இருந்து விலக்கப்பட்ட காரணமாக கோபி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து பொறுப்பாளர்களும் தங்கள் ராஜினாமா கடிதத்தை வழங்கி உள்ளனர்.
மக்கள் எண்ணம் நிறைவேற வேண்டும். 2026 சட்டமன்றத் தேர்தலில் வென்றால்தான் அனைவருக்கும் மரியாதை. அப்போதுதான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்ற வாய்ப்பாக இருக்கும். அனைவரும் ஒன்றுபட்டு இயக்கத்திற்காக பாடுபடுவோம் அதுவே நம் லட்சியம், என்றார் .
அதைத் தொடர்ந்து அவர் தனது வடக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் சத்தியபாமாவின் மகளிர் அணி பதவியை பறித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.






