என் மலர்
ஐ.பி.எல்.(IPL)
- அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவாரா என்று ரசிகர்கள் மனதில் கேள்வி எழுந்துள்ளது.
- அடுத்த ஆண்டு சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் தொடர்வார் என்று தோனி தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறியது எம்.எஸ்.தோனி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
மேலும், அடுத்தாண்டும் ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவாரா என்று ரசிகர்கள் மனதில் கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில், அடுத்த ஆண்டு சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் தொடர்வார் என்று தோனி தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தோனி, "அடுத்த ஆண்டு ருதுராஜ் கெய்க்வாட் வந்துவிடுவார், அவர் வந்ததும் அனைத்தும் சரியாகிவிடும். ஐபிஎல் 2025-ல் நாங்கள் சரியாக விளையாடவில்லை என்று சொல்லவில்லை. இருப்பினும் சில இடங்களில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்க வேண்டும். மினி ஆக்சன் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. அதில் அணியில் சில வீரர்களை எடுக்க உள்ளோம்.
அடுத்த 5 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடும் அளவுக்கு, என்னுடைய கண்கள் நன்றாக உள்ளது என மருத்துவர்கள் கூறிவிட்டனர். சூட்சமம் என்னவென்றால், உடல் தகுதிக்கு இன்னும் TICK மார்க் கிடைக்கவில்லை. கண்களை வைத்து மட்டுமே விளையாட முடியாதே" என்று கிண்டலாக தெரிவித்தார்.
- தென் ஆப்பிரிக்கா ஒரு ரன்னில் திரில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
- நாளை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான்-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்றுள்ள உலக சாம்பியன்ஷிப் லெஜென்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த 2-வது அரைஇறுதியில் தென் ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 186 ரன்கள் எடுத்தது.
பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியாவுக்கு சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தது. கடைசி பந்தில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 3 ரன்கள் தேவைபட்ட நிலையில் அதில் ஒரு ரன் மட்டுமே எடுக்கப்பட்டது.
இதனால் தென் ஆப்பிரிக்கா ஒரு ரன்னில் திரில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
நாளை நடைபெறும் இறுதி ஆட் டத்தில் பாகிஸ்தான்-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
- திருச்சி கிராண்ட் சோழாஸ், நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ் ஆகிய 4 அணிகள் இடையே போட்டி நிலவுகிறது.
- பிளே-ஆப் சுற்று போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டியும் திண்டுக்கல்லில் நடக்கிறது.
9-வது டி.என்.பி.எல் கிரிக்கெட் 20 ஓவர் போட்டி தொடர் கடந்த 5-ந்தேதி கோவையில் தொடங்கியது. அதைத் தொடர்ந்து சேலம், நெல்லை ஆகிய நகரங்களில் போட்டி நடந்தது.
நெல்லையில் நேற்று இரவு நடந்த 24-வது லீக் ஆட்டத்தில் நெல்லை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணி தோற்கடித்தது.
இத்துடன் நெல்லையில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்தன. போட்டியில் இன்று ஓய்வு நாளாகும். இன்னும் 4 லீக் ஆட்டங்கள் எஞ்சியுள்ள நிலையில் பிளே-ஆப் சுற்றுக்கு சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் ஆகிய அணிகள் தகுதி பெற்றுவிட்டன.
கோவை கிங்ஸ் அணி வெளியேற்றப்பட்டது. எஞ்சிய ஒரு இடத்திற்கு 6 புள்ளிகளுடன் உள்ள சேலம் ஸ்பார்டன்ஸ், தலா 4 புள்ளிகளுடன் உள்ள திருச்சி கிராண்ட் சோழாஸ், நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ் ஆகிய 4 அணிகள் இடையே போட்டி நிலவுகிறது. அந்த அணிகளுக்கு தலா ஒரு ஆட்டம் எஞ்சி உள்ளது.
கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் நாளை திண்டுக்கல்லில் தொடங்குகிறது. நாளை 2 ஆட்டங்கள் நடக்கிறது. மதியம் 3.15 மணிக்கு நடக்கும் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. பாபா அபராஜித் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தான் மோதிய 6 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது.
ஏற்கனவே பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்ட அந்த அணி கடைசி லீக் போட்டியிலும் வெற்றி பெற்று தோல்வியே சந்திக் காமல் பிளே-ஆப் சுற்றுக்குள் செல்லும் முனைப்பில் உள்ளது.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் விஜய் சங்கர், ஜெகதீசன், ஹரி கரன், ஆஷிக், அபிஷேக் தன்வர், பிரேம்குமார், எம். சிலம்பரசன் ஆகிய வீரர்கள் உள்ளனர்.
சதுர்வேத் தலைமையி லான மதுரை அணி வெற்றி பெற்றால்தான் பிளே-ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும். தோற்றால் தொட ரில் இருந்து வெளியேற்றப் படும். இதனால் அந்த அணி வெற்றி நெருக்கடியில் உள்ளது.
இரவு 7.15 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் கோவை கிங்ஸ்-சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. பிளே-ஆப் சுற்று வாய்ப்பை இழந்துவிட்ட கோவை அணி வெற்றியுடன் தொடரை முடிக்க விரும்பும். இப்போட்டியில் சேலம் அணி வெற்றி பெற்றால் 8 புள்ளிகளுடன் கடைசி அணியாக பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும். இதனால் சேலம் அணி வெற்றிக்காக போராடும்.
பிளே-ஆப் சுற்று போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டியும் திண்டுக்கல்லில் நடக்கிறது.
- ஆர்சிபி அணி முதல் முறையாக ஐபிஎல் கோப்பை வென்றது.
- ஆர்சிபி வீரர்களுக்கு பெங்களூருவில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி கோப்பையை கைப்பற்றியது. ஐபிஎல் வரலாற்றில் ஆர்சிபி அணி முதல் முறையாக கோப்பை வென்றது. இதனை ரசிகர்கள் மட்டுமின்றி வீரர்கள் கொண்டாடினர்.
ஆர்சிபி வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்துவதற்காக பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை கண்டுகளிப்பதற்காக அங்கு மக்கள் ஏராளமானோர் கூடினர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் நடந்த நெரிசலைப் போல எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பதற்கு 3 பேர் கொண்ட குழுவை பிசிசிஐ அமைத்துள்ளது.
பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா தலைமையில், பொருளாளர் பிரப்தேஜ் சிங் பாட்டியா, துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா ஆகியோர் குழுவில் உள்ளனர்
- பேட்டர்கள் பந்தை எதிர்கொள்வதை மேலும் மேலும் கடினமாக்குவோம்.
- பேட்டர்களுக்கு பந்து வீசுவது வேடிக்கையாக இருந்தது.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் ஜூன் 20-ம் தேதி முதல் நடைபெறுகிறது. இந்த தொடருக்காக சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து சென்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இத்தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகிறார். அவர் மட்டுமே இடது கை வேகப்பந்து வீச்சாளர் என்பதால் அவருக்கு நிச்சயம் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளன.
இந்நிலையில் தனது பயிற்சி குறித்து பேசிய அர்ஷ்தீப் சிங்,
பயிற்சி அமர்வைப் பொறுத்தவரை, எனது ஒரே வேலை சரியான இடத்தில் பந்துவீசுவது மட்டும் தான். ஏனெனில் எனது உடல் எப்படி ஒத்துழைக்கிறது, சிவப்பு பந்து கையிலிருந்து எப்படி வெளியே வருகிறது என்பதை நான் சரி பார்க்கிறேன்.
ஏனெனில் அனைத்து வீரர்களும் நீண்ட காலமாக வெள்ளை பந்தை வைத்து விளையாடி வருகின்றனர். அதனால் நான் இந்த பயிற்சியை மிகவும் ரசித்தேன்.
மேலும் பேட்டர்கள் பந்தை எதிர்கொள்வதை மேலும் மேலும் கடினமாக்குவோம். பேட்டர்களுக்கு பந்து வீசுவது வேடிக்கையாக இருந்தது. அவர்கள் மிகவும் கச்சிதமாகத் தெரிந்தனர். மேலும் அவர்களிடம் போட்டி மனப்பான்மையும் இருந்தது. நாங்கள் எங்களின் ரிதமில் மட்டுமே வேலை செய்தாலும், அவர்கள் முழுமையான பயிற்சியை மேற்கொண்டனர். அதனால் அது இன்னும் வேடிக்கையாக இருந்தது. அதனால் நாங்கள் சரியான திட்டத்துடன் அவர்களை வெளியேற்ற முயற்சிக்க வேண்டியிருந்தது.
சாய் முதல் முறையாக அணியில் இணைந்துள்ளார். அவரும் மிகவும் கச்சிதமாகத் தெரிந்தார். கேப்டனும் நல்ல ஃபார்மில் தொடர்பில் இருந்தார். அதனால் நான் தொடர்ந்து முன்னேறவும், அவர்களை அடிக்கடி வெளியேற்றவும் நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்துவருகிறேன்.
என்று தெரிவித்துள்ளார்.
- பண்டிற்கு லக்னோ அணி கொடுத்த ரூ.27 கோடி என்பது மிகப்பெரிய தொகை
- லக்னோ அணி இன்னும் சில திறமையான வீரர்களை வாங்கலாம்.
ஐ.பி.எல். வரலாற்றில் அதிக (ரூ.27 கோடி ) தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட ரிஷப்பண்ட் தனது மோசமான பேட்டிங்கால் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார்.
இந்நிலையில், ரிஷப் பண்டிற்கு லக்னோ அணி கொடுத்த ரூ.27 கோடி என்பது மிகப்பெரிய தொகை என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
தனது யூடியூப் சேனலில் பேசிய ஆகாஷ் சோப்ரா, "தன்னை பொருத்த வரை ரிஷப்பை அணியில் இருந்து விடுவித்து விட்டு மினி ஏலத்தில் ரூ.14 அல்லது ரூ.15 கோடிக்கு ஏலம் எடுக்கலாம். மீதமுள்ள தொகையை வைத்து இன்னும் சில திறமையான வீரர்களை வாங்கலாம். அதன்மூலம் நீங்கள் அடுத்த பஞ்சாப் கிங்ஸ் அணியாக மாறலாம்" என்று தெரிவித்தார்.
- ஆர்சிபி அணி 18 வருடத்திற்குப் பிறகு ஐபிஎல் கோப்பையை வென்றது
- சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் ஏற்பட்ட நெரிசலில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி 18 வருடத்திற்குப் பிறகு ஐபிஎல் கோப்பையை வென்றது. இதனையடுத்து ஆர்சிபி அணிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் முதலமைச்சர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதேநேரத்தில் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த கொண்டாட்ட விழாவில் பங்கேற்க லட்சணக்கான ரசிகர்கள் திரண்டனர். ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் ரசிகர்கள் திரண்டதால் போலீசாரால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியா நிலை ஏற்பட்டது. இதனால் சின்னசாமி கிரிக்கெட் மைதான நுழைவாயிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்த கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. லட்சணக்கான ரசிகர்கள் திரண்டுள்ள நிலையில் சரியான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படாததுதான் இந்த விபத்துக்கு காரணம் என குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
11 பேர் உயிரிழந்தது தொடர்பாக ஆர்சிபி அணி நிர்வாகி நிகில் சோசாலே, டிஎன்ஏ நிறுவனத்தைச் சேர்ந்த சுனில், கிரண் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், 2026 ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணிக்கு தடை விதிக்கப்படலாம் என்ற தகவல் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
ஐபிஎல் வரலாற்றில், ஒரு அணியை தடை செய்வது ஒன்றும் புதிதல்ல. மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டில் 2015 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
- கர்நாடகா கிரிக்கெட் அசோசியேஷன் சங்கத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- தலைவர், செயலாளர், பொருளாளர் மீது கைது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் தடை விதித்து விசாரணை ஒத்திவைத்தது.
பெங்களூரு:
பெங்களூருவில் ஆர்.சி.பி. அணியின் வெற்றி கொண்டாட்டம் நிகழ்ச்சி 4-ந் தேதி சின்னசாமி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் கப்பன் பார்க் போலீஸ் நிலையத்தில் ஆர்.சி.பி. மேனேஜ்மென்ட், டி.என்.ஏ. என்னும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் கர்நாடகா கிரிக்கெட் அசோசியேஷன் சங்கத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று 4 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் கர்நாடகா கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் வழக்கை ரத்து செய்யக்கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நேற்று மாலை விசாரணைக்கு வந்தது.
அப்போது தலைவர், செயலாளர், பொருளாளர் மீது கைது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் தடை விதித்து விசாரணை ஒத்திவைத்தது. இந்த நிலையில் கர்நாடகா கிரிக்கெட் அசோசியேஷன் சங்க செயலாளர் சங்கர், பொருளாளர் ஜெயராம் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
- உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடும் அறிவித்து உள்ளது.
- கப்பன் பார்க் காவல் நிலையத்தில் கூடுதலாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பெங்களூரு:
ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
இதையடுத்து, பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியம் அருகே நடந்த வெற்றி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியானார்கள். இதனால் வெற்றி பேரணி சோகத்தில் முடிந்தது. இதுகுறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு முதல் மந்திரி சித்தராமையா உத்தரவிட்டார். உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடும் அறிவித்து உள்ளது.
இந்நிலையில், கப்பன் பார்க் காவல் நிலையத்தில் ஏ.எம்.வெங்கடேஷ் என்பவர் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு எதிராக போலீசில் புகார் அளித்துள்ளார்.
அதனை போலீசார் ஏற்றுக்கொண்டனர். இந்த விவகாரத்தில், முன்பே பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர். உடன் சேர்த்து, விசாரணை நடத்த பரிசீலனை செய்யப்படும் என வெங்கடேசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதேபோன்று கப்பன் பார்க் காவல் நிலையத்தில் கூடுதலாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
- பெங்களூரு அணி மீது கர்நாடக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- போலீஸ் கமிஷனர் உள்பட 5 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு அணி கோப்பையை வென்றதை அடுத்து கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அக்கொண்டாட்டத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் இச்சம்பத்திற்கு பலர் கண்டனமும் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்த 11 பேர் பலியானது தொடர்பாக பெங்களூரு அணி மீது கர்நாடக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், போலீஸ் கமிஷனர் உள்பட 5 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், 11 பேர் உயிரிழந்தது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆர்சிபி அணி நிர்வாகி நிகில் சோசாலே, டிஎன்ஏ நிறுவனத்தைச் சேர்ந்த சுனில், கிரண் உள்ளிட்ட 4பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இந்த நெரிசலில் 2 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
- 9 பேர் மருத்துவமனையில் இறந்தனர்.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் சாம்பியன் கோப்பையை வென்றது. ஐ.பி.எல். போட்டிகள் தொடங்கப்பட்ட பின்னர் பெங்களூரு அணி வெற்றி பெறுவது இதுவே முதல் முறை.
இதையடுத்து, கோப்பையை வென்ற பெங்களூரு அணியின் வீரர்களுக்கு கர்நாடக அரசு சார்பில் பெங்களூரு விதானசவுதாவில் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து காலை முதலே லட்சக்கணக்கான பேர் விதானசவுதா முன்பு குவியத் தொடங்கினர். கூட்டம் அதிகரித்து வந்த நிலையில் திடீரென மாலை 3 மணியளவில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பாராட்டு விழா சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து விதானசவுதா முன்பு குவிந்திருந்த லட்சக்கணக்கானோர் கிரிக்கெட் மைதானத்தை நோக்கி புறப்பட்டனர். இதேபோல் பெங்களூரு நகரின் நாலா திசைகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் கிரிக்கெட் ஸ்டேடியத்தை நோக்கி படையெடுத்தனர். இதனால் அந்த பகுதி முழுவதும் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதற்கிடையே சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் பாராட்டு விழாவில் பங்கேற்க இலவச பாஸ் ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் என்ற வதந்தி பரவியது. இதையடுத்து லட்சக்கணக்கானோர் பாஸ் பதிவிறக்கம் செய்து ஸ்டேடியத்துக்கு திரண்டனர்.
சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் பார்வையாளர் கேலரியில் 35,000 இருக்கைகள் உள்ளன. இதில் 5 ஆயிரம் இருக்கைகள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும், வி.ஐ.பி.க்களுக்கும் ஒதுக்கப்பட்டிருந்தது. இதில் 30 ஆயிரம் இருக்கைகள் மட்டுமே ரசிகர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் விளையாட்டு மைதானத்தில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் திரண்டதால் கடுமையான நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் 2 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 9 பேர் மருத்துவமனையில் இறந்தனர். மேலும் 70-க்கும் மேற்பட்டோர் மூச்சு திணறல் மற்றும் காயம் அடைந்து கதறினர்.
மைதானத்தின் 3, 6, 7, 10, 12, 14, 21 ஆகிய வாயில்களில் தள்ளுமுள்ளு, கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலின் போது பலர் மயங்கி விழுந்தனர். சிலருக்கு கை, கால்களில் காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தங்கள் சட்டைகளை கழற்றி காயமடைந்தவர்களை காப்பாற்ற விசிறி அடிக்க முயன்றனர். ஏராளமான ரசிகர்கள் கூடியிருந்ததால், காயமடைந்தவர்களை மீட்க முடியாமல் தவித்து வந்தனர்.
கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், போலீசார் ஒலிபெருக்கிகள் மூலம் மைதானத்தை விட்டு வெளியேறுமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர். "நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளனர். உடனடியாக வீட்டிற்குச் செல்லுங்கள்." ஆம்புலன்ஸ்கள் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். கப்பன் சாலையில் இருந்து மைதானத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் முதலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நேரத்தில், கூட்டத்தை கலைக்க தடியடி நடத்தப்பட்டது. இதனால் மக்கள் பயந்து ஓடினார்கள். இதில் ஒரு பலகை இடிந்து விழுந்தது. இதனால் மக்கள் வெவ்வேறு திசைகளில் ஓட தொடங்கியதால் விபத்து ஏற்பட்டது. கூட்ட நெரிசல் 1½ மணி நேரம் நடந்தது. மேலும் 2 மெட்ரோ ரெயில் நிலையங்களும் மூடப்பட்டது. இதுவும் கூட்ட நெரிசலுக்கு ஒரு காரணமாகும்.
கூட்ட நெரிசல் காரணமாக, காயமடைந்த பெண்கள், குழந்தைகள் உள்பட 70-க்கும் மேற்பட்டோர் சிவாஜிநகரில் உள்ள வைதேஹி மருத்துவமனை, பவுரிங் மற்றும் லேடி கர்சன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 35ஆயிரம் பேர் அமர வேண்டிய இடத்தில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் திரண்டதாலும், இலவச பாஸ் வதந்தி, போதிய போலீஸ் பாதுகாப்பு மற்றும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளாததே இந்த சம்பவத்துக்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது.
- ஆர்சிபி அணி முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது
- ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டம் பெங்களூருவில் நடைபெற்றது.
பெங்களூரு சின்னசாமி மைதானத்திற்கு வெளியே ஆர்சிபி ஐபிஎல் வெற்றி கொண்டாத்திற்காக கூடிய கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவத்திற்கு கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் மன்னிப்பு கோரியுள்ளார்.
இதனிடையே, இந்த கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு மாநில அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்று கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்று பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், "பெங்களூரு கூட்ட நெரிசல் போன்று எந்த மாநிலத்திலும் நடக்கலாம், அதற்காக மாநில அரசுகளை நாம் குற்றம் சுமத்த முடியாது. பாஜக ஆளும் மாநிலங்களில் இதுபோல நடந்தாலும் நாம் அதை அரசியல் செய்ய கூடாது. அதிக அளவிலான மக்கள் வருவார்கள் என ஆர்.சி.பி. அணி நிர்வாகம் எதிர்பார்க்கவில்லை. இந்த துயர சம்பவம் திடீரென நடைபெற்றது" என்று தெரிவித்தார்.






