என் மலர்
கிரிக்கெட் (Cricket)
- கொல்கத்தா அணியில் ஸ்பென்சர் ஜான்சன் அறிமுகமாகிறார்.
- ஆர்சிபி 4 வேகப்பந்து வீச்சாளர்கள், 2 ஸ்பின்னர்களுடன் களம் இறங்குகிறது.
ஐபிஎல் 2025 சீசனின் முதல் போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- ஆர்சிபி அணிகள் மோதுகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கேப்டன் ரஜத் படிதார் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
ஆர்சிபி அணி 4 வேகபந்து வீச்சாளர்கள், இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்குகிறது.
கொல்கத்தா அணி:-
டி காக், வெங்கடேஷ் அய்யர், ரகானே, ரிங்கு சிங், அங்கிரிஷ் ரகுவன்ஷி, சுனில் நரைன், அந்த்ரே ரசல், ராமன்தீப் சிங், ஸ்பென்சர் ஜான்சன், ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி
ஆர்சிபி அணி:-
விராட் கோலி, சால்ட், ரஜத் படிதார், லிவிங்ஸ்டன், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், குருணால் பாண்ட்யா, ரஷிக் தார் சலாம், சுயாஷ் சர்மா, ஹேசில்வுட், யாஷ் தயால்
- விராட் கோலியை கிங் ஆஃப் கிரிக்கெட், கோட் என ஷாருக்கான் பாராட்டினர்.
- ஆர்சிபி அணிக்காக 18 வருடமாக விளையாடும் விராட் கோலிக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
ஐபிஎல் 2025 சீசன் ஈடன் கார்டன் மைதானத்தில் கலைநிகழ்ச்சியுடன் தொடங்கியது. ஷ்ரேயா கோஷல் பாடல்கள் பாடி அசத்தினார். இஷா பதானி கவர்ச்சி நடனம் ஆடினார்.
அதன்பின் ஷாருக்கான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஆர்சிபி அணிக்காக 18 வருடங்கள் தொடர்ந்து விளையாடி வரும் விராட் கோலியை புகழந்து பேசினார். அப்போது கிங் ஆஃப் கிரிக்கெட், கோட் என விராட் கோலியை பாராட்டி வரவேற்றார். அதற்கு விராட் கோலியை நன்றி தெரிவித்தார்.
பின்னர் விராட் கோலி மற்றும் ரிங்கு சிங் உடன் சற்று உரையாடினார். விராட் கோலியை கோல்டன் தலைமுறை எனவும், ரிங்கு சிங்கை இளம் தலைமுறை எனவும் ஷாருக்கு கூறினார்.
பின்னர் இருவருடன் ஆட்டம் போட்டார். ஷாருக்கான் உடன் விராட் கோலியும், ரிங்கு சிங்கும் சேர்ந்து ஆடினர். பின்னர் பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாக தலைவர்களை மேடைக்கு அழைத்தார். ஐபிஎல் கோப்பை மேடைக்கு கொண்டு வரப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. கேகேஆர் அணி கேப்டன் ரகானே, ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார் மேடைக்கு வரவழைக்கப்பட்டனர்.
பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, விராட் கோலிக்கு 18 வருடமாக ஆர்சிபி அணிக்காக விளையாடுவதை கவுரவப்படுத்தும் வகையில் நினைவுப் பரிசு வழங்கினார். நிகழ்ச்சி முடிவில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
- காலை நிகழ்ச்சி தொடக்கத்தில் ஷாருக்கான் உருக்கமாக பேசினார்.
- நடிகை இஷா பதானி கவர்ச்சி உடையில் நடனமாடினார்.
ஐபிஎல் 2025 சீசன் கிரிக்கெட் இன்று கோலாகல கலைநிகழ்ச்சியுடன் தொடங்கியது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உரிமையாளர் ஷாருக்கான் உரையுடன் கலைநிகழ்ச்சி தொடங்கியது.

அதன்பின் பாடகி ஷ்ரேயா கோஷல் இசைக்கலைஞர்களுடன் பாடல்கள் பாடி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். புஷ்பா, ஆயுத எழுத்து உள்ளிட்ட பல்வேறு பட பாடல்களை பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். ரஹ்மான் இசையில் உருவான வந்தே மாதரம் பாடலை இந்தியில் பாடி அசத்தினார்.

அதன்பின் ரசிகர்களை கிரங்க வைக்கும் வகையில் நடிகை இஷா பதானியின் கவர்ச்சி நடனம் இடம் பெற்றது. பின்னர் பஞ்சாபி பாப் பாடகர் கரண் அவுஜ்லா மேடையில் ஆடிக்கொண்டே பாடல் பாடி ரசிகர்களை குஷிப்படுத்தினர்.
- இரண்டு அணிகளும் சமமான ஸ்கோரை பெற்றால் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்படும்.
- சூப்பர் ஓவரில் வெற்றி பெறும்வரை தொடர்ந்து நடத்தப்படும்.
ஐபிஎல் 2025 கிரிக்கெட் சீசன் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. ஈடன் கார்டனில் நடைபெறும் முதல் போட்டியில் கொல்கத்தா- ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஐபிஎல் நிர்வாகம் 10 அணி கேப்டன்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தியது. அதன்பின் ஐபிஎல் விதிமுறைகளில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
பந்தை பளபளப்பாக்க எச்சில் பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. மேலும் இரவு போட்டியின்போது 2-வது இன்னிங்சில் 10 ஓவருக்குப் பிறகு புதிய பந்து பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பனிப்பொழிவு காரணமாக பந்து ஈரமாகிவிடுதால் பந்து வீச்சாளர்கள் பந்து வீச சிரமப்படுவதாக கூறியதன் அடிப்படையில் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சூப்பர் ஓவர் குறித்து ஐபிஎல் நிர்வாகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இரண்டு அணிகளும் சமமான ஸ்கோர் எடுத்திருந்தால் போட்டி டை என அறிவிக்கப்பட்டு, சூப்பர் ஓவர் முறை பயன்படுத்தப்பட்டும். இதில் ஒவ்வொரு அணியின் 3 பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்ய முடியும். 6 பந்துகள் வீசப்படும். இரண்டு விக்கெட் இழந்தால் அணியின் பேட்டிங் முடிவுக்கு வரும்.
ஒருவேளை சூப்பர் ஓவரின்போது இரண்டு அணிகளும் சமநிலையான ஸ்கோரை பெற்றால், மீண்டும் சூப்பர் ஓவர் பயன்படுத்தப்படும். இப்படி ஒரு வெற்றி பெறும் வரை சூப்பர் ஓவர் சென்று கொண்டே இருக்கும்.
இந்த நிலையில் சூப்பர் ஓவருக்கு ஒரு மணி நேரம்தான் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த ஒரு மணி நேரத்திற்குள் எத்தனை முறை வேண்டுமென்றால் சூப்பர் ஓவர் விளையாட முடியும் எனத் தெரிவித்துள்ளது.
- கொல்கத்தா அணி ரகானே தலைமையில் களம் இறங்குகிறது.
- ரஜத் படிதார் தலைமையில் ஆர்சிபி கொல்கத்தாவை எதிர்கொள்கிறது.
10 அணிகள் பங்கேற்கும் ஐபிஎல் 2025 கிரிக்கெட் திருவிழா இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கோலாகலமாக தொடங்குகிறது.
இன்றிரவு நடக்கும் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
தற்போது மெகா ஏலத்துக்கு பிறகு ஒவ்வொரு அணிகளும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. சமநிலையான ஆடும் லெவன் அணியை தேர்வு செய்ய இரண்டு அணிகளுக்கும் ஒருசில போட்டிகள் தேவைப்படும். கொல்கத்தா அணி கேப்டனாக ரகானேவும் ஆர்சிபி அணி கேப்டனாக ரஜத் படிதாரும் உள்ளனர்.
இந்த போட்டிக்கு வருண பகவான் வழியிடுவாரா? என்ற கேள்வி எழுந்தது. ஏனென்றால் இன்று கொல்கத்தாவில் பரவலாக மழை பெய்யும். அதுவும் போட்டி நடைபெறும் நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
நேற்றிரவு கொல்கத்தா நகரில் பரவலாக மழை பெய்தது. இன்று காலை முதல் தற்போது வரை மழை பெய்யவில்லை. போட்டி நடைபெறும் நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பில்லை என வானிலை நிலவரம் மூலம் தெரியவந்துள்ளது. இதனால் போட்டி மழை குறுக்கீடு இல்லாமல் நடைபெற வாய்ப்புள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
இன்றைய போட்டி நடைபெறுவதற்கு முன்னதாக கலைநிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இதில் பாடகி ஸ்ரேயா கோஷல், நடிகை திஷா பதானி மற்றும் பஞ்சாபி பாப் பாடகர் கரண் அவுஜ்லா ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
கொல்கத்தா அணி:-
ரகானே, டி காக், ரஹ்மானுல்லா குர்பாஸ், அங்கிரிஷ் ரகுவன்ஷி, ரோவ்மேன் பொவேல், மணிஷ் பாண்டே, லவ்னித் சிசோடியா, ரிங்கு சிங் ஆகியோர் பேட்ஸ்மேன்களாக உள்ளனர், வெங்கடேஷ் அய்யர், அனுகுல் ராய், மொயீன் அலி, ராமன்தீப் சிங், அந்த்ரே ரசல், அன்ரிச் நோர்ஜே, வைபவ் ஆரோரா, மயங்க் மார்கண்டே, ஸ்பென்சர் ஜான்சன், ஹர்ஷித் ராணா, சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி, சேத்தன் சக்காரியா
ஆர்சிபி அணி;-
ரஜத் படிதார், விராட் கோலி, பில் சால்ட், ஜிதேஷ் சர்மா, தேவ்தத் படிக்கல், ஸ்வாஸ்திக் சிகாரா, லிவிங்ஸ்டன், குருணால் பாண்ட்யா, ஸ்வப்னில் சிங், டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்டு, மனோஜ் பாண்டேஜ், ஜேக்கப் பெத்தேல், ஜோஷ் ஹேசில்வுட், ரஷிக் தார், சுயாஷ் சர்மா, புவனேஸ்வர் குமார், நுவன் துசாரா, லுங்கி நிகிடி, அபிநந்தன் சிங், மோகித் ரதீ, யாஷ் தயால்.
- சுரேஷ் ரெய்னா சிஎஸ்கே அணிக்காக 171 இன்னிங்சில் 4687 ரன்கள் அடித்துள்ளார்.
- எம்எஸ் தோனி 202 இன்னிங்சில் 4,669 ரன் எடுத்துள்ளார்.
18-வது ஐ.பி.எல். சீசன் இன்று தொடங்குகிறது. நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சிஎஸ்கே- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த சீசனில் சிஎஸ்கே அணிக்காக ரெய்னா படைத்துள்ள சாதனையை எம்.எஸ். தோனி முறியடிக்க உள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிக ரன் எடுத்தவர் பட்டியலில் சுரேஷ் ரெய்னா முதலிடத்தில் உள்ளார். அவர் 2008 முதல் 2021 வரை 171 இன்னிங்சில் விளையாடி 4,687 ரன் எடுத்துள்ளார். இதில் 1 சதமும், 33 அரை சதமும் அடங்கும். சராசரி 32.32 ஆகும்.
ரெய்னாவின் சாதனையை இந்த சீசனில் தோனி முறியடிக்க உள்ளார். அதற்கு அவருக்கு இன்னும் 19 ரன்களே தேவை. எம்எஸ் தோனி 202 இன்னிங்சில் 4,669 ரன் எடுத்துள்ளார். அவரது ஸ்கோரில் 22 அரை சதம் அடங்கும். சராசரி 40.25 ஆகும்.
ஜடேஜா இன்னும் 8 விக்கெட் கைப்பற்றினால் அதிக விக்கெட் கைப்பற்றிய சி.எஸ்.கே. வீரர் என்ற பெருமையை பெறுவார். பிராவோ 140 விக்கெட் (116 போட்டி) வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்சிஸ் வீரர்களில் முதல் இடத்தில் உள்ளார். ஜடேஜா 172 போட்டியில் 133 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இந்த சீசனில் சில போட்டிகளில் ஆட வில்லை. அவர் 6 விக்கெட் கைப்பற்றினால் அதிக விக்கெட் எடுத்த மும்பை இந்தியன்ஸ் வீரர் என்ற சாதனையை பெறுவார். மலிங்காவை (170 விக்கெட்) முந்துவார். பும்ரா 165 விக்கெட் எடுத்துள்ளார்.
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக பிராவோ நியமிக்கப்பட்டுள்ளார்.
- கொல்கத்தா வெற்றி பெற வேண்டும் என்றுதான் நான் விரும்புவேன்.
ஐ.பி.எல். 2025 டி20 கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்குகிறது. இரவு 7.30 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் -ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
இந்த ஐ.பி.எல். தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் மற்றும் சிஎஸ்கே அணியின் முன்னாள் பந்து வீச்சு பயிற்சியாளர் பிராவோ கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடந்தால் எந்த அணியை ஆதரிப்பீர்கள் என்று பேட்டி ஒன்றில் பிராவோவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த பிராவோ, "கே.கே.ஆர். vs சிஎஸ்கே அணிகள் ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாடினால், கொல்கத்தா வெற்றி பெற வேண்டும் என்றுதான் நான் விரும்புவேன். நான் அந்த அணியில் தான் ஆலோசகராக இருக்கிறேன்.
இதனை எம்.எஸ்.தோனி புரிந்துகொள்வார். எனக்கு கொல்கத்தா அணியில் இருந்து எனக்கு வாய்ப்பு கிடைத்தபோது, நான் தோனியை தான் அழைத்து பேசினேன். அவர் சம்மதம் சொன்னபிறகு தான் அந்த அழைப்பை நான் ஏற்றுக்கொண்டேன். அதுதான் நான் தோனி மேல் வைத்திருக்கும் மரியாதை" என்று தெரிவித்தார்.
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல்-இல் சிறந்த அணிகளில் ஒன்றாகும்.
- சென்னை அணியை தோற்கடிக்கும் அணி தலைப்புச் செய்திகளில் இடம்பெறும்.
ஐ.பி.எல். 2025 டி20 கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்குகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமை 2 போட்டிகள் நடைபெறுகின்றன. இரவு 7:30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்த போட்டிக்காக இரண்டு அணிகளும் தயாராகி வருகின்றன. இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களும், மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களும் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், CSK vs MI போட்டியானது ஐபிஎல்-இல் இந்தியா Vs பாகிஸ்தான் போட்டியை போன்றது என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஹர்பஜன் சிங், "சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல்-இல் சிறந்த அணிகளில் ஒன்றாகும். சென்னை அணியை தோற்கடிக்கும் அணி தலைப்புச் செய்திகளில் இடம்பெறும். மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் அது பொருந்தும்.
ஒவ்வொரு ஐபிஎல் சீசனிலும் பல இளம் வீரர்கள் வருகிறார்கள். ரன்கள் அடிக்கிறார்கள், விக்கெட்டுகளை எடுக்கிறார்கள். ஆனால் என்னுடைய பார்வை எல்லாம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ரியான் பராக் மேல் தான் உள்ளது. அவரிடம் அற்புதமான திறமை உள்ளது" என்று தெரிவித்தார்.
- கேன் வில்லியம்சன் பல ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வந்தார்.
- கடந்த சில ஆண்டுகளில் ஐதராபாத், குஜராத் அணிக்காக கேன் வில்லியம்சன் ஆடியுள்ளார்.
நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் பல ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வந்தார். கடந்த சில ஆண்டுகளில் அவர் ஐதராபாத், குஜராத் அணிக்காக ஆடியுள்ளார்.
ஆனால் அண்மையில் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் அவரை எந்த எந்த அணியும் ஏலத்தில் எடுக்காததால் வரும் ஐபிஎல் தொடரில் கேன் வில்லியம்சன் வர்ணனை செய்ய உள்ளார்
இதன்மூலம் கிரிக்கெட்டில் முதல் முறையாக வர்ணனையாளராக கேன் வில்லியம்சன் அறிமுகமாகிறார்
- ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் 13 இடங்களிலும் நிகழ்ச்சியை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
- மற்ற இடங்களில் கலந்துகொள்ளும் பிரபலங்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.
ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் நாளை 22-ந் தேதி தொடங்குகிறது. இந்த சீசனில் மொத்தம் 10 அணிகள் விளையாடவுள்ளன. கிரிக்கெட் திருவிழாவுக்கு முன் பிரமாண்டமான தொடக்க விழா நடக்கவுள்ளது. இதில் பாலிவுட் நடிகர், நடிகைகள் எனப் பலர் கலந்து கொள்வார்கள்.
17-வது சீசனின் தொடக்க விழா பிரமாண்டமாக நடைபெற்றது, இதில் டைகர் ஷெராஃப், ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அக்ஷய் குமார் ஆகியோர் ஸ்டேடியத்தில் கலக்கினர்.
அந்த வகையில் இந்த சீசனில் பாலிவுட் பிரபலங்கள் கலக்க இருக்கின்றனர். நடிகை ஸ்ரத்தா கபூர், நடிகர் வருண் தவான், பாடகர் அரிஜித் சிங், திஷா பதானி மற்றும் ஸ்ரேயா கோஷல் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.
மேலும் முன்னெப்போதும் இல்லாத வகையில் போட்டிகள் நடைபெறும் 13 இடங்களிலும் நிகழ்ச்சியை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. அதன்படி நாளை 22-ம் தேதி கொல்கத்தாவில் நடக்கும் தொடக்க விழா கொண்டாட்டத்தில் இந்தி நடிகை திஷா பதானி மற்றும் பாடகி ஸ்ரேயா கோஷல் பங்கேற்க உள்ளனர். மற்ற இடங்களில் கலந்துகொள்ளும் பிரபலங்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.
இவர்களை தொடர்ந்து சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள சென்னை, மும்பை போட்டிக்கு முன்பாக நடைபெறும் தொடக்க நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் அனிருத்தின் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 1,053 ரனகளும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக 1,057 ரன்களும், பஞ்சாப் அணிக்கு எதிராக 1,030 ரன்களும் அடித்துள்ளார்.
- 252 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 8004 ரன்கள் குவித்துள்ளார்.
ஐ.பி.எல். 2025 சீசன் நாளை தொடங்குகிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி மழையினால் பாதிக்க வாய்ப்புள்ளது. வானிலை மையம் ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது.
நாளை நடக்கும் போட்டியில் விராட் கோலி ஒரு அரிய சாதனையை படைக்க இருக்கிறார். அவர் நாளைய போட்டியில் 38 ரன் அடித்தால் கொல்கத்தா அணிக்கு எதிராக ஆயிரம் ரன்களை கடப்பார்.
இதன்மூலம் நான்கு அணிகளுக்கு எதிராக ஆயிரம் ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைப்பார். விராட் கோலி இதற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 1,053 ரனகளும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக 1,057 ரன்களும், பஞ்சாப் அணிக்கு எதிராக 1,030 ரன்களும் அடித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் ஆர்சிபி அணிக்காக மட்டுமே விளையாடி வரும் விராட் கோலிக்கு இது 18 ஆவது சீசன் ஆகும் இதுவரை 252 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 8004 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சிஎஸ்கே- மும்பை இந்தியன்ஸ் போட்டி ஞாயிறு இரவு நடைபெறுகிறது.
- இன்று இரு அணி வீரர்களும் பயிற்சி மேற்கொண்டனர்.
ஐ.பி.எல். 2025 டி20 கிரிக்கெட் திருவிழா நாளை தொடங்குகிறது. நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை 2 போட்டிகள் நடைபெறுகின்றன. இரவு 7:30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்த போட்டிக்காக இரண்டு அணிகளும் தயாராகி வருகின்றன. இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களும், மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களும் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டனர்.
தீவிர வலைப் பயிற்சிக்கு இந்தியா ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணி கேப்டன் ரோகித் சர்மா, தீவிர வலைப்பயிற்சிக்குப் பின், அங்கு கூடியிருந்த ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் வழங்கினார். மேலும் அவர்களுடன் செல்பியும் எடுத்துக் கொண்டார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி வலைப்பயிற்சியில் ஈடுபட்டார்.






