என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • 28-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.
    • ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்ய முதலில் களமிறங்குகிறது.

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் மாலை 3.30 மணிக்கு ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் அரங்கேறும் 28-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.

    இதில், தனது முதல் இரு ஆட்டங்களில் ஐதராபாத், கொல்கத்தாவிடம் தோல்வி கண்ட முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் அணி அடுத்த இரண்டு ஆட்டங்களில் சென்னை, பஞ்சாப்பை பதம் பார்த்தது.

    முந்தைய ஆட்டத்தில் குஜராத்திடம் பணிந்தது. அந்த ஆட்டத்தில் 218 ரன் இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் 159 ரன்னில் அடங்கி 58 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

    உள்ளூரில் முதல் ஆட்டத்தில் கால்பதிக்கும் ராஜஸ்தான் வெற்றியை சொந்தமாக்க அதிக ஆர்வம் காட்டும்.

    பெங்களூரு அணி முதல் இரு ஆட்டங்களில் கொல்கத்தா, சென்னையை அடுத்தடுத்து தோற்கடித்தது. அடுத்த ஆட்டத்தில் குஜராத்திடம் பணிந்தது. அதற்கு அடுத்தபடியாக மும்பையை வீழ்த்தியது.

    கடந்த ஆட்டத்தில் சொந்த மண்ணில் 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியிடம் வீழ்ந்தது.

    இரு அணிகளும் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்ப தீவிரம் காட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

    இந்நிலையில், இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    இதனால், இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்ய முதலில் களமிறங்குகிறது.

    • 2011 முதலே ஆர்சிபி "கோ க்ரீன்" என்ற கலாச்சார முன்னெடுப்பை நிகழ்த்தி வருகிறது.
    • பச்சை நிற ஜெர்சிகள் 100 சதவீதம் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களால் செய்யப்பட்டவை

    ஐ.பி.எல். 2025 தொடரின் 27-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன, இப்போட்டி மதியம் 3.30 மணிக்கு தொடங்குகிறது.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள போட்டியில் பெங்களூரு அணி பச்சை நிற ஜெர்சியில் களமிறங்க உள்ளது.

    இந்த தகவலை அந்த அணி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும், அதில், எங்களின் இந்த சிறப்பான பச்சை நிற ஜெர்சிகள் 100 சதவீதம் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களால் செய்யப்பட்டவை என்றும் தெரிவித்துள்ளது.

    2011 முதலே ஆர்சிபி "கோ க்ரீன்" என்ற கலாச்சார முன்னெடுப்பை நிகழ்த்தி வருகிறது. இதன் மூலமாக வருங்கால தலைமுறையினருக்கு தூய்மையான மற்றும் பசுமையான சூழ்நிலையை உருவாக்குவதற்கான விழிப்புணர்வை தருகிறது.

    • ஐ.சி.சி. சாா்பில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடத்தப்பட்டு வருகிறது.
    • 2 பந்துகளால் பேட்ஸ் மேன்கள் ரன்களை குவிக்க வசதியாக உள்ளது என்ற புகாா் எழுந்துள்ளது.

    உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் மற்றும் ஒருநாள் போட்டி விதிகளில் மாற்றம் கொண்டு வர சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) திட்டமிட்டுள்ளது.

    ஐ.சி.சி. சாா்பில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடத்தப்பட்டு வருகிறது. இதன் புள்ளிகள் நடை முறையில் மாறுதல் கொண்டு வரப்படுகிறது. அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் போது இந்த மாறுதல் நடைமுறைக்கு வரும்.

    ஒவ் வொரு ஆட்டத்திலும் வெற்றியின் வித்தியாசத்தை பொறுத்து போனஸ் புள்ளிகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. எதிர் அணிகளின் பலத்தை பொறுத்தும், சொந்த மைதானம் இல்லாமல் வெளி மைதானங்களில் வெல்வதை பொறுத்தும் புள்ளிகள் வழங்கப்படுகிறது.

    ஒருநாள் போட்டியில் தற்போது ஒரு இன்னிங்சில் 2 பந்துகள் பயன்படுத்தும் முறை ரத்து செய்யப்படும். முன்னாள் கேப்டன் கங்குலி தலைமையிலான குழு இது தொடா்பாக பரிந்துரைத்து உள்ளது.

    2 பந்துகளால் பேட்ஸ் மேன்கள் ரன்களை குவிக்க வசதியாக உள்ளது என்ற புகாா் எழுந்துள்ளது. இதனால் ஒரே ஒரு பந்தை பயன்படுத்த முடிவு செய் யப்பட உள்ளது. டெஸ்ட் ஆட்டங்களில் டைமா் கடிகாரத்தை பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

    ஜிம்பாப்வேயில் இந்த வார இறுதியில் நடைபெறும் ஐ.சி.சி. கூட்டத்தின் போது இதுகுறித்து முடிவு எடுக்கப் படும் என்று கூறப்படுகிறது. 

    • தொடர்ந்து 5 தோல்விகளை முதல் முறையாக சி எஸ் கே அணி பெற்று மோசமான சாதனை படைத்துள்ளது.
    • கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சி.எஸ்.கே. அணி 61 Dot Ball பந்துகளை ஆடியது

    நடப்பு ஐபிஎல் தொடரின் 25-வது லீக் ஆட்டம் நேற்று முன்தினம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

    இப்போட்டியில் முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், ஐபிஎல் சீசனில் தொடர்ந்து 5 தோல்விகளை முதல் முறையாக சி எஸ் கே அணி பெற்று மோசமான சாதனை படைத்துள்ளது.

    இந்த போட்டியில் 20 ஓவர்கள் விளையாடிய சி.எஸ்.கே. அணி 61 Dot Ball பந்துகளை ஆடியது. இதன்மூலம் 25,500 மரங்களை நட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உதவியது.

    இதனையடுத்து, சேப்பாக்கம் மைதானம் அடர்ந்த மரங்கள் நிறைந்த காடாக விரைவில் மாறிவிடும் என்று இணையத்தில் நெட்டிசன்கள் கிண்டலடித்தனர்.

    இந்நிலையில், சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 61 Dot Ball பந்துகளை வீசியதை குறிக்கும் விதமாக கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் மரம் நடுவது போன்ற புகைப்படத்தை அந்த அணி வெளியிட்டுள்ளது.

    இந்த புகைப்படம் சென்னை அணியை கிண்டலடிக்கும் விதமாக உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • நான் சரியாக விளையாடாத போதும் அணி நிர்வாகமும், கேப்டன் கம்மின்சும் என் மீது நம்பிக்கை வைத்தனர்.
    • ஒட்டுமொத்த அணியும் என்னுடைய பெற்றோருக்காக காத்திருந்தது. அவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்.

    ஐ.பி.எல். 2025 தொடரின் 27-வது போட்டி ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 245 ரன்கள் குவித்துள்ளது.

    இதையடுத்து, 246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி 18.3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 247 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அதிரடியாக ஆடிய அபிஷேக் சர்மா சதமடித்து அசத்தினார். அபிஷேக் சர்மா 55 பந்தில் 10 சிக்சர், 14 பவுண்டரி உள்பட 141 ரன் குவித்து ஆட்டமிழந்தார்.

    ஆட்ட நாயகன் விருது பெற்ற அபிஷேக் சர்மா கூறியாதவது:-

    நான் சரியாக விளையாடாத போதும் அணி நிர்வாகமும், கேப்டன் கம்மின்சும் என் மீது நம்பிக்கை வைத்தனர். எனக்கும், டிராவிஸ் ஹெட்டுக்கும் இந்த நாள் மிகவும் சிறப்பானது. ஆடுகளத்தில் இருந்த பவுன்ஸ் காரணமாக பின்புறம் சில ஷாட்டுகளை விளையாடினேன். ஒட்டுமொத்த அணியும் என்னுடைய பெற்றோருக்காக காத்திருந்தது. அவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்.

    அணிக்குள் அதிகம் ஆலோசனையில் ஈடுபடவில்லை. எங்களது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். இந்த போட்டி எனக்கு மிகவும் சிறப்பானது. தொடர்ச்சியான தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்தேன். இளம் வீரராக அணியை மீண்டும் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வது மிகவும் கடிமனாக இருந்தது. யுவராஜ் சிங்குக்கு நன்றி கூற கடமைப்பட்டு இருக்கிறேன். அவருடன் நான் தொடர்ச்சியாக பேசிக் கொண்டிருக்கிறேன். அவரது அறிவுரைகள் எனக்கு மிகவும் உதவியாக இருக்கின்றன. சூர்யகுமார் யாதவுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவருடனும் தொடர்ந்து பேசி வருகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.
    • அபிஷேக் சர்மா அதிரடியாக ஆடி சதமடித்தார்

    நடப்பு ஐபிஎல் தொடரின் 27வது லீக் ஆட்டம் ஐதராபாத்தில் நடந்தது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.

    முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் 245 ரன்களைக் குவித்தது. தொடர்ந்து ஆடிய ஐதராபாத் அணி 247 ரன்கள் எடுத்து வென்றது. அபிஷேக் சர்மா அதிரடியாக ஆடி சதமடித்தார். அத்துடன் அணி வெற்றி பெற முக்கிய பங்கு வகித்தார்.

    போட்டி முடிந்த பின்பு அபிஷேக் சர்மாவின் கொண்டாட்டத்தை பஞ்சாப் அணியின் இணை நிறுவனர் ப்ரீத்தி ஜிந்தா Recreate செய்தார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    • புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில இருந்த ஐதராபாத் அணி 8 ஆம் இடத்திற்கு முன்னேறியது.
    • புள்ளிப்பட்டியலில் மும்பை 9ம் இடத்தில் உள்ளது

    ஐ.பி.எல். 2025 தொடரின் 27-வது போட்டி ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 245 ரன்கள் குவித்துள்ளது.

    இதையடுத்து, 246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி 18.3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 247 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில இருந்த ஐதராபாத் அணி 8 ஆம் இடத்திற்கு முன்னேறியது.

    இதனையடுத்து, தொடர் தோல்விகளால் துவண்டு கிடைக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்திற்குச் சென்றது. மும்பை இந்தியன்ஸ் அணி 9ம் இடத்தில் உள்ளது.

    • மெக்குர்க், கேப்டன் அக்‌ஷர் பட்டேலிடம் இருந்து இன்னும் சிறந்த ஆட்டம் வெளிப்படவில்லை.
    • ஒருங்கிணைந்து செயல்பட்டு எழுச்சி காண மும்பை அணி தீவிரமாக முயற்சிக்கும்.

    நடப்பு தொடரில் தோல்வியை சந்திக்காத ஒரே அணியாக டெல்லி விளங்குகிறது. அந்த அணி லக்னோ, ஐதராபாத், சென்னை, பெங்களூரு அணிகளை தொடர்ச்சியாக வீழ்த்தி 4 வெற்றிகளை பெற்றுள்ளது. டெல்லி அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு பாராட்டும் விதமாக உள்ளது. பேட்டிங்கில் லோகேஷ் ராகுல், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், பாப் டு பிளிஸ்சிஸ், அபிஷேக் போரல், அஷூதோஷ் சர்மாவும், பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், விப்ராஜ் நிகமும் நல்ல நிலையில் உள்ளனர். மெக்குர்க், கேப்டன் அக்ஷர் பட்டேலிடம் இருந்து இன்னும் சிறந்த ஆட்டம் வெளிப்படவில்லை. இந்த சீசனில் டெல்லி அணி சொந்த ஊரில் விளையாடும் முதல் ஆட்டம் இதுவாகும். இதனால் அவர்கள் தங்களது வெற்றியை தொடர முழு திறனையும் வெளிப்படுத்துவார்கள்.

    5 முறை சாம்பியனான மும்பை அணி 5 ஆட்டங்களில் ஆடி ஒரு வெற்றி (3-வது ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிராக), 4 தோல்வியுடன் (சென்னை, குஜராத், லக்னோ, பெங்களூரு அணிகளிடம்) தகிடுதத்தம் போட்டு வருகிறது. கடந்த 4 ஆட்டங்களில் 38 ரன்கள் மட்டுமே எடுத்துள்ள தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா பார்முக்கு வரமுடியாமல் தடுமாறுவது தலைவலியாக இருக்கிறது. காயம் காரணமாக 3 மாத இடைவெளிக்கு பிறகு கடந்த ஆட்டத்தில் திரும்பிய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு நிச்சயம் சவாலாக இருப்பார். ஒருங்கிணைந்து செயல்பட்டு எழுச்சி காண மும்பை அணி தீவிரமாக முயற்சிக்கும். டெல்லி அணியின் வீறுநடைக்கு மும்பை முட்டுக்கட்டை போடுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    (நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்)

    • உள்ளூரில் முதல் ஆட்டத்தில் கால்பதிக்கும் ராஜஸ்தான் வெற்றியை சொந்தமாக்க அதிக ஆர்வம் காட்டும்.
    • பெங்களூரு அணி முதல் இரு ஆட்டங்களில் கொல்கத்தா, சென்னையை அடுத்தடுத்து தோற்கடித்தது.

    தனது முதல் இரு ஆட்டங்களில் ஐதராபாத், கொல்கத்தாவிடம் தோல்வி கண்ட முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் அணி அடுத்த இரண்டு ஆட்டங்களில் சென்னை, பஞ்சாப்பை பதம் பார்த்தது. முந்தைய ஆட்டத்தில் குஜராத்திடம் பணிந்தது. அந்த ஆட்டத்தில் 218 ரன் இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் 159 ரன்னில் அடங்கி 58 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ராஜஸ்தான் அணியில் பேட்டிங்கில் கேப்டன் சஞ்சு சாம்சன், ஹெட்மயர், ரியான் பராக், துருவ் ஜூரெல் வலுவூட்டுகின்றனர். நிதிஷ் ராணா, ஜெய்ஸ்வாலும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மேலும் பலமடையும். பந்து வீச்சில் ஹசரங்கா, தீக்ஷனா, சந்தீப் ஷர்மா, ஜோப்ரா ஆர்ச்சர் மிரட்டக்கூடியவர்கள். பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வீழ்த்தி கலக்கிய வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் இந்த ஆட்டத்திலும் எதிரணிக்கு அச்சுறுத்தலாக விளங்குவார் எனலாம். உள்ளூரில் முதல் ஆட்டத்தில் கால்பதிக்கும் ராஜஸ்தான் வெற்றியை சொந்தமாக்க அதிக ஆர்வம் காட்டும்.

    பெங்களூரு அணி முதல் இரு ஆட்டங்களில் கொல்கத்தா, சென்னையை அடுத்தடுத்து தோற்கடித்தது. அடுத்த ஆட்டத்தில் குஜராத்திடம் பணிந்தது. அதற்கு அடுத்தபடியாக மும்பையை வீழ்த்தியது. கடந்த ஆட்டத்தில் சொந்த மண்ணில் 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியிடம் வீழ்ந்தது. அந்த ஆட்டத்தில் முதல் 3.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 61 ரன் திரட்டி வியக்கவைத்த அந்த அணி அதன் பிறகு வேகமாக விக்கெட்டை இழந்ததால் 163 ரன்னில் கட்டுப்படுத்தப்பட்டது. அதனை 13 பந்துகள் மீதம் வைத்து டெல்லி அணி எட்டிப்பிடித்தது. பெங்களூரு அணியில் பேட்டிங்கில் விராட் கோலி, கேப்டன் ரஜத படிதார், பில் சால்ட் அசத்துகிறார்கள். தொடர்ந்து ஏமாற்றம் அளித்து வரும் தேவ்தத் படிக்கல் நல்ல பங்களிப்பை அளிக்க வேண்டியது அவசியமானதாகும். பந்து வீச்சில் ஹேசில்வுட், குருணல் பாண்ட்யா, யாஷ் தயாள், புவனேஷ்வர் குமார் வலுசேர்க்கின்றனர். இரு அணிகளும் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்ப தீவிரம் காட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

    • ஐதராபாத் அணியின் அபிஷேக் சர்மா 40 பந்தில் சதமடித்து அசத்தினார்.
    • அபிஷேக் சதமடித்து விட்டு ஒரு துண்டுச்சீட்டை எடுத்து, ரசிகர்களை நோக்கி காட்டினார்.

    நடப்பு ஐபிஎல் தொடரின் 27வது லீக் ஆட்டம் ஐதராபாத்தில் நடந்தது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.

    முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் 245 ரன்களைக் குவித்தது. தொடர்ந்து ஆடிய ஐதராபாத் அணி 247 ரன்கள் எடுத்து வென்றது. அபிஷேக் சர்மா அதிரடியாக ஆடி சதமடித்தார். அத்துடன் அணி வெற்றி பெற முக்கிய பங்கு வகித்தார்.

    இந்நிலையில், ஐதராபாத் அணியின் அபிஷேக் சர்மா 40 பந்தில் சதமடித்து அசத்தினார். சதமடித்து விட்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுகையில் ஒரு துண்டுச்சீட்டை எடுத்து, ரசிகர்களை நோக்கி காட்டினார்.

    அந்த துண்டுச்சீட்டில், 'This one is for Orange Army' (ஆரஞ்சு ஆர்மி ரசிகர்களே, இது உங்களுக்காகத்தான்) என எழுதப்பட்டிருந்தது.

    போட்டி முடிந்ததும் அபிஷேக் சர்மாவின் துண்டுசீட்டு குறித்து பேசிய டிராவிஸ் ஹெட், "இந்த துண்டுசீட்டு 6 ஆட்டங்களாக அபிஷேக் சர்மாவின் பாக்கெட்டில் தான் இருந்தது. இன்று இரவு அது வெளிவந்ததில் மகிழ்ச்சி" என்று கிண்டலாக தெரிவித்தார்.

    • பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்து ரன்களை குவித்த போது ப்ரீத்தி ஜிந்தா மகிழ்ச்சியாகவும் இருந்தார்.
    • கடினமாக இலக்கை அசால்ட்டாக ஐதராபாத் அணி எட்டியவுடன் காவ்யா மகிழ்ச்சியாக காணப்பட்டார்.

    ஐ.பி.எல். 2025 தொடரின் 27-வது போட்டி ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 245 ரன்கள் குவித்துள்ளது.

    இதையடுத்து, 246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி 18.3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 247 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அதிரடியாக ஆடிய அபிஷேக் சர்மா சதமடித்து அசத்தினார். அபிஷேக் சர்மா 55 பந்தில் 10 சிக்சர், 14 பவுண்டரி உள்பட 141 ரன் குவித்து ஆட்டமிழந்தார்.

    ஐதராபாத் அணியின் உரிமையாளரான காவ்யா மாறன் மற்றும் பஞ்சாப் அணியின் உரிமையாளரான ப்ரீத்தி ஜிந்தா ஆகியோர் இப்போட்டியை நேரில் கண்டு களித்தனர். பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்து ரன்களை குவித்த போது காவ்யா வாடிய முகத்துடனும் ப்ரீத்தி ஜிந்தா மகிழ்ச்சியாகவும் இருந்தார்.

    கடினமாக இலக்கை அதிரடியாக ஆடி அசால்ட்டாக ஐதராபாத் அணி எட்டியவுடன் காவ்யா மகிழ்ச்சியாகவும் ப்ரீத்தி ஜிந்தா சோகமாகவும் காணப்பட்டார். இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

    • முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் 245 ரன்களைக் குவித்தது.
    • தொடர்ந்து ஆடிய ஐதராபாத் அணி 247 ரன்கள் எடுத்து வென்றது

    ஐதராபாத்:

    நடப்பு ஐபிஎல் தொடரின் 27வது லீக் ஆட்டம் ஐதராபாத்தில் நேற்று நடந்தது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.

    முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் 245 ரன்களைக் குவித்தது. தொடர்ந்து ஆடிய ஐதராபாத் அணி 247 ரன்கள் எடுத்து வென்றது. அபிஷேக் சர்மா அதிரடியாக ஆடி சதமடித்தார். அத்துடன் அணி வெற்றி பெற முக்கிய பங்கு வகித்தார்.

    இந்நிலையில், ஐதராபாத் அணியின் அபிஷேக் சர்மா 40 பந்தில் சதமடித்து அசத்தினார். சதமடித்து விட்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுகையில் ஒரு துண்டுச்சீட்டை எடுத்து, ரசிகர்களை நோக்கி காட்டினார். அந்தத் துண்டுச்சீட்டில் என்ன எழுதியிருந்தது?

    அபிஷேக் சர்மா தனது பாக்கெட்டில் இருந்து காண்பித்த ஒரு துண்டுச்சீட்டில், 'This one is for Orange Army' (ஆரஞ்சு ஆர்மி ரசிகர்களே, இது உங்களுக்காகத்தான்) என எழுதப்பட்டிருந்தது.

    தொடர் தோல்வியால் துவண்டிருந்த ரசிகர்களை ஊக்குவிக்கும் விதமாகவே இப்படி எழுதியுள்ளார் என விமர்சகர்கள் தெரிவித்தனர்.

    ×