என் மலர்tooltip icon

    விளையாட்டு

    IPL 2025: டெல்லியின் ஆதிக்கத்துக்கு முட்டுக்கட்டை போடுமா மும்பை?
    X

    IPL 2025: டெல்லியின் ஆதிக்கத்துக்கு முட்டுக்கட்டை போடுமா மும்பை?

    • மெக்குர்க், கேப்டன் அக்‌ஷர் பட்டேலிடம் இருந்து இன்னும் சிறந்த ஆட்டம் வெளிப்படவில்லை.
    • ஒருங்கிணைந்து செயல்பட்டு எழுச்சி காண மும்பை அணி தீவிரமாக முயற்சிக்கும்.

    நடப்பு தொடரில் தோல்வியை சந்திக்காத ஒரே அணியாக டெல்லி விளங்குகிறது. அந்த அணி லக்னோ, ஐதராபாத், சென்னை, பெங்களூரு அணிகளை தொடர்ச்சியாக வீழ்த்தி 4 வெற்றிகளை பெற்றுள்ளது. டெல்லி அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு பாராட்டும் விதமாக உள்ளது. பேட்டிங்கில் லோகேஷ் ராகுல், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், பாப் டு பிளிஸ்சிஸ், அபிஷேக் போரல், அஷூதோஷ் சர்மாவும், பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், விப்ராஜ் நிகமும் நல்ல நிலையில் உள்ளனர். மெக்குர்க், கேப்டன் அக்ஷர் பட்டேலிடம் இருந்து இன்னும் சிறந்த ஆட்டம் வெளிப்படவில்லை. இந்த சீசனில் டெல்லி அணி சொந்த ஊரில் விளையாடும் முதல் ஆட்டம் இதுவாகும். இதனால் அவர்கள் தங்களது வெற்றியை தொடர முழு திறனையும் வெளிப்படுத்துவார்கள்.

    5 முறை சாம்பியனான மும்பை அணி 5 ஆட்டங்களில் ஆடி ஒரு வெற்றி (3-வது ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிராக), 4 தோல்வியுடன் (சென்னை, குஜராத், லக்னோ, பெங்களூரு அணிகளிடம்) தகிடுதத்தம் போட்டு வருகிறது. கடந்த 4 ஆட்டங்களில் 38 ரன்கள் மட்டுமே எடுத்துள்ள தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா பார்முக்கு வரமுடியாமல் தடுமாறுவது தலைவலியாக இருக்கிறது. காயம் காரணமாக 3 மாத இடைவெளிக்கு பிறகு கடந்த ஆட்டத்தில் திரும்பிய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு நிச்சயம் சவாலாக இருப்பார். ஒருங்கிணைந்து செயல்பட்டு எழுச்சி காண மும்பை அணி தீவிரமாக முயற்சிக்கும். டெல்லி அணியின் வீறுநடைக்கு மும்பை முட்டுக்கட்டை போடுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    (நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்)

    Next Story
    ×