என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

IPL 2025: காவ்யா மாறன் மற்றும் ப்ரீத்தி ஜிந்தாவின் ரியாக்சன் இணையத்தில் வைரல்
- பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்து ரன்களை குவித்த போது ப்ரீத்தி ஜிந்தா மகிழ்ச்சியாகவும் இருந்தார்.
- கடினமாக இலக்கை அசால்ட்டாக ஐதராபாத் அணி எட்டியவுடன் காவ்யா மகிழ்ச்சியாக காணப்பட்டார்.
ஐ.பி.எல். 2025 தொடரின் 27-வது போட்டி ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 245 ரன்கள் குவித்துள்ளது.
இதையடுத்து, 246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி 18.3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 247 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அதிரடியாக ஆடிய அபிஷேக் சர்மா சதமடித்து அசத்தினார். அபிஷேக் சர்மா 55 பந்தில் 10 சிக்சர், 14 பவுண்டரி உள்பட 141 ரன் குவித்து ஆட்டமிழந்தார்.
ஐதராபாத் அணியின் உரிமையாளரான காவ்யா மாறன் மற்றும் பஞ்சாப் அணியின் உரிமையாளரான ப்ரீத்தி ஜிந்தா ஆகியோர் இப்போட்டியை நேரில் கண்டு களித்தனர். பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்து ரன்களை குவித்த போது காவ்யா வாடிய முகத்துடனும் ப்ரீத்தி ஜிந்தா மகிழ்ச்சியாகவும் இருந்தார்.
கடினமாக இலக்கை அதிரடியாக ஆடி அசால்ட்டாக ஐதராபாத் அணி எட்டியவுடன் காவ்யா மகிழ்ச்சியாகவும் ப்ரீத்தி ஜிந்தா சோகமாகவும் காணப்பட்டார். இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.






