என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

IPL 2025: புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்திற்குச் சென்றது CSK
- புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில இருந்த ஐதராபாத் அணி 8 ஆம் இடத்திற்கு முன்னேறியது.
- புள்ளிப்பட்டியலில் மும்பை 9ம் இடத்தில் உள்ளது
ஐ.பி.எல். 2025 தொடரின் 27-வது போட்டி ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 245 ரன்கள் குவித்துள்ளது.
இதையடுத்து, 246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி 18.3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 247 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில இருந்த ஐதராபாத் அணி 8 ஆம் இடத்திற்கு முன்னேறியது.
இதனையடுத்து, தொடர் தோல்விகளால் துவண்டு கிடைக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்திற்குச் சென்றது. மும்பை இந்தியன்ஸ் அணி 9ம் இடத்தில் உள்ளது.
Next Story






