என் மலர்
கிரிக்கெட் (Cricket)
- காயம் காரணமாக கடந்த 4 ஆட்டங்களை தவறவிட்ட பாப் டு பிளிஸ்சிஸ் அணிக்கு திரும்புவார் என்று தெரிகிறது.
- டெல்லிக்கு எதிராக ஏற்கனவே மோதிய லீக்கில் லக்னோ அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், லக்னோவில் இன்று இரவு நடைபெறும் 40-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொள்கிறது.
லக்னோ அணி இதுவரை 8 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 3 தோல்வியுடன் 10 பள்ளிகளை பெற்றுள்ளது. அந்த அணியில் பேட்டிங்கில் நிகோலஸ் பூரன் (368 ரன்), மிட்செல் மார்ஷ் (299), மார்க்ரம் (274), ஆயுஷ் பதோனி சூப்பர் பார்மில் இருக்கின்றனர். கேப்டன் ரிஷப் பண்டும் (106ரன்) மிரட்டினால் பேட்டிங் மேலும் வலுவடையும். பந்து வீச்சில் ஷர்துல் தாக்குர், திக்வேஷ் ரதி, ஆவேஷ் கான், ரவி பிஷ்னோய் பலம் சேர்க்கின்றனர்.
அக்ஷர் பட்டேல் தலைமையிலான டெல்லி அணியும் 10 புள்ளிகளுடன் (5 வெற்றி, 2 தோல்வி) வலுவான நிலையில் காணப்படுகிறது. பேட்டிங்கில் லோகேஷ் ராகுல் (266 ரன்), டிரிஸ்டான் ஸ்டப்ஸ், அபிஷேக் போரெல், அஷூதோஷ் ஷர்மா, கருண் நாயர் நம்பிக்கை அளிக்கின்றனர். காயம் காரணமாக கடந்த 4 ஆட்டங்களை தவறவிட்ட பாப் டு பிளிஸ்சிஸ் அணிக்கு திரும்புவார் என்று தெரிகிறது. லக்னோ அணியில் இருந்து பிரிந்த பிறகு அந்த அணிக்கு எதிராக லோகேஷ் ராகுல் களம் காணும் முதல் ஆட்டம் இதுவாகும். இதனால் அவரது பேட்டிங் அதிக எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது.
டெல்லிக்கு எதிராக ஏற்கனவே மோதிய லீக்கில் லக்னோ அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதற்கு பதிலடி கொடுக்க லக்னோ தீவிரம் காட்டுவதால், இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- குஜராத் அணியில் இடம் பிடித்த தமிழக வீரர் சாய் சுதர்சன் 5-வது முறையாக அரை சதம் அடித்து அசத்தினார்.
- நடப்பு தொடரில் சாய் சுதர்சன் 8 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 417 ரன்கள் அடித்திருக்கிறார்
ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா - குஜராத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 198 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் குஐராத் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது.
இந்த போட்டியில் குஜராத் அணியில் இடம் பிடித்த தமிழக வீரர் சாய் சுதர்சன் 5-வது முறையாக அரை சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் 8 இன்னிங்ஸில் 5 அரை சதம் அடித்துள்ளார்.
நடப்பு தொடரில் சாய் சுதர்சன் 8 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 417 ரன்கள் அடித்திருக்கிறார். இதன் மூலம் சாய் சுதர்சனுக்கு ஆரஞ்சு நிற தொப்பி கிடைத்திருக்கிறது.
இந்நிலையில், சிறப்பாக விளையாடி வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் சாய் சுதர்சனின் ஆட்டத்தை நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், "நீங்க விளையாடுற விதம் ரொம்ப பிடிச்சிருக்கு சாய் சுதர்சன். இந்திய ஜெர்சியில் உங்களின் அபார திறமையை காண காத்திருக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
- 6 போட்டிகளில் தோல்வி அடைந்த சென்னை அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
- அஸ்வின் விளையாடிய கடந்த 10 ஐபிஎல் போட்டிகளில் 7 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார்.
மும்பையில் நடந்த 38வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவரில் 176 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய மும்பை அணி 177 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இதன்மூலம் 6 போட்டிகளில் தோல்வி அடைந்த சென்னை அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 4 ஓவர்கள் பந்துவீசிய அஸ்வின் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து விக்கெட் எதுவும் எடுக்கவில்லை. இந்நிலையில், ரவிச்சந்திரன் அஸ்வினை இந்திய அணியின் முன்னாள் வீரர் கடுமையாக ஸ்ரீகாந்த் விமர்சித்துள்ளார்.
தனது யூடியூப் சேனலில் பேசிய ஸ்ரீகாந்த், "அஸ்வின் என்ன நினைத்து கொண்டிருக்கிறார். அவர் 2 விக்கெட் எடுத்திருந்தால் போட்டியை வென்றிருக்கலாம். ஆனால் அஷ்வின் என்ன செய்கிறார்? அவர் ரன்களை கொடுக்கக்கூடாது என்ற எண்ணத்தில் தான் பந்துவீசுகிறார். அவர் விக்கெட்டுகளை எடுக்க விரும்பவில்லை. மும்பை அணி வீரர்கள் அஸ்வின் பந்துவீச்சை சிங்கிள்ஸ் எடுத்து புத்திசாலித்தனமாக விளையாடினார்கள். போட்டியின் சூழ்நிலையை அவர் புரிந்து கொள்ளவேண்டும்" என்று தெரிவித்தார்.
அஸ்வின் விளையாடிய கடந்த 10 ஐபிஎல் போட்டிகளில் 7 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- டாஸ் வென்ற கொல்கத்தா பந்து வீச்சை தேர்வு செய்தது.
- கொல்கத்தா அணியில் ரஹானே 50 ரன்களில் வெளியேறினார்.
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா - குஜராத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 198 ரன்கள் எடுத்தது.
கொல்கத்தா அணி தரப்பில் வைபவ், ஹர்சித் ராணா, ரசல் ஆகியோர் 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

இதையடுத்து 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. ஆனால் அந்த அணியில் ரஹானேவை தவிர வேறு யாரும் சரியாக பேட்டிங் செய்யவில்லை. ரஹானே மட்டுமே அதிகபட்சமாக 50 ரன்கள் எடுத்திருந்தார். குர்பாஸ் 1 ரன்களும், நரைன் 17 ரன்களும், வெங்கடேஷ் 14 ரன்களும், சிங் 1 ரன்களும் என வரிசையாக ஆட்டமிழந்தனர்.
இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் குஐராத் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது.
- சாய் சுதர்சன் 5-வது முறையாக அரை சதம் அடித்து அசத்தினார்.
- நடப்பு தொடரில் சாய் சுதர்சன் 8 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 417 ரன்கள் அடித்திருக்கிறார்.
கொல்கத்தா:
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா- குஜராத் அணிகள் மோதி வருகின்றனர். இதில் முதலில் விளையாடிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் எடுத்தது. இலக்கை நோக்கி கொல்கத்தா அணி விளையாடி வருகிறது.
இந்த போட்டியில் குஜராத் அணியில் இடம் பிடித்த தமிழக வீரர் சாய் சுதர்சன் 5-வது முறையாக அரை சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் 8 இன்னிங்ஸில் 5 அரை சதம் அடித்துள்ளார்.
நடப்பு தொடரில் சாய் சுதர்சன் 8 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 417 ரன்கள் அடித்திருக்கிறார். இதன் மூலம் சாய் சுதர்சனுக்கு ஆரஞ்சு நிற தொப்பி கிடைத்திருக்கிறது.
லக்னோ அணி வீரர் நிக்கோலஸ் பூரான் 368 ரன்கள் எடுத்திருந்த நிலையில், சாய் சுதர்சனிடம் கடந்த போட்டியில் இருந்து ஆரஞ்சு நிற தொப்பியை வாங்கி இருந்தார். தற்போது சாய் சுதர்சன் மீண்டும் ஒரு அரை சதம் அடித்து நிக்கோலஸ் பூரானிடம் இருந்து ஆரஞ்சு நிற தொப்பியை தன்வசம் படுத்தியுள்ளார். தற்போது இருவருக்கும் இடையே 49 ரன்கள் வித்தியாசம் இருக்கின்றது.
- குஜராத் தரப்பில் சுதர்சன், சுப்மன் கில் அரை சதம் விளாசினர்.
- கொல்கத்தா அணி தரப்பில் வைபவ், ஹர்சித் ராணா, ரசல் ஆகியோர் 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா - குஜராத் அணிகள் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில்- சாய் சுதர்சன் களமிறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 114 ரன்கள் எடுத்தது. 52 ரன்கள் எடுத்த நிலையில் சாய் சுதர்சன் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்த கில்லுடன் பட்லர் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கில் 90 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த திவாட்டியா 0 ரன்னில் வெளியேறினார். தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பட்லர் 41 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில் குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 198 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணி தரப்பில் வைபவ், ஹர்சித் ராணா, ரசல் ஆகியோர் 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
- இந்த வருடம் சிஎஸ்கே நிர்வாகம் சரியாக ஏலம் எடுக்கவில்லை என நான் நினைக்கிறேன்.
- சிஎஸ்கே-வின் கைகளில் நிறைய பணமும் இருந்தது.
ஐபிஎல் தொடரின் நேற்றைய 38-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணிக்கு இது 6-வது தோல்வியாகும். சென்னை அணி அடுத்த ஆட்டத்தில் வருகிற 25-ந்தேதி சன்ரைசர்சுடன் மோதுகிறது.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இந்த நிலைமைக்கு தலைமை பயிற்சியாளர் மற்றும் நிர்வாகம்தான் காரணம் என்று சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து கூறியதாவது:-
இந்த வருடம் சிஎஸ்கே நிர்வாகம் சரியாக ஏலம் எடுக்கவில்லை என நான் நினைக்கிறேன். ப்ரியன்ஷ் ஆர்யா போன்ற நிறைய இளம் மற்றும் திறமையான வீரர்கள் ஏலத்தில் இருந்தனர். சிஎஸ்கே-வின் கைகளில் நிறைய பணமும் இருந்தது. அப்படி இருந்தும் ஷ்ரேயஸ், ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல் போன்ற மூத்த வீரர்களையும் நீங்கள் எடுக்கவில்லை. சிஎஸ்கே அணி இந்த அளவிற்கு தடுமாறி நான் பார்த்ததே இல்லை.
தலைமை பயிற்சியாளர் உட்பட அணி நிர்வாகம் நல்ல வீரர்களைத் தேடவில்லை. இது சிஎஸ்கே அணியின் இந்த நிலைமைக்கு முக்கிய காரணம். மற்ற அணிகள் விளையாடுவதைப் பார்க்கும்போது, அவர்கள் மிகவும் அதிரடியாக விளையாடுகிறார்கள்.
என்று ரெய்னா கூறினார்.
- ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா -குஜராத் அணிகள் மோதுகிறது.
- இதில் டாஸ் வென்ற கொல்கத்தா பந்து வீச்சை தேர்வு செய்தது.
கொல்கத்தா:
ஐபிஎல் தொடரின் இன்றைய 39-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா, குஜராத் அணிகள் மோதுகிறது. இந்த நிலையில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ரகானே முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரகானே, நாங்கள் முதலில் பந்து வீசப் போகிறோம். ஆடுகளம் கொஞ்சம் காய்ந்த நிலையில் இருக்கின்றது. எங்கள் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. குர்பாஷ் மற்றும் மோயின் அலி ஆகியோர் அணிக்குள் வந்திருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பேசிய குஜராத் அணி கேப்டன் கில், இன்றைய ஆட்டத்தின் போது பனிப்பொழிவு இருக்காது என நினைக்கிறேன். இன்றைய போட்டி ஒரு நல்ல ஆட்டமாக தான் இருக்கும் என்று கில் கூறினார்.
இதனை தொடர்ந்து பேசிய கிரிக்கெட் வர்ணனையாளர் டேனியல் மோரிஷன், பார்க்க அழகாக இருக்கீங்க திருமணம் திட்டம் ஏதும் உள்ளதா என கேள்வி எழுப்பினார். அதற்கு வெட்கப்பட்ட கில் அப்படியெல்லாம் இல்லையே என்று சிரித்துக் கொண்டே பதில் அளித்தார்.
டாஸில் திருமணம் குறித்த கேள்வியை வர்ணனையாளர் டேனியல் மோரிஷனால் மட்டுமே கேட்க முடியும் என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
- குஜராத் அணி 5-ல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் வகிக்கிறது.
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 7 ஆட்டங்களில் ஆடி 3-ல் வெற்றியும், 4-ல் தோல்வியும் கண்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவில் இன்று நடைபெறும் 39-வது லீக் ஆட்டத்தில் ரகானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸை எதிர்கொள்கிறது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடியுள்ள முன்னாள் சாம்பியனான குஜராத் அணி 5-ல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் வகிக்கிறது.
அதேவேளையில், நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 7 ஆட்டங்களில் ஆடி 3-ல் வெற்றியும், 4-ல் தோல்வியும் கண்டுள்ளது.
- நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.
- இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய சென்னை 176 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய 177 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வென்றது குறித்து அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பொல்லார்ட் பேட்டியளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
சிறப்பாக விளையாடினார்கள் என சிஎஸ்கே அணியை பற்றி சொல்லி சொல்லி மிகவும் சோர்வடைந்து விட்டேன். இன்றைய போட்டியில் நாம் வெல்ல வேண்டும் என மீட்டிங்கின் போது, மும்பை இந்தியன்ஸ் வீரர்களிடம் சொன்னேன். அதன்படி சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றியை தேடி தந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
என பொல்லார்ட் கூறினார்.
- நடப்பு ஐபிஎல் தொடரில் நான் சிறப்பாக பேட்டிங் செய்வதாக உணர்கிறேன்.
- ஒவ்வொரு முறையும் நாங்கள் தோல்வியில் இருந்து மீண்டு வெற்றி பெற்றுள்ளோம்.
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஆர்சிபி, பஞ்சாப் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றது.
அந்த அவர்களின் சொந்த மைதானமான பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேயத்தில் விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. அதே சமயம் வெளி மைதானங்களில் விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றியை பெற்றுள்ளது.
இந்நிலையில் சொந்த மைதானத்தில் வெல்லும் வழியை நாங்கள் அறிய வேண்டும் என ஆர்சிபி அணி வீரர் தேவ்தத் படிக்கல் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நடப்பு ஐபிஎல் தொடரில் நான் சிறப்பாக பேட்டிங் செய்வதாக உணர்கிறேன். டி20-ல் கடந்த இரு ஆண்டுகளாக நான் |சிறப்பாக விளையாடவில்லை, அதற்கு நானே முழுப் பொறுப்பு. அணியாக நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடி வருகிறோம்.
ஒவ்வொரு முறையும் நாங்கள் தோல்வியில் இருந்து மீண்டு வெற்றி பெற்றுள்ளோம். சொந்த மைதானத்தில் வெல்லும் வழியை நாங்கள் அறிய வேண்டும். அதற்கு நாங்கள் மிகவும் தகுதியானவர்கள்.
என்று தேவ்தத் படிக்கல் கூறினார்.
- இருவரும் ஈடன் கார்டன் மைதானத்தின் பிட்ச் பராமரிப்பாளரை விமர்சித்துள்ளனர்.
- ஐபிஎல் தொடரில் இன்று கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளது.
ஐபிஎல் தொடரில் இன்று கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளது. அந்தப் போட்டியின் போது, ஹர்ஷா போக்லே மற்றும் சைமன் டவுல் வர்ணனை செய்வதற்காக வந்தால் மைதானத்திற்குள் அனுமதிக்க முடியாது என பெங்கால் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் ஐபிஎல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈடன் கார்டன் மைதானத்தின் பிட்ச் பராமரிப்பாளர் சுஜன் முகர்ஜியை விமர்சித்து அவர்கள் இருவரும் பேசியதுதான் இதற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.
2025 ஐபிஎல் தொடரில் துவக்கத்தில் இருந்தே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும், ஈடன் கார்டன் மைதானத்தின் பிட்ச் பராமரிப்பாளர் சுஜன் முகர்ஜிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு இருந்தன.
இந்த விவகாரம் குறித்து வர்ணனையின் போது ஹர்ஷா போக்லே மற்றும் சைமன் டவுல் சுஜன் முகர்ஜியை நேரடியாக விமர்சித்திருந்தனர். அது பெங்கால் கிரிக்கெட் சங்கத்தை கோபம் அடைய செய்து இருக்கிறது.
இதுகுறித்து பெங்கால் கிரிக்கெட் சங்கம் பிசிசிஐக்கு அளித்திருந்த விளக்கத்தில், ஐபிஎல் விதிமுறைகளின் படிதான் தாங்கள் பிட்சுகளைத் தயாரித்து வருவதாகவும், எந்த அணிக்கும் பிட்ச் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்வதற்கான உரிமை இல்லை என விதிமுறைகளில் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதாகவும் அந்த கடிதத்தில் தெளிவுபடுத்தி உள்ளது.
அதைத்தொடர்ந்து, தற்போது ஹர்ஷா போக்லே மற்றும் சைமன் டவுல் தங்களின் மைதான பிட்ச் பராமரிப்பாளரை விமர்சித்ததால் அவர்களை அனுமதிக்க முடியாது என பிசிசிஐக்குக் கடிதம் எழுதி இருக்கிறது பெங்கால் கிரிக்கெட் சங்கம்.
ஐபிஎல் வரலாற்றிலேயே இந்த ஆண்டில் தான் ஒவ்வொரு அணியும் தங்களின் சொந்த மைதானத்தில் தங்களுக்கு விருப்பமான பிட்ச் உருவாக்கப்படவில்லை என்ற புகாரை முன் வைத்துள்ளனர்.






