என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

வீடியோ: திருமணம் குறித்து கேள்வி எழுப்பிய வர்ணனையாளர்- சிரித்து கொண்டே பதில் அளித்த கில்
- ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா -குஜராத் அணிகள் மோதுகிறது.
- இதில் டாஸ் வென்ற கொல்கத்தா பந்து வீச்சை தேர்வு செய்தது.
கொல்கத்தா:
ஐபிஎல் தொடரின் இன்றைய 39-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா, குஜராத் அணிகள் மோதுகிறது. இந்த நிலையில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ரகானே முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரகானே, நாங்கள் முதலில் பந்து வீசப் போகிறோம். ஆடுகளம் கொஞ்சம் காய்ந்த நிலையில் இருக்கின்றது. எங்கள் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. குர்பாஷ் மற்றும் மோயின் அலி ஆகியோர் அணிக்குள் வந்திருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பேசிய குஜராத் அணி கேப்டன் கில், இன்றைய ஆட்டத்தின் போது பனிப்பொழிவு இருக்காது என நினைக்கிறேன். இன்றைய போட்டி ஒரு நல்ல ஆட்டமாக தான் இருக்கும் என்று கில் கூறினார்.
இதனை தொடர்ந்து பேசிய கிரிக்கெட் வர்ணனையாளர் டேனியல் மோரிஷன், பார்க்க அழகாக இருக்கீங்க திருமணம் திட்டம் ஏதும் உள்ளதா என கேள்வி எழுப்பினார். அதற்கு வெட்கப்பட்ட கில் அப்படியெல்லாம் இல்லையே என்று சிரித்துக் கொண்டே பதில் அளித்தார்.
டாஸில் திருமணம் குறித்த கேள்வியை வர்ணனையாளர் டேனியல் மோரிஷனால் மட்டுமே கேட்க முடியும் என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.






