என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    சிஎஸ்கே அணி பற்றி சொல்லி சொல்லி சோர்வடைந்து விட்டேன்- பொல்லார்ட்
    X

    சிஎஸ்கே அணி பற்றி சொல்லி சொல்லி சோர்வடைந்து விட்டேன்- பொல்லார்ட்

    • நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.
    • இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய சென்னை 176 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய 177 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வென்றது குறித்து அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பொல்லார்ட் பேட்டியளித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    சிறப்பாக விளையாடினார்கள் என சிஎஸ்கே அணியை பற்றி சொல்லி சொல்லி மிகவும் சோர்வடைந்து விட்டேன். இன்றைய போட்டியில் நாம் வெல்ல வேண்டும் என மீட்டிங்கின் போது, மும்பை இந்தியன்ஸ் வீரர்களிடம் சொன்னேன். அதன்படி சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றியை தேடி தந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

    என பொல்லார்ட் கூறினார்.

    Next Story
    ×