என் மலர்
கிரிக்கெட் (Cricket)
- 14ஆவது ஓவரிலேயே நிதிஷ் குமார் ரெட்டி பந்து வீச அழைக்கப்பட்டார்.
- டக்கட் மற்றும் கிராவ்லியை முதல் ஓவரிலேயே வீழ்த்தினார்.
இந்தியா- இங்கிலாந்து இடையிலான 3ஆவது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. இங்கிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் பும்ரா சேர்க்கப்பட்டார். இங்கிலாந்து அணியில் ஆர்ச்சர் இடம் பெற்றுள்ளார்.
கிராவ்லி, டக்கட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பும்ரா தொடக்க ஓவரை வீசினார். ஆகாஷ் தீப் அவருடன் புதிய பந்தை பகிர்ந்து கொண்டார். இருவரும் அபாரமாக பந்து வீசினர். பந்து நல்லவிதமாக ஸ்விங் ஆனது. ஆனால் விக்கெட் வீழ்த்த முடியவில்லை. இதனால் 14ஆவது ஓவரிலேயே நிதிஷ் குமாரை பந்து வீச அழைத்தார் சுப்மன் கில்.
2ஆவது பந்தில் டக்கட் பவுண்டரி அடித்தார். ஆனால், 3ஆவது பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 23 ரன்கள் சேர்த்திருந்தார். அடுத்து ஆலி போப் களம் இறங்கினார். போப் முதல் பந்திலேயே அவட்டாக வேண்டியது, கடினமான கேட்சை சுப்மன் கில் தவறவிட்டார்.
அடுத்த பந்தில் ஒரு ரன் எடுத்தார். கடைசி பந்தை கிராவ்லி எதிர்கொண்டார். ஆஃப் ஸ்டம்பை ஒட்டி வீசிய பந்து பேட்டில் உரசி விக்கெட் கீப்பரிடம் கேட்சாக மாறியது. கிராவ்லி 18 ரன்னில் ஆட்டமிழந்தார். ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகள வீழ்த்தி அசத்தினார்.
- முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளது.
- இங்கிலாந்து அணியில் ஆர்ச்சர் இடம் பிடித்துள்ளார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்தும், 2ஆவது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளது.
இதனால் டெஸ்ட் தொடர் 1-1 என சமநிலை பெற்றுள்ளது. இந்த நிலையில் 3ஆவது டெஸ்ட் இன்று புகழ் பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. இங்கிலாந்து அணியில் ஆர்ச்சர் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் தொடர்ந்து 3 போட்டிகளில் டாஸ் தோற்றுள்ளார்.
இந்திய அணியில் பிரசித் கிருஷ்ணா நீக்கப்பட்டு பும்ரா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
- 46 டெஸ்ட் போட்டிகளில் 210 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.
- 89 ஒருநாள் போட்டியில் 149 விக்கெட்டுகள் வீ்ழ்த்தியுள்ளார்.
இந்தியாவின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளரான பும்ரா, தற்போதைய காலத்தில் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர். அவருக்கு 10க்கு 10 மதிப்பெண் வழங்கலாம் என பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹின் அப்ரிடி புகழாரம் சூட்டியுள்ளார்.
இது தொடர்பாக ஷாஹீன் அப்ரிடி கூறுகையில் "தற்போதைய காலக்கட்டத்தில் பும்ராதான் சிறந்த பந்து வீச்சாளர். ஸ்விங், துல்லியம், அனுபவம். சமீபத்தில் உலகின் சிறந்த பந்து வீச்சாளர் என்று நினைக்கிறேன்" என்றார்.
பும்ரா கடந்த 2016ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். இதுவரை 46 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 210 விக்கெட்டுகள் விழ்த்தியுள்ளார். 27 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தியது சிறந்த பந்து வீச்சாகும். சராசரி 19.60 ஆகும்.
89 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 149 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 70 டி20 போட்டிகளில் 89 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
- லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் உள்ள மியூசியத்தில் சச்சின் தெண்டுல்கரின் புதிய படம்.
- சச்சின் தெண்டுல்கர் அந்த படத்தின் முன்னின்று போட்டோ எடுத்துக் கொண்டார்.
உலகில் உள்ள கிரிக்கெட் மைதானங்களில் லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானம் பாரம்பரியமிக்கது. உலகப் புகழ் பெற்ற இந்த மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாட கிரிக்கெட் வீரர்கள் யாராக இருந்தாலும் விரும்புவார்கள்.
இங்கு சாதனைப் படைக்கும் வீரர்கள் பெயர், பெயர்ப் பலகையில் பொறிக்கப்படும். இந்த எம்.சி.சி. மியூசியம் உள்ளது. கிரிக்கெட் சாதனைப் படைத்தவர்கள் படங்கள் இங்கு இடம் பெற்றிருக்கும். இந்த வகையில் சச்சின் தெண்டுல்கரின் புதிய படம் மியூசியத்தில் இன்று திறந்து வைக்கப்பட்டது. தன்னுடைய படத்தின் முன் நின்று சச்சின் தெண்டுல்கர் போஸ் கொடுத்தார்.
- பணிச்சுமையால் கடந்த டெஸ்டில் ஓய்வு எடுத்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இந்த டெஸ்டில் ஆட இருப்பது அணிக்கு கூடுதல் பலமாகும்.
- இங்கிலாந்து அணியை பொறுத்தவரை ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'ஆண்டர்சன்- தெண்டுல்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. லீட்சில் நடந்த முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்திலும், பர்மிங்காமில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்த நிலையில் இந்தியா- இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் இன்று தொடங்குகிறது.
சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி தொடக்க டெஸ்டில் சிறப்பாக விளையாடிய போதிலும் இரு இன்னிங்சிலும் கடைசி கட்டத்தில் விக்கெட்டுகளை மளமளவென இழந்தது பின்னடைவாக அமைந்தது. அத்துடன் சில முக்கியமான கேட்ச் வாய்ப்புகளையும் வீணடித்தனர். இதனால் 371 ரன்களை இலக்காக நிர்ணயித்த போதிலும் தோல்வியை சந்திக்க நேரிட்டது. இத்தகைய தவறுகளுக்கு எல்லாம் பர்மிங்காமில் நடந்த 2-வது டெஸ்டில் இந்திய வீரர்கள் பரிகாரம் தேடிக் கொண்டனர். குறிப்பாக முதல் இன்னிங்சில் இந்தியா 5 விக்கெட்டுக்கு 211 ரன்களுடன் தடுமாறிய போது கேப்டன் சுப்மன் கில்லுடன் ரவீந்திர ஜடேஜா (89 ரன்), வாஷிங்டன் சுந்தர் (42 ரன்) ஆகியோர் கணிசமான பங்களிப்பை அளித்து அணியை 587 ரன்களுக்கு தூக்கி நிறுத்தினர். 2-வது இன்னிங்சில் இதே போல் சரிவுக்கு இடம் கொடுக்காமல் பார்த்துக் கொண்டனர். இதனால் இங்கிலாந்துக்கு 608 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதை விரட்ட முடியாமல் இங்கிலாந்து 271 ரன்னில் பணிந்தது.
கேப்டன் சுப்மன் கில்லின் மலைப்பான பேட்டிங்கும் (269 மற்றும் 161 ரன்), ஆகாஷ் தீப்பின் மிரட்டல் பந்து வீச்சும் (10 விக்கெட்) இந்தியாவின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தன. அத்துடன் பர்மிங்காமில் டெஸ்டில் வெற்றி பெற்ற முதல் ஆசிய அணி என்ற பெருமையும் கிடைத்தது.
இதே உற்சாகத்துடன் இந்திய வீரர்கள் புகழ்பெற்ற லண்டன் லார்ட்சில் களம் இறங்குகிறார்கள். ஆனால் முந்தைய ஆடுகளங்களுடன் ஒப்பிடும் போது லார்ட்ஸ் சற்று வித்தியாசமானது. இங்கு ஓரளவு புற்கள் இருப்பதால் வேகப்பந்து வீச்சும் எடுபடும். இதனால் முதல் இன்னிங்சில் 400 ரன்கள் எடுத்தாலே அது சவாலான ஸ்கோராக இருக்கும். இதற்கு ஜெய்ஸ்வாலும், லோகேஷ் ராகுலும் நல்ல அடித்தளம் ஏற்படுத்தி தர வேண்டியது அவசியமாகும். 8 ஆண்டுக்கு பிறகு டெஸ்ட் அணிக்கு திரும்பிய கருண் நாயர் இன்னும் பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. தனது இடத்தை தக்க வைக்க அவரும் ஜொலிக்க வேண்டியது முக்கியம். சாதனையை நோக்கி பயணிக்கும் சுப்மன் கில் இன்னும் 18 ரன் எடுத்தால் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரில் அதிக ரன் குவித்த இந்தியர் என்ற சிறப்பை பெறுவார்.
பணிச்சுமையால் கடந்த டெஸ்டில் ஓய்வு எடுத்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இந்த டெஸ்டில் ஆட இருப்பது அணிக்கு கூடுதல் பலமாகும். இதனால் பிரசித் கிருஷ்ணா வெளியே உட்கார வைக்கப்படுவார். வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக குல்தீப் யாதவை சேர்ப்பது குறித்தும் அணி நிர்வாகம் பரிசீலிக்கிறது.
இங்கிலாந்து அணியை பொறுத்தவரை ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் டாங்குக்கு பதிலாக அனுபவம் வாய்ந்த ஜோப்ரா ஆர்ச்சர் சேர்க்கப்பட்டுள்ளார். 2021-ம் ஆண்டு பிப்ரவரிக்கு பிறகு அவர் விளையாடப்போகும் முதல் டெஸ்ட் இதுவாகும்.
பர்மிங்காம் போட்டியில் இங்கிலாந்து அணியில் டாப்-4 வீரர்களான பென் டக்கெட், கிராவ்லி, ஆலி போப், ஜோ ரூட் ஒருசேர சோபிக்கவில்லை. இதனால் தான் அவர்களால் இந்தியாவை நெருங்க முடியவில்லை. மீண்டும் ரன்வேட்டை நடத்த அவர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஜோ ரூட்டுக்கு இந்த மைதானம் ராசியானது. இங்கு 7 சதமும், 7 அரைசதமும் அடித்துள்ளார்.
இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், 'சரிவில் இருந்து மீண்டு இந்தியாவுக்கு கடுமையான பதிலடி கொடுக்க முயற்சிப்போம். சுப்மன் கில் முதல் இரு டெஸ்டிலும் சிறப்பாக ஆடி ரன் குவித்தார். அவர் உள்பட அனைத்து இந்திய பேட்ஸ்மேன்களையும் கட்டுப்படுத்த திட்டங்கள் வகுத்துள்ளோம். டெஸ்ட் அணிக்கு ஜோப்ரா ஆர்ச்சர் மீண்டும் திரும்புவது உற்சாகம் அளிக்கிறது. இங்கிலாந்து அணிக்காக அவர் விளையாடும் போதெல்லாம் குறிப்பாக குறுகிய வடிவிலான போட்டிகளில் பந்தை கையில் எடுத்து விட்டாலே ஆட்டத்தின் போக்கை மாற்றி விடுவார். எதிரணியினர் கூட இதை உணர்ந்து இருப்பார்கள். ஏனெனில் அவர் எப்படிப்பட்டவர் என்பது அவர்களுக்கு தெரியும்' என்றார்.
மொத்தத்தில் தொடரில் முன்னிலை பெற இரு அணிகளும் வரிந்து கட்டுவதால் சுவாரசியத்துக்கு பஞ்சமிருக்காது.
போட்டிக்கான இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:-
இந்தியா: ஜெய்ஸ்வால், லோகேஷ் ராகுல், கருண் நாயர், சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட், நிதிஷ்குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் அல்லது குல்தீப் யாதவ், பும்ரா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப்.
இங்கிலாந்து: ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், ஆலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி சுமித், கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், சோயிப் பஷீர்.
இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் 1, 4, 5 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
- டி20 பந்துவீச்சாளர் தரவரிசையில் இந்தியாவின் தீப்தி சர்மா 2வது இடத்துக்கு முன்னேறினார்.
- இந்திய வேகப்பந்து வீச்சாளர் அருந்ததி 11 இடம் முன்னேறி 43-வது இடம் பிடித்தார்.
துபாய்:
ஐ.சி.சி. சார்பில் டி20 வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் பந்துவீச்சாளர்கள் வரிசையில் கடந்த 6 ஆண்டாக டாப்-10 பட்டியலில் இடம்பெற்று வருகிறார் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா. தற்போது நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், ஐசிசி வெளியிட்டுள்ள தரவரிசையில் 3வது இடத்தில் இருந்த தீப்தி சர்மா, ஒரு இடம் முன்னேறி, 2வது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் பாகிஸ்தானின் சாடியா (746) விட 8 புள்ளிகள் பின்தங்கியுள்ளார்.
இந்திய வேகப்பந்து வீச்சாளர் அருந்ததி 11 இடம் முன்னேறி 43-வது இடம் பிடித்தார்.
பேட்டர் வரிசையில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா 3-வது இடத்தில் தொடர்கிறார். மற்றொரு வீராங்கனை ஜெமிமா 12-வது இடம் பிடித்துள்ளார்.
- இந்திய அணி வங்கதேசம் சென்று விளையாட இருந்த தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
- இலங்கை சென்று விளையாட பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்திய அணி வங்கதேசம் சென்று ஒயிட் பால் கிரிக்கெட் தொடரில் விளையாட முடிவு செய்திருந்தது. தற்போது இந்த தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இலங்கை சென்று 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இந்தியா விரும்புகிறது. இதனால் இலங்கை கிரிக்கெட் வாரியத்துடன் பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இரு கிரிக்கெட் வாரியங்களும் ஒப்புக்கொண்டால், ஆகஸ்ட் மாதம் மத்தியில் விளையாட வாய்ப்புள்ளது.
- இந்திய கிரிக்கெட்டில் ஒவ்வொரு தலைமுறைக்கும் வீரர்கள் இருப்பார்கள்.
- எப்போதெல்லாம் வெற்றிடம் வருகிறதோ அப்போதெல்லாம் வீரர்கள் வந்து அதை நிரப்புவார்கள்.
இந்தியா- இங்கிலாந்து இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் இந்தியா தோல்வியடைந்தது. 2ஆவது டெஸ்டில் அபார வெற்றி பெற்றது.
இரண்டு டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் அபாரமாக விளையாடினார். நான்கு இன்னிங்சில் ஒரு இரட்டை சதத்துடன் மூன்று சதங்கள் அடித்தார். எட்ஜ்பாஸ்டனில் (269+161) ரன்கள் அடித்து அபார சாதனைப் படைத்தார்.
இந்த நிலையில் சுப்மன் கில் குறித்து கங்குலி கூறியதாவது:-
சுப்மன் கில்லிடம் நான் பார்த்ததில் இதுதான் சிறந்த ஆட்டம். இதனால் நான் ஆச்சர்யம் படவில்லை. இந்திய கிரிக்கெட்டில் ஒவ்வொரு தலைமுறைக்கும் வீரர்கள் இருப்பார்கள். எப்போதெல்லாம் வெற்றிடம் வருகிறதோ அப்போதெல்லாம் வீரர்கள் வந்து அதை நிரப்புவார்கள்.
இந்திய கிரிக்கெட்டில் திறமையான ஏராளமான வீரர்கள் உள்ளனர். ஒவ்வொரு தலைமுறையிலும் வீரர்களை கண்டு பிடிக்கலாம். சுப்மன் கில்லின் கிரிக்கெட் வாழ்க்கை புதிய திசைக்கு எடுத்துச் செல்லும் என்ற நம்பிக்கை உள்ளது. அவர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் என்பதை நான் நம்புகிறேன். தற்போதுதான் அவர் கேப்டனாகியுள்ளார். இது அவருடைய ஹனிமூன் காலம். ஆனால், காலப்போக்கில் அவருக்கு அதிக நெருக்கடி ஏற்படும். அடுத்த மூன்று போட்டிகளில் அதிக நெருக்கடி ஏற்படும்.
லார்ட்ஸ் போட்டிக்கான ஆடுகளத்தின் மேற்பகுதி பிரவுன் நிறத்தில் இருந்தால், குல்தீப் யாதவ் 100 சதவீதம் விளையாடனும். அவரது தேர்வு ஆடுகளத்தின் மேற்பகுதியை சார்ந்தது. ஆடுகளத்தின் மேற்பகுதி க்ரீனாக இருந்தால், 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் செல்ல முடியும். குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டால் நிதிஷ் ரெட்டில், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரின் ஒருவர் வெளியில் இருக்க வேண்டியிருக்கும்.
இவ்வாறு கங்குலி தெரிவித்துள்ளார்.
- இங்கிலாந்து அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டங் கழற்றி விடப்பட்டார்.
இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.
இதனை தொடர்ந்து இந்தியா- இங்கிலாந்து மோதும் 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் நாளை மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்நிலையில் இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் டங்குக்கு பதிலாக ஆர்ச்சர் அணியில் இடம் பிடித்துள்ளார்.

இங்கிலாந்து அணியின் ஆடும் லெவன்:-
ஜாக் கிராலி, பென் டக்கெட், ஓலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கீப்பர்), ஜேமி ஸ்மித் (WK), கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஷோயப் பஷீர்.
- இங்கிலாந்தை பொறுத்தவரை 1990-ம் ஆண்டில் இந்தியாவுக்கு எதிராக 653 ரன்கள் சேர்த்தது சிறந்த ஸ்கோராகும்.
- இந்த மைதானத்தில் இந்தியா எடுத்த அதிகபட்சம் 454 ரன்கள் (1990-ம் ஆண்டில்) ஆகும்.
லண்டன்:
இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.
இந்த நிலையில் இந்தியா- இங்கிலாந்து மோதும் 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் இந்திய நேரப்படி நாளை (வியாழக்கிழமை) மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது. இதையொட்டி இந்திய வீரர்கள் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
முந்தைய போட்டியில் ஓய்வு எடுத்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அணிக்கு திரும்புவதால், அவரும் கடும் பயிற்சி மேற்கொண்டதை காண முடிந்தது. பர்மிங்காம் போன்று லார்ட்சிலும் சாதிக்கும் உத்வேகத்துடன் நமது வீரர்கள் ஆயத்தமாகி வருகிறார்கள்.
'கிரிக்கெட்டின் மெக்கா' என்று அழைக்கப்படும் லண்டன் லார்ட்சில் 1884-ம் ஆண்டு முதல் டெஸ்ட் கிரிக்கெட் நடந்து வருகிறது. இதுவரை 148 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. இதில் இங்கிலாந்து 145 டெஸ்டுகளில் ஆடி 59-ல் வெற்றியும், 35-ல் தோல்வியும், 51-ல் டிராவும் கண்டுள்ளது.
இந்திய அணி இங்கு 19 டெஸ்டுகளில் விளையாடி 3-ல் வெற்றியும், 12-ல் தோல்வியும், 4-ல் 'டிரா'வும் சந்தித்துள்ளது. இதில் கடைசி 3 டெஸ்டுகளில் 2-ல் வென்றதும் அடங்கும். 2021-ம் ஆண்டில் இங்கு நடந்த டெஸ்டில் விராட் கோலி தலைமையிலான இந்தியா நிர்ணயித்த 272 ரன் இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து 120 ரன்னில் சுருண்டது நினைவிருக்கலாம்.
ஆஸ்திரேலிய அணி 1930-ம் ஆண்டு நடந்த டெஸ்டில் இங்கிலாந்துக்கு எதிராக 6 விக்கெட்டுக்கு 729 ரன்கள் குவித்தது இந்த ஸ்டேடியத்தில் ஒரு அணியின் மெகா ஸ்கோராகும். இங்கிலாந்தை பொறுத்தவரை 1990-ம் ஆண்டில் இந்தியாவுக்கு எதிராக 653 ரன்கள் சேர்த்தது சிறந்த ஸ்கோராகும். இந்த மைதானத்தில் இந்தியா எடுத்த அதிகபட்சம் 454 ரன்கள் (1990-ம் ஆண்டில்) ஆகும். குறைந்த ஸ்கோரில் அணிகள் 22 முறை 99 ரன்னுக்குள் அடங்கியிருக்கின்றன. இதில் அயர்லாந்து (38 ரன், 2019-ம் ஆண்டு), இந்தியா (42 ரன், 1974-ம் ஆண்டு) முதல் இரு இடங்களில் உள்ளன.
மொத்தம் 252 சதங்களும், 610 அரைசதங்களும் எடுக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக இங்கிலாந்தின் ஜோ ரூட் 7 சதங்கள் அடித்திருக்கிறார். இந்திய முன்னாள் வீரர் திலிப் வெங்சர்க்கார் 3 சதங்கள் விளாசி லார்ட்ஸ் நாயகனாக விளங்குகிறார். தற்போதைய இந்திய அணியில் இடம் பெற்றுள்ள வீரர்களில் லோகேஷ் ராகுல் மட்டும் சதம் கண்டுள்ளார்.
இங்கு ஒரே ஒரு முச்சதம் பதிவாகி இருக்கிறது. 1990-ம் ஆண்டில் இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து கேப்டன் கிரஹாம் கூச் 333 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். ஒட்டுமொத்தத்தில் அதிக ரன் குவிப்பில் ஜோ ரூட் (22 டெஸ்டில் 2,022 ரன்) முதலிடம் வகிக்கிறார்.
ஒரு இன்னிங்சில் 5 மற்றும் அதற்கு மேல் விக்கெட்டுகள் 196 முறை வீழ்த்தப்பட்டுள்ளன. அதிக விக்கெட் வீழ்த்தியோர் பட்டியலில் இங்கிலாந்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்கள் ஜேம்ஸ் ஆண்டர்சன் (123 விக்கெட்), ஸ்டூவர்ட் பிராட் (113 விக்கெட்) டாப்-2 இடத்தில் உள்ளனர். இந்தியா சார்பில் அதிகபட்சமாக பிஷன் சிங் பேடி, இஷாந்த் ஷர்மா, கபில்தேவ் தலா 17 விக்கெட்டுகள் (4 டெஸ்ட்) கைப்பற்றி இருக்கிறார்கள்.
லார்ட்ஸ் ஆடுகளம் தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். போக போக பேட்டிங்குக்கு ஒத்துழைக்கும். சமீபத்தில் இங்கு நடந்த ஆஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் மொத்தம் 31 விக்கெட்டுகளை கபளீகரம் செய்தது குறிப்பிடத்தக்கது.
- சுப்மன் கில் 15 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தை பிடித்துள்ளார்.
- இந்திய வீரரான ரிஷப் பண்ட் 1 இடம் பின் தங்கி 8-வது இடத்தில் உள்ளார்.
டெஸ்ட் போட்டிக்கான தரவரிசையை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் பேட்டர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த இங்கிலாந்து அணி வீரர் ஜோரூட்டை பின்னுக்கு தள்ளி சக அணி வீரர் ஹாரி ப்ரூக் முதல் இடத்தை பிடித்துள்ளார். மேலும் ஒரு இங்கிலாந்து வீரர் ஜேமி ஸ்மித் 16 இடங்கள் முன்னேறி டாப் 10-ல் இடம் பிடித்துள்ளார்.
இந்திய வீரர்களில் ஜெய்ஸ்வால் 4-வது இடத்தில் தொடர்கிறார். சுப்மன் கில் 15 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தை பிடித்துள்ளார். மற்றொரு இந்திய வீரரான ரிஷப் பண்ட் 1 இடம் பின் தங்கி 8-வது இடத்தில் உள்ளார்.
- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக ரன்களைக் குவித்த இந்திய வீரர் எனும் சாதனையை பண்ட் படைக்கவுள்ளார்.
- சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் இதுவரை 86 சிக்சர்களை அடித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.
இதனையடுத்து இரு அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் இந்திய நேரப்படி நாளை மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் துணைக்கேப்டன் ரிஷப் பண்ட், டெஸ்டில் சில சாதானைகளைப் படைக்கவுள்ளார்.
அதன்படி இப்போட்டியில் ரிஷப் பண்ட் மேற்கொண்டு 122 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக ரன்களைக் குவித்த இந்திய வீரர் எனும் பெருமையைப் பெறுவார். முன்னதாக இந்த பட்டியலில் சமீபத்தில் சர்வதேச டெஸ்டில் இருந்து ஓய்வை அறிவித்த ரோகித் சர்மா 2716 ரன்களுடன் முதலிடத்திலும், விராட் கோலி 2617 ரன்களுடன் 2-ம் இடத்திலும் உள்ளனர். ரிஷப் பண்ட் 2594 ரன்களுடன் 3-ம் இடத்தில் உள்ளார்.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் இதுவரை 86 சிக்சர்களை அடித்துள்ளார். அவர் மேலும் ஆறு சிக்சர்களை அடிக்கும் பட்சத்தில் இந்த வடிவத்தில் இந்தியாவுக்காக அதிக சிக்சர்களை அடித்த வீரர்களின் பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் வாய்ப்பை பெறுவார். தற்போது இந்தப் பட்டியலில் முன்னாள் வீரர்கள் வீரேந்தர் சேவாக் 91 சிக்சர்களை அடித்து முதலிடத்திலும், ரோகித் சர்மா 88 சிக்சர்களுடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.






