என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லார்ட்ஸ் மைதானம்"

    • இங்கிலாந்தை பொறுத்தவரை 1990-ம் ஆண்டில் இந்தியாவுக்கு எதிராக 653 ரன்கள் சேர்த்தது சிறந்த ஸ்கோராகும்.
    • இந்த மைதானத்தில் இந்தியா எடுத்த அதிகபட்சம் 454 ரன்கள் (1990-ம் ஆண்டில்) ஆகும்.

    லண்டன்:

    இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.

    இந்த நிலையில் இந்தியா- இங்கிலாந்து மோதும் 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் இந்திய நேரப்படி நாளை (வியாழக்கிழமை) மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது. இதையொட்டி இந்திய வீரர்கள் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

    முந்தைய போட்டியில் ஓய்வு எடுத்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அணிக்கு திரும்புவதால், அவரும் கடும் பயிற்சி மேற்கொண்டதை காண முடிந்தது. பர்மிங்காம் போன்று லார்ட்சிலும் சாதிக்கும் உத்வேகத்துடன் நமது வீரர்கள் ஆயத்தமாகி வருகிறார்கள்.

    'கிரிக்கெட்டின் மெக்கா' என்று அழைக்கப்படும் லண்டன் லார்ட்சில் 1884-ம் ஆண்டு முதல் டெஸ்ட் கிரிக்கெட் நடந்து வருகிறது. இதுவரை 148 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. இதில் இங்கிலாந்து 145 டெஸ்டுகளில் ஆடி 59-ல் வெற்றியும், 35-ல் தோல்வியும், 51-ல் டிராவும் கண்டுள்ளது.

    இந்திய அணி இங்கு 19 டெஸ்டுகளில் விளையாடி 3-ல் வெற்றியும், 12-ல் தோல்வியும், 4-ல் 'டிரா'வும் சந்தித்துள்ளது. இதில் கடைசி 3 டெஸ்டுகளில் 2-ல் வென்றதும் அடங்கும். 2021-ம் ஆண்டில் இங்கு நடந்த டெஸ்டில் விராட் கோலி தலைமையிலான இந்தியா நிர்ணயித்த 272 ரன் இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து 120 ரன்னில் சுருண்டது நினைவிருக்கலாம்.

    ஆஸ்திரேலிய அணி 1930-ம் ஆண்டு நடந்த டெஸ்டில் இங்கிலாந்துக்கு எதிராக 6 விக்கெட்டுக்கு 729 ரன்கள் குவித்தது இந்த ஸ்டேடியத்தில் ஒரு அணியின் மெகா ஸ்கோராகும். இங்கிலாந்தை பொறுத்தவரை 1990-ம் ஆண்டில் இந்தியாவுக்கு எதிராக 653 ரன்கள் சேர்த்தது சிறந்த ஸ்கோராகும். இந்த மைதானத்தில் இந்தியா எடுத்த அதிகபட்சம் 454 ரன்கள் (1990-ம் ஆண்டில்) ஆகும். குறைந்த ஸ்கோரில் அணிகள் 22 முறை 99 ரன்னுக்குள் அடங்கியிருக்கின்றன. இதில் அயர்லாந்து (38 ரன், 2019-ம் ஆண்டு), இந்தியா (42 ரன், 1974-ம் ஆண்டு) முதல் இரு இடங்களில் உள்ளன.

    மொத்தம் 252 சதங்களும், 610 அரைசதங்களும் எடுக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக இங்கிலாந்தின் ஜோ ரூட் 7 சதங்கள் அடித்திருக்கிறார். இந்திய முன்னாள் வீரர் திலிப் வெங்சர்க்கார் 3 சதங்கள் விளாசி லார்ட்ஸ் நாயகனாக விளங்குகிறார். தற்போதைய இந்திய அணியில் இடம் பெற்றுள்ள வீரர்களில் லோகேஷ் ராகுல் மட்டும் சதம் கண்டுள்ளார்.

    இங்கு ஒரே ஒரு முச்சதம் பதிவாகி இருக்கிறது. 1990-ம் ஆண்டில் இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து கேப்டன் கிரஹாம் கூச் 333 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். ஒட்டுமொத்தத்தில் அதிக ரன் குவிப்பில் ஜோ ரூட் (22 டெஸ்டில் 2,022 ரன்) முதலிடம் வகிக்கிறார்.

    ஒரு இன்னிங்சில் 5 மற்றும் அதற்கு மேல் விக்கெட்டுகள் 196 முறை வீழ்த்தப்பட்டுள்ளன. அதிக விக்கெட் வீழ்த்தியோர் பட்டியலில் இங்கிலாந்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்கள் ஜேம்ஸ் ஆண்டர்சன் (123 விக்கெட்), ஸ்டூவர்ட் பிராட் (113 விக்கெட்) டாப்-2 இடத்தில் உள்ளனர். இந்தியா சார்பில் அதிகபட்சமாக பிஷன் சிங் பேடி, இஷாந்த் ஷர்மா, கபில்தேவ் தலா 17 விக்கெட்டுகள் (4 டெஸ்ட்) கைப்பற்றி இருக்கிறார்கள்.

    லார்ட்ஸ் ஆடுகளம் தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். போக போக பேட்டிங்குக்கு ஒத்துழைக்கும். சமீபத்தில் இங்கு நடந்த ஆஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் மொத்தம் 31 விக்கெட்டுகளை கபளீகரம் செய்தது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியா- இங்கிலாந்து மோதும் 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் நாளை தொடங்குகிறது.
    • முதல் இரு போட்டிகளுடன் ஒப்பிடும் போது இது சவாலான ஆடுகளமாக இருக்கும்.

    லண்டன்:

    இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.

    இந்தியா- இங்கிலாந்து மோதும் 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் இந்திய நேரப்படி நாளை (வியாழக்கிழமை) மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது. இதையொட்டி இந்திய வீரர்கள் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

    லார்ட்ஸ் ஆடுகளம் தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். போக போக பேட்டிங்குக்கு ஒத்துழைக்கும். கடந்த இரு போட்டிகளில் பார்த்ததை விட லார்ட்ஸ் ஆடுகளத்தில் புற்கள் கொஞ்சம் அதிகமாக உள்ளது. முதல் இரு போட்டிகளுடன் ஒப்பிடும் போது இது சவாலான ஆடுகளமாக இருக்கும்.

    சமீபத்தில் இங்கு நடந்த ஆஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் மொத்தம் 31 விக்கெட்டுகளை வீழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    முரளி விஜயை டக்அவுட்டாக்கி ஒரே மைதானத்தில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய 2-வது வீரர் என்ற பெருமைய ஆண்டர்சன் பெற்றுள்ளார். #JamesAnderson
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் லார்ட்ஸில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 107 ரன்னில் சுருண்டது. ஜேம்ஸ் ஆண்டர்சன் ஐந்து விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். இதன்மூலம் லார்ட்ஸ் மைதானத்தில் மட்டும் 99 விக்கெட்டுக்கள் வீழ்த்தியிருந்தார்.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 396 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்தியா 289 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கியது. 3-வது ஓவரை ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் முரளி விஜய் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.



    இந்த விக்கெட் மூலம் லார்ட்ஸ் மைதானத்தில் 100 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். அதன்மூலம் ஒரே மைதானத்தில் 100 விக்கெட்டுக்கள் கைப்பற்றிய 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    இதற்கு முன் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் கொழும்பு (எஸ்எஸ்சி) மைதானத்தில் 166 விக்கெட்டும், காலே மைதானத்தில் 111 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். தற்போது ஆண்டர்சன் லார்ட்ஸில் 100 விக்கெட்டுக்கள் கைப்பற்றியுள்ளார்.
    ×