search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lords Cricket Ground"

    முரளி விஜயை டக்அவுட்டாக்கி ஒரே மைதானத்தில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய 2-வது வீரர் என்ற பெருமைய ஆண்டர்சன் பெற்றுள்ளார். #JamesAnderson
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் லார்ட்ஸில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 107 ரன்னில் சுருண்டது. ஜேம்ஸ் ஆண்டர்சன் ஐந்து விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். இதன்மூலம் லார்ட்ஸ் மைதானத்தில் மட்டும் 99 விக்கெட்டுக்கள் வீழ்த்தியிருந்தார்.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 396 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்தியா 289 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கியது. 3-வது ஓவரை ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் முரளி விஜய் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.



    இந்த விக்கெட் மூலம் லார்ட்ஸ் மைதானத்தில் 100 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். அதன்மூலம் ஒரே மைதானத்தில் 100 விக்கெட்டுக்கள் கைப்பற்றிய 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    இதற்கு முன் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் கொழும்பு (எஸ்எஸ்சி) மைதானத்தில் 166 விக்கெட்டும், காலே மைதானத்தில் 111 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். தற்போது ஆண்டர்சன் லார்ட்ஸில் 100 விக்கெட்டுக்கள் கைப்பற்றியுள்ளார்.
    ×