search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lords ground"

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. #ENGvIND #INDvENG
    லண்டன்:

    விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 5 டெஸ்ட் போட்டித் தொடரில் பர்மிங்காமில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன் வித்தியாசத்தில் தோற்றது. இதனால் 0-1 என்ற கணக்கில் பின் தங்கி இருக்கிறது.

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

    முதல் டெஸ்டில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து இந்திய அணி வெற்றி கணக்கை தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    முதல் டெஸ்டில் இந்திய அணி 194 ரன்னை இலக்கை எடுக்க முடியாமல் இந்திய அணி தோற்றது ஏமாற்றமே. கேப்டன் விராட்கோலியை தவிர எந்த ஒரு பேட்ஸ்மேனும் திறமையை வெளிப்படுத்தவில்லை. அவர் தனி ஒருவராக போராடினார். இறுதியில் பலன் இல்லாமல் போனது.

    தொடக்க வீரர்களான தவான், முரளிவிஜய், ரகானே, ராகுல் ஆகியோர் சரியாக ஆடவில்லை. இதனால் இந்த டெஸ்டில் புஜாராவுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அவர் ஆடினால் ராகுல் கழற்றிவிடப்படுவார்.



    முதல் டெஸ்டில் அஸ்வினின் சுழற்பந்து அபாரமாக இருந்ததால் இன்றைய டெஸ்டில் இந்தியா 2 சுழற்பந்து வீரர்களுடன் களம் இறங்கும் ஆர்வத்தில் உள்ளது. ஆடுகளத்தின் தன்மையை பொறுத்தே விராட்கோலி முடிவு செய்வார்.

    2 சுழற்பந்து வீரர் தேவைப்பட்டால் உமேஷ் யாதவ் நீக்கப்படுவார். அவர் இடத்தில் ஜடேஜா அல்லது குல்தீப் யாதவ் இடம் பெறுவர்.

    லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி 2 டெஸ்டில் மட்டுமே வெற்றி பெற்று இருந்தது. கபில்தேவ், டோனி தலைமையில் மட்டுமே வெற்றி கிடைத்தது. அந்த வரிசையில் கோலி இணைந்து சாதிப்பாரா என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

    முதல் டெஸ்டில் பெற்ற வெற்றியால் ஜோரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறது.



    அந்த அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெறும் ஆர்வத்துடன் இருக்கிறது. #ENGvIND #INDvENG
    ×