என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    இது சுப்மன் கில்லின் ஹனிமூன் காலம்: கங்குலி சொல்கிறார்
    X

    இது சுப்மன் கில்லின் ஹனிமூன் காலம்: கங்குலி சொல்கிறார்

    • இந்திய கிரிக்கெட்டில் ஒவ்வொரு தலைமுறைக்கும் வீரர்கள் இருப்பார்கள்.
    • எப்போதெல்லாம் வெற்றிடம் வருகிறதோ அப்போதெல்லாம் வீரர்கள் வந்து அதை நிரப்புவார்கள்.

    இந்தியா- இங்கிலாந்து இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் இந்தியா தோல்வியடைந்தது. 2ஆவது டெஸ்டில் அபார வெற்றி பெற்றது.

    இரண்டு டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் அபாரமாக விளையாடினார். நான்கு இன்னிங்சில் ஒரு இரட்டை சதத்துடன் மூன்று சதங்கள் அடித்தார். எட்ஜ்பாஸ்டனில் (269+161) ரன்கள் அடித்து அபார சாதனைப் படைத்தார்.

    இந்த நிலையில் சுப்மன் கில் குறித்து கங்குலி கூறியதாவது:-

    சுப்மன் கில்லிடம் நான் பார்த்ததில் இதுதான் சிறந்த ஆட்டம். இதனால் நான் ஆச்சர்யம் படவில்லை. இந்திய கிரிக்கெட்டில் ஒவ்வொரு தலைமுறைக்கும் வீரர்கள் இருப்பார்கள். எப்போதெல்லாம் வெற்றிடம் வருகிறதோ அப்போதெல்லாம் வீரர்கள் வந்து அதை நிரப்புவார்கள்.

    இந்திய கிரிக்கெட்டில் திறமையான ஏராளமான வீரர்கள் உள்ளனர். ஒவ்வொரு தலைமுறையிலும் வீரர்களை கண்டு பிடிக்கலாம். சுப்மன் கில்லின் கிரிக்கெட் வாழ்க்கை புதிய திசைக்கு எடுத்துச் செல்லும் என்ற நம்பிக்கை உள்ளது. அவர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் என்பதை நான் நம்புகிறேன். தற்போதுதான் அவர் கேப்டனாகியுள்ளார். இது அவருடைய ஹனிமூன் காலம். ஆனால், காலப்போக்கில் அவருக்கு அதிக நெருக்கடி ஏற்படும். அடுத்த மூன்று போட்டிகளில் அதிக நெருக்கடி ஏற்படும்.

    லார்ட்ஸ் போட்டிக்கான ஆடுகளத்தின் மேற்பகுதி பிரவுன் நிறத்தில் இருந்தால், குல்தீப் யாதவ் 100 சதவீதம் விளையாடனும். அவரது தேர்வு ஆடுகளத்தின் மேற்பகுதியை சார்ந்தது. ஆடுகளத்தின் மேற்பகுதி க்ரீனாக இருந்தால், 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் செல்ல முடியும். குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டால் நிதிஷ் ரெட்டில், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரின் ஒருவர் வெளியில் இருக்க வேண்டியிருக்கும்.

    இவ்வாறு கங்குலி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×